Advertisement

பொருளாதார நிலையில் இந்தியா முன்னேற்றம்! உலகளவில் 6ம் இடம் பிடித்து சாதனை

புதுடில்லி : சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகள் குறித்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட பட்டியலில், இந்தியா, ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. வல்லரசான பிரான்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி, இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது.


சர்வதேச அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலை, உலக வங்கி, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2017ம் ஆண்டுக்கான பட்டியலை, உலக வங்கி நேற்று வெளியிட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பட்டியல் :கடந்த, 2017ம் ஆண்டில், பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது; இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி நான்காவது இடத்திலும், பிரிட்டன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.


இந்தியா, 2.59 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவிலான, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரான்ஸ், 2.58 லட்சம் கோடி டாலருடன், ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன், மந்தநிலையில் இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களால், மீண்டும் எழுச்சி அடைந்துள்ளது. நுகர்வோர் செலவினம் அதிகரித்ததால், தயாரிப்பு துறை பயன் அடைந்தது. இது, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

எழுச்சி :பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் போன்றவற்றால், பொருளாதார வளர்ச்சி, சற்று குறைந்தது.
ஆசியாவில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியை, இரு மடங்கு உயர்த்துவதில், இந்தியா நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தனி நபர் வருவாய்! மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, தனி நபர் வருவாயில், இந்தியா, பிரான்சை விட, 20 மடங்கு பின்தங்கியுள்ளது; இதற்கு, இரு நாடுகளின் மக்கள் தொகையில் உள்ள வித்தியாசம் தான், காரணம். இந்தியாவின் மக்கள் தொகை, 134 கோடி; பிரான்சில், 6.70 கோடி பேர் மட்டுமே வசிக்கின்றனர். -உலக வங்கிஅறிக்கை


ஜி.எஸ்.டி.,யால் உயர்ந்த வளர்ச்சி விகிதம் : இந்தியாவில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017, ஜூலை, 1ல், அமல்படுத்தப்பட்டது. இது, அமல்படுத்தப்படும் முன், 2017 - 18 நிதியாண்டின், முதலாம் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீதமாக இருந்தது. அந்த ஆண்டின் சராசரி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.74 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டபோது, தொழில் துறையினர் அதற்கு பழக்கப்படாததால், உற்பத்தி விகிதம் சற்று குறைந்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., விகிதத்தில் காணப்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டதால், பொருளாதார வளர்ச்சி, வேகம் எடுத்தது. 2018 - 2019 நிதியாண்டில், ஜூனுடன் முடிந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதமாக அதிகரித்து, வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 'இனி வரும் நிதியாண்டுகளில், பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்' என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், ஜி.எஸ்.டி., அமலால், பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்படும் என்று கூறப்பட்ட கருத்துகள் பொய்யாகி உள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து (66)

 • spr - chennai,இந்தியா

  எல்லாம் சொல்லிவிட்டு மக்கள் கையில் காசு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் .எப்படி அவர்கள் கையில் காசு வந்தது... அன்றாடச் செலவுக்கு மாதாமாதம் பட்ஜெட் போட்டு செலவழிப்பவருக்குத்தான் இதற்கான பதில் தெரியும் இந்தக் கேள்விக்குப் பதில் - money from credit cards bank loans etc. People started charging more for the same service for they require more money for their lavish spending.( exceeding the limits of reason or necessity). Even unemployed youth depending n his father's salary, wants a Harley Davidson Bikes bike costing a he lowest priced model at Rs. 5.25 lakh இதன் விளைவு “லஞ்சம், ஊழல் இன்னும் இதர தீய வழிகளில் பணம் பெருக்கும் முறைகள். Centre for Monitoring Indian Economy (CMIE), a think-tank that tracks business and economic data சொல்வது The number of jobseekers in India, rising steadily over the last few months, spiked to 7.1% in the week ended Feb. 25..................There are around 31 million unemployed Indians seeking jobs now (the number of job creation in 2018 is limited to an estimated 6,00,000.) —the highest since October 2016, according to a report published on Feb. 27 by the Centre for Monitoring Indian Economy (CMIE), a think-tank that tracks business and economic data..................After falling to a low of 3.4% in July 2017, unemployment rates have been rising gradually, the CMIE data show....................... படித்த படிப்புக்கு வேலை இல்லை படிப்பின் தரம் தாழ்ந்துவிட்டது பொறியியல் படிப்பு படித்தாலும் உடனடியாக அவர்களைப் பணிக்கு அமர்த்த இயலவில்லை ஒவ்வொரு நிறுவனமும் பல லட்சங்களை செலவழித்து அவர்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே அவர்களுக்கு பணி வாய்ப்பு தர இயலும். இது குறித்து பிரதமர் உட்பட எவரும் கவலைப்படவில்லை சாலை போடும் பணிக்கும் கட்டிடம் கட்டும் பணிக்கும் வாய்ப்பு கொடுத்தால் போதுமென்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர். ஆனால், செலவு மட்டும் குறையவில்லை அதற்கு உதவுவது கிரெடிட் கார்டு வங்கிக்கடன் அல்லது அதீத அளவில் சேவைக்கட்டணத்தை உயர்த்துவது போன்றவை இன்று ஒரு மின்சாரப் பணிக்கோ பிளம்பர், கொத்தனார் சித்தாள் பணிக்கு குறைந்த பட்சம் ரு 250/- முதல் ரு 400/- வரை தர வேண்டியிருக்கிறது அது அவர் வாங்கும் இருசக்கர வண்டி வீட்டில் வைத்திருக்கும் டிஷ் தொலைக்காட்சி இவற்றுக்கான தேவை. செய்யும் பணி அதேதான் அதில் எதுவும் மாற்றமில்லை பணி நேரமோ குறைவு. அரசாங்கத்தின் வங்கி நிர்வாக முறைகள், கட்டுப்பாடுகள் குறைந்த வட்டிவிகிதம் இவற்றால் வங்கி சேமிப்பு குறைந்து விட்டது. பங்கு சந்தை சூதாட்டம் அதிகரித்துவிட்டது. திரு குருமூர்த்தி சொன்னபடி மக்களின் வங்கி சேகரிப்பே நாட்டை முந்திய அரசின் முட்டாள்தனமான நிதிக் கொள்கையின் தீய விளைவுகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றியது. இன்று அது இன்னமும் குறைந்து போகிறது. நிறுவனங்கள், விவசாயிகள் வாங்கும் கடன் அவர்களின் வியாபாரத்தை அதிகரித்து நாட்டுக்கு வருமானத்தை, அதன் வளத்தைப் பெருக்கிறது ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தனிமனிதர் வாங்கும் கடன் திருப்பி அளிக்கப்படாத வகையில் நாட்டுக்கு இழப்பே. Higher spending (fuelled by potentially higher consumer debt) alongside lower savings will have long-term consequences on the less cash economy. What comes as a surprise to us is the total spends using Plastic Money at Point of Sale [PoS] and eCommerce. Credit Card users are heavy spenders at PoS & Online as mere 2 Crore Credit Card holders spend a whopping 17,186 Crore while 50 Crore Debit Card holders spent a meager 11,101 Crore. - இது நாட்டுக்கு நல்லதல்ல

 • a.thirumalai -

  இது மிக சரியான கணிப்பு உண்மைதான் அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் மிக பெரிய முதலாளிகள், கருப்பு பணமுதலைகள் ரவுடிகள் வளர்ச்சியில் இந்தியா ஆறாவது இடத்தில் கண்டிப்பாக இருக்கும்.

 • Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா

  இந்தியாவில் பாலும் , தேனும் பெருகி ஓடுகிறது , விளைச்சல் அமோகமாக உள்ளது மக்கள் தங்கள் கையில் உள்ள அபரிமிதமான பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என முழிக்கிறார்கள் . பெட்ரோல் லிட்டர் 43 . 09 ரூபாய்க்கு விற்கிறது . தொழிற்சாலைகளில் கடை மட்ட ஊழியர் லட்சம் ஊதியம் வாங்குகிறார் . ஹோட்டல்களில் முழு சாப்பாடு gst வரி உட்பட ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கிறது .

 • dandy - vienna,ஆஸ்திரியா

  ஹ ஹி ஹி விரைவில் இந்தியா சுவிற்சர்லாந்து மாதிரி வந்து விடும் ..டாஸ்மாக் நாடுகளில் மூக்கை பொத்தாமல் நடக்க முடியாது ..திரும்பிய பக்கம் பிச்சைக்காரர்கள் இந்த அழகில் பிரான்ஸ் நாட்டிடை விட இந்தியா முன்னேறி விட்டதாம் அப்படியானால் இந்திய ரூபாய் EURO வை விட பெறுமதி அதிகம்

  • sam - Bangalore,இந்தியா

   Stop criticising India, especially NRI people. if you really care about India, come to India and fight for Indian growth.

 • sam - Bangalore,இந்தியா

  Earlier if I go to a medical shop or hotel or restaurant or any retailer shop I use to get a handwritten bill only. but now I could see GST in all the bills. The government is getting the money in all direction (20 billion $ per month) and it is good for the country development They can invest in the country development (Heath care/Defense/infra/many more). We have to patiently wait and watch for the growth.

 • spr - chennai,இந்தியா

  இதுதான் நமது அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்த நிலை "According to the latest data of the Department of Industrial Policy and Promotion (DIPP), FDI in 2017-18 grew by only 3 percent to USD 44.85 billion. Foreign inflows in the country grew by 8.67 percent in 2016-17, 29 percent in 2015-16, 27 percent in 2014-15, and 8 percent in 2013-14. However, FDI inflows recorded a negative growth of 38 percent in 2012-13. According to experts, it is critical to revive domestic investments and further ease of doing business in the country to attract foreign investors "

 • Loganathan Balakrishnan - Salem,இந்தியா

  இதற்கு முன்பு இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு பட்டியல் வரும் போது உண்மை என்று சொன்னார்கள் இப்பொழுது எதிர் கருத்து சொல்பவர்கள் ஆனால் இப்பொழுது இந்த பட்டியல் வரும் போது பொய் என்று கருத்து சொல்கிறார்கள்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சமூக வலைத்தளத்தில் சில நாட்கள் முன்பு பிரான்சு போல இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி 5 ம் இடம் பிடித்ததாக படித்தேன் விரைவில் அந்த வளர்ச்சியும் நிகழட்டும் பாராட்டுக்கள்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இதே அரசு தொடர்ந்தால் தான் வளர்ச்சியும் தொடரும். தப்பி தவறி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் வெண்ணை திரண்டு வரும்போது பானை உடைந்த நிலைமைதான் நாட்டுக்கு.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  "போலித் தகவல்கள்" என்று கூறுபவர்கள் இதை இந்திய அரசின் எந்தத் துறையும் கூறவில்லை ..... உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புக்கள் கூறுகின்றன என்பதை உணர்ந்தது போல் தெரியவில்லை .....

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  இன்னும் இந்த நாட்டில் கக்கூஸ் இல்லையே மோடிஜி

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   அதை அங்க உட்கார்ந்து சொன்னா எப்படி... வாங்க சேர்ந்து காட்டுவோம்...

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   அடக்கி கொடுமையே ..... அடக்கிக்கிட்டே இருக்கியா ? அப்போ எப்படித்தான் அது ரிலீசு ஆவுது ?

  • motchi - brussels,பெல்ஜியம்

   ருபாய் மதிப்பு அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இவனுங்களுக்கு சிறுநீர் பாசனம் தான் தெரியும்.

 • sampath, k - HOSUR,இந்தியா

  Totally d report for coming election. No reality and not genuine in this report. Should not compare very low population countries. Huge difference in each and every level in india. No comparable stages exists in our country. Only 5% are extronary level.

 • Ramesh - Bangalore,இந்தியா

  So called GREAT ECONOMISTS like Manmohan(PM), Chidambaram(FM),Anand Sharma(Commerce) etc. were not able to achieve what present PM and his team has achieved in last 4 years.Chidambaram used to criticize PM and team that they don't have BASIC knowledge of Economy and Commerce. As Congress intentions were SO WRONG and against countries interest, they were not able to achieve like present government where their intentions and strategy are very clear ....Country , People, Growth, Integrity and Self respect ...Jai Hind

  • selvam - Chennai,இந்தியா

   பிரான்ஸ் நாட்டில் தனி நபர் வருமானம் 38000 டாலருக்கும் மேலே .. நம்ம பாரத நாட்டில் இன்னும் 1940 மட்டுமே .. சீனாவில் கூட தனி நபருக்கு 8000 டாலருக்கும் மேலே இருக்கிறது.. இதுதான் முக்கியமான தகவல்.. தனி மனித வளர்ச்சியில் நாமோ பங்களாதேசம் ,பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானை விட கொஞ்சம் மேலே ..கொஞ்சம் நிதானம் தேவை ,சிந்திக்கவும் வேண்டும்.. அவசரப்பட்டு குதிக்க ஒன்றுமில்லை.. ஆனா இந்தியாவில் மேல்நிலை மக்கள் வெகு சிலரின் வருமானம் அசுர வேகத்தில் வளர்வது உண்மை.. மிகுந்த ஏற்ற தாழ்வுகள் .ஏழ்மை எல்லாம் இன்னும் நிறைய உண்டு இங்கே..

  • Ramesh - Bangalore,இந்தியா

   Of course...France population is less than 8 crores whereas our population is 135+ crores...These factors including all other factors were there for last 20+ years...During the UPA 1 and 2 were the same data ...In that context only comparison was/is/will be happening ...Chidambaram /Congress were questioning the knowledge of Modi and his team on many area ...Finance, Commerce, Diplomacy etc...Indian educated RSS people have proved that they are better in managing the country than Harwards educated, RBI Governors, Economist...Disparity was /is/will be there till government is not fixing minimum wages for all low level employment...Just think there are Engineers who are earning of 40000+ Rs/month in a normal city ...We are not ready to pay more than 1000 Rs to Maid who is working in our house for cooking, cleaning, washing etc...Disparity will start to go off , only if all or majority indian mentality is starting to change....Hope it will happen soon...Leaving all those apart this government is driving in the correct direction which should have started after 1947 and just 60+ years late....Still it's OK Jai Hind

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  பேப்பரில் சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்காது அது போலத்தான் இந்த போலி முன்னேற்றம் இதற்க்கு மனித மாண்பே இல்லாமல் விளக்கு பிடிப்பது வெளிப்படையான அதர்மம் ... மக்களை முட்டாளாக்கி ஒட்டு வேட்டைக்கு இது போன்ற விளம்பரங்கள் அதற்கு விலைபோகும் மனிதமாண்பு ... காங்கிரஸ் காரன் ஆட்சியில் 110.டாலராக கச்சா எண்ணெய் விலை இருந்த போது 70.ரூ பெட்ரோல் கிடைத்தது இன்று 70.டாலரில் கச்சா எண்ணெய் விலை விற்கும் போது ரூ 80.க்க பெட்ரோல் விற்கிறது . அன்று ஒன்று டாலரின் மதிப்பு 45.00.ரூ இன்று 70.00.க்கு வந்து விட்டது பொருளாதாரம் கோவணத்துடன் இருக்கிறது .. கோட்டு சூட்டு போட்டு சொல்வது அறிவீனம் என்பது உண்மை

  • Rajasekar K D - Kudanthai,இந்தியா

   சபாஷ் அருமை

  • Ramesh - Bangalore,இந்தியா

   We understand your pain

 • NATHAN - KANYAKUMARI,இந்தியா

  அருமை. GST க்குள் பெட்ரோல் ,டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சிறு தொழில் செய்ய விரும்புவர்களுக்கு மின்சாரம் எளிதாகவும் சலுகை விலையிலும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்துக்கள் ,கட்டிடங்கள் அமைக்க உடனடியாக உத்திரவு பிறப்பித்து ,நல்ல முறையில் செயல் பட உதவி கரமாக இருக்க வேண்டும்.EB மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் பெரும் கெடுபிடி செய்கிறார்கள் .வளை குடா நாடுகளில் ஒரு நாளில் செய்து முடிக்க கூடிய அரசாங்கம் சம்பந்த பட்ட வேலைகள் இங்கு 3 மாதங்கள் ஆகியும் முடிக்க முடிய வில்லை.அரசு பணியாளர்கள் சுறு சுறுப்பு, மற்றும் நேர்மையுடன் வேலை செய்தாலே ,நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சியினை அனைவரும் அனுபவிக்க முடியும். இல்லையேல் அனைத்தும் ஏட்டளவில் என்ற கதையாய் முடியும்.வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் மனதிற்கும்,உடலுக்கும் உந்து சக்தி. இதற்கு உள்ளூர் அரசு அதிகாரிகள் ,மற்றும் மாநில அமைப்புக்கள் மக்களின் தேவை அறிந்து காமராஜர் அய்யா செய்த பணியில் 10 விழுக்காடு செய்தாலே போதுமானது. தற்சார்பு தொழிலுக்கும் ,மாநில அரசாங்கம் ஒத்துழைப்பு தர வேண்டும்.தொழில் முனைவோருக்கு தெரியாத அரசாங்க விதிகளை,தொடர்புடைய அலுவலகங்களில் , உதவி பணியாளர்கள் 25 % இருக்க வேண்டும், பணிகள் உடனடியாக முடித்து கொடுக்க அவர்கள் சேவை இன்றி அமையாதது. ஒருவர் சிறு தொழில் ஒன்றை தொடங்கினால் குறைந்தது அதனால் 100 பேர் பயன் அடைவார்கள்.

  • Sivaligam - Chennai,இந்தியா

   Include aadhar link to voter ID, this will make a huge difference among politics of India. Biometric access to voting will give genuine good result, include this point to above list

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வெளி நாட்டுக்காரன் (வெள்ளையா உள்ளவன்) எதை சொன்னாலும் இந்த ஆட்டு மந்தைகள் அப்படியே நம்பிடுதுக எட்டு சொரைக்காய் கூட்டுக்கு உதவாது

  • Raman - kottambatti,இந்தியா

   தேர்தல் வருது இல்லே .. இன்னும் நிறைய வரும்

  • Manian - Chennai,இந்தியா

   வெளி நாட்டுக்காரன் (வெள்ளையா உள்ளவன்) எதை சொன்னாலும்.. அவனுக அகிராசி சியுறானுக. அதிலேதான் அவனுக்கு பெருமை. அதை குறை சொல்லும் பெருமை மட்டுமே நம்மள உண்டு தம்பி. தமிழனின் தனிக குணம்- தனக்காகவும் தெறியாது, மற்றவன் சொல்லாலும் கேட்கமாடடான். வெங்கி நெசமாலுமே தமிழன்தான்

 • Larson - Nagercoil,இந்தியா

  இதுவும் ஒரு மக்கள் மூளையை மழுங்கடிக்கும் தேர்தல் பிரச்சார யுக்திகளில் ஒன்றுதான். உலக வங்கிக்கு எப்படி தெரியும், இங்கு பெரும்பாலான மக்கள் சோற்றுக்கு வழி இல்லாமல் இருப்பது.

 • Manian - Chennai,இந்தியா

  வேலை இல்லாதோர் கணிசமாக அதிகரித்துள்ளனர்- ஏன் என்றால் 94% திறமை இல்லாதவர்கள். எந்த வேலை செய்வதையும் கௌரவக்குறைவாக என்னும் நடுத்தர வர்க்கங்கள். ஏழைகள் எப்படியும் வேலை செய்வார்கள். காகித படிப்பு, எப்போதும் சின்னம்மா போல் கனவு, எந்த தொழிலும் கேவலமில்லை என்று எண்ணாதது, நிலம் தர மாட்டோம், வழி தர மாடோம், எதுவும் எங்கள் ஊரிலே வேண்டாம் என்றெல்லாம் சொல்பவர்களிடம் எந்த தொழில் அதிபரும் வந்து உங்கள் ஊரில் தொழில் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லுவானா? கடைசியில் அரசியல், அரசாங்க வியாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து எவன் தொழில் ஆரம்பிப்பான்? வேலை இல்லாதோர் சேர்ந்து ஏன் கோஆப்ரேடிவ முறையில் ஆரம்பிக்க கூடாது? லஞ்சம் வாங்க முடியாத வேலையே வேண்டாம் என்றுதானே அதை செய்யவில்லை. 134 மாயாக்களின் பிரச்சினைகளை எந்த அரசும் தானாக சரி செய்ய முடியாது. கேள்வி கேட்பவர்கள் இதற்கெல்லாம் தீர்வும் மட்டும் ஏன் சொல்வதில்? அவ்வளவு திறமை இல்லை என்றுதானே பொருள்? அடிப்படையில், மக்கள் லஞ்சவாதிகளை அடித்து நொறுக்கும்போது, தானாகவே வரும். 95 % லஞ்சம் குறைந்தால், நாடு முன்னேறும்.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   நல்ல விளக்கம். இதை தான் நானும் பலமுறை சொல்லுகிறேன். கட்டத்துறையில் லேபர் வேலை செய்ய தொழிலாளிகள் இல்லை. நல்ல பிளம்பர் நல்ல எலெக்ட்ரிஷியன் இல்லை. எல்லாருக்கும் அரசு வேலை வேணும். அங்கே தான் நல்ல கல்லா கட்டலாம். திறமையான யாரவது உள்ளவர்கள் கம்பெனி நடத்தினால் அங்கு பருப்பு வேகவில்லை என்றால் உடனே ஜாதி என்றெல்லாம் பேசி சமூக சிந்தனை பாடம் நடத்துவார்கள். திறமையானவர்கள் முன்னேறினால் உடனே அவர்களை வந்தேறிகள் ஆரியர்கள் என்றெல்லாம் பேசி மக்களை மனதளவில் புண் படுத்துவார்கள். இப்படி தமிழ் நாட்டை விட்டு இடம் பெயர்ந்தவர்கள் பல மாநிலங்களில் மற்றும் நாடுகளில் பிரகாசித்து அந்தந்த இடங்களின் வளர்ச்சிக்கு வழி செய்கிறார்கள்.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   நீங்க ரெண்டு பேர் சொல்லுவதும் சரி... இதெல்லாம் பத்தி பேசினா ஈவேராவின் சமூக புரட்சின்னு சொல்லுவாங்க... திருட்டு முன்னேற்ற கட்சிகள் செய்த பாவம் அவர்களையே முன்னேறவிடாம தடுக்குது... இதுல ஒழுக்கமாக இருப்பவர்கள் வேறு சேர்ந்து அவதி பட வேண்டியுள்ளது...

  • Manian - Chennai,இந்தியா

   நல்ல அரிசியில் கல் இருப்பது போலவேதான். இதில் துாரபார்வையில் தெறிந்து கொள்ள வேண்டியது , இன்று முக்கியமாக அரசாளும் மூன்றே ஜாதிகளும் சிறந்த சிந்தனையாளர்கள் இல்லாமல், அவர்கள் கொள்ளுப் பேரன்கள் கொள்ளுப் பேரன்கள் காலத்தில் பிச்சை எடுப்பார்கள். வியாதிகளால் சாவார்கள் . காசு கொடுத்தாலும் நல்ல மருத்துவர் இருக்க மாட்டார்கள். இப்போ போலவே கேடுகெடட ஆசிரியர்களே இருப்பார்கள். உணவின்றி, தண்ணிர் இன்றி, நல்ல காற்று இல்லாமல் , துடிதுடித்து சாவார்கள். இதை சரித்திரம் சொல்கிறது. அமெரிக்காவில், இதயே தவறை (தங்கள் சந்ததியார் பின்னல் அயோக்கியர்களாக மாறினால், அதை தடுக்க என்ன செய்யவேண்டும் என்று 28 வது திருத்தும் செய்யாமல் விட்டதால், தற்போது அமெரிக்கா நாத்சிகள் அதிகமாகி வருவது போல்) இங்கேயும் வரும். இதை தடுக்கும் அறிவு தற்போதய அரசியல், , அரசாங்க திருடர்கள் கழத்திடம் இல்லை. கருணா நிதி முந்தின தலைமுறையில் தமிழ் நாட்டிடை முன்னிலையில் வைத்திருந்த செல்வங்களை, கல்வியை கொள்ளை களமாக மாற்றியத்தால் கொள்ளை அடித்தாலும், தப்பிவிடடார். ஆனால் அவர்கள் கொள்ளு பேரன்களும் பரிதாபமாகவே சாவார்கள். அது அதுதான் இயற்கை நின்று தரும் தண்டனை- அரசன் அன்று கொல்வான், தெய்வம்(இயற்கை) நின்று கொல்லும்- தற்போது மரங்களை வெட்டி, நீர் நிலைகளை வீடுகளாக மாற்றி , குளங்களை வீடுகளாக மாற்றி, குடிக்க தண்ணீரினை தவிப்பது போல. மோடி இதற்க்கு பொறுப்பல்ல. மக்களே பொறுப்பு.

 • chandrasekar - THOOTHUKUDI,இந்தியா

  புள்ளி விவரங்களை கூறி பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது போல் ஒரு பிரமையை ஏற்படுத்த பார்க்கிறது உண்மையில் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை மறைக்க முயற்சிக்கின்றன இது மக்களை கொஞ்ச காலம் ஏமாற்றலாம் எல்லா நேரத்திலும் இந்த டகாய்ட்டி வேலை palikkathu

  • Manian - Chennai,இந்தியா

   இது உலகம் பூராவும் உள்ள நிலை. நாம் மட்டும் தனித்திறமை பேரு கடவுளால் துன்பமே பட முடியாத புண்ணியம் ஜென்மங்கள் இல்லை. 90 % பாவிகளுக்கு இயற்கை தரும் தண்டனை. கிறிஸ்துவர் ஆனாலும், முஸ்லிமாக மாறினாலும், கடவுள் முட்டாள்களை காப்பாற்றவே மாட்டார். அதனாலேயே, பதியார்கள் "பாவிகளே என்று கடவுளின் குழந்தைகளான நம்மை சொல்கிறார்கள். அவர்களிடம் பாவ மன்னிப்பு கேடடாலும் ஒன்றும் மாறாது. இன்னோம் முடடாள் ஏழைகளாக மாறுவீர்கள்.

 • NATHAN - KANYAKUMARI,இந்தியா

  அருமை. GSTக்குள் பெட்ரோல் ,டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். tollgate சிட்டி எண்ட்ரன்ஸ் போன்ற இடங்களில் மட்டுமே இருக்கவேண்டும் .சிறு தொழில் செய்ய விரும்புவர்களுக்கு மின்சாரம் எளிதாகவும் சலுகை விலையிலும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்துக்கள் ,கட்டிடங்கள் அமைக்க உடனடியாக உத்தரவு பிறப்பித்து ,நல்ல முறையில் செயல் பட உதவி கரமாக இருக்க வேண்டும்.EB மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் பெரும் கெடுபிடி செய்கிறார்கள். வளை குடா நாடுகளில் ஒரு நாளில் செய்து முடிக்க கூடிய அரசாங்கம் சம்பந்த பட்ட வேலைகள் இங்கு 3 மாதங்கள் ஆகியும் முடிக்க முடிய வில்லை.அரசு பணியாளர்கள் சுறு சுறுப்பு,மற்றும் நேர்மையுடன் வேலை செய்தாலே ,நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சியினை அனைவரும் அனுபவிக்க முடியும். இல்லையேல் அனைத்தும் ஏட்டளவில் என்ற கதையாய் முடியும். வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் மனதிற்கும்,உடலுக்கும் உந்து சக்தி. இதற்கு உள்ளூர் அரசு அதிகாரிகள் ,மற்றும் மாநில அமைப்புக்கள் மக்களின் தேவை அறிந்து காமராஜர் அய்யா செய்த பணியில் 10 விழுக்காடு செய்தாலே போதுமானது.

 • Weekends - Mannargudi,இந்தியா

  மக்களிடையே நிலவும் பொருளாதாரச் சமத்துவமின்மையைக் கண்டுகொள்ளாமல் அரசு விலகியிருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கான உறுதி இல்லாமலும், நலவாழ்வு, கல்வி ஆகியவை இல்லாமலும் வாழ்கிறார்கள்.

  • Manian - Chennai,இந்தியா

   இதை செய்பவர்கள் தற்போது பதவியில் உள்ளவர்கள்தானே ? அவர்களை கேளுங்கள்.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  மோடியின் தலைமையில் இந்தியா சாதித்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் அடிமையாகிப்போன நமக்கு புரியுமா? நமக்கு தெரிந்ததெல்லாம் மோடி ஒழிக இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்னும் தடையாய் இருப்பது அதிக மக்கள் தொகை நெருக்கமும், மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அந்நிய கைக்கூலி ஊழல் எதிர் கட்சிகளும் தான். .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இதை எல்லாம் உண்மை என்றா நினைக்கிறீங்க... ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கும்... சென்னையில் இருந்து மதுரைக்கு பஸ் டிக்கெட் முப்பது ரூபாய்க்கும், பெட்ரோல்டீசல் லிட்டர் ஐந்து ரூபாய்க்கும்... ஒரு ஆடி கார் ஒரு லட்சம் ரூபாய்க்கும் , கிலோவெங்காயம் ஐம்பது பைசாவுக்கு ..கழிப்பறையில் சிறு நீர் கழிக்க இலவசம் என்று சொன்னாலும்... மின்சாரம் யூனிட் பத்து பைசா என்றலும்தான் இந்தியா பொருள் ஆதாரத்தில் முன்னேறி உள்ளதாக கூறுவேன்...

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   இது எல்லாமே செவ்வாய் கிரகத்தில் கிடைக்கிறது என்று அறிகிறேன். அங்கு போய் உட்காந்து கொள். சோனியாவின் கரையான்புற்று ஆட்சி அங்கு நடப்பதாகவும் அறிகிறேன். ஆகவே என்ஜாய்.

  • தலைவா - chennai,இந்தியா

   வாழ்த்துகள் சிவா முதல் முறையாக மூர்க்கங்கள் கான் கிராஸ் என்றெல்லாம் உளறாமல் ஒரு கருத்து. காலா படம் தோல்வி அடைந்தாலும் ரஜினி சூப்பர் ஸ்டார் தமிழ் படம் 2 வெற்றி அடைந்தாலும் சிவா அகில உலக சூப்பர் ஸ்டார் ஆகி விட மாட்டார். நம் மக்களுக்கு நகைச்சுவையும் தேவை அதனால் வெளியிடப்பட்ட இந்த செய்தியும் அந்த வகையில் சேரும். இதைத்தான் இடுக்கண் வருங்கால் நகுக என்றாரோ வள்ளுவ பெருந்தகை.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   வரியே பார்க்காத ஓமானில் கூட இந்த விலைக்கு குடுக்கறாங்களா. அப்ப அங்கேயே இருப்பா ராசா.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   Muscat ஸ்ரீனிவாசன், நீங்கள் சொல்வதெல்லாம் பிஜேபி ஆட்சியில் இன்னும் சில வருடங்களில் நடக்கும்... அப்போ நீங்க உங்க உண்மையான பெயரை போட்டு தைரியமா கருத்து பதிவு பண்ணலாம்...

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  முதலில் வாழ்த்துக்கள்.....அப்புறம் எப்போது அனைத்து மக்களுக்குமான சீரான வளர்ச்சி இருக்கிறதோ, எப்போது பட்டதாரிகளுக்கான குறைந்த பட்ச அடிப்படை சம்பளம் 15 , 000 ரூபாய் என்று சட்டம் கொண்டு வர படுகிறதோ அப்போது இந்தியா மேலும் வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும்........

 • krishnan - Chennai,இந்தியா

  தவறான தகவல் மற்றும் புள்ளி விவரங்கள் மூலம் வளர்ச்சிக்கட்டி என்ன பயன்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   டேய் ஆட்டு மூளை, விவரமா கணக்கு சொல்லி செய்தி போட்டு இருக்காங்க, இதுக்கு மேல என்னடா வேணும்? நீ வாழ்க்கைல பிச்சை எடுக்கிற நிலமைல இருக்கேன்னா அது உன்னோட இயலாமை. போயி கடுமையா உழைச்சு முன்னேற பாரு.

  • Chan - Chennai,இந்தியா

   சரி சரியான தகவல் என்ன.. தெரிஞ்சா சொல்லு.

  • Asokan - Kumbakonam,இந்தியா

   நாட்டின் வளர்ச்சி இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதுபோல் உண்மையே. GST நடைமுறைக்கு வந்து, குறைகள் நீக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக பொருள்களுக்கு, சேவைக்கு வரி இல்லாத சுதந்திரமான நிலையில் வணிகர்கள் வரி கட்டவேண்டும் எண்ணமில்லாமல் இருந்துவந்தனர். மக்களுக்கோ, அரசுக்கோ எந்த லாபமும் இல்லாமல் இடையில் இவர்கள் லாபம் முழுவதையும் வெளிப்படையாக காட்டாமல் இருந்துவந்தனர். சரியாக கணக்கு காட்டாதது, வரி கட்டாதது எல்லாம் சேர்ந்து நாட்டின் வளர்ச்சியை பாதித்தது. பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதை மாற்றி நாடு முழுவதற்கும் பொதுவான வரிவிதிப்பு முறை கொண்டு வந்தது மத்திய அரசின் நல்லாட்சிக்கு ஒரு உதாரணம். வரி இல்லாமல் நாட்டின் வருமானம் எங்கிருந்து வரும்? அதே வரிப்பணம்தான் பல நல்ல திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் வரி ஏய்ப்பு, கள்ள கணக்கு, ஹவாலா, பதுக்கல் என்பது இல்லை. பல ஆண்டுகளாக கண் கிராஸ் செய்த பல ஊழல், நிர்வாக சீர்கேடு போன்றவற்றால் உண்டான பாதிப்பு சிறிது சிறிதாக சரிசெய்யப்பட்டு வருகிறது. ஊழல், லஞ்சம், கொள்ளை இல்லாத வெளிப்படையான ஆட்சி நடப்பதன் விளைவுதான் நாட்டின் இந்த பொருளாதார வளர்ச்சி. விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே உண்மையான நிலையை புரிந்துகொள்ள முடியும்.

 • Kunjumani - Chennai.,இந்தியா

  வெற்றி வெற்றி வெற்றி சொக்கத்தங்கம் இத்தாலிய மணிமேகலையின் வழிகாட்டுதலுக்கு வெற்றி. இளவரசர் பிரதமரானால் முதலிடம்தான்.

 • R.Subramanian - Chennai,இந்தியா

  இந்தியா பொருளாதார ரீதியாக வளர கூடாது என்பதற்காக தான் சீனா பாகிஸ்தானை வளர்த்து கொண்டு இருக்கிறது, உள்நாட்டில் கம்யூனிஸ்ட்கள் மாவோ நக்சல் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளை வளர்த்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அதிகாரம் அவர்களின் இணையத்தளத்திலேயே இந்தியா சீனாவிற்கு எதிரான அமெரிக்கா கூட்டணியில் சேர கூடாது என்று சொல்லி இருந்தார்கள் (அதே கருத்தை கேரளா முதல்வரும் சொல்லியிருந்தார்) நம் உள்ளூர் கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரை நம் நாடு சீனாவை விட பெரிதாக வளர கூடாது என்று நினைப்பவர்கள் அதனால் தான் தூத்துக்குடி போன்ற போராட்டங்கள் மூலம் தொழிற்சாலைகளை மூட வைக்கிறார்கள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அடிமட்டத்தில் இருப்பவர்கள் முன்னேறவேண்டும்... ஏற்றத்தாழ்வுகள் அகல வேண்டும்...

 • Ambika. K - bangalore,இந்தியா

  இது RSS in சதி BJP இன் பொய் பிரசாரம் உலக வங்கியில் உள்ள மேல் சாதியரின் திட்டமிட்ட பொய் அறிக்கை.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   ஜாதி பைத்தியங்கள். அடுத்தவனின் வளர்ச்சியை விரும்பாதவர்கள். வயிற்றெச்சல் ஏன்.

  • Asokan - Kumbakonam,இந்தியா

   @Ambika. K - Bangalore,..ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்...RSS , BJP கட்சிகள் நாட்டின் மீது பற்றுள்ளவை. தேசப்பற்றின் அடிப்படையில் கொள்கைகளை கொண்டவர்கள். இருப்பது, பல சுகங்களை அனுபவிப்பது இந்த நாடு, ஆதரிப்பது வேறு நாட்டுக்கு என்ற துரோகிகள் அவர்கள் கிடையாது. உலக வங்கி அறிக்கைகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப்பற்றியதாக அதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. அத்துடன் அதுபோல் ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிடவும் முடியாது. இந்தியாவின் வளர்ச்சி நல்ல நிலையிலும், பொருளாதாரம் நல்ல முன்னேற்ற நிலையிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. பொருளாதார நிபுணர்களின் அறிக்கை கிடைத்தால் படிக்கவும்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  எங்கடா ஒருத்தன் கொட்டாம்பட்டிகாரன் பர்னால் பர்னால்ன்னு பர்னால் வித்துக்கிட்டு இருப்பான், இன்னைக்கு மொத்தம்மா இருக்கிற சரக்க பூரா நீ தேச்சுக்கோ. உனக்குத்தான் ரொம்ப தேவைபடும். அப்புடியே உன்னோட பார்ட்னர்ஸ் கிந்துபுரம், பூச்சிமருந்துக்கும் கொடு. அவங்களும் பூசிக்கட்டும்.

 • spr - chennai,இந்தியா

  "ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டபோது, தொழில் துறையினர் அதற்கு பழக்கப்படாததால், உற்பத்தி விகிதம் சற்று குறைந்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., விகிதத்தில் காணப்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டதால், பொருளாதார வளர்ச்சி, வேகம் எடுத்தது" இது தவறான கணிப்பீடு. இது நாள் வரை விற்பனை வரி காட்டாமல் ஏய்த்தவர்களை, கிடுக்கிப்பிடி போட்டு, கணிணி மூலம் ஆன் லைனில் வரி கட்ட வைத்த காரணத்தால், வருவாய் பெருகியது அவ்வளவே அதனால் உற்பத்தி பெருகியதா என்றால், வேலை வாய்ப்பு பெருகியதா என்றால் பதில் இல்லை பல தொழிற்சாலைகள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு வருகின்றன. வேலை இல்லாதோர் கணிசமாக அதிகரித்துள்ளனர் இவையெல்லாம் மத்திய அரசே வெளியிட்ட தகவல்கள் செய்தித்தாள்களில் வந்தவை. பங்கு சந்தை முதலீடுகளை வைத்தும் நிலையான பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாகக் காட்ட இயலாது ஏனெனில் அவை எந்த நேரமும் மாறி மாறி வரும் வரி வசூலை சிறப்பாக செய்து விட்டதாக வேண்டுமானால், கூறலாம் " நுகர்வோர் செலவினம் அதிகரித்ததால், தயாரிப்பு துறை பயன் அடைந்தது. " இதற்கு காரணம் கடன் தருவது அதிகரித்துள்ளது" சேமிப்பால் எவரும் வாங்கியதாகச் சொல்ல முடிந்தால் மட்டுமே உண்மையான பொருளாதார வளர்ச்சி வாராக்கடன் அதிகரித்து வருவதாக அரசே சொல்லி வங்கிகள் திவாலாவதனைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது மக்கள் கையில் காசு இருக்கிறது எனலாம் உலக வங்கியின் கருத்துக்கள் புள்ளிவிவரங்கள் அவ்வளவே

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   / பங்கு சந்தை முதலீடுகளை வைத்தும் நிலையான பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாகக் காட்ட இயலாது// இந்த ஆட்சி வருமுன்பு 22000 ஆக இருந்த பங்குச்சந்தைப்புள்ளி நான்காண்டுகளாக குறையாமல் வளர்ந்து இப்போது 36000 ஐயே தாண்டிவிட்டது .எந்த ஆண்டும் முந்தைய ஆண்டைவிட குறையவில்லை இது வரலாறு காணாத ஏற்றம் பசி யின் கயவாளித்தனத்தால் பங்குச்சட்டத்திற்கு வந்த மொரீசியஸ் பி நோட் கருப்புப்பணமும் வெளியேறிவிட்டது./ இத்தனைக்கும் கடந்த ஆறுமாதங்களாக அந்நிய நிறுவனங்கள் முதலீட்டை வெளியே எடுத்துமே மொத்தம் 63 % வளர்ச்சி. இதில் பெரும்பங்கு இந்திய சிறு முதலீட்டாளர்களின் பணம் . கோடிக்கணக்கான பொதுமக்கள் ஏமாந்துபோயா முதலீடு செய்கிறார்கள்? அதிக தொழில் வளர்ச்சியிருப்பதாலதான் முதலீடும் அதிகரிக்கிறது பங்கு சந்தையில் போடும் பணம் தொழில் வளர்ச்சிக்குத்தானே போகிறது? வாகன உற்பத்தியே இரண்டு மடங்காகியுளளது .பயணி வாகனங்கள் சென்ற மாதம் மட்டும் 38 % சரக்கு வாகனங்கள் 41.72 % கூடுதலாக விற்றுள்ளன . மக்களிடையே வாங்கும்சக்தி கூடுதலாகி தேவை அதிகமாகி சரக்குக்கள் அதிகம்உற்பத்தியாகி விற்பதனால்தானே அதிக போக்குவரத்து தேவைப்படுகிறது ? சேமிப்புப் பொருளாதாரம்தான் ஐம்பதாண்டுகளாக நம்மை அழித்தது.மாறாக நுகர்வு அதிகமானால்தான் அதிக உற்பத்தியும் வேலைவாய்ப்பும் சாத்தியம் .கடன் வாங்குதல் அதிகரிக்கக் காரணம் (தனிநபர் கடனில்லை) வணிகத்திற்கு அதிக முதல் தேவைப்படுவதனால்தான் .வணிகம் பெருகியுளளதைதானே இது காட்டுகிறது?

  • Darmavan - Chennai,இந்தியா

   எல்லாம் சொல்லிவிட்டு மக்கள் கையில் காசு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் .எப்படி அவர்கள் கையில் காசு வந்தது பொருளாதாரம் பெருகாமல்....ஸ்டெர்லிட் போன்ற தொழிற்சாலைகளை அரசு தானாக மூடியதா ...பொருளாதாரம் வளராமல் வரி மாத்திரம் எப்படி பெருகும். கம்யூனிஸ்டுகளின் பொறாமை பேச்சு.

  • sundar - chennai,இந்தியா

   பல அரசு வங்கிகளில் சொத்து அடமானம் வைத்து தொழில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வங்கி கடன் அசல் தொகைக்கு விற்பனைக்கு வங்கி மூலம் விளம்பரம் செய்ய படுகிறது. ஆனால் அதில் வில்லங்கம் உள்ளது. சிலர் ஏற்கனவே தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளனர் மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். நோக்கம் வங்கிகளை ஏமாற்றுவது மட்டுமே. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிஆர்வம் சற்று குறைவாகவே உள்ளது. காரணம் தடைகள் பல, அரசியல், வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது கடினம் மற்றும் இளைய சமூகம் அநேகம் பேர் வேலை செய்யாமல் எப்படி சம்பாதிப்பது என்ற எண்ணம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஆறுகோடி மக்கள் தொகை உள்ள நாட்டை, 134 கோடி மக்கள் தொகை நாடு ஒட்டுமொத்த உற்பத்தியில் முந்துவது என்பதற்கு அர்த்தம் நம்மை விட, பிரான்ஸ் மக்கள் இருபத்திரண்டு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள். இதில் நாம் நம்மை நாமே மெச்சிக்கொள்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. அவர்களின் தனி ஒருவரின் உற்பத்தியை நம்மில் தனி ஒருவர் அடைவதற்கு இன்னும் நூறு ஆண்டுகள் நமக்கு பிடிக்கும். ஏதாவது வேறொரு செய்தியை போட்டு மக்களை சந்தோஷப்படுத்துங்கள்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   பிரான்சிடம் உலகெங்கும் காலனி ஆட்சி செய்து சுரண்டி கொள்ளையடித்த செல்வமிருக்கிறது ஒரே மொழி கலாச்சாரம் குறைந்த மக்கள்தொகைப்பெருக்கம் என்பதால் ஆளுவதும் எளிது.உங்களது ஒப்புநோக்கு சரியில்லை

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   இந்தியர்கள் பொதுவாக போதுமென்ற மனம் அதிகமாக உள்ளவர்கள் அவர்களது ஆசைகளும் தேவைகளும் மிகக்குறைவு இதனால்தான் இந்திய வளர்ச்சியை முன்பெல்லாம் HINDU RATE OF GROWTH என்பர் இதனையெலலாம் தாண்டி ஐரோப்பிய காலனியாக இந்தியா ஆகும்வரை உலகத்தின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது.இதுவே அந்நிய படையெடுப்புகளுக்குக் காரணமானது அவர்களால் சுரண்டப்பட்ட வளமும் வளர்க்கப்பட்ட அடிமை மனப்பான்மையும் தொழில்முனைவோர் குறைந்ததுமே நம் வீழ்ச்சியின் மறுதுவக்கம் .சுதந்திரத்துக்குப்பின் வில்லன் நேருவின் கவைக்குதவாத கலப்பு சோஷலிச பொருளாதாரம் வளமையை உருவாக்குவதற்குப்பதில் வறுமையைப் பங்குபோடவே உதவியது .அதிக உற்பத்திசெய்த நிறுவனங்களுக்கு அபாரதமே விதித்து நோகடித்தார் இந்திரா . தொழில்கள் வளர்வதற்கு பதில் தொழிற்சங்கங்களே வளர்ந்தன . தொழில்முனைவோருக்கு மோசமான காலமது. இப்போது மன்மோகன் % பசியின் வெளியேற்றத்துக்குப் பிறகு கறுப்புப்பண தட்டுப்பாட்டால் ரியல் எஸ்டேட் வீழ்ந்தது தங்கவிலை ஏறவில்லை.அத்தியாவசியப்பொருட்கள் உற்பத்தி பெருகுகிறது .2014 முதல் தொடர்ந்து மூன்றாண்டுகள் வறட்சிக்குப்பின்னும் பட்டினிச்சாவுகளில்லை. .விவசாய உற்பத்தி அதிகரித்தே உள்ளது .முத்ரா கடன் வாங்கியவர்களில் மூன்றிலொரு பங்கினர் வெற்றிகரமாக இருந்தாலே நாடு புதிய உச்சத்தைத்தொடும் . படித்த இளைஞர்கள் என்று மனோதிடத்துடன் தொழில்முனைவோர்களாக ஆகின்றார்களோ அன்றுதான் நாம் உலகப்பொருளாதாரத்தோடு போட்டியிடமுடியும் ஆனால் அவர்கள் மொபைல் மீம்ஸில்தானே மும்முரமாக உள்ளனர் ?

  • Darmavan - Chennai,இந்தியா

   ஏன் தனி ஒருவரின் உற்பத்தி பிரான்ஸை போல இல்லை.அரசு எப்படி காரணமாகும்.வேலை செய்யாமல் எப்போதும் கொடி பிடித்துகொண்டுஆர்பாட்டம் செய்யும் கம்யூனிஸ்டிகள்/தேச விரோத ச்கதிகள்தாம் தான் இதற்கு காரணம் .ஒவ்வொரு காம்ப்பெனியாக மூடிக்கொண்டிருப்பதற்கு அரசா காரணம்?.

  • Sundaresan Ramanathan - Bangalore,சிங்கப்பூர்

   @ ஆரூர் ரங். உங்களின் பதில் மற்றும் கூற்றுக்கள் மிக அருமை.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   அன்பு இத்தனை பேசறார். புள்ளி விவரமா இருக்கிறார். அவர் நாடு வளர்ச்சிக்கு ஒரு கம்பெனி நடத்தறாரா. நாலு பேருக்கு வேலை கொடுத்து அந்த குடும்ப வளர்ச்சிக்கு உதவி இருக்கிறாரா. சும்மா எந்த வளர்ச்சியும் இல்லைன்னு கம்பு சுத்தறவரு, உண்மையிலேயே இன்னும் வளரலையோ.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   \\\\ அவர்களின் தனி ஒருவரின் உற்பத்தியை நம்மில் தனி ஒருவர் அடைவதற்கு இன்னும் நூறு ஆண்டுகள் நமக்கு பிடிக்கும். //// உற்பத்திக்கான முயற்சி மட்டும் இருந்துவிட்டால் போதும் ..... இதற்கெல்லாம் கால அளவு நிர்ணயிக்க முடியாது .....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement