Advertisement

துணை நிலை கவர்னரை கட்டுப்படுத்தி வைங்க:: ராஜ்நாத்திடம் கெஜ்ரிவால் புகார்


புதுடில்லி: யாருக்கு அதிகாரம் என்ற பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தாலும், இன்னும் மோதல் தொடர்கிறது. நேற்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து துணை நிலை கவர்வர் அனில் பைஜால் உத்தரவிட்டார்.. இந்த விவகாரத்தில் விவகாரத்தில் முதல் மந்திரி - ஆளுநர் இடையே பணிப்போர் மீண்டும் வெடித்தது.
இந்த சூழ்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அரவிந்த் கெஜ்ரிவால் துணை முதல் அமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோர் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது துணை நிலை கவர்னரின் செயல்பாடு குறி்த்தும் புகார் கூறினர். பின்னர் கெஜ்ரிவால் கூறியது, அதிகாரிகள் இடமாறுதல், நியமனத்தில் துணை நிலை கவர்னர் தலையிடாமல் கட்டுப்படு்த்தி வையுங்கள் என ராஜ்நாத்தங்கிடம் முறையிட்டேன். அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மூன்று நாட்களில் முடிவு தெரிவிப்பதாக எனக்கு உறுதி அளித்தார். என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    அட, எசமான், எனக்கு வழி காட்டு என்ற நிலை தாங்க. ஒரளவிற்கு சரண்டர் மனநிலைதான், ஆனால் இது உண்மையா?, நடிப்பான்னு தெரியலைங்க.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சாட்சிக்காரன்கால்களில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்...

  • raj - ,

    கடமைன்னு வந்துட்டா பைஜாலை கட்டு படுத்த பைஜாலாலேயே முடியாது....அதுசரி டிசைன் போட்டு தருபவர்கிட்டேயேவா....?

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    ஏம்பா நீங்களும் தனி டில்லி வேண்டும் என கேளுங்கப்பா இங்கிருந்து ஆதரவு கொடுக்க ஊழல் தலைவர் ரெடி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement