Advertisement

மாநில கபடி போட்டி : எஸ்.ஆர்.எம்., வெற்றி

சென்னை, ஜூலை 12-
திருவாரூரில் நடந்த, மாநில கபடி போட்டியில், ஜி.கே.எம்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை தோற்கடித்து, எஸ்.ஆர்.எம்., கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
வடூர் நண்பர்கள் கிளப் சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி, திருவாரூர் மாவட்டம், வடூர் பகுதியில், சமீபத்தில் நடந்தது.
தமிழகத்தின் தலை சிறந்த கபடி அணிகளான, தமிழ்நாடு போலீஸ், எஸ்.ஆர்.எம்., பல்கலை உட்பட, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
காலிறுதிப் போட்டி யில், எஸ்.ஆர்.எம்., அணி, வடூர் நண்பர்கள் அணியை தோற்கடித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணியை எதிர்கொண்டு, 33 - 15 என்ற புள்ளிக் கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில், ஜி.கே.எம்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை, 24 - 13 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றியது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement