Advertisement

லண்டன் பள்ளியில் சமஸ்கிருதம் கட்டாயம்

போபால் : பிரிட்டனின், லண்டன் நகரில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் பள்ளியில், 43 ஆண்டுகளாக, சமஸ்கிருத மொழி கட்டாய பாடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டன் நகரில், 1975ல் செயின்ட் ஜேம்ஸ் பள்ளி துவங்கப்பட்டது. இந்த பள்ளி, பிரிட்டனில், சமஸ்கிருத மொழியை மேம்படுத்த, சர்வதேச அளவில் பல பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 'உலகின் மிகவும் பழமையான மொழியான சமஸ்கிருத இலக்கியத்தில் கூறப்பட்ட தத்துவங்கள் மற்றும் கருத்துகள், வாழ்க்கையை சரியான பாதையில் வாழ கற்றுத் தருகின்றன' என, கூறப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் இருந்து, ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஐரோப்பிய மொழிகள் தோன்றியதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த, 43 ஆண்டுகளாக, இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, சமஸ்கிருத மொழி, கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான சமஸ்கிருத பாடப் புத்தகங்களை, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள மோதிலால் பனாரசிதாஸ் பதிப்பகம் அனுப்புகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • thiruvarangan poosai - Thiruvarangam,இந்தியா

  உண்மையின் ஒளியை ஆயிரம் சூரியனாலும் மிஞ்ச முடியாது . இது தான் மெய் பொருள். கற்பூர வாசனை புரிந்தால் இதன் பொருள் புரியலாம்.

 • Shanmuga Sundaram - Bangalore,இந்தியா

  இன்னும் திருவாசகம் படித்துஉணாரா உயிர்கள் உள்ளன ...

 • madhavan rajan - trichy,இந்தியா

  இது நிச்சயமாக மோடியின் தமிழை ஒழிக்கும் சதித்திட்டமாகத்தான் இருக்கவேண்டும். சுடலை உடனே தமிழை லண்டனில் கட்டாயப் பாடமாக்கப் போராடுவார். எல்லா சொம்புகளும் உடனே அவர் பின்னால் வந்து நில்லுங்கள்.

 • S.Kumar - chennai,இந்தியா

  சமஸ்கரித்ததை விட பழையமான மொழி நம் தாய் மொழி தமிழ் இதுவும் பல பள்ளிகளில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பிய நாடுகளில் விருப்ப பாடமாக உள்ளது கட்டாய பாடம் இல்லை.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   நீ கூறுவது போல தான் சொல்லி வைத்து தமிழனை முட்டாளாக்கி வைத்து இருக்கிறார்கள். தமிழை தந்த அகஸ்தியர் ஒரு சமஸ்க்ரித பண்டிதர். அது போல தமிழின் இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியர் ஒரு சமஸ்க்ரித பண்டிதர். அந்தணர். அது இருக்கட்டும்..உனது பெயர் ஏன் சமஸ்க்ரிதத்தில் இருக்கிறது?

  • S.Kumar - chennai,இந்தியா

   தொல்காப்பியர் சமஸ்கிரத பண்டிதர் ஆனால் அவர் தமிழர் இப்பொழுது உள்ள கலைஞர் கருணாநிதி எப்படி குறளோவியம் மற்றும் எண்ணற்ற தமிழ் படைப்புகளை வழங்கி உள்ளார் ஆனால் அவர் ஒரு தெலுங்கர்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  மற்ற மொழிகளை போல அல்லாமல் சமஸ்க்ரிதத்திற்கு மட்டுமே என்று ஒரு தனி சிறப்பு உண்டு. இதை தேவபாஷை என்று சொல்வதற்கும் ஒரு காரணம் உண்டு. அந்த காரணத்திற்காக தான் அமெரிக்க உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் புகழ் பெற்ற கல்வி சாலைகளில் - பள்ளிகள், கல்லூரிகள், யூனிவர்ஸிடிஸ்- சமஸ்க்ரிதம் பயிற்றுவிக்க படுகிறது. இத்தனைக்கும் சமஸ்க்ரிதத்தை உலகமெல்லாம் பரப்ப என்று எந்த இயக்கமோ அல்லது இனமோ, மாநிலமோ, மக்களோ உலகளாவிய அளவில் இல்லை. சமஸ்க்ரித வெறி பிடித்த யாருமே இல்லை..ஆனாலும் அது உலகமெங்கும் பரவி வருகிறது. நாசாவில் நடக்கும் விஞ்ஞானிகளின் மாநாட்டில் இரு ஒரு போல அமெரிக்க வெள்ளையர்கள் ஐந்து நிமிட நேரம் ரிக் வேதத்தில் இருந்து புருஷ ஸூக்தம் பாடி நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறார்கள். இது you tube ல் பார்க்க முடியும். சமஸ்க்ரிதம் தேவ பாஷை என்று அழைக்கப்பட காரணம் அதன் பிறப்பு மற்றும் அதன் ஒலியில் பொதிந்து கிடக்கின்ற சக்தி. இந்த மொழியின் வார்த்தைகள் சக்தி அடங்கியிருக்கும் ஒரு சங்கேத ஒலிவடிவம் . ஒவ்வொரு சமஸ்க்ரித வார்த்தைக்குள்ளும் சக்தி இருக்கிறது. மந்திரங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சக்தி பிறப்பிப்பதற்காக குறிப்பிட்ட எண்ணைக்கையில் ஒன்றுணைக்கப்பட்ட வார்த்தைகளின் கூட்டு. இந்த வார்த்தைகளை குறிப்பிட்ட ஒரு ஆள் திரும்ப திரும்ப சொல்லும்போது அதிலேயிருக்கும் சக்தி உடைபடுகிறது..அந்த சக்தி சொல்லுகின்ற ஆள், சொல்லுகின்ற இடம், சொல்லப்படுபவரின் எண்ண சக்திகளுக்கு வலுவூட்டுகிறது. அந்த எண்ணங்கள் நிறைவேறுகிறது. இறைவனை கூட நம் கண்முன்னே கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு பவர் ஹவுஸ் போல இந்த வார்த்தைகள் செயல்படுகிறது. இதை பற்றிய வெளிநாட்டில் நடத்தப்பட்டு இருக்கிற ஆராய்ச்சி முடிவுகள் தான் வெளிநாட்டின் புகழ் பெற்ற விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கல்வி நிலையங்களும் சமஸ்க்ரிதத்தின் பால் ஈர்ப்பை அதிகரித்து கொண்டு இருக்கிறது. காலம் கடந்து விடவில்லை...சமஸ்க்ரிதம் இந்தியாவின் ஆன்மீக பொக்கிஷம் என்பதை இப்போதாவது உணர்வோம்.

  • Tamilan - Doha,கத்தார்

   தனி சிறப்பு என்ன வென்றால் இந்தியாவில் மொத்தமே 12500, பேர் பேசும் ஒரு மொழி. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் மொழி, இது வரை உலக விஞ்ஞாநம் கண்டுபிடிப்புகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்துதான் என்ற கதைகளையும் நம்பும் பக்தாள் இருக்கத்தான் செய்கிறார்கள் தேவபாசை மனிதர்களுக்கு எதற்கு.

 • மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இங்கு கருத்து என்ற பெயரில் கூறும் அறிவு ஜீவிகள் சமஸ்கிருதம்தான் பழமையானது என்றால் அது உங்களின் நீங்கள் அறியவேண்டிய படிக்கவேண்டியது நிறைய இருக்கு என்று அர்த்தம் அதற்காக சமஸ்கிருதமும் படிக்கலாம் தப்பில்லை அதற்காக தாய் மொழியை புறம் தள்ளி என்னவோ தமிழ் பேசினால் தீண்டப்படாதவர்களைப்போல் எண்ணிக்கொள்ளவேண்டாம் என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் ஆதங்கம் ஒருசிலர் ஆதங்கத்தின் வெளிப்பாடு கொஞ்சம் அதிகமாய் கூறி இருக்கலாம் நம் தாய் மொழியை நாம் அழியாமல் பார்த்துக்கொண்டால்தானே நம் சந்ததியரும் தொடுருவார்கள் இல்லை என்றால் எப்படி நிலைத்து நிற்கும்

  • MANI DELHI - Delhi,இந்தியா

   . தமிழ் நாட்டை விட்டு வெளியில் வரும் தமிழ் மக்கள் தமிழில் பேசுவதற்கு வெக்கப்படறாங்க.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Am very happy and excited to learn about this..... Long live, Sanskrit...👍

  • Sanjay - Chennai,இந்தியா

   ஏன் இந்த திடீர் பல்டி. நம் தான் டுமிழர்கள் ஆச்சே

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அந்த ஸம்ஸ்க்ருதக் கல்வியில் சமச்சீர் உண்டா? ..இது அங்கு போயிருக்கும் சுடலையின் சந்தேகம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தமிழ் உண்டா...?

  • Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா

   சம்பந்தமில்லாத கேள்வி. அமெரிக்காவில் கூட பல பள்ளிகளில் தமிழ் கற்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் எந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழை படிக்க வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு , மனு கொடுத்தால், தமிழ் கற்க ஏற்பாடுகள் செய்கிறார்கள். லண்டனில் உள்ள இந்தியர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமஸ்கிருதத்தை தங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாடமாக படிக்க வாய்ப்பை கோரி பெற்றுள்ளனர். அங்கு அதே பள்ளியில் ஆயிரக்கணக்கான வெள்ளையர்களும் தங்கள் குழந்தைகளை சமஸ்கிருதம் படிக்க வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழ்த்திசை மொழிகளில் உலகில் சமஸ்கிருதம் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தனி இருக்கையும் , ஆய்வு களங்களும் பெற்றுள்ளது.

  • vel - ,

   என்னங்க இப்படி கேட்டுடீங்க....நிறைய பேர்களுக்கு தமிழ் மொழியின் அழகு தெரியும் ஆழம் கூடத்தெரியும் அதன் சக்தி தெரியாது....அந்த காலத்தில் தமிழ் புலவர்களை அரசர்கள் மதித்தது வெறும் புலமைக்காக மட்டுமில்லை அவர்களது வாக்கு பலிததிற்காகவும்தான் .... அரசன் தவறிழைத்தால் அறம் பாடி விடுவார்கள் அதாவது பாக்களின் மூலம் சபித்து விடுவார்கள் தமிழ் மொழியின் ஆற்றலால் அவர்கள் கூறியது பலித்துவிடும்....அது போல் தமிழ்வேதம் எனப்படும் அபிராமி அந்தாதியில் ஒவ்வொரு பாசுரத்திற்க்கும் ஒவ்வொரு தமிழ் அட்சரங்கள் வைத்து பாடப்பட்டுள்ளது....ஒவ்வொரு பாசுரம் பாடும் போதும் வேறு வேறு பலன் உண்டு....நான் கூறியுள்ளது சக்தி வாய்ந்த தமிழ் மொழியின் ஒரு துளியே....வாழிய பைந்தமிழ்....

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   வெளிநாட்டில் தமிழன் இருக்கும் இடங்களில் மட்டுமே தமிழ் இருக்கும். மாறாக அறிவு இருக்கும் இடம் முழுவதிலும் சமஸ்க்ரிதம் இருக்கும். உலகின் 118 பல்கலைக்கழகங்களில் சமஸ்க்ரிதத்திற்கு என்று துறைகள் இருக்கிறது.

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  புத்திசாலிகள் நல்லது எங்கிருந்தாலும் தேடிச்சென்று அடைந்து பலன் பெறுவர் .... மூடர்கள் கையிலேயே கொண்டு போய் வைரத்தை கொடுத்தாலும் குறைகூறிக் குப்பையில் வீசுவர் . பிரிட்டிஷ் மக்களுக்கு தெரிந்துள்ளது .... ஷேக்ஸ்பியரை விட காளிதாசன் சிறந்தவன் என்பது .... ஆங்கிலேயர்களுக்குத் தெரிந்துள்ளது ஐன்ஸடீனை விட ஆர்யபட்டரும் , அரிஸ்டாட்டிலை விட விதுரர் பெரியழரென்றும் தெரிந்துள்ளது .... ஏனெனில் ...அவர்கள் அன்னப்பறவைகள் சமஸ்கிருத பாலைப் பருகுகின்றனர் .... நம்மூர் வாத்துகள் சேற்றில் நெளியும் புழுக்களை மட்டுமே தேடித்திங்கும் .

  • Jaya Ram - madurai,இந்தியா

   அப்படியல்ல நண்பரே அது தனியார் பள்ளி அவர்கள் எந்த மொழியினை வேண்டுமானாலும் கற்றுக்கொடுக்கலாம் ஆனால் இங்கிலிஷ் இல்லாமல் அந்த பள்ளி நடக்கிறதா அல்லது நடக்கத்தான் முடியுமா? இங்கிலாந்து எவ்வளவு பள்ளிகளை உடையது அங்கெல்லாம் ஆக்கமுடியுமா? சும்மா உதார் விடக்கூடாது தமிழர்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல எதையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்றுதான் கூறுகிறார்கள். இந்த தமிழ் நாட்டில் தமிழ் இல்லாத பள்ளிகள் எத்தனையோ இயங்குகின்றன, எங்கே உபி,ம பி யில் ஹிந்தியில்லாமல் பள்ளிகள் இயங்க முடியுமா? வேண்டாம் உங்கள் மொழி உங்களுக்கு உயர்வு என்றால் எங்களுக்கு எங்கள் மொழி பெரிதுதான் இது உலகளவிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது வந்தொட்டி களான உங்களுக்கே இவ்வவளவு என்றால் இம்மண்ணை பூர்விகமாக கொண்டவனுக்கு எவ்வளவு இருக்கும் எங்கே கணக்கெடுப்போம் உங்களில் எத்தனை இலக்கண , இலக்கிய நூல்கள் உள்ளன , தமிழில் எத்தனை இலக்கண , இலக்கிய நூல்கள் உள்ளன என்று ஏதோ ராமாயணத்தையும், மஹாபாரத்தினையும் வைத்துக்கொண்டு ஜம்பமடிக்கிறீர்கள் அவ்வளவுதான்

  • partha - chennai,இந்தியா

   தமிழில் எத்தனை இலக்கண இலக்கிய நூல்கள் என்று கூறும் நீர் ஒரு பெயரைக்கூட கூறமுடியவில்லையோ???

  • madhavan rajan - trichy,இந்தியா

   தமிழ் நாட்டில் தமிழ் இல்லாத பள்ளிகள் இருக்கின்றன என்றால் அது கழகங்களின் ஆட்சியினுடைய குற்றம். அதற்கு மற்றவர்கள் என்ன செய்வார்கள். கழகங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் நான்காம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலமே இருந்தது. அவர்கள் ஆட்சிக்கு வந்துதான் கல்வியை வியாபாரமாக்கி ஆங்கிலப் பள்ளிகளை திறந்து, அதில் கொள்ளையடித்து தமிழை வளர்க்கிறோம் என்று போலியாகக் கூறிக்கொண்டு மற்ற மொழிகளை எதிர்க்கிறார்கள். இன்று பள்ளிப்படிப்பை முடித்தவர்களில் தமிழை தவறில்லாமல் எழுதக்கூடியவர்கள் மிகவும் குறைவு. இந்த நிலைக்கு முழுப்பொறுப்பு கழகங்கள், ஆனால் அவர்களையும் அவர்களின் தவறான மொழிக்கொள்கைகளையும் ஆதரித்து தமிழனும் அவன் மொழியும் அவர்கலின் தேய்ந்துபோவதை கண்கூடாகபி பார்க்கிறோம்.

  • senthil - chennai,இந்தியா

   நீங்கள் கூறிய அணைத்து கருத்தையும் ஒத்துக்கொள்ள முடியும் ...கடைசி வரியை தவிர .....சமஸ்கிருதத்திலும் பல பல நூல்கள் உள்ளன ...மேலும் தமிழின் பல பழைய நூல்கள் அழிக்கப்பட்டுவிட்டன ..ஆனால் சம்ஸ்கிருத நூலகள் பல இன்றும் சேமிக்கப்பட்டுவிட்டது ...யாரால் எதனால் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டு விட்டது என்பது பல கற்பனை அல்லது புனையப்பட்ட விஷயத்திலும் சில உண்மையான விஷயத்தாலும் அறியலாம் ....எது முதிர்ந்து , எது சிறந்தது என்பதை காட்டிலும் ...இதில் மிக அழகிய ஆன்மிக வழிவியல் விஷயங்கள் உள்ளது ...கடவுளின் வழி எப்படி உள்ளது என்றறிய இரு மொழியும் கற்று புலமை பெற்று தேவையானவர்க்கு தெரிவிப்பது மனித பாக்யம் ..... இரண்டுமே பழைய பண்புள்ள மொழி

 • Indhuindian - Chennai,இந்தியா

  ஸ்டாலின் ஏற்கனவே லண்டனில் உள்ளார். வைகோ,திருமா, வீரமணி, வேல்முருகன், டாக்டர் ராமதாஸ் நீங்கள் எல்லோரும் கிளம்புங்கள் லண்டனுக்கு. அங்கு போய் இது திராவிட பாரம்பரியத்திற்கு இது எதிரானது என்று ஒரு போராட்டம் நடத்திவிட்டு வாருங்கள் அங்கு லோக்கல் கூட்டம் உங்களால் கூட்ட முடியாது (அது சத்திய மூர்த்தி ஒருவராலதான் சாத்தியம்). ஆகவே இங்கிருந்து ஒரு நூறு ஆட்களை தயார் பண்ணி கொண்டு செல்லவும் என்ன செலவுதான் கொஞ்சம் ஜாஸ்தி. அதனால் என்ன இந்த செல்வது வெறும் சுண்டக்காய் பணம் நமது பாரம்பரியத்தை காக்க இது கூட செய்ய முடியாதா. அது மட்டும் அல்ல திரும்பி வந்த பிறகு விழா எடுத்து லண்டன் கொண்டான் என்று பட்டம் கொடுத்துக்கொள்ள முடியும்.

  • Anand - chennai,இந்தியா

   இந்தமாதிரி போராட்டம் அங்கு நடத்தினால், அடித்து துரத்துவார்கள்.

 • Lodakku Paandi - Trichy,இந்தியா

  வயிறு எரியது வயிறு எரியது. - டூமில்ஸ்

 • Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா

  ஆங்கிலம் உலகெங்கும் பரவி, நிலை பெற்றதற்கு பல காரணங்கள் இருப்பினும், மிக முக்கியக்காரணம் , பல்வேறு பிறமொழிச் சொற்களை லட்சக்கணக்கில் தங்கள் மொழியில் திசைச் சொற்களாக ஏற்று, தங்கள் டிக்ஷனரியில் சேர்த்துக் கொண்டு, தங்கள் ஆங்கிலத்தை வளப்படுத்தி, வலுப்படுத்திக் கொண்டனர். எனவேதான் ஆங்கிலேயர் ஆட்சி பல நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பின்னரும், இன்னமும் ஆங்கிலம் புழக்கத்தில் உள்ளது.பிற மொழிகளின் சொற்களை திசைச் சொற்களாக ஏற்க மறுக்கும் மொழிகள் பலவும் எதிர்காலத்தில் காணாமல் போகும். சம்ஸ்கிருதம் உட்பட பல்வேறு இந்திய மொழிச்சொற்களை, ஆங்கிலம் தன் அகராதியில் சேர்த்துள்ளது.

 • jeeva - ,

  சம்ஸ்கிருதத்தை நாம மொழியாக பார்ப்பதில்லை ஒரு சப்தமாக பார்கின்றோம். இதை (மந்திரங்களை) சரியான மூறையில் உச்சரித்தால் அதில் ஏற்படும் அதிர்வுகள் உடல் நலத்தை தருவதுடன் மூளையை நன்றாக செயல்பட தூண்டுகிறது. உதாரணமாக நமது முன்னோர்கள் தொடர்ந்து செய்யப்படும் ஒரு தெய்வத்திற்க்கு உண்டான மூல காயத்திரி ஜெபம் அதனது பலனாய் அந்த தெய்வத்தை நம் முன் சூச்ஷமமாக எழுந்தருள செய்துவிடும். அதனால்தான் நமது முண்ணோர்கள் தினமும் மூன்று முறை 108 காயத்திரி ஜெபம் செய்து வந்துள்ளனர். நாம் எல்லோரும் முறைப்படி தீட்ஷை பெற்று நியம நிஷ்டைகளோடு காயத்திரி ஜெபம் செய்யலாமே....

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   உலகத்திலேயே அதிக அதிர்வுகளை உருவாகும் மந்திரம் காயத்ரி மந்திரம் என்று கண்டுஅறிந்திருக்கிறார்கள், ஜெர்மனிய ஒலி நிபுணத்துவ விஞ்ஞானிகள். பல்வேறு மதங்களில் இருந்து முக்கியமானது என்று கருதப்படும் மந்திரங்களை தனித்தனியாக அந்தந்த மதத்தில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து உச்சரிக்க வைத்து அதன் ஒலிஅதிர்வுகளை ஆராய்ந்து இருக்கிறார்கள் ஜெர்மனியில். அதன் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்டும் இருக்கிறார்கள். காயத்ரி மந்திரம் வினாடிக்கு 11000 /s அதிர்வுகளை உருவாக்குவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதை போன்று வேறு எந்த பிற மத மந்திரங்களும் வெறும் ஐநூறு கூட தாண்ட வில்லை என்பது தான் ஆராய்ச்சி முடிவு. நமது மகான்களும், நமது ரிஷிகளும், நமது இறைவன்களும் எந்த அளவிற்கு நம்மை நல்வழி படுத்த ஆச்சரியங்களை அருளியிருக்கிறார்கள் என்பதை அறியும் போது, நமக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இந்தியாவில் சமஸ்கிருதத்தின் அருமை ஒரு சில சமூகத்துக்கு மட்டுமே தெரியும்... பலர் அதை செத்த மொழி என்று சொல்லி ஒதுக்கி விடுகின்றனர்...

 • JAYARAMAN - CHENNAI,இந்தியா

  Please interview , 10 old students of 35 year age from this school ,about the benefits they attained in their life by studying Sanskrit. That can be posted in you tube also.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அப்போ வங்கியில் கடன் வாங்கிட்டு ஓடிப்போனவங்களுக்கு கலாச்சார பிரச்சினை இல்லைன்னு சொல்லுங்க.

  • R MURALIDHARAN - coimbatore,இந்தியா

   சம்பந்தமில்லாத கமெண்ட். நீர் இந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் மதிக்காதவர் என்று தெரிகிறது

  • Sanjay - Chennai,இந்தியா

   மூர்க்கனிடம் வேறென்ன எதிர்க்கபார்க்க முடியும் ...

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஆஹா நம்ம ஆளுங்க மண்டையில இது ஏறாதே என்ன செய்ய? திணிப்புன்னு போராடவும் முடியாதே? பார்ப்பன ஆதிக்கம்னு சொல்ல முடியலையே

 • K.Palanivelu - Toronto,கனடா

  இச்செய்தியை திராவிட கழக தலைவர் வீரமணி ஒருமுறையல்ல பலமுறை படித்துப்பார்க்க வேண்டும்.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   அட ஏங்க அவனுக்கு அந்த அமைப்பை வச்சு தான் சோறே கிடைக்குது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல் தாங்கள் தான் திமுகாவின் பாசறை என்று சொல்லி எல்லா பம்மாத்து பண்ணிவிட்டார்கள். இப்போ திமுகாவிற்கு இவனுங்க சித்தாந்தமெல்லாம் போனி ஆகமாட்டேங்குது. திமுக அவங்க வீட்டுலே எல்லாம் பூஜை புனஸ்காரம் என்று சமஸ்க்ரிதத்தில் தடபுடலா நடக்குது. இவனையெல்லாம் நல்ல வெச்சு செய்யணும்.

 • நக்கல் -

  ஒழுக்கமற்ற திராவிட அடிமைகளுக்கு நல்ல விஷயங்க அருமை தெரிய வாய்ப்பில்லை.. ஊர ஏமாத்தி வாழற கும்பல்...

 • Ramesh - chennai,இந்தியா

  திராவிட கழகங்கள் புரிந்து கொள்வார்களா

  • MANI DELHI - Delhi,இந்தியா

   மக்கள் புரிந்து கொள்கிறார்கள். இவர்களின் மூளை சலவை வேலைக்கு ஒரு ஆப்பு.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  அப்படிப் போடுங்க அருவாள. நம்ம ஊரா இருந்தா பார்ப்பன சதின்னு அறிக்கை விடலாம் . வேணும்னா இத பாவாடை சதின்னு சொல்லலாமா ஐயோ மூச்சு கொன்னே போட்ருவாங்க . ஆங் வேணும்னா இங்க இருந்து சில சில்லண்டிகளை அனுப்பி அங்க போயி மோடி ஒயிக ன்னு போராட்டம் பண்ண சொல்லலாமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 • Vela - Kanchipuram,இந்தியா

  43 ஆண்டுகள் .....ம்ம் ....ஏதாவது ஒன்று இந்தியாவில் உள்ளதா?

 • rambo -

  stupid school

  • sridhar - Chennai

   Stupid Rambo .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement