Advertisement

தெற்காசிய சிலம்பம் சாம்பியன் : சென்னை மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: கன்னியாகுமரியில் நாளை துவங்க உள்ள தெற்காசிய சிலம்பம் சாம்பியன் போட்டியில், சென்னையைச் சேர்ந்த எட்டு மாணவர்கள், இந்தியா அணி சார்பில்
பங்கேற்கின்றனர்.
தெற்காசிய சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில், பல்வேறு நாடுகள் பங்கேற்கும், டபள்யூ.எஸ்.எப்., என்ற, உலக சிலம்பம் கூட்டமைப்பின், இரண்டாவது தெற்காசிய அளவிலான சிலம்பம் சாம்பியன் போட்டி,
கன்னியாகுமரி மாவட்டம், சி.எஸ்.ஐ., ஹாலில், நாளை துவங்கி, 15ம் தேதி வரை நடக்க உள்ளது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட, எட்டு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மினி சப்-ஜூனியர், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என, நான்கு பிரிவுகளில், இருபாலருக்கும் போட்டிகள் நடக்கின்றன.
சென்னை, தாம்பரம், தனலட்சுமி பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த, பி.மாளவிகா, கே.அக் ஷயா, கே.ஓவியா என்ற மாணவியர், கதிரேசன், ஜே.அருண், வீரமணிகண்டன், எஸ்.கோபி, கணேஷ் என்ற மாணவர்கள், இந்தியா அணி சார்பில், சீனியர் பிரிவில் போட்டியில் பங்கேற்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement