Advertisement

வீரர்களுடன் நடனம்: குரோஷிய அதிபர் குஷி

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து தொடரில், காலிறுதி போட்டியில் ரஷ்யாவை வீழ்த்திய குரோஷியா அணி வீரர்களுடன் இணைந்து அந்நாட்டு அதிபர் நடனமாடிய காட்சிகள் பரவி வருகிறது.


வெற்றி




ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரில், கடந்த 7 ம் தேதி நடந்த காலிறுதி போட்டியில் ரஷ்யா குரோஷியா அணிகள் மோதின. குரோஷியா அணி மோதிய இந்த போட்டியை பார்க்க, கால்பந்து ரசிகையான அந்நாட்டு அதிபர் கோலிண்டா கிராபர் - கிடாரோவிக், விமானத்தில் ரசிகர்களுடன் சாதாரண வகுப்பில் ரஷ்யா வந்தார்.


மைதானத்தில் ரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்தார். இந்த போட்டியில், குரோஷியா அணி, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 4 - 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அணி வெற்றி பெற்றதும், வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்றார். அங்கு வீரர்களை கட்டியணைத்து வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, குரோஷியா வெற்ற பெற்றதை கொண்டாடும் வகையில், வீரர்களுடன் இணைந்து நடனமாடினார்.


பாராட்டு




அணிக்கு ஆதரவு அளித்த அதிபரை பலரும் சமூக வலைதளத்தில் பாராட்டி வருவதுடன், இது குறித்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

    ஒருபக்கம் சந்தோசம் இப்படி இருக்க பிரேசில் அணி வீரர்கள் பயணம் செய்த பேருந்தை முட்டை மற்றும் தக்காளியை பேருந்தின் மீது வீசி எறிந்து அந்நாட்டு ரசிகர்கள் தங்களின் கோவம் கலந்த எதிர்ப்பை நிறைவேற்றி உள்ளனர் ...அப்படி ஒரு வீடியோ உலா வருகிறது ...எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ...

  • Arun - ,

    ஒவ்வொரு வீரருக்கும் வெற்றி (Final) கோப்பையில் ஷாம்பைனை நிரப்பி கொடுத்த மாதிரி...ஹி ஹி ஹி

  • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

    அவங்க இப்பதான் ரஷியாவை வீழ்த்தியதை சொல்றாங்க . என்னதான் 24 மணி நேர நெட் எல்லாம் இருந்தாலும் ராத்திரி 2 மணிக்கு கேம் முடிஞ்சா அடுத்தநாள் தான் அச்சுல வரும். இதுக்கு மேல நீங்க எதிர் பார்ப்பது கூடாது. அந்த காலத்திலே நாங்க ரேடியோ செய்திகள் கேட்டு இந்த மாதிரி மேட்ச் முடிவை தெரிந்து கொள்வோம். அவங்க அச்சுல போட்டு 3 மணிக்கே பேப்பரை வேன்ல ஏத்தி எல்லா ஊருக்கும் அனுப்பிடுவாங்க. அதனால அடுத்த நாள் பேப்பர்ல தான் மேட்ச் முடிவு வரும். கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணுங்க பாஸ் .

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    "ஹாட்டஸ்ட் ப்ரெசிடெண்ட்" என்ற பெயரை எடுத்துள்ளார் ....

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    என்னது 4 - 3 என்ற கோல் கணக்கில் குரேஷியா வெற்றி பெற்றதா. அடேங்கப்பா ஒங்க கால்பந்தாட்ட அறிவை கண்டு வியக்கேன். அரை இறுதியில் குரோஷியா இங்கிலாந்தை 2 - 1 என்ற கோல் கணக்கில் வென்றதைதான் நாங்கள் நேற்று பார்த்தோம். News related to Croatia vs Russia not England

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement