Advertisement

பாக்.,கில் தாக்கப்பட்ட சீக்கிய போலீஸ் அதிகாரி

லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த, முதல் சீக்கிய போக்குவரத்து போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர், பாக்., அதிகாரிகளால் தாக்கப்பட்டனர்.அண்டை நாடான, பாக்.,கை சேர்ந்தவர், குலாப் சிங் ஷஹீன். மனைவி, பரம்ஜித் கவுர் மற்றும் மூன்று மகன்களுடன், லாகூரில் வசித்து வருகிறார்.இவர், 2006ல், போக்குவரத்து போலீசாக பணியில் சேர்ந்தார். பாக்.,கில், சீக்கியர் இனத்தை சேர்ந்த முதல் போக்குவரத்து போலீஸ் என்ற பெருமையை, குலாப் சிங் பெற்றார்.தற்போது அவர், பதவி உயர்வு பெற்று, அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.குலாப் சிங்கின் குடும்பத்தினர், தேரா சாஹல் என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர்.சமீபத்தில், அவரது வீட்டுக்கு வந்த அரசு அதிகாரிகள், 'இந்த வீடு, பாக்., குருத்வாரா அறக்கட்டளைக்கு சொந்தமானது' எனக் கூறி, வீட்டை காலி செய்ய வற்புறுத்தினர்.இதற்கு, குலாப் சிங்கின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவரது தலைப்பாகையை கழற்றி, அவரது முடியை பிடித்து இழுத்து வந்து, வீட்டை விட்டு வெளியேற்றினர்.அவரது மனைவி மற்றும் மகன்களையும் தாக்கினர். இந்த சம்பவத்தை அடுத்து, குலாப் சிங், மருத்துவ விடுப்பில் உள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement