Advertisement

கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் மீது வழக்கு

புதுச்சேரி:லாஸ்பேட்டையில் இடத்திற்கு உரிமை கொண்டாடியபோது, ஏற்பட்ட தகராறில் தாக்கிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை ராமன் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். ஜூஸ் கடை நடத்தும் இடம், கொசப்பாளையம் லெனின் நகரைச் சேர்ந்த மரியாள் ஜெரால்டு என்பவருக்கு சொந்தம் என கூறி, கடந்த மார்ச் 12ம் தேதி கடைக்கு வந்த மரியாள் மற்றும் ஆபிரகான் ஆகியோர், கடையை காலி செய்ய கூறியுள்ளனர்.
இதனால், ராமமூர்த்திக்கும், மரியாள் ஜெரால்டுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ராமமூர்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.இது குறித்து ராமமூர்த்தியின் மனைவி, வழக்கு பதிவு செய்ய கோரி,நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, லாஸ்பேட்டை போலீசார் மரியாள், ஆப்ரகான் மீதுவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement