Advertisement

சிட்டி க்ரைம் செய்திகள்

பணம் தர மறுத்தவருக்கு கத்திகுத்து
தேவகோட்டையை சேர்ந்த செந்தில்,33,என்பவர், கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சுங்கம் பைபாஸ் ரோடு சந்திப்பில், செந்தில் நின்று கொண்டிருந்த போது, செட்டிப்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்த மணி,37 வழிமறித்து, மது குடிக்க பணம் கேட்டார். செந்தில் கொடுக்க மறுத்ததால், அவரது வயிற்றில் கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த செந்திலுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மொபைல் போனை பறித்த இருவர் கைது
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, அட்டபெட்டுவை சேர்ந்த ஈஸ்வரன்,43, கோவைக்கு வியாபார விஷயமாக வந்திருந்தார். காந்திபுரம், டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகில் நின்று மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இரு ஆசாமிகள், மொபைல் போனை தட்டி விட்டு, பறித்து சென்றனர். ரோந்து பணியிலிருந்த காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, தப்பி ஓடிய இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த ஷாகில்,21, அனோஜ்,20, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தாய், மகன் திடீர் மாயம்
கோவை, காந்திமாநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு, குணவதி, 35, என்ற மனைவியும், சுதர்சன் ,13, என்ற மகனும் உள்ளனர். கடந்த17ம் தேதி, திருப்பூர், பெருமாநல்லுாரில் வசிக்கும் பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு, மகனுடன் வெளியே சென்ற குணவதி வீடு திரும்பவில்லை. இது குறித்து, குணவதியின் தாயார் தாரேஸ்வரி அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement