Advertisement

சிங்கம் உலாவிட பகுதி திறப்பு

தாம்பரம்: வண்டலுார் பூங்காவில், பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட, சிங்கம் உலாவிட பகுதி திறக்கப்பட்டது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், சிங்கம் உலாவிட பகுதி தனியாக உள்ளது. அங்கு காட்டுப் பகுதியில் சுதந்திரமாக உலாவும் சிங்கங்களை, பார்வையாளர்கள் வாகனங்களில் சென்று, பார்வையிட்டு வருகின்றனர்.
கடந்த, 1ம் தேதி முதல், பராமரிப்பு பணி காரணமாக, சிங்கம் உலாவிட பகுதி மூடப்பட்டது. இதையடுத்து, பராமரிப்பு பணி முடிந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், சிங்கம் உலாவிட பகுதி திறக்கப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement