Advertisement

ஏழைகளுக்கு உதவுவதே சிறந்த தொண்டு: ரஜினி

சென்னை : ''காசிக்கு சென்று இறைவனை காண்பதை விட, ஏழைகளுக்கு உதவுவதே இறை தொண்டு,'' என, நடிகர் ரஜினி பேசினார்.

வெளிநாட்டு பல்கலையில், டாக்டர் பட்டம் பெற்ற, புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகத்திற்கு, சென்னையில், தனியார் அமைப்பு சார்பில், நேற்று பாராட்டு விழா நடந்தது.


இதில், நடிகர் ரஜினி பேசியதாவது: ஏ.சி.சண்முகத்தை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். அவர், பல கல்வி நிறுவனங்களை நடத்தி, அதன் வழியாக, நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். எப்போதும் அவர் டென்ஷன் இல்லாமல், புத்துணர்ச்சியோடு இருக்கிறார். அவரது முடி கூட, அப்படித்தான் இருக்கிறது.


பரமஹம்சர் ஒரு நாள் காசிக்கு செல்ல நினைத்து, சேர்த்து வைத்த பணத்தோடு புறப்பட்டார். போகும் வழியில், சில ஏழைகளை கண்டார். வைத்திருந்த பணத்தை, அவர்களுக்கே செலவு செய்தார். அதன் வழியாக, அவர்கள் முகத்தில் இறைவனை கண்டு, காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டதாக கூறினார். ஏழைகளுக்கு உதவி செய்வது தான் இறை தொண்டு.உழைப்பு, முயற்சியால் மட்டுமே எல்லாரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் வேண்டும். நமக்கு நல்ல எண்ணம் வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். மனம் போகும் போக்கில் போகக்கூடாது. நம் உடலை சுத்தமாக வைத்து கொண்டால், மனமும் சுத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (83)

 • Gopal Thiyagarajan - Chennai,இந்தியா

  எந்த ஏழைக்கு இவர் உதவியிருக்கிறார்? தமிழக மக்களே, இனியும் ரஜினியை நம்ப வேண்டாம்.

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  இப்படியான தொண்டு செய்ய, அரசியலுக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பே இப்படியான புண்ணிய காரியங்களைச் செய்திருந்தால் மக்கள் போற்றியிருப்பார்கள். ஆனால், தவறுகளே செய்தீர்கள்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  நீங்க முதலில் சந்தித்து ஆசி வாங்கிய அரசியல் குரு மாதிரி ஏழைகளுக்கு உதவி விடாதீர்கள்

 • Palanichamy - Chennai,இந்தியா

  சென்னை மக்கள் தண்ணீர்ல மூழ்கி கிடக்கும் போது ஒட்டும் செய்யக் காணோம் . இவரு ஏழை மக்களுக்கு உதவ போறாரா. உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான்

 • Mohandhas - singapore,சிங்கப்பூர்

  இது எப்படி இருக்கு,,,,

 • Sulikki - Pudukkottai,இந்தியா

  அப்படின்னா இத்தனை வருஷம் எதுக்கு காசி, இமயமலைக்கு போன. மக்களின் வறுமையை போக்கி இருக்கலாமே. ஊருக்குத்தான் உபதேசம். பள்ளி வாடகை கொடுக்க மனமில்லை, இதுங்கல்லாம் ஏழை, இறைவன்னு அளந்து உடுதுகள். கலிகால முடிவில் உலகம் அழிவை நெருங்கும்போது, கேலி விகட பயல்கள் முன்னணி ஸ்தானத்துக்கு வந்துவிடுவார்கள், நன்மை செய்பவர்கள் நாங்கள்தான் என்று பினாத்துவார்கள். உயர்குடியில் பிறந்த நல்லவர்கள் கேட்பாரற்று ஒதுக்கபடுவார்கள் என ஒரு தீர்க்க தரிசனம் கூறுகிறது.

 • krishnan - Chennai,இந்தியா

  நீங்க பண்ணுன தொண்ட சொல்லுங்க இதுவரைக்கும்.

 • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இனி இமய மலைக்கு போகாமல் அந்த பணத்தில் ஆயிரம் கோடிகள் சம்பாதித்து கொடுத்த தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது உதவ வேண்டும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ராகவேந்திரா என்ற பேரில் சென்னையில் ஒரு திருமண பண்டபம் . அதன் வாடகை ஒரு நாளைக்கு ரூ 10 லெட்ச்சம் . அதாவது மோடியின் ஒரு சொக்கா விலை . திருமண மண்டபம் அருகில் ஒரு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அப்புறம் ஒரு ஆதி திராவிடருக்கான பள்ளிக்கூடம் . இரண்டும் இந்தியாவின் வறுமையை கொடுமையை பறைசாற்றும் , அத்தனை அசிங்கமாக பராமரிப்பில்லாமல் கிடக்கிறது . இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் இந்த திருமண மண்டபத்தில் சாப்பிட்ட எடுத்து, இதர கழுவல் வேலை செய்து உணவு கல்வி இரண்டையும் பார்த்துக்கொள்கிறார்கள் . தூத்துக்குடிக்கு துப்பாக்கி சூட்டுக்கு ஆதரவு பேச பயணிக்கும் ரஜினி , வறுமைக்கு வாய்ஸ் கொடுக்கும் ரஜினி இந்த ஆதி திராவிடர் தங்கும் விடுதிக்கு திருமண மண்டபத்தின் ஒரு சில நாள் வாடகை பணத்தை கொடுத்தால் சீராகும் . ரசிகர் கூட்டம் நடத்த அடிக்கடி ராகவேந்திர திருமண மண்டபம் செல்லும் ரஜினியின் கண்களுக்கு அன்னநடை வீட்டு ஏழை மாணவர்கள் தெரிவதில்லை . இவரு மோடி மாதிரி வாயில் வடைசுடும் காவி கூட்டம்தான் .

 • குமரன்,வாஷிங்டன் -

  அட்ரா அட்ரா அட்ரா... நல்லா அடிச்சு விடுங்கடா...ஐஞ்சு பைசா ஒருத்தனுக்கும் ஈஞ்சது கிடையாது.. சம்பாதிக்கிற அத்தனை கோடி ரூவாயையும் எங்க பதுக்கி வைக்கிறாருன்னு தெரியாது...அட்லீஸ்ட் கமல் மாதிரி திரையுலகுக்கு திரும்பி முதலீடு செய்வதும் கிடையாது...ஆனா தமிழ் நாட்டு நிலத்துக்கு வாடகை கட்ட பணம் கிடையாது..ஆனா வாய் மட்டும் தூத்துக்குடிலேயிருந்து இமயமலை வரை நீளும்..

 • S.Kumar - chennai,இந்தியா

  ஏழைகளுக்கு உதவும் எண்ணம் இருந்தாலே போதும் ஏசுபவர்கள் ஏசட்டும் புழுதிவாரி தூற்றுபவர்கள் தூற்றட்டும் உங்கள் உதவும் குணம் உங்களை மென்மேலும் பெருமையடைய செய்யும் ஆனால் வீணான பேட்டிகள் ஏதும் கொடுக்காமல் இருந்தால்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இமயமலைக்கு போய் சரக்கடிக்கிறத விட கோடம்பாக்கம் பிரிட்ஜிலேயே அடிக்கிறது தானே ? தொண்டு லாம் செய்ய சொல்வார், வாடகை, கடன்திருப்பரது லாம் மட்டும் தரமாட்டாங்க.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இரண்டு ஊழல் கலகங்களை வீழ்த்த ரஜினியால் மட்டுமே முடியும் , தேர்தல் முடிவில் தான் தெரிய வரும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  எல்லோராலும் ஏழைகளுக்கு உதவ முடியாது கொடுப்பதட்கும் ஒரு உயர்ந்த உள்ளம் வேண்டும் அது இறைவன் அருள் உள்ளவருக்கே கிடைக்கும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஒருவர் புதிதாக வருவாரென்றால் அவர் மீது தொடர்ந்து எதிரான கருத்துக்களை பரப்பி மக்கள் மனதில் எதிர்மறையான கருத்துக்களை பதிய வைக்க முயலுகிறார்கள் . லதா ரஜினி அவர்கள் தன் கணவருக்கு எதிராக விமர்சனம் வருவதை விரும்புவாரா ?? இதில் என்ன சிக்கல் என்று அவரிடம் பேட்டி எடுத்தால் தான் உண்மை தெரிய வரும். உண்மை தெரிந்த பிறகு அவதூறாக எழுதியதை எதனை பேர் திரும்ப பெறுவார்கள் ???

 • ஆப்பு -

  ஏழைகளுக்கு உதவுங்கள்....ஆனா கட்சி ஆரமிச்சு, தேர்தலில் வென்று, முதல்வராகித் தான் ஏழைகளுக்குத் தொண்டு செய்வேன்னா அது சுயநலம்.

 • Indhuindian - Chennai,இந்தியா

  சரியாக சொன்னீர்கள் உங்கள் வீட்டுக்குள்ளேயே ஒரு ஏழை இருப்பது உங்கள் கண்ணில் படவில்லையா. உடனடியாக அந்த ஏழையின்துயரம் தீர்க்க உங்கள் முடிஞ்சா கொஞ்சம் முயற்சியுங்களேன் உங்களின் நிலைப்பாடு நாறுகிறது

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  ஏழைகளுக்காக ஏ சி சண்முகம் என்ன இலவச கல்வியா நடத்துகிறார் அவர் கல்லூரியில் வருடத்திற்கு 22 லட்சம் பணம் கட்டினால் தான் மருத்துவம் படிக்க முடியும் அண்ணாதிமுகவில் கொள்ளை அடித்த பணத்திலும் கூவம் ஆற்றை ஆக்ரமித்தும் கட்டிய கல்லூரிகளாலும் கட்டியவர் எப்படி ஆண்டவன் அருளால் எல்லாவற்றையும் பெற்றார்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அந்த ஏழைகள் யாரு ? துணைவி, மகள்கள், மாப்பிள்ளை ..... இவங்கதானே ????

 • rishi - varanasi,இந்தியா

  அரசியலை விடுத்தது நீங்கள் இமயமலைக்கு போவது இந்த நாட்டிற்கு நீங்கள் செய்யும் பெரும் புன்னியம்.

 • Advaiti - Chennai,இந்தியா

  வளர்ச்சியின் போது, அதுவும் அரசியல் செய்யப்போகிறேன் எனும் போது இப்படித்தான் குறைகளை சுட்டிக்காட்டி கொடி பிடிப்பார்கள் தலைமுறைகளாக த்யாகிகளுக்கு ஓட்டுப்போட்ட யோக்கியர்கள், தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தைத் தொடருங்கள், வாழ்த்துக்கள்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  மாலிக்ராஜா சவுதி க்கு, உண்மையாகவே ஏசி ஷண்முகம் பரம்பரை பணக்காரர்தான். அதிமுகவில் மாணவரணி செயலாளராக இருந்தவர்.ஆட்சியில்அதிமுக இல்லை அவரது திருமணம்,நடந்தபோது அவரது நிலத்தில் சுமார் 25ஏக்கரா விளைச்சல் , அப்புறபடுத்திவிட்டு, நிலம்பூரா பந்தலிட்டு, சுமார் 3000 சமையல்காரர்களை, அமர்த்தி ஏறக்குறைய 50000 பேர்கள், உணவு பரிமாற்றம் நடந்தது.அக்கால பத்திரிக்கைகள், இதைபற்றி வியந்து, எழுதினார்கள். துக்ளக் ஆசிரியர் சோ, அவர்களின் தலையங்கத்தில், இங்கிலாந்தது அரசகுடும்பத்தில் கூட இதுபோன்ற, ஆடம்பரமாக,திருமணம் நடக்கவில்லை,என்றார்.

 • Suri - Chennai,இந்தியா

  ஏன் இரும்புக்கும் எறும்புக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணரவில்லை? அதை பற்றி ஏன் செய்தியில் ஒரு வரி கூட இல்லை? தத்து பித்து என்று உளறிவிட்டு அதை உணர்ந்து பின்னர் re - take கொடுத்தாரே, அதை பற்றி ஏன் ஒன்றுமே கூறவில்லை?

 • elangovan - tirupur,இந்தியா

  வாங்கிய கடனை முறையாக கொடுத்துவிட்டு தந்து அடுத்தவனை ஏழை ஆக்காமல் விட்டாலே பெரிய புண்ணியம். அதை அவருடைய மனைவிக்கு உணர்த்த வேண்டும். அரசாங்க கட்டிடத்துக்கு ஏமாற்றாமல் வாடகையை கொடுக்க வேண்டும். இதை செய்தால் கோடி புண்ணியம். இதையும் மனைவிக்கு அறிவுறுத்த வேண்டும்.பிறகு அடுத்தவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்

 • C.Elumalai - Chennai,இந்தியா

  பெருந்தலைவர் ஏழைபிள்ளைகள், பள்ளிக்கு வர மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார். திட்டம் வெற்றி பெற்றது. ஒருவேளை உணவுகூட கிடைக்காமல், ஏழைபிள்ளைகள் வாடுவதைகண்ட, புரட்சிதலைவர், சத்துணவு திட்டம், கொண்டு வந்தார்,தற்சமயம் வரை வெற்றிகரமாக நடந்து கொண்டப இருக்கிறது. முதல்வர் ஆகமுன்பே பல ஏழைமக்களுக்கு உதவி புரிந்தார். அதனால்தான் இன்று வரை ஏழைகளின், இதயசிம்மாசானத்தில், அமர்ந்துஉள்ளார், மக்கள்திலகம்.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  ஏ .சி சண்முகம் என்ன பரம்பரை ஜமீனா என்ன ? எம் ஜி ஆர் போட்ட பிச்சை தானையா .. உழைத்து சம்பாதித்ததா ? நாட்டில் 99.99%. சதவீத பணக்கார்கள் ஊரை கொள்ளையடித்தவர்கள் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும் தங்களின் பகட்டு தன்மையால் மறைத்து காட்டி வாழ்கிறார்கள் .. அடுத்து ரஜினி .. ஏதாவது ஒரு கிராமத்தை தத்து எடுத்து காண்பித்து இதோ செய்தேன் என்றால் பாராட்டலாம் .. அனால் எல்லாம் வஞ்சிப்புகழ்ச்சிதான் ...

 • Vicky - Chennai,இந்தியா

  ரஜினிகாந்தானந்தா ஸ்வாமிகளே ........ உங்கள் மனைவி ஆசிரமம் ஸ்கூலில் மிகவும் ஏழைகளுக்கு இலவசமாக அல்லது மிகவும் குறைந்த கட்டணத்தில் கல்வி கொடுப்பது அனைவரும் அறிந்தது .................நீங்கள் படத்திற்கு வாங்கும் சம்பளம் மொத்தமும் வெள்ளை தான் என்பதும் நாங்கள் அறிந்தது.. ......................உச்ச நீதி மன்றம் உங்கள் மனைவியின் நீதி நியாயத்திற்கு பாராட்டு பாத்திரம் வாசித்ததும் உலகம் அறிந்தது.. .........அரசியல் அரசியல் என்று சொல்லி .... ஒவ்வொரு படமாக நீங்கள் ஒத்து கொள்வதும் நீங்கள் தமிழ் மக்களாகிய எங்கள் மேல் உள்ள பாசத்திற்காக என்பதும் நாங்கள் அறிந்தது .....................................மாற்றி மாற்றி பல பைனான்சியர் உங்கள் மனைவி அல்லது உங்கள் மக்கள் மீது வழக்கு போடுவது நியாயமான காரணங்களுக்காக மட்டுமே என்பதும் உலகம் தெரிந்தது...... நீங்கள் கொஞ்ச நாள் அமைதி காத்து இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது....

 • Suri - Chennai,இந்தியா

  இங்கு பதிவிடும் கருத்துக்கள் 99 % அவருக்கு எதிர்ப்பு பதிவுகளே.அந்த பதிவுகளுக்கு கிடைக்கும் rating உம் 98 % எதிர்ப்பு பதிவுகளே. ரஜினி சுதாரித்துக்கொள்வது நல்லது. நடித்தோமா, இன்னும் காசு சேர்த்தோமா என்று இருந்துவிடுவது நல்லது.அப்போ அப்போ இது போல் சில பல கருத்துக்களை வெளியிட்டு பின் இறைவன் சித்தப்படி இருந்துவிடுவது நல்லது. உசுப்பேற்றுவர்களுக்கு இடம் தந்து விடாதீர்கள். மரியாதையை காத்துக்கொள்ளுங்கள்.

 • Balaji - Bangalore,இந்தியா

  இமய மலை செல்லும் இவர் காசிக்கு செல்வதை கிண்டல் செய்கிறார். மெக்காவுக்கு செல்வதை பற்றி சொல்வாரா?

 • Karun Muruga - banglore,இந்தியா

  ஏழைகளுக்கு.. நீங்க என்ன செய்திக .....அத சொல்லு ஓய் ஊருக்கு உபதேசம்...உமக்கு இல்லையா ஓய் உலக மகா நல்லவர் நீங்க...சரிதானா ஓய்

 • Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா

  இந்த ஞானம் எப்போ பிறந்தது...? தினமொரு கதை பேசும் போலி ஆன்மிகவாதியே... நீ ஆன்மிகவாதியாக இருந்திருந்தால், தூத்துக்குடி நிகழ்வில் மதியிழந்து பேசியிருக்கமாட்டாய். ஆனால், பேசிவிட்டாய... அதனால், நீ ஆன்மிகம் என்று பேசுவது போலியென நான் உரைக்கின்றேன்.

 • Rajesh Rajan - bangalore,இந்தியா

  அப்போ ரசிகர்களிடம் பணம் வாங்கிட்டு பார்க்கறீங்களே அது எந்த கணக்கு?????? அட்வைஸ் பண்ணுவதற்குமுன் நாம அதை கடை பிடிக்கணும்...... அப்போதான் அட்வைசுக்கு மதிப்பு

 • Mohamed Malick - Dubai,இந்தியா

  அந்த ஏழை யாரு ? தனுஷா ?? இல்லை லைக்கா தயாரிப்பாளரா ???

 • GG.RAJA - chennai,இந்தியா

  இந்த அளவிற்கு சிறந்த சிந்தனைகளை வழங்கும் திறன்பெற்ற ரஜினிகாந்த் அவர்கள் தீய , பிற்போக்குத்தனமான மற்றும் விஷக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ரஞ்சித் தன்னை கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள எப்படி உடன்பட்டார்..? காலா படத்தின் மூலம் ரஜினிகாந்தை சேற்றில் அழுத்திவிட்டார் ரஞ்சித். ரஞ்சித் போன்றவர்களின் திரைப்படங்களில் நடிப்பதை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும்.

 • ramesh - chennai,இந்தியா

  முதலில் வாடகைக்கு குடியிருக்கும் இடங்களுக்கு ஒழுங்காக வாடகை கொடுக்கவேண்டும்.வாங்கிய கோடிக்கணக்கான கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தவேண்டும்.இதுவே சமூகத்திற்கு செயும் முதல் தொண்டாக இருக்க வேண்டும்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  இத்தனை காலம் ஆன்மீகத்தில் இருந்து என்ன பயன் ரஜினியால் ஒரு கோவத்தை control செய்யமுடியவில்லை. இதில் இவர் ஆன்மீக அரசியல் செய்யப்போறாராம். ஆன்மீகத்தில் இருப்பதற்க்கே தகுதி அற்றவர் இவர்.

 • Sandru - Chennai,இந்தியா

  யார் அந்த ஏழைகள்? லதா ரஜினி, தனுஷ் என்ற ஏழைகளா?

 • ஸ்ரீனிவாசன்,COIMBATORE -

  காலா படத் தோல்வியால் சுமார் 100 கோடிக்கு மேல் லாபத்தில் நஷ்டம்..!! இனி 2.0 மூலமாக கல்லா கட்டலாம்னு புருடா விட்டுட்டு இருக்கிறார்..!! டிசம்பர் 12ம் தேதியில் அந்த ரிசல்ட்டும் வந்து விடும் (நவம்பர் 29 ரிலீஸ்)..!!! இதுக்கு நடுவுல பொண்டாட்டி கேஸ் (ஸ்கூல் & கோச்சடையான்) வேறு..?? அப்பப்பா மண்டை பிச்சுக்குது...🤕

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, கணவன் மனைவி தத்துவம் என்பதே, ஈருடல் ஓருயிர் என்பதுங்க, அதாங்க, வாழ்க்கையில், அனைத்துவிதமான இன்ப துன்பங்களிலும், மிக சிறந்த நண்பர்கள் போல இணைந்து இயைந்து ஒன்றிணைந்து, எல்லா விசயங்களிலும் செயல்படுவது என்பதுங்க. தாம்பத்திய வாழ்க்கை என்பது என்ன, கணவன் மனைவியின் தனித்தனி வியாபாரமா?, உன் லாப நஷ்ட கணக்கு வேறே, என் லாப நஷ்ட கணக்கு வேற என கணவன் மனைவியும் கூறிக்கொள்வதற்கு?. இதெல்லாம்(நற்க்குணங்கள்), ஒரிஜினல் ஆன்மீக அன்பர்களிடம் இருக்கும், போற்றத்தக்க குணங்கள் எனலாங்க.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  'காசிக்கு சென்று இறைவனை காண்பதை விட, ஏழைகளுக்கு உதவுவதே இறை தொண்டு,'' அப்பறம் ஏன் அடிக்கடி இமயமலை செல்கிறீர்கள்... அங்கே யாருக்கு தொண்டு செய்கிறீர்கள்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கங்கை காவேரி இணைப்புக்கு காசு கொடுத்து விட்டீர்கள்...?

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அப்டீங்களா. பாஜகவோட கூட்டணி சேரரதுக்காகவே கட்சி ஆரம்பிச்சு ஏழைகளுக்கு உதவ போறீங்க.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  சிஸ்டம் இப்ப சரியா இருக்கா? என்ன சிஸ்டம்? இன்டெல் பெண்ட்டியம் இன்டெல் செலீறான்?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  பாவம் ஏழைகளுக்கு உதவி உதவியே ரஜினிக்கு பணம் இல்லாமல் பொய் விட்டது .....பாருங்க கோர்ட்டில் போயி வாங்குன கடனை கட்ட கூட காசு இல்லாத பரம ஏழை ரஜினிகாந்த்....தன்னோட ராகவேந்திரா திருமண மண்டபத்தை ஏழைகளுக்கு இலவச கல்யாணம் நடத்தி வச்சியே கையில் காசு கூட இல்லாமல் ஆஷ்ரம் பள்ளி கட்டணத்தை கட்ட கூட காசு இல்லாமல் கோர்ட்டு கேஸுன்னு அலைஞ்சுக்கிட்டு இருக்கார்....அரசு கட்டிடத்தில் வாடகைக்கு கடைகளை எடுத்து அந்த கட்டணத்தை கூட கட்ட கேவலம் வாடகை பத்தாயிரம் கட்ட கூட காசு இல்லாம கோர்ட்டு கேஸுன்னு அலைஞ்சுக்கிட்டு இருக்கார்.....பாவம் எல்லாரும் அவரு படத்தை ரெண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்து பாருங்க...அப்போ தான் அவருகிட்ட கொஞ்சம் காசு வரும்....ஏழைகளுக்கு அல்லி லல்லி கொடுக்க முடியும்..........வெங்காயம் மவன் ஒத்தையில நிக்காண்டா உதவி பண்ணுங்கடா...........

 • Vaidhyanathan Sankar - Chennai,இந்தியா

  அவ்வப்போது இவர் இமயமலைக்கு செல்லும் ஆன்மீக யாத்திரைக்கு இந்த லாஜிக் porunthaatho?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  பரமஹம்சர் முன்பு செய்தது எல்லாம் தெரிகிறது ஆனால் பெண்டாட்டி கடன் வாங்கியது தெரியலையா ? மத்தவன் பணம், மத்தவன் இடத்தை ஆட்டைய போடுவது பத்தி ஆண்டவன் என்ன சொன்னார் ?

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இமயத்துக்கு செல்வதைவிட ஏழைகளுக்கு தொண்டும் செய்யலாம் என்பதையும் நினைவில் வைக்கலாமே

 • Kumar - Chennai,இந்தியா

  இவர் ஆன்மீக சொற்பொழிவாற்ற போகலாம். தான தர்மம் எதுவும் செய்யாத இவர் பேச்சு எடுபடுமா? அரசியலில் ஈடுபட போகிறேன் பேர்வழி என்று முட்டு ரோடில் சினிமாவுக்கு பூஜை போட்டுவிட்டு வந்துவிடுகிறார். இவரை இன்னும் நம்பிக்கொண்டு இருக்கும் நபர்களை என்ன சொல்வது? காலா டப்பாவுக்கு பிறகு அடுத்த டப்பா வரும். உருட்டுவார்கள். தலையெழுத்து.

 • Indiya Tamilan - Doha,கத்தார்

  மனம் போகும் போக்கில் போகக்கூடாது. நம் உடலை சுத்தமாக வைத்து கொண்டால், மனமும் சுத்தமாக இருக்கும். சொல்வது யார் ரஜினி காந்த் . இவரின் இளமை கால கூத்துக்களை தெரிந்தவர்கள் இதை எல்லாம் கேட்டுக்கொண்டு தலையில்தான் அடித்து கொள்ளுவார்கள். குடியும்,கூத்தும் ஆக இருந்தவர் எல்லா கெட்டவைகளையும் நன்கு அனுபவித்துவிட்டு இன்று ஆன்மிக வேஷம் போட்டுகொண்டு அறிவுரை கூறுகிறார்.

 • Indiya Tamilan - Doha,கத்தார்

  பரமஹம்சர் ஏழைகளுக்கு செலவு செய்தது இருக்கட்டும் ரஜினி நீங்கள் கொஞ்சமாவது கிள்ளி கொடுத்தீர்களா ஏழைகளுக்கு. வாடகை பாக்கியையும் வாங்கின பணத்தையும் நீதிமன்றங்கள் சொல்லியும் கொடுக்க மனமில்லாத நீங்களும் உங்கள் குடும்பமும் எந்த முகத்தை வைத்து கொண்டு வெட்கமில்லாமல் மக்கள் முன்னால் வந்து வெட்டி பேச்சு பேசி கொண்டிருக்கிறீர்கள். அசிங்கமாக இல்லையா? இல்லை பதவி ஆசை பிடித்து அரசியலுக்கு வருவதால் எல்லாவற்றையும் உதிர்த்து விட்டீர்களா?

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இவர் என்ன சொல்லவருகிறார், இவரின் ஆத்துகாரி பணமோசடி வழக்கில் இருக்கிறார், முதலில் அவங்க செய்தது தவறோ, சரியோ தனது பணத்தை கொடுத்து அந்த கடனை முடித்திருக்கலாம், மானம் மரியாதையாவது மிச்சியிருக்கும், அந்த பக்கம் ஆத்துகாரி மோடி வழக்கு, இந்தபக்கம் இவரு ஏழைகளுக்கு உதவ போகிறாராம், மனதூய்மை முக்கியம் சார்.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  இந்த சிறியேனுக்கு எதை செய்கிறேர்களோ அதை எனக்கே செய்கிறீர்கள் என்று வேதாகமத்தில் உள்ள வசனத்தை , கொஞ்ச தண்ணீர் விட்டு குழைச்சு சொல்கிறார்.

 • R.Subramanian - Chennai,இந்தியா

  //உழைப்பு, முயற்சியால் மட்டுமே எல்லாரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் வேண்டும். நமக்கு நல்ல எண்ணம் வேண்டும்// உண்மையான வார்த்தைகள் ரஜினி சார்.

 • Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ

  ஒரு தடவி ஒரு பெற்றோர் பிள்ளையை கூட்டிகிட்டு ராமகிருஷ்ணா பரமஹம்சர் கிட்ட போனார்களாம் அவரிடம் பெற்றோர் எங்கள் பையன் நிறைய இனிப்பு லட்டு சாப்பிடறான் .. கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க இப்னு சொன்னார்களாம் பரமஹம்சர் "போயிடு ஒரு வாரம் கழித்து வாங்க" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். ஒரு வாரம் கழித்து போனபோது பையனிடம் அட்வைஸ் பண்ணினாராம் ..லட்டு அதிகம் சாப்பிட கூடாதுனு .. பெற்றோர்களுக்கு ஒரே ஆச்சரியம் ..இந்த அட்வைஸ்..போன வாரமே பண்ணி இருக்கலாம் என்று.. அப்புறம் தான் தெரிஞ்சது போன வாரம் வரை அவரும் லட்டு சாப்பிடுவாராம் .. அடுத்தவருக்கு அட்வைஸ் குடுக்கணும் நா நம்ம முதலில் அதை கடைபிடிக்க வென்றும் என்று லட்டு சாப்பிடுவதை நிறுத்திவிட்டாராம் .. அந்த மஹான் எங்க.. (நான் மஹான் அல்ல...)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  எப்போலிருந்து இந்த ஞானம்? வாங்கின கடனை ஒழுங்கா திருப்பிக் கொடுங்க

 • s t rajan - chennai,இந்தியா

  அதெல்லாம் சரி தான். சுப்ரீம் கோர்ட் வரையில் இழுத்தடிக்காம வாங்கின கடனைத் திரும்பிச் தருவது அதைவிட பெரிய தொண்டில்லையா.....திரு ரஜினி அவர்களே. அப்பழுக்கற்றவர்கள் தான் அரசியலுக்கு வரணுமில்லையா... திரு சூப்பர் ஸ்டார் அவர்களே....

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மனைவியின் கடனும் தங்கள் கடன் தான். முதலில் அதை அடையுங்கள். பிறகு ஊருக்கு உபதேசம் கொடுக்கலாம்.

 • வைகை செல்வன் - சென்னை,இந்தியா

  appuram yenbaa nee imayamalaikku adikkadi pogiraai?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement