Advertisement

சிரிப்பிற்கும் எனக்கும் ரொம்ப தூரம்

இந்த நகைச்சுவை மன்றத்திற்கு நான் பொருத்தமானவள் கிடையாது ஏன் என்றால் எனக்கும் சிரிப்பிற்கும் வெகுதுாரம் என்றபடி தனது பேச்சை ஆரம்பித்தார் வெண்ணிற ஆடை நிர்மலா

வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு தற்போது எழுபது வயது ஆனாலும் தோற்றத்தில் முதுமையில்லை

சென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தின் சார்பில் கடந்த வாரம் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர் ஒருவர் ஸ்ரீ டிராவல்ஸ் இளந்திரையன், இன்னோருவர் வெண்ணிற ஆடை நிர்மலா.

அரங்கத்தில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் ஜோக் சொல்லலாம்,ஜோக் சொல்ல வந்தவர்கள் பலர் நிர்மலாவின் ரசிகர்களாக இருந்தனர், நாங்கள் நிர்மலா மேடம் ஜோக் சொல்வதை கேட்க வந்துள்ளோம் என்று மறக்காமல் குறி்ப்பிட்டு சென்றனர்.

கடைசியில் நிர்மலாவும் பேச வந்தார்

என்னை வற்புறுத்தி அழைத்த தலைவர் சேகருடன் கோபமாக சண்டை போடத்தான் இங்கு வந்தேன் ஆனால் அவரது நகைச்சுவையான பேச்சும் அணுகுமுறையும் இங்குள்ள மக்கள் தந்த அன்பையும் வரவேற்பையும் பார்த்தபிறகு சண்டை போடவந்த என் மனது சந்தோஷமாக இருக்கிறது.

வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவிற்கு நிகரான பாத்திரம் ஆனாலும் படம் பார்த்த எனக்கு என் நடிப்பு பிடிக்கவில்லை இனிமேல் நடிக்ககூடாது என்று முடிவு செய்துவிட்டு வீட்டில் இருந்தேன் அப்போது மலையாளத்தில் பிரபலமாக இருந்த ஒரு டைரக்டர் நீங்கள் நடிக்கவே வேண்டாம் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் போதும் என்று சொல்லி ஒரு படத்தில் நடிக்கவைத்தார் அந்தப்படம் நன்றாக இருந்தது எனக்கும் என் நடிப்பு பிடித்திருந்தது

அதன்பிறகு ஒரே நேரத்தில் எம்ஜிஆர் சிவாஜி ஆகியோருடன் நடிக்குமளவிற்கு பிசியாக இருந்தேன் எவ்வளவு பிசியாக இருந்தாலும் எனக்கு பிடித்த விஷயம் மெல்லிய இருட்டில் அமர்ந்து சோக பாடல்கள் கேட்பதுதான் அது ஏன் என்று சொல்லத்தெரியவில்லை பழகிப்போய்விட்டது.

நான் என்னுடைய அண்ணன்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன் வளர்ந்தேன் மூத்தவர் ராணுவத்தில் இருந்ததாலும் நிறைய கட்டுப்பாடுகள் இதனாலோ என்னவோ சென்டிமீட்டர் அளவு கூட வாய்திறந்து நான் சிரித்ததில்லை.எனக்கும் சிரிப்பிற்கும் வெகுதுாரம், அதற்காக மகிழ்ச்சியாக இ்ல்லை என்று அர்த்தம் இல்லை எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளும் ஒரு தன்மை அவ்வளவுதான்.

இப்படி சிரிப்பிற்கு சம்பந்தம் இல்லாத என்னை நகைச்சுவை மன்றத்தின் சிறப்பு விருந்தினராக அழைத்ததுதான் இப்போது சிரிப்பை தருகிறது எனக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதில் ஆலாதியான ஈடுபாடு உண்டு நான் என்ன சாதித்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டால் நிறைய ஏழை எளிய குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்து ஆளாக்கிவி்ட்டு இருக்கிறேன் அதுதான் பெரும் மனநிறைவு என்று சொல்லி முடித்தார்.


-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in



Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இன்றுவரை தன தோற்றத்தில் அக்கறைகொண்டு உடலைப்பாதுகாத்துவரும் நட்சத்திரம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement