Advertisement

போராட்டங்கள் வழியல்ல, வலி!

'தினமலர்' தவிர்த்து பிற தினசரிகளை பார்த்தாலே, மனம் வேதனைப்படுகிறது. எவ்வித நல்ல எண்ணமும் இல்லாமல், சாதாரண போராட்ட செய்திகளை, ஊதி பெரிதாக்கும், சில நாளிதழ்களின் பொறுப்பாளர்களுக்கு, உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சி பற்றி கொஞ்சமேனும் பொறுப்பு இருக்கிறதா என, எண்ணத் தோன்றுகிறது.


கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வர், 'உண்மை, காலில் செருப்பை மாட்டிக் கொள்ளும் நேரத்தில், பொய், ஊரைச் சுற்றி வந்து விடும்' என்று! அதாவது, உண்மையான செய்திகளை விட, வதந்திகள் தான் மிக விரைவில் பரவி விடும் என்பதை, நம் முன்னோர் அப்போதே சொல்லியுள்ளனர், சொலவடையாக!துாரமான இடங்களில் உள்ளவர்களுக்கு, செய்திகளை உடனடியாக தெரிவிக்க வசதி இல்லாத அந்த காலத்திலேயே, வதந்தி வேகமாக பரவி விடும் என்றால், ஒரு நொடிக்குள் உலகத்தில் உள்ள எந்த மூலைக்கும் தகவல் அனுப்பும் வசதி உள்ள இந்த காலத்தில், வதந்திகளும், பொய் செய்திகளும் எவ்வளவு வேகமாக பரவும் என்பதை கணக்கிடவே முடியாது.ஜெர்மன் நாட்டின் அதிபராக இருந்த ஒருவர், 'அமெரிக்கா பணக்கார நாடாக இருப்பதால், இங்குள்ள சாலைகள் தரமாக இருக்கிறது என, சொல்ல முடியாது. அங்குள்ள சாலைகள் தரமாக இருப்பதால் தான், அமெரிக்கா பணக்கார நாடாக இருக்கிறது' என்றார்.


அந்த அளவுக்கு, நாட்டின் முன்னேற்றத்திற்கு, தரமான சாலை வசதி அவசியம்!சில நுாறு ஆண்டுகளுக்கு முன், மதுரையை ஆண்ட, ராணி மங்கம்மாள் காலத்தில், மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்வது, சவாலான பயணமாக இருந்திருக்கிறது. அதனாலேயே ராணி மங்கம்மாள், சாலைகளில் நிறைய சத்திரங்கள் கட்டினார். அவர் மறைந்து, முன்னுாறு ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும், அவரால் போடப்பட்ட சாலைகளும், சத்திரங்களும், இன்றும் அவர் பெயரை சொல்லிக் கொண்டு இருக்கின்றன.சிறுமியாக நான் இருந்த போது, எங்கள் ஊரில் ஒரே ஒருவர் தான், மோட்டார் பைக் வைத்திருந்தார். 'பைக்காரர் வீடு' என்றால், சின்னப்பிள்ளைக் கூட அவர் வீட்டை அடையாளம் காட்டி விடும். இன்று, வீட்டில் உள்ள நபர்களை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதற்கேற்ற சாலைகள் இன்னமும் இல்லை.


பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், வாஜ்பாய் ஆட்சி காலத்தில் போடப்பட்ட, தங்க நாற்கரச் சாலையின் அருமை, இப்போது தான் நமக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது; எந்த ஊருக்கும் எளிதாக, வேகமாக போக முடிகிறது; விவசாயப் பொருட்கள், கெட்டுப் போவதற்கு முன், பறித்த உடன் விற்பனைக்கு கொண்டு செல்ல முடிகிறது; விபத்தில் அடிபட்டவரை உரிய நேரத்தில், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முடிகிறது.'ஜப்பானைப் பார்த்தாயா... சிங்கப்பூரைப் பார்த்தாயா... அமெரிக்காவைப் பார்த்தாயா... அங்குள்ள ரோடு எப்படி இருக்கிறது தெரியுமா...' என, வாய் கிழிய பேசுபவர்கள், அந்த சாலை வரும் முன், அந்த இடங்கள் பசுமையாக தான் இருந்திருக்கும் என்பதை, சுலபமாக மறந்து விடுகின்றனர்.எந்த ஒரு திட்டமும், யாரேனும் சிலருக்கு பாதகமாக தான் இருக்கும். மேட்டூர், பவானி சாகர், வைகை அணை என, பல அணைகளைக் கட்டிய போது, யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாமல் கட்டியிருக்க முடியாது. நிறைய வீடுகள் அல்லது நிறைய கிராமங்கள் அணைக்குள் மூழ்க தான் செய்தன.ஆங்கிலேயர், முதல் முதலில், ரயில் விட்ட போது, அப்போதைய மக்கள், 'ரயில் ஓடும் சத்தத்தில், கோழிகள் முட்டை போடுவதில்லை; பசுக்கள் பால் கறப்பதில்லை; ரயில் ஓடும் அதிர்வில் பயமாயிருக்கிறது' என்றனர்; எதிர்ப்பு தெரிவித்தனர்.இப்போது, ரயில் இல்லை என, கற்பனை செய்து பாருங்கள்; எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது!ரைஸ் மில் அறிமுகமான போது, கையால் அரிசி குத்தியவர்களும் - ஆட்டோ, டாக்ஸி வந்த போது, குதிரை வண்டி ஓட்டியவர்களும் - தங்கள் பிழைப்பு போய் விட்டது; வாழ வழியில்லை என, எதிர்ப்பு காட்ட தான் செய்தனர். கம்ப்யூட்டர் வந்த போது கூட, நிறைய பேர் வேலை போய் விடும் என்றனர்; அலுவலகங்களில் கணிப்பொறி வாங்குவதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்தனர்.இன்று, அரசு திட்டங்களுக்கு எதிராக போராடுவதை, கதாநாயகத் தன்மையாக சிலர் நினைக்கின்றனர். ஆனாலும், பின்புலத்தில் அவர்கள், கண்ணுக்கு தெரியாத ஒரு மாய வலையின் மூலம் இணைக்கப்பட்டிருப்பது புலனாகிறது.
அவர்களின் ஒரே லட்சியம், தமிழகத்தின் அமைதியை குலைத்து, மக்களிடையே குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதாக மட்டுமே உள்ளது.சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலை தேவையா, இல்லையா என்றால், எதிர் வரும் காலத்துக்கு அது அவசியத் தேவை என்பதில், யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனாலும் அவர்கள் எதிர்ப்பது, சாலை வருவதை அல்ல; சாலையை கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளையும், நாட்டின் வளர்ச்சியையும் எதிர்த்தே!போராட்டக்காரர்களையும், அதை துாண்டி விடும், 'போர்வையாளர்'களுக்கும் நான் சில கேள்விகள் வைக்கிறேன்.மதுரைக்கு நீங்கள் போனதே இல்லையா... அப்படிப் போயிருந்தால், மேலுார் தாண்டியவுடன், கத்தியால் கேக் வெட்டுவதைப் போல, எத்தனை மலைகளை அறுத்து, சிதைத்து, இருந்த சுவடு இல்லாமல் மாற்றிவிட்டனர், கிரானைட் நிறுவன அதிபர்கள். அதை பார்த்துள்ளீர்களா?பசுமை வழிச்சாலைக்காக வயல்களை அழிக்கின்றனர் என, இன்று கூப்பாடு போடுபவர்களின் ஊரில் உள்ள வயல்கள், குளம், குட்டை, ஏரிகளை அழித்து, 'பிளாட்' போடும் போது, நீங்கள் எங்கே சென்றீர்கள்?ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற ஊர்களில் உள்ள தொழிற்சாலை கழிவுகளால், அங்குள்ள விவசாய நிலம் பாழடைந்து கிடக்கிறதே... அதற்காக நீங்கள் ஏன் போராடவில்லை? ஆற்றில் உள்ள மணலை எல்லாம் எடுத்து, ஆற்றின் ஊற்றுக்கண்ணை வற்றச் செய்து, ஆற்றை மலடாக்கி விட்டனரே அதை எதிர்த்து ஏன் போராடவில்லை?ஏனென்றால், அதனால் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. உங்களின் போராட்டம், மக்களுக்கானது அல்ல; சுய ஆதாயத்திற்கானது. அதனால் தான், பொதுமக்கள் நலன் என்ற போர்வையில், தேவையற்ற போராட்டங்களை நடத்துகிறீர்கள்.இயற்கைக்கு எப்போதும் ஒரு சக்தி உண்டு. தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் வல்லமை, அதற்கு உண்டு. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது, போரில் நிறைய ஆண்கள் இறந்து விட்டனர்.அந்த காலகட்டத்தில், பெண்களுக்கு பிறந்த குழந்தைகளில், ஆண் குழந்தைகள் தான் அதிக எண்ணிக்கையில் இருந்தனவாம். அது தான், இயற்கையின் சக்தி.மேலும், இயற்கையோடு இணைந்திருக்கும் அறிவியலின் சக்தியும் அற்புதமானது. வயல் காடுகள் சாலைகளாகவும், மனைகளாகவும் மாறுவதற்கு முன், முப்பது கோடி முகமுள்ளவளாக இந்திய தாய் இருந்தாள். அப்போது, தமிழகத்தில், ராமநாதபுரம் போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்பட்ட பஞ்சத்தால், மக்கள் சாப்பாடு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர்.அப்போதைய மக்களின் படங்களைப் பார்த்தால், எலும்புக்கு ஆடை உடுத்தியது போல இருப்பர். பசியின் கொடுமையை தாங்க முடியாத மக்கள், இலங்கைக்கும், பர்மாவுக்கும், கூலிகளாய் போனதை பற்றி, வரலாற்றில் படிக்கும் போது, நம் கண்கள், நம்மையும் அறியாமல், நிச்சயம்
கண்ணீர் சிந்தும்.இன்று, விளைநிலங்கள் மனைகளாகவும், சாலைகளாகவும் மாறி, இந்தியாவின் மக்கள் தொகை, 125 கோடியை தாண்டினாலும், உணவுப் பஞ்சம் இல்லை; அத்தியாவசியப் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை. எனவே, சாலைகள் போடுவதால், நாட்டில் அரிசி பஞ்சம் வந்து விடாது. மாறாக, பல நல்ல மாற்றங்கள் நிகழும்.சிறு வயதில் படித்த, ஆடு - ஓநாய் கதை, அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். இரண்டு ஆடுகளுக்கு இடையே சண்டை மூட்டி விட்டு, அவை சண்டை போடும் போது, ஒன்றை ஒன்று முட்டி, ரத்தம் சிந்தும் போது, அந்த ரத்தத்தை குடிக்க காத்திருக்கும் ஓநாய் போல, அமைதியாக இருக்கும் தமிழகத்தின் அமைதியை குலைக்க, சில அரசியல் சக்திகளும், அந்திய சக்திகளும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன.தினமும், புதுப்புது போராட்டத்தை அறிவிக்கும் யாரும், மக்கள் மீது அக்கறையால், போராட்டத்தை அறிவிக்கவில்லை. அவர்கள் அறிவிக்கும் போராட்டத்தின் விளைவாக, தமிழகத்தில் புதிதாக யாரும் தொழில் தொடங்க வரக் கூடாது என்பது தான், அவர்கள் திட்டம்.ஏற்கனவே, இயங்கிக் கொண்டிருந்த ஐம்பதாயிரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இதை தான் போராட்டம் நடத்துபவர்கள் என்ற பெயரில் உள்ள சமூக விரோத சக்திகள், ஓநாயைப் போல, எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.வேலையில்லாமல் வறுமையில் மக்கள் இருக்கும் போது தான், அவர்களது கையில் ஆயுதங்களை கொடுத்து, தீவிரவாதத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை அறிந்து, அதற்காக அப்பாவி மக்களை மூளை சலவை செய்து, அரசுக்கு எதிராக, ஏதாவது ஒரு விதத்தில் போராட செய்த வண்ணம் உள்ளனர்.
நாளைய இந்தியாவாக இருக்கப் போகும், இன்றைய இளைஞர்களே... இத்தகைய போராட்டக்காரர்களின் சதி வலையில் வீழ்ந்து விடாதீர்கள். 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் நம்பி, சதிகாரர்களின் பகடை காயாய் மாறி, வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.தங்களின் சுய நலத்திற்காகவும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் சில விஷமிகளால் துாண்டி விடப்படும் போராட்டங்கள், நம் வாழ்விற்கு நல்ல வழியைக் காட்டக் கூடியவை அல்ல; நம்மை இம்சைக்கு உள்ளாக்கும் வலியைக் கொடுக்கக்கூடியவை.அதற்காக கண்ணை மூடிக்கொண்டு, அரசின் அனைத்து திட்டங்களையும், சட்டங்களையும் ஏற்க வேண்டும் என, சொல்லவில்லை. தீர ஆலோசித்து, தீர்க்கமாக சிந்தித்து, தனி நபர், தனி சமூகம் போன்றவற்றை விட, ஒட்டுமொத்த நாட்டின் நலன், எதிர்கால சந்ததியின் வளம் போன்றவற்றை கருத வேண்டும்.அவற்றிற்கு எதிராக செயல்படும் போர்வையாளர்கள், போராட்டக்காரர்களின் சதி வலையில் வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான, சாலை திட்டங்களை ஆதரிப்போம். எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டங்களை, அந்த பகுதி விவசாயிகளே, மூட்டை கட்டத் துவங்கி விட்டனர்; அவர்கள் வழியை நாமும் பின்பற்றுவோம்!


எஸ். வாகை செல்வி

சமூக ஆர்வலர்

இ - மெயில்: vagaiselvigmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (133)

 • Muthu - Tuticorin,இந்தியா

  உங்களுடைய தலைசிறந்த கருத்துக்கு நன்றி.

 • Muthu Kumar - Tiruchirappalli,இந்தியா

  அருமையான கட்டுரை சகோதரி எஸ். வாகை செல்வி வாழ்த்துக்கள்.

 • S.C.NATHAN - KANYAKUMARI,இந்தியா

  வணக்கம் . அருமையான விளக்கம். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல காரணங்களால் விவசாய நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. சில நூறு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் மாலிக் கஃயூர் எனும் ஊடுருவல் மன்னன் தொடங்கி வைத்தது. அப்போதைய சூழ்நிலையில் ஆயிரம் விவசாய குடும்பங்கள் தெற்கு நோக்கி வந்து குமாரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் வாங்கி ,உழுது, பெரும் பொருள் ஈட்டி ,ஊருக்கும் நன்மை செய்து ,புது விவசாய உத்திகளை குமாரி மாவட்டத்து விவசாயீகளுக்கு சொல்லி கொடுத்து ,அரசாங்கமே ,பாண்டி நாட்டிலிருந்து வந்த விவசாயீகளின் ஆலோசனை கேட்டு விவசாயம் செய்ய ஊக்குவித்து உள்ளது.அதை போல ,நிலங்களை கொடுக்கும் விவசாயீகள்,மற்ற மாவட்டங்களில் சென்று,அருமையாக விவசாயம் செய்யலாம் ,அதற்கு அரசாங்கம் அணைத்து உதவிகளும் செய்ய வேண்டும். உழவன் அழுதால்,அந்த நாடு அழிவின் விளிம்பில் உள்ளதாக பொருள்.ஆகவே மாற்று வழியை மக்களும் ,அரசாங்கமும் இணைந்து உருவாக்க வேண்டும்.வாழ்க விவசாயீ, வாழ்க ராணுவ வீரர் என்ற படி வாழ்வோம்.வாழ்க வளமுடன்.

 • radhak - chennai,இந்தியா

  நல்ல நேர்மையான விவேகமான கட்டுரை. காசு கொடுத்து மக்களை ஏமாற்றி விடலாம் என்கின்ற கயவர்களுக்கு சரியான பதிலடி. பதவியில் இல்லாத அரசியல் கட்சிகளுக்கும் சிறிய கட்சிகள் தங்களை மக்கள் மத்தியில் கட்டுவதற்கும் இது போன்ற போராட்டங்களில் ஈடு பட்டு நேர்மையற்ற வழியில் மக்களை பகடை காயாக்கி ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள் . தேச துரோக வழக்கில் இவர்களை வழி நடத்துபவர்களை உள்ளே தள்ளினால் இப்போது மன்சூர் அலி கான் கூறுவது போல் நான் நகத்தை வெட்டுவேன் என்று தான் சொன்னேன் என சொல்லுவார்கள்

 • கௌண்டமணி - coimbatore,இந்தியா

  இங்க பல மவராசனுக எதிர்மறையாவே பேசிட்டிக்கு திரியுறானுக. அவனுக நல்லது கெட்டத யோசிச்சு பேசுறாப்புல தெரியலயே? அவனுக நெனப்பு வேறமாதிரில்ல தெரியுது?

 • PremKumar -

  ஒரு பிரச்சனையை தேடி தேடி அலைந்து, அதற்கு போராட்டம் என்ற பெயரிட்டு , தினசரி ஒரு வேலையாகவே தனது கட்சியினருக்கு அளித்து அவர்களை பயன்படுத்தி கொள்ளும் ஸ்டாலினின் தேச சேவையை பாராட்டாமல், வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. நிச்சயம் திரு கருணாநிதி அவர்கள் உள்பட மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த விஷயத்தில் தோற்றவர்களே.

 • Balaji - Bangalore,இந்தியா

  நல்ல கருத்து. மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

 • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

  அனைத்து போராட்டங்களும் தங்களை பெரிது படுத்தி காட்டவும், அரசியல் ஆதாயம் தேடவும், ஆட்சியை கவிழ்க்கவும், தீயசக்திகள் ஏற்படுத்தக்கூடிய வியூகம்தான். மக்கள் இதனால் நன்மை பெற்றதில்லை.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  வாகைச்செல்வியின் வளமுள்ள கட்டுரை வருங்கால மன்னர்களான மாணவர்கள் கண்டிப்பாகபடிக்கவேண்டும் அற்புதம் வாழ்த்துக்கள்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஜனநாயகம் என்ற பெரும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஏதோ ஒரு சில கூலிகள் தங்கள் தான் மக்கள் நலம் பேணுபவர்கள் என்பது போல பாவனையை காட்டி கொண்டு இருக்கிறார்கள். இந்த போராட்டங்களுக்கு பின்னே கிரிச்சவ இயக்கங்கள் தான் முழுவதும் இயங்குகிறது என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? நக்ஸல்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது சீனி, பாக்கி மற்றும் தமிழக கிருச்சவ கள்ள பாவாடைகள் தான். மட்டுமின்றி வளர்ச்சி திட்டங்களை இந்த வாடிகன் அடிமைகளான கிரிச்சவ கள்ள பாவாடைகள் நேரடியாக எதிர்க்கிறார்கள். அவர்கள் 26000 கோடி ரூபாயில் வரும் குளச்சல் துறைமுகத்தை எதிர்க்கிறார்கள்..1500 கோடி ரூபாய் செலவில் வரும் கண்டைனர் தொழிற்சாலையை எதிர்க்கிறார்கள். இதற்கு பல்வேறு சால்ஜாப் காரணங்கள் சொல்கிறார்கள் . பொருளாதார தன்னிறைவு பெறும் அவர்களின் Zombie கள் பாதிரிகளின் அடிமை என்ற நிலையில் இருந்து விலகி விடுவார்கள், மற்றும் வேலையில்லாத மற்றும் வறுமையில் வாடும் மக்களிடம் தான் பணம் கொடுத்து மதம் மாற்றுவதும் எளிது, மற்றும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கவேண்டும் என்ற வாடிகன் போப்பின், சீனியின், பக்கியின் மற்றும் ஒரு இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத வெளிநாட்டு சக்திகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் திட்டமிடுதலோடு இங்கே போராட்டங்களை தூண்டுகிறார்கள். மோகன் லாசரஸ் என்பவன் தங்க நாற்கர சாலை துவங்கி அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் எதிர்த்து நூற்றுக்கணக்கான Zombie க்கள் கூடும் கூட்டத்தில் முழக்கமிடுகிறான். அதை அரசும் அறிகிறது. ஏன் இது போன்ற தேசதுரோகிகளை என்கவுண்டர் செய்ய கூடாது? தற்போது மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கு மிகவும் தேவையான வளர்ச்சி திட்டங்களுக்கு எதிர்ப்பவர்களை ஒன்றுவிடாமல் ஆகும் உத்தியை முதலில் மாநில மாற்றம் மத்திய வகுக்கவேண்டும். பிறகு தான் திட்டங்களையே ஆரம்பிக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக கூவும் எந்த துரோகியும் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவன் என்ற நிலையை அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டும். அதற்கான தருணம் வந்து விட்டது. தமிழ்நாட்டில் கிருச்சவ பாதிரிகள் ஆட்டத்தை அடக்கி ஒடுக்கி வீரத்தை காட்டும் அரசு தான் இனி வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்க துவக்க முடியும். அவர்களின் ஏஜெண்டுகள் தான் பல்வேறு பெயர்களில் பல்வேறு உருவங்களில் உலவுகிறார்கள். அதை அனைத்தையும் முடிக்கும் ஆட்டத்தை ஹிந்துக்கள் தான் இணைந்து துவங்க வேண்டும். தமிழகம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் பணியில் ஹிந்துக்களின் கையில் பொறுப்பு வந்து இருக்கிறது இதை தவறவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மத பெற்றோர்களின் குழந்தைகளும் நக்ஸல்களாக மாறி தமிழ்நாட்டை குட்டிசுவராக சுடுகாடாக ஆக்குவது உறுதி.

 • Ramachandran Madambakkam - Chennai,இந்தியா

  அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

 • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

  ஒரு முறை பருவ மழை தவறினால் போதும் உடனே விளை நிலங்களை ரியல் எஸ்டேட் காரர்கள் விவசாயிகளை அணுகி அவர்கள் கேட்கும் பணத்தை விட அதிக பணம் கொடுத்து ஊழல் வாதிகளை அணுகி ப்ளாட் போட்டு விற்று விடுகின்றனர். இதனை காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளில் நான் கண் கூடாகக் கண்டுள்ளேன். இதே நிலை தான் எல்லா இடத்திலும். ரியல் எஸ்டேட் காரர்கள் விளை நிலத்தை வாங்கி கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் போது இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அரசு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் இந்த விஷக்கிருமிகள் எங்கேதாவது இருந்து வந்துவிடுகிறது. இப்போது பாருங்கள் அரசு இயந்திரம் தன் கடைமையை சரியாக செய்ய ஆரம்பித்தால் வாடிகன் பணத்தில் தமிழகத்தை நாசம் செய்யும் வைகோ சீமான் கூட்டங்கள் தலை எடுக்க முடியாது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டங்களை, அந்த பகுதி விவசாயிகளே, மூட்டை கட்டத் துவங்கி விட்டனர் அவர்கள் வழியை நாமும் பின்பற்றுவோம்..யார் கதை வசனம்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அரசியல்வாதிகள் போராட்டங்கள் சாதனை படைக்க வழி என்று நினைக்கின்றனர்... ஆனால் மக்களுக்கு வேதனையாக படுகிறது...

 • SathyanarayananSathyasekaren -

  I Tiruchy the lands which gives golden crops, by the Rettai vaikal area,, is now full of houses, when you travel from Kulithalai, from Jeeyapuram lands become houses. no one cried to lose of agriculture land.

 • K.Palanivelu - Toronto,கனடா

  மிகவும் அற்புதம்.

 • bal - chennai,இந்தியா

  போராட்டங்கள் அந்த காலத்தில் தேவையாக இருந்தது..ஏனென்றால் அடக்கு முறை ஆட்சியும் எமெர்ஜென்சியும் இருந்தது..மற்றபடி அனைத்து போராட்டங்களும் தங்களை பெரிது படுத்தி காட்டவும், அரசியல் ஆதாயம் தேடவும், ஆட்சியை கவிழ்க்கவும் ஏற்படுத்தக்கூடிய வியூகம்தான். மக்கள் இதனால் பயனுற்றதாக இருந்ததே இல்லை.

 • suresh - chennai,இந்தியா

  வலியில் இருந்து விடுபட..... வழி தேடுவது தான் போராட்டம்,,,போராட்டம் தீவிரவாதம் என்றால்,.....மனிதன் போராடிய பெற்ற மனிதன் என்ற பரிணாம வளர்ச்சியே தீவிரவாதம் தான்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  காஷ்மீர் சிறுமி கற்பழிப்பில் குற்றவாளிக்கு ஆதரவா தேசிய கொடி வைத்து போராட்டம் நடந்ததே மறந்து விட்டதா ?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  போராட்டம் எல்லாம் ஒன்னு நடக்கலீங்க. இவனுகளா தூண்டி விடுறானுக. அதை முளையிலேயே கிள்ளி எரியாமல் விட்டு விட்டார்கள். இங்க போராடுற அளவுக்கு என்ன குண்டா போடுறாங்க. எல்லாம் வெளிநாட்டு காசு, உள்ளூர் துரோகிகளின் ஆதரவு, அரசாங்கத்தின் இயலாமை இதெல்லாம் சேர்ந்து நாடு கூட்டு செவுறா போவது போல் காட்டுகிறார்கள். ஆனால் அரசாங்கம் சாட்டையை சுழற்றினாள் இவர்களை எல்லாம் களை எடுத்து விடலாம்.

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  நீட் தேர்வு ஜல்லிக்கட்டு ,நெடுவாசல் போராட்டம் ,தூத்துக்குடி படுகொலை போன்றவற்றில் தொடர்ந்து ஆளும் அரசுகளுக்கு சப்போர்ட்டாக மக்களை நக்சல்கள் பயங்கவாதிகள் என தொடர்ந்து கருத்து எழுதிய கூட்டம் இன்றும் இந்த சாலை விஷயத்திலும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை தொடர்ந்து கொட்டுகிறது

 • கைப்புள்ள - nj,இந்தியா

  நீங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க. எங்களுக்கு மோடி மீது தீராத காண்டு. மோடியையும் மோடி அரசாங்கத்தையும் கேவலமாக பேச வேண்டும் என்று அடங்காத கேந்தி. அப்புறம் எங்க எங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்டுமோன்னு ரவுடிகளுக்கு பயம். அதனால நீங்க தங்கத்தை கரைச்சு வாயில ஊத்துனாலும் ஏன் மீது மெதுவா ஊத்துறேன்னு குற்றம் தான் கண்டுபுடிப்போமே தவிர, நியாயங்களை பேச மாட்டோம்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  அரசு எது செய்தாலும் தவற்றை சுட்டிக்காட்டுவது அனைவரின் கடமை, போராடுவது மக்களின் உரிமை, மக்களின் போராட்டங்களினால் எவ்வளவோ நல்ல விஷயங்களும் நடந்துள்ளன, போராட்டங்கள் உருவாவதற்கு ஆட்சியினர் தான் காரணம்

 • முரளி தூத்துக்குடி - ,

  எனக்கு மின்சாரம் வேண்டும் , அதுவும் தடையில்லாமல், ஆனால் என் நிலத்தில் மின் கோபுரங்கள் செல்லக்கூடாது. மின் திட்டக்களும் வேண்டாம். தரமான சாலைகள் வேண்டும். என் நிலத்தில் ரோடு போடக்கூடாது. செல்போன் வேண்டும், செல் டவர் என் நிலத்தில் வேண்டாம். டிவி வேண்டும், தொழிற்சாலைகள் வேண்டாம் - எல்லாம் வேண்டும் ஆனா என் நிலத்தில் எதும் வரக் கூடாது .. தூ-....

 • amalan - thanjavur,டிஜிபௌசி

  It is not really worth for people of Salem or Chennai or in between. Spending 10K crores to reduce 50Km travel distance is a foolish, but there is a huge scam behind that. They wants to export the iron ore to the Adani steel factories in foreign countries. If really they think of developments then they should go for Chennai Bangalore metro cities, which is big business centers. To Salem already many transport facility (train, 2 highways, air) available then why the green corridor, this is satisfy Adani and Jindal. God should punish these idiots. Make use of the existing highway if possible. Do not destroy forests just to reduce road distance by mere 50 km. Green cover is essential.

 • SundararajanGovindarajan -

  இது போன்ற போராட்டங்கள் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்த பொழுது தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் துவக்கப்பட்ட போது எழுந்த எதிர்ப்பு போராட்டம் தான் தற்பொழுது சேலம் முதல் சென்னை வரை பசுமை சாலை திட்டம் வரை நடந்து வருகிறது. இத்தகைய போராட்டம் பாரத்தில் பல பாகங்களில் நடந்துள்ளது. இது போன்ற போராட்டங்களுக்கு வெளி நாட்டு நிதி உதவியுடன்செயல்படும் N.G.O. அமைப்புகளே ஆகும். இதை பல முறை நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த N.G.O. க்கள் தடை செய்யப்பட்ள்ளது‌ உண்மையே..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  2019 இல் காங் ஆட்சி தான்.... இது உறுதி.....அப்போதும் இந்த சமூக ஆர்வலர் போராட்டம் வழியல்ல ...வலி என்று எழுதுவாரா ?. பொறுத்திருந்து பார்க்கலாம்....

 • Raja - Chennai,இந்தியா

  சேது சமுத்திரம் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது தானே? யார் நிலத்தையும் அபகரிக்கவில்லையே? அதை ஏன் எதிர்த்தீர்கள்?

 • INDIAN🇮🇳🇮🇳🇮🇳 -

  அருமையான பதிவு. போராட்டம் செய்ய தூண்டுபவர்களுக்கு சரியான செருப்படி. மக்களை முட்டாளாக்கும் கயவர்களின் முகமூடியை கிழித்து அழகாக அழத்தமாக ஆணித்தரமாக அக்கறையுடன் பதிவு செய்துள்ளார்கள்.

 • Damu,Coimbatore -

  Well researched article. Though it is painful to read a few negative comments it is heartening to read more positive and supporting views. Thank you sister. It really gives good hope.

 • A.Navarajan - Coimbatore ,இந்தியா

  தமிழ் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் நீர் வழி மராமத்திற்கோ , விவசாயத்திற்கான உள் கட்டமைப்பிற்கோ, விளைபொருள் சேமிப்பு, சந்தை மற்றும் ஏற்றுமதிக்கோ எந்த நடவடிக்கையும் எந்த அரசும் எடுக்கவில்லை. யாருமே கேட்காத இந்த சாலை போடும் திட்டத்திற்கு செலவிடும் தொகையை கொண்டு ஒரு ஐந்து ஆண்டுகள் விவசாய முன்னேற்றத்திற்காக செலவிட்டு அதன் பின்னர் ரோடு போட்டால் என்ன ? இப்போது இந்த ரோட்டிற்கு உடனடி அவசியம் என்ன ?

 • s t rajan - chennai,இந்தியா

  உலகில் உள்ள மிகப் பெரிய அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற ஜனநாயக நாடுகளில், மக்களின் போராடும் உரிமையானது சரியான முறையில் பயன்படுத்தப் படுகிறது. எடுத்ததெற்கெல்லாம் கெரோ, வேலை நிறுத்தம், சாலை மறியல் என்று செய்வதில்லை, செய்யவும் முடியாது. அரசியல்வாதிகளும் நம் நாட்டைப் போல் குழப்பம் விளைவித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதோ உயிர்களுக்கு ஆபத்தோ விளைவிப்பதிலலை. அவ்வாறு செயாதால் நீதிமன்றங்கள் தானாகவே முன்வந்து சரியான தண்டனை தீர்ப்புகளும் உடனடியாக வழக்கு கின்றன. அப்படியே தவிர்க்க முடியாத முக்ய காரணங்களுக்கு மறியல் நடந்தால் ஆம்புலன்ஸ், சரக்கு சேவை, ஏன் மக்களின் வாகனங்கள் செல்வதைக் தடுப்பதோ சேதப்படுத்துவதோ கிடையாது. பள்ளிகளில் கல்லூரிகளில் அரசியல் சங்கங்கள் அமைப்பதும் இல்லை. ஏன் நம் நாட்டில் மட்டும் நாம் நமது உரிமைகளை ஒரு வரையறைக்குள் கொண்டுவந்து கவனமாக பயன்படுத்தக் கூடாது ?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  mp யில் வறட்சியால் மழை வேண்டி பிஜேபிமந்திரி இரண்டு தவளைகளுக்கு திருமண விழா நடத்தியுள்ளார் . விவசாய நிலங்கள் காடுகள் மலைகளை அழித்தால் இப்படி தான் ஆகும் . வருடத்திற்கு 300 tmc வந்து கொண்டு இருந்த காவிரி நீர் இப்போ பாதி கூட வராத காரணம் நீபிடிப்பு பகுதியில் மலைகளை சுரண்டி காடுகளை அழித்ததால் தான் . தமிழ் நாட்டையும் ராஜஸ்தான் பாலைவனம் போல ஆகிவிடுவார்கள் .

 • krishnan - Chennai,இந்தியா

  மக்கள் வாழ்கை மிகவும் நெருக்கடியா இருக்கு உரிமைகள் பறிக்க பட்டு தங்களை தானே காப்பாற்றிக்கொள்ள போராடவேண்டியது இருக்கு.

 • உகதி -

  காங்கிரஸின் ஆட்சியால் தான் எத்தனை விவசாய நிலங்களை அழித்தாலும் உணவுப் பஞ்சம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கட்டுரையாளர் தெளிவாக கூறியுள்ளார். எனவே அடுத்த தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வொம்

 • உகதி -

  காங்கிரஸின் ஆட்சியால் தான் எத்தனை விவசாய நிலங்களை அழித்தாலும் உணவுப் பஞ்சம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கட்டுரையாளர் தெளிவாக கூறியுள்ளார். என்வே அடுத்த தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வொம்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  1947-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஜனத்தொகை 30-கோடி, இன்று, சுமார் 130-கோடி, இவ்வளவு மக்களையும், நல்லபடியாக, ஒரு அரசு, வாழ வைக்கனும்னா?, அதற்கு, நம் தேசத்தில் வளர்ச்சிகள், அபிவிருத்திகள், முன்னேற்றங்கள் போன்றவற்றுக்கு திட்டங்கள் நிறைவேற்றனும்தானே?. அப்படி நிறைவேற்றும் போது, சில குடிமக்கள் பாதிக்கப்படுவது இயல்புதானே?. அப்படி பாதிக்கப்பட்டும் மக்களின் மறு வாழ்வுக்கு, அரசுகள் உதவிகள் செய்யுதுதானே?. அப்புறம் ஏனப்பா, இப்படி, எதிர்மறையான கருத்துக்களை போடுகிறீர்கள்?. மக்களை குழப்பி விடுகிறீர்கள்?.

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  போராட்டங்களுக்கு பதில் இந்த கருப்பு கொடி காட்டுபவர்கள் கையில் துடைப்பத்தை பிடித்து சாலைகளை சுத்தம் செய்தால் வரவேற்கலாம். சும்மா வேலை வெட்டியில்லாமல் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு மக்களுக்கு இடையூறு தரும் ஜென்மங்களை என்னவென்று சொல்ல

 • spr - chennai,இந்தியா

  சிறப்பான கருத்துக்களே. ஆயினும் எது மக்களுக்கு நெடுநாள் பலன் தரும் என்று சொல்பவர் தகுதி என்ன? திரு கலாம் கூட அணுசக்தியின் சிறப்பைப் பேசினாலும், ஒரு வார்த்தை இடையில், "அடுத்த தலைமுறைக்காக இந்த தலைமுறை சில தியாகங்களை செய்தாக வேண்டும்" சொன்னதுவே மக்களை "அப்படியானால், நம் வாழ்க்கை பிரச்சினை ஆகுமோ " என சிந்திக்க வைத்தது. கூடங்குளம் எதிர்ப்பு வலுத்தது இப்பொழுது மக்கள் மறந்துவிட்டாலும், அது இன்னமும் முறையாகக் கையாளப்படவில்லையெனில் (நமது அரசு, அதிகாரிகள், நுகர்வோர் விழிப்புணர்வு இல்லா மக்கள் இவர்களால் முறையாக அது கையாளப்படாது என தெரிந்தாலும்) பிரச்சினையே திட்டங்களை அறிவிக்கும் முன்பாகவே அதனால் கிடைக்கும் பலன், உண்டாகும் உண்மையான இழப்பு இது குறித்து அரசு ஏன் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உண்டாக்கவில்லை கைபேசி அல்லது கருத்தடை மக்களால் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணம் மக்கள் அதன் பலனைக் கண்கூடாக கண்டனர் என்பதே

 • கல்யாணராமன் - Chennai,இந்தியா

  கட்டுரை top to bottom பிரமாதம்.

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  உண்மையை உரத்து சொன்னதற்கு நன்றி

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  சகோதரி உங்கள் கருத்து முழுவதும் சரியே. ஆனால் சரியாக சிந்திக்கத் தெரியாத சிலருக்கு, வெளிநாட்டினருக்கு விலைபோன சிலருக்கு, இந்தியா அதிலும் முக்கியமாக தமிழகம் முன்னுக்கு வரக்கூடாது என்று எண்ணும் சிலருக்கு, எங்கே பி ஜெ பி தமிழ் நாட்டுக்குள் வந்துவிட்டால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமோ என்று நினைக்கும் சிலருக்கு, மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பதே தொழிலாக இருக்கிறது. தூத்துக்குடியில் அந்த ஆலைக்கு நிலத்தை கொடுத்தது அந்த கட்சி, அனுமதி பெற்றுத்தந்தது அந்த கட்சி, சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது அந்த கட்சியின் மத்திய அமைச்சர், ஆனால் இன்று அதே கட்சி அதே ஆலையை எதிர்த்து போராடுகிறது. எவ்வளவு கேவலம் பாருங்கள்.

 • Nagarajan S - Chennai,இந்தியா

  சபாஷ் மிக மிக சரியாக, ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளீர்கள் வாகைசெல்வி அவர்களே பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் சமூக நற்பணி

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அப்டியே "எட்டு"ல commission அடிக்க போற state (20%) & central (20%) கும்பலு ரண்ண்ட பத்தியும் எழுதிருக்கலாமே இந்தெ அம்மயார்...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இதென்ன, புதுசு புதுசா சொம்புங்க கெளம்பிகிட்டு இருக்குதுங்க...? தமிழ் நாடு வெளெங்கிடும்...

 • Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா

  நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தடையானவர்கள் அல்லவே தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை யாரேனும் எதிர்க்கிறார்களா? தங்க நாற்கரச்சாலை வந்தபோது யாரும் எதிர்க்கவில்லையே மாறாக மக்களின் வாழ்வில் துயரை ஏற்படுத்தும் அரசின் திட்டங்களையே சாமானிய மக்கள் எதிர்க்கிறார்கள் டெல்ட்டா மாவட்டங்களில் மத்திய அரசால் எடுக்கப்படும் ஓ ஏன் ஜி சி, ஹைட்ரோகார்பன், கெயில் போன்ற ஆயில் திட்டங்களை பல்லாண்டுகளுக்கு முன்பு அனுமதித்த அந்த டெல்ட்டா மாவட்ட மக்களுக்குத்தான் அதன் விபரீதங்கள் தெரியும் காரணம் இன்று இம்மாவட்டத்தில் அநேக இடங்களில் குடிதண்ணீர் மாசுபட்ட நிலை பதினைந்து அடியில் அடிபைப்பில் தண்ணீர் வந்த நிலை மாறி இன்று பல நூறு அடிகள் போர்போட்டாலும் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் அவல நிலைக்கு காரணம் அன்று மக்களை ஆசை வார்த்தைகள் கூறி(ஓ ஏன் ஜி சி வந்தால் உங்கள் ஊர் சிங்கப்பூர் போலாகிவிடும்)மக்களை சம்மதிக்கவைத்து ஆயில் நிறுவனங்கள் எண்ணெய்களை எடுக்கதோண்டியதன் விளைவு அம்மாவட்ட மக்கள்(விவசாயத்தில் அமோகமாக செழித்த மக்கள்) வாழ வழியின்றி வெளியூர்களுக்கு வெளி மாநிலங்களுக்கும் பிழைப்புத்தேடி செல்லும் அவல நிலை, இதே நிலைதான் இதுபோன்ற எட்டு வழிச்சாலையால் விவசாய மக்கள் பாதிக்கவிருக்கின்றனர் என்பதை கட்டுரையாளர் புரிந்தும் அப்பட்டமாக பொய்யை மெய்யாக்கி இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். .

 • Lakshminarayanan Subramanian - Chennai,இந்தியா

  You have very beautifully registered your thoughts My fear is that how many people are going to realise the necessity of good roads and communication facilities L.SUBRAMANIAN

 • Thirumalai Daniel - chennai,இந்தியா

  இவர் சமூக ஆர்வலர் அல்ல ,பண ஆர்வலர் , அவன் டிபன்ஸ் காரிடோர் போட ரோடு போடுறான், விவசாயத்தை அழித்து , சாப்பாட்டை அழித்து சண்டை போட ஆயுதம் செய்ய போகிறான், இதுவா வளரச்சி , இது அழிவு பாதை , " புதியதோர் உலகம் செய்வோம் ,கெட்ட போரிடும் தேசத்தை வேரோடு சாய்ப்போம் " என்று சொன்ன பாரதி பிறந்த மண், இன்று படை ,ஆயுதம் வாங்கும் காசுக்கு , நல்ல குடி நீர் , சாப்பாடு கொடுக்கலாம் , அந்த அறிவில்லா அமெரிக்கா பண்ணுவதை , இந்த புத்தன் , காந்தி பிறந்த ஆன்மீக தேசமும் செய்யவேண்டுமா ?? நம் பாரம்பரியம் இது அல்ல ,

 • vnatarajan - chennai,இந்தியா

  ஒரு விரிவான தீர்க்கமான ஆணித்தரமான கட்டுரை எழுதிய மேடம் வாகைச்செல்விக்கும் அதை வெளியிட்ட தினமலருக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். இந்த கட்டுரை பச்சை மரத்தில் ஆணி அறைந்தாற்போல் போராட்டக்காரர்களின் மூளைக்குள் அறைந்திருக்கும் இந்த எட்டு வழிச்சாலை அங்கு வசிக்கும் கிராமவாசிகளின் வாழ்க்கை தரத்தை கண்டிப்பாக உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை. இரண்டாயிராம் ஆண்டு கடைசியில் பொது துறை வங்கிகளிலும் நிறுவனங்களிலும் இடதுசாரி கட்சிகள் கணினி மயமாக்குவதை தடுத்து ஊழியர்களை பலமுறை வேலை நிறுத்தங்கள் செய்ய தூண்டிவிட்டனர். ஆனால் இன்றோ அவர்கள் கணினி மயமாகியதை மவுனமாக ஆதரிக்கிறார்கள். அங்குள்ள மக்கள் இதை புரிந்துகொண்டால் சரி.

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  தமிழக மக்கள் சரியாக செல்லுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 • Kumar - Chennai,இந்தியா

  இந்த வாகை செல்வி யார், தமிழ்நாட்டில் எந்த பகுதியின் சமூக ஆர்வலராக இருக்கிறார், எப்படிப்பட்ட சமூக நல பணிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துள்ளார் என்கிற விவரங்களையும் தினமலர் பட்டியலிட்டு பதிவிட்டிருந்தால் இவரின் நம்பகத்தன்மை அதிகமாகஇருந்திருக்கும்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  /////...........நாளைய இந்தியாவாக இருக்கப் போகும், இன்றைய இளைஞர்களே... இத்தகைய போராட்டக்காரர்களின் சதி வலையில் வீழ்ந்து விடாதீர்கள். 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் நம்பி, சதிகாரர்களின் பகடை காயாய் மாறி, வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.தங்களின் சுய நலத்திற்காகவும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் சில விஷமிகளால் துாண்டி விடப்படும் போராட்டங்கள், நம் வாழ்விற்கு நல்ல வழியைக் காட்டக் கூடியவை அல்ல நம்மை இம்சைக்கு உள்ளாக்கும் வலியைக் கொடுக்கக்கூடியவை.///// - சத்தியமான வார்த்தைகள் அம்மா.

 • RGOPAL -

  Bold article .Hats off to you.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////......கம்ப்யூட்டர் வந்த போது கூட, நிறைய பேர் வேலை போய் விடும் என்றனர் அலுவலகங்களில் கணிப்பொறி வாங்குவதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்தனர்.......//// - ஆம், அன்றைய காலத்தில், குறிப்பாக, தோழர்களின் சங்கங்கள், அனைத்து அரசு துறைகளின் அலுவலகங்களில், கம்ப்யூட்டர் மயம் ஆவதை, மிக தீவிரமாக எதிர்த்தனர் என்றே கூறலாம்.

 • ravisankar K - chennai,இந்தியா

  இப்போது இருக்கும் சாலைகள் போதாது என்பதால் தான் புதிய சாலைகள் போடுகிறார்கள் . இது expressway . இது போன்ற சாலை தமிழ் நாட்டில் கிடையாது . ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பே வட நாட்டில் இது போன்ற சாலைகள் போட பட்டன .இப்போது இருக்கும் சாலையை விட இந்த சாலையில் எரி பொருள் , நேரம் மிச்சமாகும் . ஆட்டோ , two wheeler போன்ற வண்டிகளுக்கு இந்த சாலையில் இடம் கிடையாது . பொருளாதாரம் வளர பல புதிய சாலைகள் போடுவது தொடரும் . போலிகளின் பிரச்சாரம் எடுபடாது . இதெயெல்லாம் மக்கள் இப்போது உணர தொடங்கிவிட்டார்கள் .

 • PME - CHENNAI,இந்தியா

  தமிழ் நாட்டின் சாபக்கேடுகள் - ஸ்டாலின், திருமாவளவன், சீமான், அமீர், கவுதமன், வேல்முருகன், சுப உதயகுமார்,பாரதிராஜா, கம்யூனிஸ்டிகள், இஸ்லாமிய இயக்கங்கள், சில கிருஸ்துவ அமைப்புகள், காங்கிரஸில் சிலர் இவர்கள் தமிழ் நாட்டை சுடுகாடாக்காமல் விடமாட்டார்கள்.

 • Samaniyan - Chennai ,இந்தியா

  A suggestion to the writer/ Dinamalar. Please s this article to all Tamil TV news channels especially to Puthiya thalaimurai. They should know to what low level they have brought their channels.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, இந்தியாவில், அனைத்து சிஸ்டங்களும் சீர்பட வேண்டும் என்றால், அனைத்து சிஸ்டங்களும் நவீன மயம் ஆக்கப்பட வேண்டும் என்றால்,அனைத்து மாநிலங்களும், அனைத்து விசயங்களிலும் சிறப்பான வளர்ச்சியும், சிறப்பான அபிவிருத்தியும் அடைய வேண்டும் என்றால், பிரதமர் மோடிஜி அவர்கள், மீண்டும் பிரதமராக வரும் வகையில், அனைத்து இந்தியர்களும், பிரதமர் மோடிஜிக்கு ஓட்டளித்து ஆதரிக்கனுங்க. இந்தியர்களே, செய்வீர்களா, செய்வீர்களா, செய்வீர்களா(ஓட்டு போடுதல்).

 • ரபாலாஜி -

  அப்ப 1975 நடத்திய emergency எதிர்த்து ஏன் போராடினீர்கள் சும்மா time pass அதுவும் தேச நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுத்தானே விட்டுவிட்டு போகவேண்டியுதானே

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////nanthuji,thailand - 24-ஜூன்-2018 13:49 மிக ஆழமான கருத்துக்கள்.. உண்மையான விளக்கம்.. அரசியல் ஓநாய்களை நம்பும், மூடர் கூட்டம் உள்ளவரை , அவர்கள் உணரும் வரை தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.. எந்த மாநிலத்திலும் இத்தனை அரசியல் கட்சிகள் இல்லை.. அரசியல் வியாதிகள் இங்கு அதிகரிக்க , மக்களில் ஒருபகுதியினர் காரணம்..//// - ஐயா, வெளிநாட்டு நன்கொடைகள் பெறும், அன்னிய தேசங்களின் கைக்கூலிகளும், இங்குள்ள கறுப்பண கம்பெனிகள் நடத்தும் பேர்வழிகளும், குறிப்பாக, தமிழகத்தின் முன்னேற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் தடுத்து, தங்கள் மதத்தின் வளர்ச்சியை, வெகு வேகமாக பரவ செய்யும் வேலையிலே, இந்த பாஜகவினர்கள், மத்திய அரசு ஆட்சி அதிகாரத்துக்கு வந்துட்டு, தடையாக தங்களுக்கு இருக்கிறார்களே என்று, தமிழகத்தில், எல்லா திட்டங்களையும், பொதுமக்கள் எதிர்க்கும் வகையிலும், எதிர்த்து போராட்டங்கள் செய்யும் வகையிலும், தமிழக அப்பாவி மக்களை, மூளை சலவை செய்து, சிறிது பணமும் கொடுத்து, அவர்களின் மனங்களை மாற்றி விடுகிறார்கள் என்ற சந்தேகம் வருதுதானே?, கடந்த கால செய்திகளின்படி.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  /////......கண்ணை மூடிக்கொண்டு, அரசின் அனைத்து திட்டங்களையும், சட்டங்களையும் ஏற்க வேண்டும் என, சொல்லவில்லை. தீர ஆலோசித்து, தீர்க்கமாக சிந்தித்து, தனி நபர், தனி சமூகம் போன்றவற்றை விட, ஒட்டுமொத்த நாட்டின் நலன், எதிர்கால சந்ததியின் வளம் போன்றவற்றை கருத வேண்டும்.அவற்றிற்கு எதிராக செயல்படும் போர்வையாளர்கள், போராட்டக்காரர்களின் சதி வலையில் வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான, சாலை திட்டங்களை ஆதரிப்போம். எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டங்களை, அந்த பகுதி விவசாயிகளே, மூட்டை கட்டத் துவங்கி விட்டனர் அவர்கள் வழியை நாமும் பின்பற்றுவோம் எஸ். வாகை செல்வி சமூக ஆர்வலர்.///// - அடேகப்பா, சூப்பரா சொன்னீங்கம்மா.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////.....எங்கள் ஊரில் ஒரே ஒருவர் தான், மோட்டார் பைக் வைத்திருந்தார். 'பைக்காரர் வீடு' என்றால், சின்னப்பிள்ளைக் கூட அவர் வீட்டை அடையாளம் காட்டி விடும். இன்று, வீட்டில் உள்ள நபர்களை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதற்கேற்ற சாலைகள் இன்னமும் இல்லை.......//// - இன்றைய காலத்துக்கேற்ற, சாலை வசதிகளுக்கான தேவையை, மிக அழகாக கூறிட்டீங்க, கட்டுரையாளரே.

 • ரபாலாஜி -

  tasmac கூட மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு தான் ஒத்துக்கொள்வோமா அப்ப இந்த பதிவு போடவில்லை சுதந்திரம் கிடைப்பதற்கு போராடாதவர்கள் இப்ப இது தப்பு என்று தான் தெரியும் பகிரங்க மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு தேச பிதாவை கொன்றுவிட்டு இப்ப நியாயம் பேசக்கூடாது

 • ஸ்ரீனிவாசன்,COIMBATORE -

  இவ்வளவு பெரிய கட்டுரை எழுதும் அம்மணிக்கு தமிழ்நாட்டில் நடப்பது மைனாரிட்டி ஆட்சி என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் என்றும் பாஜகவின் சுய நல அரசியலுக்காக நடக்கும் அரசு என்றும் தெரியாதா..? புதுசா தேர்தல் நடத்தி நியாயமான ஜனநாயக அரசு இருக்கும் போது போராட்டம் என்றால் அது சரி..!!

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  மிக அருமையான அற்புதமான அறிவார்ந்த பதிவு. கோடி பாராட்டுக்கள். உண்மை கசக்கும். மருந்தும் கசக்கும். ஆனால் நல்லது.

 • G Mahalingam - Delhi,இந்தியா

  சிறிய கட்சிகள், தேர்தலில் வெற்றி பெற இயலாத கட்சிகள் கையூட்டு பெற்று அரசியல் வியாபாரம் செய்கிறது. இதற்கு முதலிடு தேவை இல்லை.

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  அருமையான தகவல் சேது சமுத்திரத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டவர்கள் கமீஸின் வாங்க முடியாது என கவலை படுகிறது .

 • raj82 - chennai,இந்தியா

  It's is a well written article good to read keep doing same

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஆதிகாலத்திலிருந்த டுமீளன் டெய்லி வதந்தி ரசிகன். அவனுக்கு சினிமா நடிகை செய்தி விபத்து செய்தி.போதும்.இப்போ போராளி பொய் நியூஸ் டிரெண்டிங் .அவனை கொஞ்சமாவது திருத்த தினமலர் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.

 • veeraraghavan - thiruvarur,இந்தியா

  குழப்பாதீங்க மேடம் ... நானாக பாவம்

 • praveen -

  Really thought provoking article. well written. Thanks to author and dinamalar.

 • Ayappan - chennai,இந்தியா

  நல்ல பதிவு

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  இனி யார் போராடினாலும் சுட்டு தள்ள வேண்டும் அப்போது தான் அரசு மீது அனைவருக்கும் பயம் வரும் அரசை எதிர்த்து போராட எவ்வளவு தைரியம் இருக்கும்

 • Magesh Kumar - Madurai,இந்தியா

  அருமையான கட்டுரை,

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சூப்பர் கட்டுரை. போராளீஸ்க்கு மனசாட்சியென ஒன்று மிச்சமிருந்தால் தன் பகுதியிலுள்ள வீடுகளாகவும் வீட்டடி மனைகளாகவும் மாற்றப்பட்ட விவசாய நிலங்களை மீட்டு பழையபடி மாதுவைத்து ஏர்பூட்டி உழட்டுமே.மலைகளை உடைத்துப் போடப்படும் சாலைகள் வேண்டாம். ஒத்தயடிப்பாதையேபோதும் மலை ஜல்லிக்கல்போட்டு கட்டப்படும் கான்கிரீட்டே வேண்டாம்.மண்குடிசைபோதுமென போராடட்டும். சாயக் கழிவால் காவிரிக்கு ஆபத்து என்பதால் சாயமற்ற ப்ளீச்கூட செய்யப்படாத கதர் உடைபோதும் என சொல்லட்டும்.புகைமாசுக்குக் காரணமான அனல் மின் நிலையம் வத்சன் மின்சாரம் பெட்ரோல்வாகனங்கள் வேண்டாம் எனச்சொல்லட்டும்.கடைகளை மறியல் செய்து செயற்கை ரசாயன உரங்கள் பூச்சிமருந்து களைக்கொல்லிகள் ஆகியவற்றின் விற்பனையைத்தடுக்கட்டும். எல்லாவற்றையும்விட டாஸ்மாக் மற்றும் பீடி ஆலைகளை மூடவைக்க அங்கு மறியல் செய்யட்டும். இதெல்லாம் செய்யச்சொன்னால் நாட்டில் ஒரு டுமீல் போராளிக்கூட இருக்கமாட்டான். டுமீல்ஸின் பயித்தியகாரப்போக்கை தினமலர் மட்டுமே துணிவுடன் எதிர்க்கிறது.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  அருமையான கருத்து டுமீல் போராளிகள் என்று உணர்வர்களோ தெரியாது . ஆனால் இந்த சாலை வந்தால் முதலில் இவர்களுடைய இன்னோவா கார் தான் ஓடும் அதுவும் சுங்கசாவடிகளில் காசு கொடுக்க மனம் இல்லாமல்

 • Thiyaga Rajan - erode,இந்தியா

  நன்று அம்மணி அருமையான கட்டுரை .நன்றி

 • Natarajan - Hyderabad,இந்தியா

  நன்று மிக நன்று தமிழ்ஸ் சிந்திக்கட்டும்

 • senthil - chennai,இந்தியா

  வாகை செல்வி....என்னதான் நீங்க்க கத்தி கூப்பாடு போட்டாலும் ...செவிடன் காதில ஊதிய சங்குதான்....எதிர்மறையாக கூறவில்லை....யோசிக்கும் அறிவற்ற மக்களிடம் ..என்ன கூறினாலும் பயன் இல்லை .....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அம்மா சமூக ஆர்வலரே, எனது எளிதான கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்... 1 ஏற்கனவே இரண்டு விரைவு சாலைகள் சென்னைக்கும் , சேலத்துக்கும் உள்ளன ...மூன்றாவது சாலை எதுக்கு ? 2 . சாலைகளால் பொருளாதாரம் வளரும் என்றால், ஏற்கனவே இருக்கும் இந்த இரண்டு சாலைகளால் பொருளாதாரம் வளராதது எதற்கு ?... 3 . உங்கள் கருத்து படியே ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், சாலைகள் இந்தியாவில் இப்போது ஏராளம் உள்ளன .MMS இன் 10 வருட காலத்தில் தான் அணைத்து சாலைகளும் போடப்பட்டன.... மோடி அவர்கள் வந்து எந்த வளர்ச்சி பணிகளை கொடுத்தார் ? எத்தனை கோடி இந்திய இளைஞர்களுக்கு வேலை கொடுத்தார் .?.... இந்த 3 கேள்விகளுக்கும் மனசாட்ச்சி படி பதில் சொல்லுங்கள்...அப்புறம் தெரியும் போராட்டம் வலியல்ல...வழி தான் என்று....

 • nanthuji,thailand -

  மிக ஆழமான கருத்துக்கள்.. உண்மையான விளக்கம்.. அரசியல் ஓநாய்களை நம்பும், மூடர் கூட்டம் உள்ளவரை , அவர்கள் உணரும் வரை தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.. எந்த மாநிலத்திலும் இத்தனை அரசியல் கட்சிகள் இல்லை.. அரசியல் வியாதிகள் இங்கு அதிகரிக்க , மக்களில் ஒருபகுதியினர் காரணம்..

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  ///இன்று, அரசு திட்டங்களுக்கு எதிராக போராடுவதை, கதாநாயகத் தன்மையாக சிலர் நினைக்கின்றனர். ஆனாலும், பின்புலத்தில் அவர்கள், கண்ணுக்கு தெரியாத ஒரு மாய வலையின் மூலம இணைக்கப்பட்டிருப்பது புலனாகிறது. /// அந்த மாய வலையின் பின்னணியில் இருப்பவர்கள் பல நூற்றான்டுகள் ஆண்டும் தங்க மதத்தை பரப்ப முடியாமல் முட்டுக்கட்டையாக மோடி அரசு உள்ளதே என்று நினைக்கும் பாவாடைகள். என்னை பொறுத்த வரை சோனியாவே திட்டமிட்டு இந்தியாவுக்குள் வந்தவர் என்றே நினைக்கிறேன்.

 • Senthilkumar S - Chennai,இந்தியா

  அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லாவற்றுக்கும் காரணம் சுயநல மக்களே . இருபது ரூபாய்க்கு வாக்குரிமையை விற்ற அவலத்திலே அவர்களை அறியலாம். கேட்டால் பெரியார் மண் என்பார்கள்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  டூமில்ஸ் இதையெல்லாம் விட பிரமாதமாகவே பொய் கதைகளை அவிழ்த்து விடுவார்கள்.. இல்லை என்றால் இதற்குள் ஓலையை கட்டி விரட்டி அடித்து இருக்கவேண்டும்..

 • Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ரோடு வேண்டும் தான். ஆனால், அதை எங்கு, எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது தான் புத்திசாலித்தனம். அரசியல்வாதிகளின் பகல்கொள்ளைக்கு மக்களை பலிகடா ஆக்குவது அறிவுகெட்ட செயல். எத்தனையோ செயல் திட்டங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது, அதனை எல்லாம் கண்டு கொள்ளாத அரசாங்கம், ஏன் இதற்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது? இதே வேகத்தில் எல்லா திட்டங்களுக்கும் இந்த அரசு செயல்படுமா ?.... அது சந்தேகமே....

 • Jana - Chennai,இந்தியா

  Though its well written you must understand the need of this. As there is already two express ways.. It may save an hour journey time but same can be implemented improving railways 2 ways & high speed rail all the way to chennai linking harbor & Airport. This so called greenways will before thambaram

 • Vn Jayaram - banglore,இந்தியா

  மிக்க நன்றி அம்மா..எனினும் தமிழ்நாட்டிலே நல்லவர்களும் இருக்கிறார்கள் எண்டு சண்டோப்படுகிறேன்

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  சுய பரிசோதனை தேவை... பெரும்பாலான வாசகர்கள் தெளிவாக இருக்காங்க.... புரியுதா????

 • venkatesan - chennai,இந்தியா

  இந்த நல்ல செய்தியை மக்களிடம் உடனே கொண்டு சேர்த்த தினமலருக்கு கோடானு கோடி நன்றிகள்.

 • Manicam - Creteil,பிரான்ஸ்

  Ounmaiyana சேதி pamaramakkalukku purivadu கடினம் இந்த assiriyarku மிக்க நன்றி

 • Samaniyan - Chennai ,இந்தியா

  Very well written. Every true Indian should read this.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement