Advertisement

கிரைம் செய்திகள்

வாலிபர் தற்கொலை
கச்சிராயபளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன்,25. இவர் கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில் வெங்கடேசனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டிலேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கச்சிராயபாளையம் போலீசார் வெங்கடேசனின் உடலை மீட்டு, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
முதியவர் தற்கொலை
விழுப்புரம் அடுத்த வடவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம், 62; இவர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 20ம் தேதி ஏற்பட்ட வலியால், மனமுடைந்த சந்தானம் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெண் துாக்குபோட்டு தற்கொலை
திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகள் மஞ்சு‚ 22; வயிற்றுவலியால் நீண்ட நாட்களாக அவதிபட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு‚ வீட்டின் பின்புறம் உள்ள பூவரச மரத்தில்‚ துாக்குப்போட்டுக் கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை, பரிசோதித்த டாக்டர்கள், மஞ்சு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மஞ்சுவின் அண்ணன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார்
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்
றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement