Advertisement

சோழகனூரில் கிரிக்கெட் போட்டி விழுப்புரம் அணிக்கு முதலிடம்

விழுப்புரம்:சோழகனுாரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற விழுப்புரம் அணி முதலிடம் பிடித்தது.
விழுப்புரம் அடுத்த சோழகனுாரில், சோழா மற்றும் கருணா கிரிக்கெட் கிளப் இணைந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 16 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், முதல் பரிசை விழுப்புரம் சேலஞ்சர்ஸ் அணி வென்றது. இரண்டாம் பரிசு சோழகனுார் அணியும், மூன்றாம் பரிசு எடப்பாளையம் அணியும் பெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற விழுப்புரம் அணிக்கு, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மற்றும் வழக்கறிஞர் செந்தில் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
அதே போல், சோழகனுார் அணிக்கு 5
ஆயிரம் ரூபாயும், எடப்பாளையம் அணிக்கு 3 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியராஜ், வழக்கறிஞர் காளிதாஸ், நிர்வாகிகள் மோகன், ரஜினிபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டி ஏற்பாடுகளை, சிகாமணி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement