Load Image
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

   பேச்சு, பேட்டி, அறிக்கை
ADVERTISEMENT
காங்., ஆட்சியின்போது, நாட்டில், பாலும், தேனும் ஆறாய் ஓடியது போல், காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி பேட்டி: சமூக ஏற்றத்தாழ்வுக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்குமான வேறுபாட்டை, பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவை இரண்டும், ஒன்றாகப் பயணிக்க முடியாது என்பது தான் உண்மை. நாட்டில் குறிப்பிட்ட சிலரை பணக்காரர்களாக்கியும், பெரும் பகுதி மக்களை வறுமையில் தள்ளியும், பொருளாதாரம் வளர்ந்து விட்டதாகக் கூறுவது தான், உண்மையான வளர்ச்சியா என்பதை, ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.




தமிழக காங்., - எம்.எல்.ஏ., வசந்தகுமார் பேட்டி: ஏழை இந்து மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி, கடந்த தேர்தலில் வெற்றி பெற்று, பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் ஆனார். ஆனால், இதுவரை உதவித்தொகையை வாங்கி கொடுக்கவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் எனக் கூறி, மோடி வெற்றி பெற்றார். ஆனால், அதுவும் நடக்கவில்லை. அம்பானி, அதானி, நிரவ் போன்றவர்களின் நலன் பேணும் ஆட்சியாக, மோடி அரசு அமைந்துள்ளது.




சில மாதங்களுக்கு முன் வரை, ஆம் ஆத்மி கட்சியுடன் சேர்ந்து செயல்பட்டு, இப்போது, 'கழன்று' கொள்ளும் நிலைப்பாடு எடுத்துள்ள, காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டரில்' கருத்து பதிவு: டில்லி அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நடந்து வரும் மோதல் போக்கால், அங்கு அரசு நிர்வாகம், முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காண வேண்டிய பிரதமர், அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்... மொத்தத்தில், இந்த நாடகத்தில், டில்லி மக்களே பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றனர்.


அரசியலில், 50 ஆண்டு காலமாய் கோலோச்சியும், தமிழகத்தில் காங்கிரசை ஆட்சி பீடத்தில் அமர வைக்க முடியாத, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேச்சு: காங்., கட்சியினர் ஒவ்வொருவரும், கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். கட்சிக்கு அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் தான், கூட்டணி கட்சியினர், காங்கிரசை மதிப்பர்.


சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் கலைவாணி பேட்டி: எச்.ஐ.வி., உள்ளிட்ட பால்வினை நோய்கள் குறித்து, பொதுமக்களிடம் சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, குறைந்து வருகிறது. அதேநேரம், பள்ளி மாணவ - மாணவியர், போதிய விழிப்புணர்வு இல்லாமலும், பின்விளைவுகள் மற்றும் ஆபத்து உணராமலும் இருக்கின்றனர். இதனால், அவர்கள் பால்வினை நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. தற்போதைய நிலையில், கல்லுாரிகளை விட, பள்ளிகளில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement