Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
'அவுரங்காபாத் வயாக்ரா'
தாம்பத்திய உறவை பலப்படுத்த காமசூத்திரா புத்தகத்தில் பட்டியலிடப்பட்ட பொருட்கள், வாசனை உளவியல், நிற அறிவியல், உணவியல், மன்னர்கள் அனுபவத்தால் அறிந்த பொருட்கள் என பல்வேறு கருத்துக்கள் இணைந்து புதுமண தம்பதியருக்காக பான், வட மாநிலங்களில் உருவாக்கப்படுகின்றன. மஹாராஷ்டிரா, அவுரங்காபாத் இந்த வகை பான் வகைகளுக்கு பெயர்பெற்றது. கஸ்துாரி, குங்குமப்பூ, மேற்குவங்கத்தில் மட்டுமே உருவாக்கப்படும் பிரத்யேக வாசனை திரவம் போன்றவை இதில் உள்ளன. இது 'அவுரங்காபாத் வயாக்ரா' என அழைக்கப்படுகிறது.
தகவல் சுரங்கம்
காற்றாடும் பழமொழிகள்

இலங்கைத் தமிழில் காற்றை, 'கச்சான்' என்பர். ஆனி, ஆடிக்காற்று ஆடைகளை விலக்கும். ஆதலால் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 'கச்சான் பெண்களுக்கு மச்சான்' என ஒரு பழமொழி உள்ளது. மழையும், காற்றும் செல்லமாகவும், சீற்றமாகவும் முரண்படும் என்பதால், 'கச்சான் மழைக்கு மச்சான்' என நெல்லைப் பகுதியில் ஒரு பழமொழி உண்டு. காற்றடித்தால் மரம் அசையும்; மலை அசையுமா என்பது கொங்கு பகுதியில் உள்ள பழமொழி. 'காற்றில்லாத போதே காயப்போடு' என்றும் பழமொழி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement