Advertisement

விவசாயிகளை வஞ்சித்த காங்., : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அமிர்தசரஸ் : ''ஒரு குடும்பத்தின் நலனை பாதுகாப்பதற்காக, விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை வெறும் ஓட்டு வங்கிகளாகவே, காங்கிரஸ் பயன்படுத்தி வந்தது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மலோட் பகுதியில், பா.ஜ., சார்பில் நேற்று நடந்த விவசாயிகள் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

விவசாயிகள் தான், இந்த நாட்டின் ஆன்மா; அவர்கள் தான், நமக்கு உணவு வழங்கும் தெய்வங்கள். நிலத்தில் கடுமையாக உழைத்து, நமக்கு உணவு வழங்குகின்றனர். ஆனால், அவர்களது வாழ்க்கை சோகமாகவே உள்ளது. விவசாயிகள் பலர் வறுமையில் வாடுகின்றனர்; இதற்கு, காங்., தலைமையில், மத்தியிலும், மாநிலங்களிலும் தொடர்ந்து இருந்த அரசுகள் தான் காரணம்.

காங்கிரசுக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை. ஒரே ஒரு குடும்பத்தின் நலன் மீது மட்டுமே அக்கறை. அந்த குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும். பல ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு, உற்பத்தியில், 10 சதவீதத்துக்கு மேல் லாபம் கிடைக்கவில்லை. இதற்கான காரணம், எனக்கு தெரியும்.

காங்கிரசின் தவறான கொள்கைகளாலும், அக்கறையின்மையாலும், விவசாயிகள் நசிந்தனர். விவசாயிகளை ஏமாற்றி, வெறும் ஓட்டு வங்கியாகவே, காங்., பயன்படுத்தி வந்ததே, இதற்கு காரணம். விவசாயிகளின் இந்த நிலைமையை மாற்றுவதற்கு, கடந்த நான்கு ஆண்டுகளில், மத்தியில் உள்ள, தே.ஜ., கூட்டணி அரசு, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனால் தான், உற்பத்தி அதிகரித்து, களஞ்சியங்கள் நிரம்பியுள்ளன.


கோதுமை, நெல், பருத்தி, சர்க்கரை, பருப்புகள் என, அனைத்து விவசாய பொருட்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளன. இதற்காக, விவசாயிகளுக்கு தலை வணங்குகிறேன். வரும், 2022ம் ஆண்டுக்குள், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்; இதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்துள்ளது.

அறுவடை முடிந்து, பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க, அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில், இதற்கான நடவடிக்கை பற்றிய அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Shah Jahan - Colombo,இலங்கை

  சொன்னது நீ தானா சொல் சொல் என் உயிரே சேலம் பக்கம் வந்து

 • ganapati sb - coimbatore,இந்தியா

  குஜராத்தில் பாசானவசதிகள் தடுப்பணைகள் அணைகள் 24 மணி நேர மின்சாரம் பயிர் காப்பீடு மண் பரிசோதனை ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் போன்றவை உருவாக்கி விவசாயத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை கொண்டு வந்தவர் மோடி ஏற்கனவே முன்னெப்போதும் இல்லாத வகையில் 11 லட்சம் கோடி பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சிக்கு ஒதுக்கியுள்ள மோடிக்கு மாநில அரசுகள் சரியாக ஒத்துழைத்தால் பாரதம் முழுதும் அந்த விவசாய வளர்ச்சி எனும் சாதனையை நிகழ்த்தி காட்டுவார்

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  மோடியின் ஆளுமை திறனுக்கு அவர் ஆண்ட குஜராத் விவசாயிகளே சாட்சி. விவசாயிகளுக்கென தனியான மின்சார கிரிட், விவசாய காப்பீடு, சாயில் டெஸ்ட், நல்ல MSP , சேமிப்பு கிடங்குகள், மாநிலமெங்கும் வாய்க்கால்-தடுப்பு அணைகள், நாற்பது வருட நர்மதை அணை வெற்றி பெற்றது. இதெல்லாம் தமிழகத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது.... குஜராத் காங்கிரஸ் இலவச மின்சாரம், டீவி அறிவித்த நிலையில், மோடி அவர்கள் தைரியமா நான் ஓசி எதுவும் கொடுக்க மாட்டேன்... சொல்லப்போனால் மின்சாரத்துக்கு அதிகமே சார்ஜ் செய்வேன் ஆனால் தரமான தடையில்லா மின்சாரம் கொடுப்பேன் என தேர்தல் பரப்புரை செய்தார். அவர் மறுபடி வெற்றியும் பெற்றார். அதுவும் இலவச மோக தேர்தல் வெற்றி சீசனில், தேர்தல் சூட்டில், பாப்புலிசத்திற்கு எதிராக இது போல தைரியமாக உள்ளதை உள்ளபடி பேச தில் வேண்டும். அரசியல்வாதி என்றாலே பொய் நிறைய பேச வேண்டும் என்பதையே உடைத்தவர் இவர். இவரை பொய்யர் என்றும் அரசியல்வாதி எனவும் சொல்வது அபத்தம். இவர் அரசியல்வாதி அல்ல உண்மையான தலைவன்....

 • Raj - Chennai,இந்தியா

  Scheme என்றால் அர்த்தம் தெரியாதாம், விவசாயிகளின் பிரச்சினையை விட கர்நாடக தேர்தல் தான் முக்கியம் என்று சொன்னவர் இன்று காங்கிரஸ் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. முடிந்தால் தஞ்சை வந்து சொல்லட்டும் இதை இவர்களின் யோக்கியதை என்ன என்று தெரிந்துவிடும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல

  • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

   ஸ்கீம் என்றால் அர்த்தம் தெரியாதுன்னு யாரும் சொல்லலை. நூறு வருடப்பிரச்னைக்கு ஒத்தை வரி ஒத்தை சட்டத்துல தீர்வு உருவாக்குங்கன்னு சொல்றது மலைய தூக்கி வைங்க நான் தூக்குறேன்னு சொல்ற செந்தில் காமெடி மாதிரி இருக்கு. அப்படியும் வாரியம் அமைச்சாங்க அதை பாராட்ட மனமில்லைன்னா ஓரமா போங்க... இங்க வந்து நொட்டு சொல்லிக்கிட்டு...

  • motchi - brussels,பெல்ஜியம்

   விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த வாய்சவடாலுக்கு மட்டும் பஞ்சம் இல்லை. இவங்களுக்கு பாசனம் என்றாலே என்னவென்று தெரியவில்லை. அழிவு ஆரம்பமாகி விட்டது.

 • R Sanjay - Chennai,இந்தியா

  விவசாயிகளை அழிப்பதில் காங்கிரஸ்/பிஜேபி இரண்டுமே சளைத்தவர்கள் அல்ல. இவர்களின் ஒரே குறிக்கோள் விவசாயிகள் அழியவேண்டும். மக்கள் உணவுக்காக மேலை நாடுகளிடம் கையேந்தவேண்டு அவர்கள் கொடுக்கும் உணவை உண்டு நோய் வரவேண்டும். அந்த நோயிற்கு மருந்து வாங்க மீண்டும் மேலைநாடுகளிடம் கையேந்த வேண்டும் பிறகு இந்த வாழ்க்கையையே மார் மாறி வாழ்ந்து சாகவேண்டும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மோடிக்கு விவசாயம் என்றாலே என்னவென்று தெரியாது...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  யாருமே இவர் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  / நதிகள் இணைப்பு இப்போது மும்முரமாக துவங்கியுள்ளது .ஆனால் ராகுல் நதிகள் இணைப்பையே எதிர்க்கிறார் இதுதான் யார் விவசாயிகளின் நண்பர் என்பதனைக்காட்டுகிறது /

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   நதிகள் இணைப்பு துவங்கியுள்ளதா? எங்கே சந்திரனிலா இல்லை செவ்வாய் கிரகத்திலா? பொய்களாலேயே வாழ்ந்து கொண்டிருக்க எப்படித் தான் முடிகிறதோ?

  • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

   ஆட்சிக்கு வந்து ஒரே வருடத்தில் மாநில நதிகள் இணைத்த ஆந்திரா பற்றியோ அல்லது மபி, மஹாவில் நடக்கும் ஜல்ஷிவிற் பற்றி எதையும் படிச்சிடாதீங்க. செய்தி படிக்காம எதுக்கு கருத்து போட வரணும். இதுல நக்கலாமா...அடேய். அங்குட்டு தூரம் போய் விளையாடுங்க...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மன்மோகன் ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடந்து சிறப்பாக இருந்தும் பட்டினிச்சாவுகள் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை ஆனால் கடந்த நான்காண்டுகளில் மூன்றாண்டுகள் பருவமழை பொய்த்துமே விவசாய உற்பத்தி அதிகரித்துளளதே . விவசாயிகள் தற்கொலை பற்றி செய்திகளே இல்லையே .இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது ஐந்தாண்டுகளுக்குமுன் இந்த செயல்பாடே இல்லையே

 • n.palaniyappan - karaikal ,இந்தியா

  N.Palaniyappan Karaikal பிரதமர் ஐயா அவர்கள் காவேரி டெல்டாவில் வாழும் விவசாயிகள் நிலையை கண்டு அவர்களின் முக்கிய பிரச்சனையான தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யுங்கள். இது நாட்டுக்கும் உழவருக்கும். நலம் விளைவிக்கும். மூன்று போகம் விவசாயம் செய்து ன்வளமையாக வாழ்ந்த ல் மக்கள் இன்று ஒரு போக சாகுபடிக்கே சிரமப்படுகின்றனர். உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகள் நலம் காக்கவும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement