Advertisement

பம்பு செட்டுகளுக்கு மானியம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:


சூரிய சக்தி கொள்கையின் கீழ், விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு 90 சதவீ த மானியம் வழங்கப்படும்.

ரூ.50 கோடியில் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 500 சூரியசக்தி பம்புசெட்கள் வழங்கப்படும்.

சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிட ரூ. 27.80 கோடி மானியம் வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி திண்டுக்கல் தோட்டகலை துறை மையங்களில், 2 ஆண்டு பட்டயப்படிப்புகள் துவங்கப்படும்.

ஊட்டியில் ரூ.10 கோடியில் பசுமை புல்வெளி பூங்கா அமைக்கப்படும்.

நீலகிரியில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில், ரூ.3 கோடி செலவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

  • Siddharadiyan sivasubramaniyam - virudhunagar,இந்தியா

    பல விவசாய இடங்களை போடப்பட்ட பழுதடைந்த சோழர் பேனல் பம்ப்களை சரி செய்ய ஆட்கள் வருவதில்லை என்று தினமலர் செய்தியே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது.நீங்கள் கொடுக்கும் மானியத்தில் தரமான சோழர் பம்புகள் அமைக்கப்படுவதில்லை.

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    எல்லாவற்றிற்குமே மானியம். சட்டத்தை மதிக்காமல் குண்டடிபட்டு செத்த கிரிமினல்களுக்கும் காசு, எவன் போராடினாலும் காசு. நிருவாக திறனற்ற அரசு. கழகங்களுக்கும் நிருவாக திறனுக்கும் காத தூரம்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அட்ரா சக்கை, அட்ரா சக்கை. இப்படித்தான் எல்லாத்திலும் கோடிக்கணக்கில் "கணக்கு" பண்ண வேண்டும். முட்டாள் மக்கள்கள் இருக்கிறவரை இது போன்ற ஊழல்களுக்கு பஞ்சமே இருக்கப்போவது இல்லை. (எட்டு வழி சாலைக்கு என்று பல மலை, ஆறு, பல ஆயிரம் ஏக்கர் வனம், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலம் எல்லாம் துவம்சம் செய்து விட்டு, மக்களை ஏமாற்ற பம்பு செட்டுகளுக்கு மானியம். நல்லாயிருக்குய்யா உங்கள் நியாயம்).

  • கோமாளி - erode,இந்தியா

    காப்பர்.. காப்பர்.. விவசாயிகளுக்கு மோட்டார் வாங்க மானியம் வழங்கியே காப்பர்

  • MATHI,L.K. - Lalgudy,இந்தியா

    முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: சூரிய சக்தி கொள்கையின் கீழ், விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு 90 சதவீ த மானியம் வழங்கப்படும்.இப்படி எல்லா அறிவிப்புகளுமே கோடியில்தானே அறிவிக்கிறீர்கள்.. கஜானா காலியானபின்பும் இந்த வெத்து வேட்டு அறிவிப்புகளை அறிவித்து, கல்லா கட்ட கட்சிக்காரர்களுக்கு 'ஐய்ஸ்" வைக்கும் செய்கையா?

  • Gnanam - Nagercoil,இந்தியா

    இந்த அறிவிப்புகளை கூடிய விரைவில் செயலாக்கவேண்டும். வாழ்த்துக்கள்

  • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

    விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. இவை மட்டும் ... நிறைவேற்றப்படவா போகின்றன.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement