Advertisement

பெண் நடத்துனர்கள் பதவி உயர்வில் குழப்பம்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள, பெண் நடத்துனர்களின் பணி வரம்பில் குழப்பம் உள்ளதாக, ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 14 பெண்கள், நடத்துனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இப்போது, எந்த வழித்தடத்திலும் அவர்கள் வேலை செய்வதில்லை என கூறப்படுகிறது. அவர்களுக்கு சீருடை, தையல் கூலி உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களும் வழங்கப்படும் நிலையில், போக்குவரத்து பிரிவில் இருந்து நிர்வாகப் பிரிவிற்கு அவர்கள் மாற்றல் பெற்று, மாதாந்திர, 'சீசன் பாஸ்' வழங்கும் பிரிவில் பணியாற்றுகின்றனர். ஆனால், நடத்துனர்கள் பதவி உயர்வு பெற்றால், டிக்கெட் பரிசோதகர்களாக தான் பதவி அளிக்க வேண்டும். இவ்வாறு, போக்குவரத்து பிரிவில் இருந்து நிர்வாகப் பிரிவிற்கு மாற்ற, அதிகாரிகள் பெரும் தொகை பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement