Advertisement

நான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா

பூரித்த கன்னமும்; புதுப்பொலிவூட்டும் கண்களும்; ததும்பி வழியும் இளமையும்; தகிக்கும் ஏக்கப் பார்வையும் கொண்ட இளமொட்டு ஸ்ரீபிரியா. எத்தனையோ பிரியாக்களில் இளைஞர்களை
ஈர்க்கும் பிரியாவாக சினிமாவில் தலைகாட்டி வருகிறார். தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக அவர் மனம் திறந்தது, இதோ...

* சொந்த ஊர்
நம்ம தமிழ்நாடுதாங்க... புதுக்கோட்டை. பி.காம்., முடிச்சிருக்கேன்.

* சினிமா வாய்ப்பு
அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க. அப்பாவின் நண்பர் ஒருவர் மூலமா வாய்ப்பு கதவை தட்டியது. தவறவிடாமல் வந்துட்டேன்.

* நடித்தவை...
பில்லா பாண்டி, வேட்டை நாய் மற்றும் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து கொண்டு இருக்கிறேன். தவிர 'டிவி' சீரியல்களும் நடிச்சிட்டு இருக்கேன்.

* 'டப் ஸ்மாஷ்'ல கில்லாடியாமே...
ஆமாங்க... சும்மா இருக்கும்போது டான்ஸ் ஆடுவேன். அலைபேசியில் 'டப்ஸ் மாஸ்' பண்ணி தோழிகளுக்கு ஷேர் பண்ணுவேன்.


* பிடித்த வேடம்...
இயல்பாகவே எனக்கு கதாநாயகியா நடிக்கிறதவிட 'வில்லி'ன்னா ரொம்ப பிடிக்கும். அப்படி வேடம் கிடைத்தால் 'படையப்பா' ரம்யா கிருஷ்ணன் போல செய்யணும்ங்கிறது என்னோட ஆசை.


* பிடித்த நடிகர்
ஜெயம் ரவியின் தீவிர ரசிகையாக்கும். அவரோட சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துட்டே இருக்கேன். அதேமாதிரி அஜித் உடனும் சேர ஆசை உண்டு. ம்... அதிர்ஷ்டம்தான் கைகொடுக்கணும்...


* பிடித்த நடிகை...
ஐஸ்வர்யாராய்... ப்பா... அவரது கண்கள் எத்தனை அழகு


* ரோல் மாடல்....
தீபிகா படுகோனே


* பிடித்த ஊர்...
தமிழ்நாட்டில் சென்னை; வெளிநாடுன்னா துபாய் அருமையான இடம்.


* பெண்களுக்கு...
பெண்கள் தைரியமாகவும், பயம் இல்லாமல்... நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.

*'கிளாமர்' காட்டுவீங்களா
எனக்கு கிளாமரா நடிக்க விருப்பம் இல்லை. அப்படியே வந்தாலும் அதை தவிர்த்து விடுவேன்.


* விருது ஏதாவது...
சிறந்த நடிகைக்காக சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கத்திடம் விருது பெற்றுள்ளேன். பெரிய நடிகையா வந்தாலே விருது கெடைச்சது போலத்தானே.


* காதல் கீதல் உண்டா?
எனக்கு பலர் காதல் கடிதம் கொடுத்து இருக்காங்க. ஆனால் நான் அந்த மாதிரியான
ஆட்களை கண்டால், ஒரு 'ஹாய்' சொல்லிட்டு போய்ட்டே இருப்பேன். நமக்கு எதுக்கு பொல்லாப்பு.


* இன்றைய இளைஞர்கள்..
சுறுசுறுப்பும், திறமையும் இருந்தால் முன்னேறி போய்ட்டே இருக்கலாம். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நாம கடமையில் கண்ணா இருந்தால் உச்சம் தொடலாம்.

இவரை பாராட்ட: sreep848gmail.com
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement