Advertisement

தாய்லாந்து சிறுவர்களை மீட்க உதவிய இந்தியர்களுக்கு குவியும் பாராட்டு

புனே : தாய்லாந்து குகையில் சிக்கிய, 12 சிறுவர்களை மீட்ட குழுவில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு இன்ஜினியர்களும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது; அவர்களுக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின், தம் லுவாங் என்ற இடத்தில், மிகப் பெரிய குகை உள்ளது. உள்ளூர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த, 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட, 13 பேர், ஜூன், 23ல், அந்த குகைக்குள் சென்றனர்.

எதிர்பாராத விதமாக பலத்த மழை பெய்ததால், குகைக்குள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, 13 பேரும் குகைக்குள் சிக்கினர். சிறுவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், மீட்புப் பணி நிபுணர்கள் உட்பட ஏராளமானோர், தாய்லாந்தில் திரண்டனர். இவர்கள், சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'கிர்லோஸ்கர் பிரதர்ஸ்' என்ற நிறுவனம், 'மோட்டார் பம்புகள்' தயாரிப்பு பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. தேங்கி நிற்கும் தண்ணீரை, பம்ப் வழியே உறிஞ்சி வெளியேற்றுவதில், இந்த நிறுவனத்தின் இன்ஜினியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். எனவே, மீட்புப் பணியில் இவர்களை பயன்படுத்திக் கொள்ளும்படி, தாய்லாந்து அரசிடம், இந்திய துாதரகம் வலியுறுத்தியது.

இதையடுத்து, கிர்லோஸ்கர் நிறுவனத்தின் புனே கிளையைச் சேர்ந்த இரண்டு இன்ஜினியர்களும், அந்த நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளைச் சேர்ந்த ஐந்து இன்ஜினியர்களும், மீட்புக் குழுவுடன் இணைந்தனர்.

அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து, புனேயைச் சேர்ந்த இன்ஜினியர்கள், பிரசாத் குல்கர்னி மற்றும் ஷ்யாம் சுக்லா ஆகியோர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழை தொடர்ந்து பெய்ததால், குகைக்குள் மழை நீரின் அளவு அதிகரித்தபடி இருந்தது. மின்சார சேவைக்கு, 'ஜெனரேட்டர்'கள் பயன்படுத்தப்பட்டன.

இதனால், சக்தி வாய்ந்த மோட்டார்களை பயன்படுத்த முடியாமல், சிறிய மோட்டார்களை பயன்படுத்தினோம். ஆனாலும், எங்களால் முடிந்த வரை, வேகமாக மழை நீரை, குகைக்குள் இருந்து வெளியேற்றினோம்; இது, எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திரைப்படம் தயாராகிறது! தாய்லாந்து குகையில் இருந்து, 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம், ஹாலிவுட்டில் திரைப்படமாக தயாராகிறது. ஹாலிவுட்டைச் சேர்ந்த, 'ப்யூர் பிளிக்ஸ் என்டர்டெய்ன்மென்ட்' என்ற நிறுவனம், 400 கோடி ரூபாய் செலவில், இந்த சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, மைக்கேல் ஸ்காட், மீட்புப் பணி நடக்கும்போது, அங்கேயே தங்கி இருந்துள்ளார்; மீட்புக் குழுவுக்கு உதவியும் செய்துள்ளார். பதற்றம் நிறைந்த அந்த நிமிடங்களையும், அங்கு அரங்கேறிய வீர தீர செயல்களையும் நேரடியாக பார்த்ததால், அதை திரைப்படமாக எடுக்க முடிவு செய்ததாக, அவர் தெரிவித்தார்.
மயக்க மருந்து கொடுத்து சிறுவர்கள் மீட்பு! தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் அனைவரும், 11 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள்; அவர்களை மீட்டு அழைத்து வரும்போது, பயப்படாமல் இருக்கவும், அவர்களது நரம்புகளை தளரச் செய்து, முழு ஒத்துழைப்பு பெறவும், அவர்களுக்கு சிறிய அளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின், அவர்களை, 'ஸ்ட்ரெச்சரில்' படுக்க வைத்து, வெளியே கொண்டு வந்ததாக, மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். மயக்க நிலையில் இருந்த சிறுவர்களில் சிலர், மீட்புப் பணியின் போது, விரல்களை மட்டும் அசைத்ததாகவும், சிலர் முற்றிலும் மயங்கி விட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். தாய்லாந்து கடற்படையினர் வெளியிட்டுள்ள, 'வீடியோ'வில், இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • dandy - vienna,ஆஸ்திரியா

  நீர் நிரம்பிய குகைக்குள் ( சில இடங்களில் உதைபந்தாடட மைதானம் அளவில் ) உயிரை பயணம் வைத்து பணியாற்றியவர்கள் நூறு பேர் ..இறந்தது ஒரு தாய்லாந்து நாட்டு கடல் படை வீரர் ...முதலில் சிறுவர்களை கண்டுபிடித்த பிரிட்டிஷ் பிரஜை சத்தம் போடாமல் சொந்த நாட்டிற்கு போய் விட்டார் கடைசியாக வெளியே வந்த ஆஸ்திரேலியா நாடு மருத்துவர் ( 30 வருடங்கள் நீரில் மூழ்கி தேடும் அனுபவம் உள்ளவர் ) வெளியே வந்ததும் சொல்லப்படட செய்தி இவரின் தகப்பனார் மரணம் ,,ஹி ஹி ஹி இந்தியர்கள் நீரை இறைத்தார்களாம் வெளியே நின்று ...இதனால் பிள்ளைகள் காப்பாற்றப்படார்களாம் ..உலகின் 4 வைத்து பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் இந்தியா ஒரு நீரில் மூழ்கி தேடும் வீரனை அனுப்பவில்லை ..சிறிய நாடான LAOS அனுப்பியது ...தாய்லாந்து நாடே இது எங்கள் வெற்றி அல்ல உங்கள் வெற்றி என்று அமைதியாக சொல்லிவிட்டது ..அனால் இந்தியாவில் இருந்து தண்ணீர் இறைக்க என்ஜினீயர் அனுப்பினர்களாம் இவர்கள் இல்லாவிட்டால் சிறுவர்களை காப்பாற்றிருக்க முடியாது போல

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  அய்யாமார்களே தயவுசெய்து நம் இந்திய பொறியியலாளர் ஒன்று சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டதை அரசியல் ஆக்காதீர்கள் அவர்கள் ஆறு போல் தேங்கியிருந்த நீரை பம்புகளால் வெளியேற்றி உள்ளே சிக்கியிருந்த சிறுவர்களையும் அவர்கள் கூட இருந்து உதவி புரிந்த மேலாளரையும் மீட்க பேருதவி செய்தனர் . இந்த மீட்பு பணி தனியொருவரால் செய்யப்பட்டதல்ல .கூட்டு முயற்சியே காரணம் . மீட்கப்பட்டவர்களுக்கு நமது அன்பு . மீட்டவர்களுக்கு நமது நன்றி

  • dandy - vienna,ஆஸ்திரியா

   அப்படியானால் அங்கு water pump இருக்கவில்லை உங்கள் இந்தியர்கள் வரும்வரை ....???? டாஸ்மாக் கடை அருகே சொன்னால் நம்புவார்கள்

 • Makizhselvam - Marakkanam,இந்தியா

  சிறுவர்கள் அனைவரையும் நீண்ட நாட்கள் கழித்து உயிரோடு மீட்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி. உயிரை பணயம் வைத்து இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 • narayanan iyer - chennai,இந்தியா

  அந்த இந்தியர்கள் இருவரும் பொறியிலாளர்கள்

 • Natarajan Ramanathan - chennai,இந்தியா

  இந்த சம்பவத்தை நான் முழுதும் விடியோவாக பார்த்தேன். உண்மையில் உயிரை பணயம் வைத்து மீட்ட வீரர்களின் முயர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • Asokan - Kumbakonam,இந்தியா

   உண்மைதான்...

 • Sathya - Coimbatore,இந்தியா

  வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... கண் கலங்கியது ....

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இந்திய ஊடகங்கள், இந்தியர்கள் இந்த மீட்பு பணியில் பெரிசா ஒன்னும் செய்யவில்லை..சும்மா சப்தம்தான் போட்டார்கள்..ஒரு இந்திய ஊடகமும் இந்த விபத்து எப்படி நடந்தது, மீட்பு பணி எப்படி நடந்தது, அதில் சிக்கல்கள் என்ன என்று விரிவாக்க படங்கள் போட்டு விவரிக்கவில்லை..வெளியில் இருந்து சப்தம் தான் போட்டார்கள்..முதலில் குகையில் அடைபட்ட சிறுவர்களை கண்டு பித்தவர் இங்கிலாந்து நீச்சல் வீரர்தான்.. ஆஸ்திரேலிய டாக்டர் தான் குகைக்கு சென்று சிறுவர்களின் உடல் நிலை, மீட்புக்கு ஆயத்தம் செய்தார்..132 கோடி இந்தியர்களில் இப்படி ஒருதிறமை இல்லை..அமெரிக்காவின் எலக்டிரிக் கார் உற்பத்தி செய்யும் டெஸ்லாவின் சி.ஏ. ஓ அங்கு வந்து மினி நீர்முழ்கி கப்பல் கொடுத்து உபயோகிக்கச்சொன்னார்..பல நீர்முழ்கி வீரர்கள் சொந்தச்செலவில் வந்து உதவி செய்தார்கள்..இந்தியர்கள் வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள் இப்படி செயல் பட மாட்டார்கள்..சும்மா வாய் பேச்சு தான்..என்றால் ஒட்டு மொத்த சமூகமே வயிறை நிரப்ப போராடிக்கொண்டு இருக்கிறது..பசி வந்திட பத்தும் பறந்து போகும்..இது நாட்டிற்கும் பொருந்தும்...திறமை உள்ளவர்களை உண்டாக்க சமூகம் ஆதரவு கொடுக்க வேண்டும்..இலவங்கள் வாங்கும் மனப்பான்மை உள்ளவர்கள் இப்படி சாகசம் செய்யமுடியாது..

  • Jawaharr Kb - CHENNAI,இந்தியா

   அன்னே ,.......................... இந்த சம்பவம் ............உண்மையில் உயிரை பணயம் வைத்து மீட்ட வீரர்களின் முயர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது ............ அதே போல் 2015 வெள்ளம் வந்த பொது ஒன்று பட்ட சென்னையும், தமிழகத்தையும் மெய்சிலிர்க்க .............நங்கள் நேரில் பார்த்து இருக்கிறோம்..............சென்னை (தமிழக ) மக்கள் எதற்கும் குறைவானவர்கள் இல்லை

  • Kurangu Kuppan - usapuram,இந்தியா

   அப்பனே நீ சொல்வது போல எல்லா திறைமைசாலியும் முன்னே வருவார்கள், அதுக்கு முதல்ல reservation சிஸ்டத்தை தூக்க சொல்லுப்பா

  • dandy - vienna,ஆஸ்திரியா

   ஹி ஹி ஹி பரந்த வெளியில் வெளிச்சம் இருக்கும் பொது வெள்ளத்தில் மக்களை தேடுவது இலகு அனால் 4 மைல் குகைக்குள் ..சுவாசிக்க சரியான காற்று இல்லை ..இருட்டு ..தெளிவில்லாத நீர் ..இந்த நிபந்தனைகளில் உயிரை பயணமா வைத்து 5 மணிநேரம் தேடி சிறுவர்களை கண்டுபிடித்த பிரிட்டிஷ் காரர் தான் வீரன் ...முடியுமா இந்தியாவில் ???

 • Ganapathy - Bangalore,இந்தியா

  அணைத்து சிறுவர்களும் மீட்கப்பட்டது மகிழ்ச்சி ,இறைவனின் கருணை . பலரும் பாராட்டுக்கு உரியவர் . அதில் முதலாவதாக நான் கருதுவது , இங்கிலாந்து நாட்டு வீரர்கள் . குகைக்குள் என்ன உள்ளது என்பது தெரியாமல், திரும்பி வருவோமா என்ற ஒரு உறுதியும் இல்லாமல் , அந்த வெள்ளைக்கார வீரர்கள் குகைக்குள் சென்ற மனோ தைரியம் , பாராட்டி போற்றப்படவேண்டியது . அவர்கள் சென்று திரும்பிய பிறகுதான் அந்த சிறுவர்கள் நிலை வெளி உலகத்திற்கு தெரிந்தது . டெலிவிஸினில் வீரர்கள் சென்ற காட்சி பார்த்தேன் , இண்டு இடுக்கில் சென்று தன் உயிரை பணயம் வைத்து , ஏதோ வேற்று நாடு சிறுவர்களுக்காக , கண்டம் விட்டு கண்டம் வந்து செய்த செயல் இருக்கிறதே , வாழ்த்து. கண்டேன் சீதையை என்று , ஜெயமாருதி சொன்னதைப்போல , இந்த வெள்ளைக்காரர்களின் சாஹசம் . அது வேலைனு வந்துது வெள்ளைக்காரனா இருக்கணும் .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்நேரம் இது மாதிரி காரியத்தை ஸ்தாலின் செய்து இருந்தால் ....

  • Suresh - bangalore,இந்தியா

   இந்நேரம் இது மாதிரி காரியத்தை மோடி செய்து இருந்தால் ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பாரு எவ்வளவு தன்னடக்கம்...

  • dandy - vienna,ஆஸ்திரியா

   டாஸ்மாக் நாட்டில் நடந்து இருந்தால் தலைவரின் படத்தை ...கழக கொடியை உள்ளே எடுத்து செல்லாமல் ..மீட்ப்பு பணிக்கு அனுமதித்து இருக்க மாடடார்கள் சண்டியர்கள்

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  கிர்லோஸ்கரை சேர்ந்த எஞ்சினியர்கள் ஐடியா கொடுத்தார்கள் என்பது உண்மை தான்...அதற்கு பாராட்டுக்கள்......ஆனால் இதனை வைத்து கிர்லோஸ்கர் பெரிய அளவில் விளம்பரம் தேடி கொள்வது போல தெரிகிறது........சம்பவ இடத்தில கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேலே இருந்தார்கள்......அதில் குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த நாற்பது நீச்சல் வீரர்கள் தான் உயிரை பணயம் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்லை செய்து உணவு மற்றும் டாக்டரையும் கொண்டு சேர்த்தார்கள்..எல்லாரையும் மீட்டு கொண்டு வந்தார்கள்...அவர்களை விட இவர்கள் பெரிய தியாகம் செய்தது போன்று அனைத்து சோசியல் மீடியாக்களில் பெரிய அளவில் பரப்பி விட்டு கொண்டு இருக்கிறார்கள்......குகைக்கு உள் 56.6 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற வேண்டி இருந்தது..நீரோட்டத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால்...எனவே தாய்லாந்தின் நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் surathin chaichoompoo ரெண்டு வாட்டர் பம்புகளை குகையின் நுழைவாயிலில் வைத்து நீரை வெளியேற்ற ஏற்பாடு செய்தார்....கிர்லோஸ்கர் உதவ முன்வந்ததற்காக ஒரு நன்றி அறிவிப்பை தாய்லாந்து அரசு வெளியிட்டது....ஆனால் இவர்களே நேரடியாக போயி அந்த குழந்தைகளை காப்பாற்றியது போன்று அதிகப்படியாக விளம்பரம் செய்து கொள்கிறார்கள்... எப்பவுமே தங்களை பற்றி பெருமையாக பேசி கொள்வது இந்தியர்களுக்கு பிடிக்கும்....அதன் தாக்கம் தான் இது........

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   சாமி சார்.... ராமாயணத்தில் இலங்கைக்கு பாலம் கட்டியது வாலி, சுக்ரீவன், அனுமன் தலைமையிலான வானரப் படைகள்தான்... ஆனாலும், அதில்... சிறு கல்லை தூக்கிக் கொண்டு சென்று பாலம் கட்ட உதவியது சிறு அணில்... வானரப்படையை பாராட்டியதை விட அச்சிறு அணிலை தொட்டு ஆசீர்வதித்தான் ராமபிரான்...ன்னு சொல்வாங்க... அதுபோல... உலக கவனத்தையே ஈர்த்த இந்நிகழ்வில் இந்தியரின் பங்கு..... இலங்கைக்கு பாலம் கட்டிய உதவி அணிலைப் போல இருந்தாலும்... “காலத்தினால் செய்த உதவி... சிறிதெனிலும் ஞாலத்தில் மானப் பெரிது...(பொழிப்புரை (மு வரதராசன்): உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாகும். ) எனும் அய்யன் வள்ளுவர் வாய்மொழிக்கொப்ப... இந்தியர்கள் சிறிய உதவி செய்திருந்தாலும்... அது அந்நேரத்தில் செய்யப்பட்ட மலைப்போன்ற அளவுக்கான உதவி... “நாங்களும் உதவினோம்” என்றுதான் இந்தியர்கள் சொல்லியிருக்கிறார்களே தவிர... “நாங்க மட்டுமே உதவினோம்”... என்றும்... “நாங்க மட்டுமே அத்தனை பேரும் மீட்டெடுத்தோம்... வேறு எவனும் இல்லை”...ன்னு சொல்லவே இல்லையே...? இந்தியர்கள் கொடுத்த பேட்டியில் “சக்தி வாய்ந்த மோட்டார்களை பயன்படுத்த முடியாமல், சிறிய மோட்டார்களை பயன்படுத்தினோம். ஆனாலும், எங்களால் முடிந்த வரை, வேகமாக மழை நீரை, குகைக்குள் இருந்து வெளியேற்றினோம்” என்றுதான் சொல்லி இருக்கிறார்களே தவிர... நாங்க மட்டுமே செய்தோம்...னு சொல்லவே இல்லையே... சாமி சார்... அந்த இந்தியர்கள் செய்த உதவிகளை முடிந்தால் வாழ்த்துங்கள்... விருப்பமில்லையென்றால் விட்டுவிடுங்கள். அவர்கள் உதவியை கொச்சைப்பத்தாதீர்கள்”.... இந்திய நண்டுகள் போல...

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

   வந்திய தேவன்........நான் அவர்களை பற்றி சொல்லவில்லை...இந்திய சோசியல் மீடியாவில் செய்தி பரப்புவர்களை பற்றி தான் சொல்லி இருக்கேன்......

  • Jawaharr Kb - CHENNAI,இந்தியா

   13 பேரை காப்பாற்றியது, .......................மெய் சிலிர்க்க வைக்கும் மிக பெரிய சாதனைதான் ............................அதே சமயம் 2015 இல் பெரு மழை, செம்பரம்பாக்கம் வெள்ளம் சென்னை, மேற்கு தாம்பரம் 500 மேற்பட்ட மக்கள் காப்பாற்ற பட்டர்கள், எப்படி ...............மீனவர்கள், தன்னார்வலர்கள் 1000 , ஆயிரம் மக்களும் இணைந்து ................ தன்னலம் மற்று மக்களை காப்பாற்றினார்கள் .................. சென்னை (தமிழக) மக்கள், எவர்க்கும் குறைந்தவர்கள் கிடையாது .......... சரி ராமர் பாலம் போட வாலி எங்கிருந்து வந்தார் வந்தியதேவன்

  • dandy - vienna,ஆஸ்திரியா

   இந்தியாவோ ..இந்தியர்களோ இங்கு ஒன்றும் கிழிக்கவில்லை ..நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்தவர்களுக்கு தெரியும் ..இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் முதலில் தாய்லாந்து தூதரை லண்டனில் தொடர்பு கொண்டவர்கள் மூன்று பிரிட்டிஷ் காரர்கள் ....ஒரு இந்தியன் குகைக்குள் நுழையவில்லை பயம் ..சரி சென்னை மக்களை அனுப்பி இருக்கலாமே ? வெள்ளம் வேறு நீர்மூழ்கிய இருந்த குகைக்குள் தேடுவது வேறு இது கூட தெரியாமல் ...ஹி ஹி ஹி

  • dandy - vienna,ஆஸ்திரியா

   இந்த பணியில் உயிரை பயணம் வைத்து இறங்கிய எவரும் ( Divers மாத்திரம் 90 ) தங்களை பற்றி அலட்டி கொள்ளவில்லை இங்கோ இந்தியர்கள் நீர் இறைத்தார்களாம் ...பாவம் தாய்லாந்தது நாட்டில் நீர் இறைக்கும் இயந்திரம் கூட இல்லை போலும் ,,,இவர்களுக்கு அடுத்த வருடம் பாரத ரத்னா விருது கூட கிடைக்கலாம்

 • Vaidhyanathan Sankar - Chennai,இந்தியா

  எந்த தமிழ் ஊடகங்களிலும் மீட்புப்பணியில் ஈடுபட்ட இந்தியாவின் பங்கினை குறிப்பிடவே இல்லைதிட்டமிட்ட இருட்டடிப்போ?

  • Raman - kottambatti,இந்தியா

   சென்னை நம்ம வீரர்கள் ஒன்னும் செய்யலை.. அவர்கள் என்ஜினீயர்கள்.. divers வேறு நாடுகளில் இருந்து வந்து அவர்கள் தான் காப்பாற்றினார்கள்..

  • dandy - vienna,ஆஸ்திரியா

   தாய்லாந்து பெண்களை ஆவென்று பார்த்து கொண்டு நின்று இருப்பார்கள் இந்த இந்தியர்கள் ..வெளிநாடுகளில் இது சாதாரண காட்சி

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  வாழ்த்துக்கள். இது போன்ற வேலைகள் நம்மவர்களுக்கு தொன்று தொட்டே சர்வ சாதாரணம். சந்தேகம் இருப்பவர்கள், மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் சென்று, அங்கு இருக்கும் ஒரு சிறிய ராமர்கோவிலில், எப்படி பக்தர்கள் நுழைய மிக சிறிய இடம்வைத்து, தவழ்ந்துபோகும் வழியை செய்துள்ளனர் என்று பார்க்கவும். உண்மையில் இந்தியர் இந்தியர் தான்.

  • dandy - vienna,ஆஸ்திரியா

   அங்கு நீர் நிறைந்து உள்ளதா ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எப்படியோ குறைந்த சேதத்துடன் எல்லோரும் பத்திரமாக வந்தார்கள் என்று சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்... பயிற்றுவிப்பாளர் ஒரு துறவி என்றும் அவர் இந்த சிறுவர்களுக்கு தியானப்பயிற்சி கொடுத்ததால் தான் இப்பேர்ப்பட்ட சிரமங்களை எளிதில் தாங்கிக் கொண்டதாக சொல்கிறார்கள்...

  • dandy - vienna,ஆஸ்திரியா

   துறவி அல்ல ..FOOTBALL COACH இவர் ஒரு அநாதை ....மக்கள் எல்லோரும் புகழ்வது இவரைத்தான் ...9 நாட்கள் வெறும் நீரை அருந்தி குளிரில் இருந்த சிறுவர்களை உற்சாக படுத்தி வைத்திருந்தவர்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சிறுவர்கள் மாட்டிய உணர்ச்சிப்பட்ட உலகமெங்கும் பரவிய சம்பவம். கதையும் சுபமாக முடிந்துள்ளது. கதையை சுறுசுறுப்பாக்க பரிதாபகரமாக ஒரு உயிரும் போயுள்ளது. இது நிச்சயம் ஹாலிவுட் மூவியாகும் என்று எல்லோருக்கும் தெரியும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement