Advertisement

குடியை கெடுக்கும் குடி: இன்று சர்வதேச போதைப்பொருள் பயன், கடத்தல் தடுப்பு நாள்

ன்று போதைக்கு அடிமையாகாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. போதையால் உலகமே தள்ளாடும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. சர்வதேச அளவில் போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் பயன், சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. சிறுவர்கள், இளைஞர்கள் மீது
கவனம் செலுத்தி அவர்களது உடல்நலம், பாதுகாப்புக்கு உதவ வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.


போதைப்பொருள் விற்பனை

உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை ஒழிக்க, சட்டங்கள்மூலம் உலக நாடுகள் முயற்சிகள் எடுக்கின்றன. ஆனாலும் இது அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது. 'போதை' சமூகத்தை அழிக்கும் ஒரு 'அரக்கன்'. போதைப்பொருளால், அவர் மட்டு
மின்றி, அவரது குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பாதிக்கிறது. இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடி.வல்லரசு ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் நம் நாடு பயணித்து கொண்டுள்ளது. இன்று பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் கூட தலைமுறைகளை பாதிப்பதில் தலையாய பிரச்னையாக இருப்பதும், மனித சமுதாயத்தையும், ஆற்றலையும் அழித்து கொண்டிருப்பதும் மது போதை பழக்கம் ஆகும்.முன்னோர் காலத்தில் கஞ்சா, சாராயம் என்ற வார்த்தைகளை மக்கள் உச்சரிக்கவே கூச்சப்பட்ட நிலையில் இன்று வீடுகளில் ஒரு குடியாளி உருவாகும் நிலை உருவாகி வருவது அவமானம் மட்டுமல்ல. அபாய
மானதும் கூட. தமிழகத்தில் மட்டும் 60 சதவீத குடும்பங்களில் ஒருவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. சில குடும்பங்களில் மதுவிற்கு அடிமையானவர்களை பற்றி வெளியில் கூற அச்சப்பட்டு, மனம் புழுங்கி அழுது, அறியாமை காரணமாக இதுவும் ஒரு நோய் என தெரியாமல் மருத்துவம் பார்க்க மறந்து மாய்ந்து போக காரணமாகவுள்ளனர்.
மன நோயாளியாகும் அவலம்

நம் அன்பானவர்களின் நிலை தடுமாறி ஆயுள், உடமை, கவுரவம், உறவுகளை இழக்கும் போது நிலைதடுமாறி நிற்கிறோம். தனி மனித தடுமாற்றம் மட்டும் அல்லது தனி மனித மனமாற்றம், கலசார ஒழுக்க சீரழிவுகள், உடலின் உள்உறுப்புகள் அதிக பட்ச பாதிப்புகள் இந்த போதை மற்றும் குடியினால் ஏற்படுகிறது. மாத்திரை, ஊசி, கஞ்சா, மது உட்பட சில விஷயங்கள் மூலம் போதை மனிதனை அடிமையாக்குகிறது. இதனால் அடிமைப்பட்ட மனிதனோ தன் நிலை மாறி, குடும்பம், சமூகம், நாடு இவற்றை துறந்து, தனித்து மனநோயாளிகளாகி மாண்டும் போகிறான். இதற்கு தீர்வு இல்லையா என கேள்வி அவ்வப்போது எழுகின்றன.ஜாதகம் பார்த்தல், யாகம், மாந்த்ரீகம், வழிபாடு, போலி டாக்டர்களால் இவற்றை மாற்ற முடியாது. மேலை நாகரிகத்தில் உழன்று கொண்டிருக்கும் இச்சமூகம் நுாற்றாண்டுகளாக இத்தவறை செய்து கொண்டிருக்கிறது.தமிழகத்தில் 1960 வரை நம் தலைவர்கள் மதுவை ஆதரிக்கவில்லை. ஆனால் அரசியல் லாப நோக்கத்திற்காக இன்று மதுக்கடைகள் திறந்து விடப்பட்டுள்ளன.இதை உணர்ந்து தான் இந்தியாவிலுள்ள சில மாநிலங்கள் மதுக்கடைகளை புறக்கணித்து குடியிலிருந்து இந்திய குடிமகன்களை காப்பாற்ற மது விலக்கு கொண்டு வந்துள்ளனர்.தமிழகத்தில் பாதிப்பு

புதுச்சேரி, கோவா போன்ற மாநிலங்களில் மதுசந்தைகளால் மக்கள் வசீகரிக்கப்பட்டாலும் கூட தமிழகத்தில் மது பழக்கம் ஏற்படுத்திய பாதிப்பை போல அங்கு ஏற்படுத்தவில்லை. தெருவிற்கு தெரு அரசே மதுக்கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டுஉள்ளது வெளி மாநிலங்களில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.மதுக்கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவாக
இருந்தாலும்கூட குடிப்பழக்கத்திற்கு ஆளாகாமல் குழந்தைகளை பார்த்து கொள்வது குடும்பத்தினரின் கடமை. சமூகமும் அதற்கு துணையாக இருக்க வேண்டும். குடிப்பவர்களை அதிலிருந்து படிப்படியாக மீட்க வேண்டும். குடிப்பவர்கள் எல்லோரும் குடிநோயாளிகள் அல்ல. ஆனால் மதுஅருந்தினால் உடலிலும்,மனதிலும் பாதிப்பு ஏற்படுவது உறுதி. தொடர்ந்து குடிப்பவர்கள்,குடித்து உடல், மனம், சமூகம் பொருளாதாரத்தை இழப்பவர்களே குடி நோயாளிகள். தன் வாழ்வு தடுமாறி எல்லாவற்றையும் உடல், மானம், உறவு, கவுரவம் இழந்த பிறகும் குடிப்பதோ அல்லது வேறு போதை வஸ்துகளை பயன்படுத்துவதோ ஒரு வகை மனநோய் ஆகும்.மறுவாழ்வு

குடிநோயாளிகள் சாலையில் எதிர்பாராதவிதமாக விபத்தில் உள்ளம் தடுமாறி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களை போன்றவர்களே. அவர்களுக்கு முதலுதவி செய்து செம்மைப்படுத்தி வாழ்வு தருவது நம் கடமை. குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் தீயவர்களோ, மன நலம் குன்றியவர்களோ,தீண்டத்தகாதவர்களோ அல்ல.சர்வதேச குடிநோய் அறிதல் கோட்பாடுகளின்படி குடிநோயாளிகளை அறிந்து கொள்ளலாம். உணவை தவிர்த்தல், குறை கூறுதல், உணவு அருந்தலில் கால மாற்றம், இயல்பான நடவடிக்கையில் மாற்றம் மற்றும் முரட்டுத்தனம், தீய வார்த்தைகளை பயன்படுத்தல், அடம்பிடித்தல், பிறர் மேல்பழி இடுதல், உடையில் நேர்த்தியின்மை, முடி, நகம் உடலில் சுகாதார குறைபாடு, வயிறு வீக்கம், மஞ்சள் காமாலை, மனைவி மற்றும் குடும்ப பெண்களை
சந்தேகித்தல், தன் தொழில் மற்றும் பிற குடும்ப விஷயங்களை தவிர்த்தல், திருடுதல், பொய், ஏமாற்றுதல், மற்றவர்களுடன் சண்டை, சச்சரவு செய்தல், முற்போக்கு மனிதரை போல பேசுதல், ஆதீத பக்தி அல்லது புதிய நியாயங்களை கூறுவது போன்றவைகள் மூலம் குடிநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு முறையான சிகிச்சையளிக்க வேண்டும். போதையில்லா உலகம் படைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.-கே.எம்.ரமேஷ் கிருஷ்ண குமார்
போதை மறுவாழ்வுமைய நிறுவனர், மதுரை93444 90316
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement