Advertisement

மாவட்ட ஜூனியர் தடகளம் வரும் 15ல் துவக்கம்

சென்னை: சென்னை மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி, வரும், 15ம் தேதி துவங்குகிறது.பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், சென்னை மாவட்ட அளவிலான, ஜூனியர் தடகள போட்டி, வரும், 15ம் தேதி துவங்குகிறது. இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், போட்டிகள் நடக்க உள்ளன.போட்டியில், 14, 16, 18 மற்றும் 20 வயதிற்குட்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். வெற்றி பெறும் வீரர் - வீராங்கனையர் மற்றும் இருபாலர் விளையாட்டு குழுக்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். இரு நாட்களுக்கு, போட்டி நடக்க உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement