Advertisement

சசி தரூரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்: சுப்பிரமணியன் சாமி

புதுடில்லி : சசிதரூர் கூறிய 'ஹிந்து பாகிஸ்தான்' கருத்துக்கு அவரை மனநல மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் பேசுகையில், 2019 பார்லி., தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடு, 'ஹிந்து பாகிஸ்தான்' என மாறிவிடும் என கூறியிருந்தார். அவரது இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இக்கருத்து குறித்து சசிதரூரை, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.


அவர் தெரிவித்ததாவது: சசி தரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும். சசி தரூருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது; அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அவர் அளவுக்கு அதிகமாக எதையோ சாப்பிட்டு விட்டார் போல. அவரது பேச்சு மற்றும் கருத்துகள் ஏமாற்றத்தின் வெளிப்பாடுகள்.


ஹிந்து பாகிஸ்தான் என்பதற்கு என்ன அர்த்தம்? அவர் பாக்.,கிற்கு எதிரானவரா? பாக்.,கில் அவருக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாக்., ஐ.எஸ்., அமைப்பின் உளவாளிகள் என குற்றம் சாட்டினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26)

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  உம்மை முதலிலேயே அங்கே அனுப்பி இருக்கவேண்டும்

 • Kailash - Chennai,இந்தியா

  பாம்பின் கால் பாம்பறியும்....

 • krishnan - Chennai,இந்தியா

  நாகூர் தர்காவுக்கு இவரை அனுப்பவேண்டும்.

 • s t rajan - chennai,இந்தியா

  இந்தியாவில் இந்துக்கள் சுகமாக வாழ்வதை விரும்பாத ஒரு விஷ வ்ருக்ஷம் காங்கிரஸ். மத மாற்றத்தையும் மதங்களுக்கிடையே பூசலையும் ஏற்படுத்தி ஒட்டு வாங்க முயற்சி செய்யும் ஒரு மதவாத அமைப்பு காங்கிரஸ். சசி தரூர் எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார் என்றால் ஒரே பதில் - அவர் இன்றைய குடும்ப காங்கிரஸின் அடிமை.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அவர் எதையும் சாப்பிடவில்லை, மனைவியின் கொலை குற்ற உணர்வினால் நிலை தடுமாறி இருக்கிறார்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  நல்ல ஐடியா தான்... பிரச்சினையிருக்காது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அடுத்தமுறை மோடி ஆட்சிக்கு வந்தால் காங்கிரசில் மிச்சம் மீதி இருப்பவர்களுக்கும் கூட பயித்தியம் பிடித்துவிடும்...

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Seculars will welcome and vote for BJP as they like the name Pakistan.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  மதுரையை மையமாக வைத்து முன்னர் பெரிய சதி செய்யப்பட்டது. தற்போது காசுகொடுத்து சில முட்டாள்களை பேன்ட் சர்ட் போட்டு கையில் பேனவும் கொடுத்து பேருந்து நிலையம் பள்ளி கல்லூரி அருகில் நின்று அரசுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவேதான் காசுக்கு மாரடிக்கும் விஷமிகளை கண்டுபிடிக்க வேண்டும்

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  மதுரையில் உள்ள தேவாலயங்களில் சோதனை நடத்தினால் பல உண்மை வெளிவரும்

 • ஸாயிப்ரியா -

  சார்,இவரை கோமாஸ்டேஜுக்கு அனுப்ப முடியுமா பாருங்களேன்.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  பக்கத்தில் ஒரு பெட்டு போட வேண்டும் ......

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Pambin kaal pambariyum. Subramanya samikkum idhu porundhum.

 • Akbar Ali - chennai,இந்தியா

  நீங்க போற ஹாஸ்பிடல்லயே காமிங்க

 • HSR - Chennai,இந்தியா

  சாமி சார் இவன் மேல நல்லா தெளிவா ஆராய்ந்து ஒரு வழக்கை போட்டு உள்ள தள்ளுங்களேன்

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  இதுக்கு பேருதான் மதசார்பின்மை... இந்துக்களை ஒருத்தன் தீவிரவாதிகள் என்று சொல்றான்... ஒருத்தன் இப்போ பாக்கிஸ்தான் கூட கம்பர் பண்றான்.. இதுக்கு காங்கிரஸ் சொம்புகள் என்ன சொல்ல போகுதோ...

 • vns - Delhi,இந்தியா

  சசி தரூரை சிறையில் அடைக்க வேண்டும். இந்திய விரோதி அவன். கொலை குற்றம் புரிந்தவன். ஒழுக்கம் இல்லாதவன் கமலைப்போல.

 • Arasu - Madurai,இந்தியா

  கல்யாணத்துக்கு போன இடத்துல மாங்கல்யத்தை ஆசிர்வதிக்க சொன்னால் மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட போனவரை எங்கே கொண்டுபோய் சேர்ப்பது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement