Advertisement

போலீஸ் டைரி

பைக் திருடியவர் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அபிேஷக், 20; தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் காணாமல் போனது. இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த அனில், 20, பைக் திருடியது தெரியவந்தது. பைக்கை கைப்பற்றி, போலீசார் அனிலை கைது செய்தனர்.
தொழிலாளி பலி
துடியலுாரை சேர்ந்தவர் இளங்கோ, 52; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் துடியலுார் சரவணம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில், காயமடைந்த இளங்கோ, அதே இடத்தில் இறந்தார். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாய், குழந்தை மாயம்
அன்னுார், ஜீவா நகரைச் சேர்ந்தவர் சிவராஜ், 35. கரியாம்பாளையத்தில் கார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் தர்மபுரியை சேர்ந்த சுதா என்பவரை, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு எட்டு வயது மகன் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் முதல் சுதாவும், மகனும் மாயமானார்கள். புகாரின் அடிப்படையில், அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement