Advertisement

மனித வெடிகுண்டு தாக்குதல் : பாகிஸ்தானில் 20 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானில், தேர்தல் பிரசார கூட்டத்தில், மனித வெடிகுண்டு வெடித்ததில், ஏ.என்.பி., எனப்படும், அவாமி தேசிய கட்சியின் தலைவர் உட்பட, ௨௦ பேர் இறந்தனர்.பாகிஸ்தானில், பார்லிமென்ட் தேர்தல் வரும், ௨௫ல் நடக்கிறது. இதையொட்டி அங்கு, தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துஉள்ளது.தேர்தலை சீர்குலைக்க, தலிபான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறைஎச்சரித்துள்ளது.தேர்தல் பிரசாரத்தின்போது, கட்சிகளின் மூத்த தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, அந்நாட்டின், தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.இந்நிலையில், பெஷாவரில், நேற்று முன்தினம் இரவு, அவாமி தேசிய கட்சியின் பிரசார கூட்டம் நடந்தது. இங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.அவாமி தேசிய கட்சியின் தலைவர், ஹருன் பிலார், பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாகனத்தில் வந்தார்.அப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருந்த ஒருவன், அவற்றை வெடிக்க வைத்தான்; இதில், அந்த மனித வெடிகுண்டு உட்பட, ௧௩ பேர், உடல் சிதறி இறந்தனர்.பிலார் உட்பட, ௪௦ பேர், படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில், சிகிச்சை பலனின்றி, பிலார் உட்பட ஏழு பேர் இறந்தனர்.மேலும், பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.இந்த குண்டு வெடிப்புக்கு, பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஹருண் பிலாரின் தந்தையும், அவாமி தேசிய கட்சியின் தலைவருமாக இருந்த, பஷீர் பிலார், ௨௦௧௨ல், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • PrasannaKrishnan -

    Die quick. We can save our army weapons.

  • rajan - kerala,இந்தியா

    வாழ்த்துகள். எல்லா புகழும் இறைவனுக்கே???

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement