Advertisement

எஸ்.சி.,எஸ்.டி.யினருக்கு இடஓதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயரைப் பயன்படுத்தக் கோரும் மனு மீது இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டில் உயர் வருவாய் பிரிவினருக்கு சலுகை அளிப்பதைத் தவிர்ப்பதற்காக கிரீமி லேயர் முறையைக் கடைப்பிடிக்க கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.அந்த உத்தரவை காட்டி அரசு வேலை மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை கடைப்பிடிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது, அப்போது அவர்கள் தெரிவித்ததாவது,இடஒதுக்கீடு விவகாரத்தில் 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த வழக்கில் தற்போது இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது .வழககு விசாரணை ஆகஸ்ட் முதல் வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • S.prakash - Tiruchi,இந்தியா

    இட ஒதுக்கீட்டிலும் திறமையானவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும். போதிய கல்வி அறிவு இல்லாதவர்களே இட ஒதுக்கீட்டில் முன்னணியில் உள்ளனர். நாடு எல்லா துறையிலும் திறமையானவர்களை இழந்து வருவது வருந்தத்தக்கது.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எல்லாம் ஓட்டு செய்யும் மாயம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement