Advertisement

'டவுட்' தனபாலு

அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன்: ஜெ., இருக்கும் போதே, அவருடைய கவனத்துக்கு கொண்டு செல்லாமல், கடந்த, பத்து ஆண்டுகளாக, சத்துணவு முட்டையில் ஊழல் செய்துள்ளனர்.


டவுட் தனபாலு: சத்துணவுக்கு முட்டை வினியோகம் செய்யும் நிறுவனத்தில், இப்போதுதான், வருமான வரித்துறை சோதனை நடக்குது... ஆனா, முட்டை மற்றும் ரேஷன் பருப்பு கொள்முதலில் முறைகேடு நடப்பதாக, பல வருஷமா எதிர்க்கட்சிகள் சொல்லி வருது... அந்தக் குற்றச்சாட்டை, ஜெ., கடைசி வரை கண்டுக்கலை... 'அரசில் நடந்தது எதுவும், ஜெ.,க்கு தெரியாதுன்னு, நீங்க சொல்வதை, பூசிமொழுகுவதா எடுப்பதா... இல்லை, விமர்சனமா எடுப்பதா என்ற, 'டவுட்' வருதே...!


---


சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்: உ.பி.,யில், சட்டம் -- ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. மாநிலம் முழுவதும், மக்களிடையே பீதி நிலவுகிறது.


டவுட் தனபாலு: 'உ.பி., மிகப்பெரிய மாநிலம்; மக்கள் தொகையும் அதிகம்... இங்கு நடக்கும் குற்றச்செயல்களை, எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஊதிப் பெரிதாக்கி, மக்களிடம் பீதியைக் கிளப்புகின்றன'ன்னு, முதல்வராக நீங்க இருந்தபோது சொன்னீங்களே... அதை எல்லாம் மறந்துட்டீங்களா என்பது தான், என்னோட, 'டவுட்!'


---


பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி: மத்திய அரசு, 2014ம் ஆண்டு தேர்தலில், மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கி விட்டது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, மக்கள் கூடுதலாக, இன்னும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும்.


டவுட் தனபாலு: ஐந்தாண்டுகளில் அனைத்தையும் மாற்றிக் காட்டுவோம்னு சொல்லித்தானே, 2014 லோக்சபா தேர்தலைச் சந்திச்சீங்க... இப்போ, நீங்க சொல்வதைப் பார்த்தால், 'நான்காண்டு கால ஆட்சியில், மத்திய அரசு, என்ன சாதித்தது'ங்கற, எதிர்க்கட்சிகளின், 'டவுட்' வலுவாகிடாதா...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement