Advertisement

சென்செக்ஸ் ‛ஜிவ்..'': புதிய உச்சத்தில் உட்கார்ந்தது

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் அதிரடியாக உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது.

400 புள்ளிகள்:காலையில் 180 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய சென்செக்ஸ், முக்கிய பெரு நிறுவன பங்குகளின் உயர்வால் பிற்பகல் வர்த்தகத்தின் போது 400 புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் மட்டும் ரூ.6,86,604 கோடிகள் வரை வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி மற்றும் எச்டிஎப்சி வங்கி நிறுவன பங்குகள் உயர்வால் மட்டும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது.


பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 413.89 புள்ளிகள் உயர்ந்து 36,679.82 புள்ளிகளாக உயர்ந்தது. இதற்கு முன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29 ம் தேதி 36,444 புள்ளிகள் எட்டியதே புதிய சாதனையாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நிப்டி 123.20 புள்ளிகள் உயர்ந்து 11,071.50 புள்ளிகளாக இருந்தது.
Advertisement
 

வாசகர் கருத்து (37)

 • sivan - Palani,இந்தியா

  பூங்குழலி ""மகிழ்ச்சி.... பெட்ரோல் விலை குறையுமா......??.. ""குறையாது. ஆனால் என்ன விலையாக இருந்தாலும் அதை வாங்கும் சக்தி பெருகும்...."" சபாஷ் வெங்கடேஸ்வரன் சார் சரியாக சொன்னீர்கள்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  அது என்ன "ஜிவ்" BSEல ஒரு 30 கம்பனிகள் NSEல ஒரு 50 கம்பெனிகள், இந்த 80 கம்பனிகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் நிகழ்வுகள் மட்டுமே பங்குச்சந்தை நிலவரம் அல்ல. இந்திய பங்குசந்தையில் ஐய்யாரியத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன அதில் தினமும் குறைந்தது 2500றில் இருந்து 2900 வரையான நிறுவனங்கள் வர்த்தகங்கள் செய்கின்றன. வெறும் 80 நிறுவனத்தில் பல நிறுவனங்கள் இன்றைக்கு நல்ல லாபத்தை கொடுத்துவிட்டு என்று கூறி இந்திய பொருளாதாரம் மேலேறிவிட்டது என்று கூறினால் கேலிக்கூத்தானது. கடந்த ஓராண்டாகவே BSE NSE குறியீடுகளின் மதிப்பிற்க்கேற்ப மற்ற பெரும்பானமையான நிறுவங்கங்களின் பங்குகள் ஏற்றம் காணவில்லை என்பதே உண்மை. அதிலும் SMALL & MIDCAP பங்குகளின் நிலை அதாலாபாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. தற்போது பங்குசந்தையானது BUILDING BASEMENT WEEK என்ற நிலையில் தான் உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் மிகப்பெரும் வீடழி என்று வரும்போது இந்திய பொருளாதாரம் வளர்கிறது என்று கூறுங்கள் நன்றாக இருக்கும். தற்போதைய நிலையில் LARGE CAPITALIZATION பங்குகள் தவிர மற்ற எல்லா பங்குகளும் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கு தெரிந்த நபர்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபாட்டுக்கொண்டு இருந்தால் அவரிடம் சென்று கேளுங்கள் இன்று உச்சத்தை தோட்ட உங்களது வர்த்தகம் எப்படி என்று. நொந்து பொய் பதில் சொல்வார்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  /////J.V. Iyer - Singapore,சிங்கப்பூர் 12-ஜூலை-2018 16:42 பங்கு சந்தை உயர்வு நல்லது. சில அறிவுகெட்ட ஜென்மங்களுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் நக்கல் அடிப்பார்கள். வோட்டிற்கு நோட்டு வாங்கியே பழக்கம் உள்ள இவர்கள் புரியாமல் கருத்தை பதிவு செய்வது தெரிந்ததே.///// - சார், வோட்டிற்கு நோட்டாக, 20-ரூபாவை டோக்கனாக வாங்கிட்டு, அதை நம்பி ஓட்டும் போட்டுட்டு, பிற்பாடு, மீதி பணம் கைக்கு வராம, தாங்கள் ஏமாந்தது அறிந்து, வீதிக்கு வந்து கூப்பாடு வேற போடறாங்களே, சார், நம்மூர் வோட்டர்கள். என்னன்னு சொல்றது, நமது தமிழக சில பல வோட்டர்களை?.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பங்கு சந்தை உயர்வு நல்லது. சில அறிவுகெட்ட ஜென்மங்களுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் நக்கல் அடிப்பார்கள். வோட்டிற்கு நோட்டு வாங்கியே பழக்கம் உள்ள இவர்கள் புரியாமல் கருத்தை பதிவு செய்வது தெரிந்ததே.

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  பெட்ரோல்விலை குறைந்து விட்டால் இந்தியாவில் ..சரி சரி விடுங்க டுமிழ்நாட்டில் உள்ள அத்துணை கோடி வாக்காளர்களும் இப்போதைய அரசை ஆதரித்து வாக்களித்து விட போகின்றனரோ ? இன்னொரு அறிவு ஜீவி கேட்குது விவசாயிக்கு என்ன பலன் என்று? இதே ஜீவி சற்று பின்னோக்கி சென்று விவசாய விலை பொருட்களின் விலை ஐம்பது முதல் நூறு சதவிகிதம் உயர்த்தி நிர்ணயிக்க பட்டபோது என்ன கூவியது? அல்லது அப்போது விவசாய விலை பொருட்கள் விலை உயரதிநிர்ணயம் செய்து என்ன பயன் தொழில் துறைக்கு என்ன லாபம் என்று கூவியிருக்கும்.. வெட்கம் கெட்ட ஜென்மங்கள் . இந்தபச்சைத்தமிழன் டுமீளன் என்றெல்லாம் பெயர் வைத்து கொண்டு இங்கே விவசாயம் பற்றி பேசுவோர் வந்து காட்டில் கொளுத்தும் வெய்யிலில் களை எடுக்கலாம், கரும்பு சுமக்கலாம் ,விடிய விடிய முறைத்தண்ணீர் பாய்ச்சலாம் .. அப்புறம் தெரியும் இவர்களின் விவசாய ஆதரவு வேசத்தின் லட்சணம் .. மண்வெட்டியை கையில் பிடித்திருக்கவே மாட்டான் இந்தஇணைய தள விவசாயி

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  /////அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா 12-ஜூலை-2018 11:46........ சுப்பு : மோடி அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.......... , நான் : எதற்கு சரிப்பட்டு வரமாட்டார்......... சுப்பு : நான் தான் சொல்கிறேனே மோடி அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்......., நான் : எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று தெளிவாக சொல்லையா........ சுப்பு : மோடி மூன்றுமுறை முதல்வர் , இந்த நான்காண்டு பிரதமர் , லட்சம் அல்லது பல ஆயிரம் கோடிகளை சம்பாதிருக்கிறாரா ?....... நான் : இல்லையே,....... சுப்பு : அதை விடு, குடும்பத்தை அரசியலுக்கு கொண்டுவந்து மொத்த கட்சி பதவிகளில் அமரவைத்தாரா?........ நான் : இல்லையே ......., சுப்பு : தான் சம்பாதிக்கவில்லை என்றாலும் தன் குடும்பத்தை விட்டு அரசாங்கத்தை மிரட்டி ஒப்பந்தகள் பெற்று மற்றும் மற்றவர்களிடம் இருந்து மொத்த வியாபாரத்தையும் பறித்து லட்சம் கோடிகளில் கொடி கட்டி பறக்கிறார்களா?........ நான் : இல்லையே ........, சுப்பு : சரி மற்றவற்றை விட்டுவிடுவோம் , மனைவி , துணைவி , இணைவி என்று பல பெண்களை கட்டிக்கொண்டு வாரிசு அரசியலை உருவாக்கினாரா ?........ நான் : எங்கே சிறுவயதில் கட்டிவைக்கப்பட்ட ஒரு பெண்ணையும் பிரிந்து , நாட்டுக்காக பிரம்மசாரியாக வாழ்கிறார்........ சுப்பு : இதற்குத்தான் நான் முதலிலேயே சொன்னேன் மோடி இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் ........, நான் : மோடி எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் ........, சுப்பு : இன்னுமா விளங்கவில்லை , நம் மக்கள் நான் மேலே கூறிய "தகுதிகள்" உள்ள தலைவர்களை தான் இதுவரை கண்டிருக்கிறார்கள் , மோடி வித்தியாசமாக இருப்பதால் அவரை வெறுக்கிறார்கள், அதற்குத்தான் முதலிலேயே சொன்னேன் மோடி அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்,///// - உங்க கருத்து, மிக அருமை, திரு அண்ணாமலை ஜெயராமன் அவர்களே.

 • ஆப்பு -

  வரப்புயர... மன்னிக்கவும்.... கார்ப்பரேட் உயர நாடு உயரும்... இதுதான் மோடிஜியின் நம்பிக்கை.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இன்று காலையில் சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகள் குறித்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட பட்டியலில், இந்தியா, ஆறாவது இடத்தை பிடித்துள்ளது என் செய்திவந்தபோது நமபாதவர்கள் இப்போதாவது நம்புங்கள் . அரசின்மீதுள்ள நம்பிககையே கூடுதல் முதலீடு உணர்த்துகிறது

 • rsb - Chennai,இந்தியா

  என்னதான் சென்செக்ஸ் ஏறினாலும் அதுலயும் நஷ்ட்டம் பண்ற அப்பாவிங்கதான அதிகம் .ஐயோ ஐயோ .

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நல்லது நடக்கட்டும்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  மோடியின் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு வைரம்.

 • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

  ஒருத்தருடைய செலவு, மற்றொரு நபருக்கு வருமானம். சிலநாள் கழித்து ஒருவன் / சிலபேர் அந்த வருமானத்தை எடுத்து கொண்டுபோய்விடுவார், மற்றவர், குச்சி ஐஸ் சப்பவேண்டியதுதான்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  //////மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம் 12-ஜூலை-2018 11:22 ஈரான் நமக்கு நட்பு நாடு. மோடி அரசு முந்தைய அரசு போலல்லாமல் மிக சிறப்பாக டிப்ளமேடிக் ஆக செயல் படுகிறது. அமெரிக்க யூகே தேசத்திடமிருந்து நாம் சிறப்பாக அதை கற்று தேர்ந்திருக்கிறோம். அவர்கள் நிறைய பேரை மோடி அரசு நியமித்து அரசை நடத்துகிறது. ஈரானுக்கும் நல்லது செய்து சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் நண்பனாகவும் அவர்களை சமாளித்து ஈரானையும் மேலிடத்திலேயே வைத்து அவர்களுக்கும் சிறப்பு செய்யும். மோடி அரசின் சர்வதேச செயல் பாட்டை நன்கு கவனித்து வரும் எவரும் அதையே சொல்கிறார்கள். எனது மணாளனும் அவருடன் பணியாற்றும் உயர் அதிகாரிகளும் அதையே சொல்கிறார். அரசு சிறப்பாக இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். சிறப்பான திசையிலேயே செல்கிறார்கள். அடுத்து ஒரு இருபது வருடங்களுக்கு இந்த அரசு தொடர்ந்தாள் நிச்சயம் 2050 கலாமின் கனவு நனவாகி இருக்கும் என்பதில் யாதொரு ஐயமும் பெஸிமிஸ்டிக் தவிர வேறு யாருக்கும் இராது.////// - மிக நன்று அம்மா, உங்க கருத்து.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  நாடென்ன செய்தது நமக்கு,....... என்ற கேள்விகள் கேட்பது எதற்கு,....... நீ என்ன செய்தாய் அதற்கு,....... என்று நினைத்தால் நன்மை உனக்கு,....... நான் ஏன் பிறந்தேன்,....... நாடிற்கு நலம் என்ன புரிந்தேன்,....... இந்த நாளும் பொழுதும்,....... நீ வாழும் வரையில்,....... உழைத்திடு என் தோழா,....... உழைத்து செயல்படு என் தோழா.........(அமரர் திரு எம்ஜியார் பட பாடல் வரிகள்).

 • பச்சைதமிழன் -

  இதனால் விவசாயிகள் வாழ்க்கை உயருமா

 • poonguzhali - singapore,சிங்கப்பூர்

  மகிழ்ச்சி.... பெட்ரோல் விலை குறையுமா......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement