Advertisement

விரைவில் ஆதார் பயன்பாட்டில் புதிய முறை

புதுடில்லி : ஆதார் அட்டையில் தற்போது கண்களின் கருவிழிப் படலம், விரல் கைரேகைகள் ஆகியவை முக்கிய அடையாளமாக ஏற்கப்பட்டுள்ளன. இதில் வயோதிகம், விபத்து, கடின உழைப்பு உள்ளிட்ட காரணிகளால் ஆதாரைப் பயன்படுத்துவதில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் முகத்தையும் அடையாளமாக ஏற்கும் முறையை மத்திய அரசு பரிசீலித்து வந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே, முகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது ஏற்கனவே உள்ள வழிமுறைகளோடு கூடுதலாக ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அமைப்பும் அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ஜூலை ஒன்றாம் தேதி முதல் முக அடையாள முறை நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில் சிக்கலின்றி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த கூடுதலாக ஒருமாதம் அவகாசம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது வரை நாடு முழுவதும் 121 கோடியே 17 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் நாள்தோறும் சராசரியாக 4 கோடி ஆதார் அட்டைகள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (30)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஏமாற்றும் படலம் அடுத்த ரவுண்டு ஆரம்பம். (அதாவது பார்ட் 2).

  • ahmed - chennai,இந்தியா

    Aadhar is an important document. Please remember if you link it to your bank account and all the transaction even if you buy in a grocery shop it should be linked to ur bank account. Without entering and updating the sale to his aadhar no once should sell in their shops. In such cases no one can have additional income in their life. it should be applicable to each and every citizen in India. In such case no once can do any transaction without aadhar. Ultimately there wont be liquid cannot be used anyone. There will be big question what roadside vendor will do. how much a they will do business around 1000 - 1500 max. it is not going to affect the flow since everyone can have a min of 4000-5000 liquid cash for emergencies. Please if we implement then we will not have bribe. they say bribe cannot be eradicated. if we implement the bribe will be eradicated the next second. the money they received as bribe cannot be utilized anywhere. if he go to bank to deposit the income tax will ask from where he got.

  • Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா

    வயதான பலருக்கு 'விறல் ரேகைகள் அடையாளம்' காட்டுவதில் சிரமம் இருக்கிறது. இந்த 'முக அடையாளம்' பயன் முறை நல்லது. தயவு செய்து என் போன்ற நபர்கள் இந்த முறையை கடைபிடிக்க விருப்பம். ஏன் ரேகைகள் அடையாளம் காண்பிப்பது இல்லை. என் போன்றவர்கள் இதை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தங்கள் தினமலர் மூலம் செய்தியாக வெளியிட்டு 'அநத செய்தி என் போன்றவர்களை அடைய விளம்பரம் செய்ய வேண்டுகிறேன்

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    ஆதாரில் என்னென்ன விபரங்கள் இருக்கவேண்டும் என்ற விஷயத்திலேயே இன்னும் தீர்வு காணப்படவில்லை ..... அதற்குள் ஆதாரை அதனுடன் சேர், இதனுடன் சேர் என்று நோகடித்துவிட்டார்கள் ....

  • KUMAR. S - GUJARAT ,இந்தியா

    எந்தெந்த துறையில் மக்கள் நலத்திட்டங்கள் இருக்கின்றதோ..அந்த துறையுடன் ஆதார் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்..ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய ஆதார் தானாக ரத்து செய்யப்பட வேண்டும்..அதற்குரிய வகையில் அணைத்து துறைகளும் இணைக்கப்பட வேண்டும்..

    • Nalam Virumbi - Chennai,இந்தியா

      Aadhar should be cancelled when death certificate is issued.

  • Gnanam - Nagercoil,இந்தியா

    குளறுபடியின்றி ஆதார் அட்டைகளின் திருத்தங்களை காலதாமதமின்றி, துல்லியமாக மேற்கொள்ள அனுபவமுள்ள நபர்களை நியமிக்கவேண்டும். சிறு சிறு திருத்தங்களுக்கு செல்லும்போது, மற்ற பல மாற்றங்களை செய்து விடுகிறார்கள். இதனால் நேரம் மற்றும் பணம் வீணாவது மட்டுமன்றி மனஉளைச்சலுக்கும் காரணமாகிறது இந்த ஆதார் அட்டை.

  • Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா

    நம்மைச்சுற்றி ஒற்றுமை வளையம் (Circle of Unity )அமைத்துக்கொள்ளும் வாழ்க்கைமுறை ஏற்பட்டாலின்றி, நமக்கு தேவைப்படும் போது ,உற்ற தோழனைப்போல அமையும் பாதுகாப்புக்கு, உதவிக்கு முன் முகத்தோற்றத்துடனான ஆதார், பெயர் முதலிட்ட தரவுகளின் மூலம் தனிநபர் குறித்த அங்க அடையாளங்களை அறிவதற்கான சான்றாக விளங்கினாலும்,ஒரு தனி நபர் எப்பேர்ப்பட்டவர், அவரது அந்தரங்கம் போன்றவை அவருடன் சேர்ந்து பழகினவருக்குத்தான் அறிந்திருக்கமுடியும். அவர் உண்மை, நேர்மை குறித்த தகவல்கள் அவரது சமூக ஈடுபாடு நடவடிக்கைகளில் பணபாக, அல்லது பண்பற்ற முறையில் வாழ்ந்த விதத்தை அறிந்துகொள்ள சமூக அமைப்புகள் தரக்கூடிய சான்றுகளே உத்திரவாதமளிக்க வல்லது. ஒருவரிடம் உண்மை இருந்தும், அவர் நம்பிக்கையற்றவர் எனும்போது குடும்ப ,சமூக நிர்வாக அமைப்பை சீர் குலைக்கலாம். நம் எல்லோரிடத்திலும் குறை இல்லாமல் இல்லை. ஒருவரிடம் உள்ள நல்ல பண்புகளை போற்றி, மேலும் வளர, அவருக்கு உற்ற தோழனாக,அன்பு பாராட்டும்படி நடந்துகொள்ளவே,அப்துல் பஹா வழிகாட்டியுள்ளார். நிர்வாகத்தூண் வலுவான சீரான அடித்தளத்தை பெற்றிருக்க, என்றும் குறிப்பாக வாக்காளர்கள் தகுதி பெற்றவர்களாக வருங்கால தலைவர்களை தேர்ந்தெடுந்துக்கொள்ளும் நிர்வாக கட்டமைப்பு முறை அனைவரும் பொறுப்பேற்று (Collective Responsibility )செயல்பட வேண்டியதைக் குறிப்பதாகும்

    • Thiyaga Rajan - erode,இந்தியா

      என்ன சொல்ல வறீங்கன்னு எனக்கு தெரிஞ்சாகனும்

    • Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா

      சமூக நலனுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் அகப்பட்டுக்கொள்ளும் நபர்களது முகத்தோற்றம் ஏற்கனவே பதிவடைந்த விரிவான அடையாளங்களுடன் காட்டிக்கொடுக்கும் தகவல்களும் ஆதார் அட்டை மூலம் பதிவுவேற்றப் படுமானால். எதிர்மறையான பின்விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எந்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பு தேவையாகும். அதற்கு ஒருமைப்பாடு அவசியமாகிறது. நம்மைச்சுற்றி உதவியும், ஒத்தாசையுமிக்க நல்ல பக்குவப்பட்ட மனங்கள் ஒன்றுபட வைக்கும் கொத்தமைப்பிலான (Clusters) சமூகங்களால் தப்பெண்ணங்களும், வன்முறைகளும், ஊடுருவதை தடுத்து நிறுத்தலாம். பழையதான சித்தாந்தங்களின் அடிப்படையில் உருவான கட்டமைப்புகள் சிதைவுற்று வருவதும்,முற்றிலும் மாற்றியமைக்க வல்ல தன்மை மாற்றங்களின் ஆன்மிக பயிற்சி நடவடிக்கைகளின் தாக்கங்கள் உலக மக்களை ஆன்மிக ,சமூக நீதி நிர்வாக கோட்பாடுகள் சட்ட விதிகளை ஒருங்கிணைந்த ஜனநாயக தூண்கள் மக்கள் ஒருமைப்பாடு எனும் அஸ்திவாரத்தில் உறுதியாக நிலைநிறுத்தப்படுவது படிப்படியாக தொடரும்.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை முதல்ல இணைங்க, போலி வாங்கிக்கணக்கை, போலி ரேஷன் கார்டை கண்டுபிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல இதுவும் முக்கியமானது ஆனா ஆளும்கட்சி எதிர்க்கட்சி சில்லறை கட்சினு இதைபற்றி எவனும் பேசமாட்டேங்கிறான்.

  • மணிமாறன் - trichy,இந்தியா

    முதலில் ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணையுங்க... அதை விட்டு விட்டு வேறு வேண்டாத வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள்..

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    ஒவொரு குடிமகனுக்கும் புகைப்படத்துடன் ஒரு அடையாள அட்டை போதும் அதில் எல்லா விவரங்களும் இருக்கவேண்டும். . அதை எல்லோருக்கும் கட்டயமாக்க வேண்டும்.

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    அதிகாரிகள் மக்களுக்கு புதிது புதிதாக தொந்தரவு கொடுக்கிறார்கள்.ஆதார் கொடுக்கும்போதே கைரேகை அழியும் தன்மை உடையது என்று தெரியாத இவர்களுக்கு உயரிய பதவிகள் எதற்கு? இப்போதுதான் அக்கடா என்று மக்கள் சற்று ஓய்ந்திருக்கிறார்கள். மக்களுக்கு கொடுத்த உபத்திரம் போதுமையா என்று இவர்கள் தலையில் மத்திய மந்திரி குட்டு வைப்பாரா? பார்லிமென்ட் தேர்தல் வரும் நேரத்தில் இது தேவையா?

  • balakrishnan - coimbatore,இந்தியா

    நிலவி வரும் குறைகளை களைந்து மேலும் மேலும் ஆதார்அடையாள அட்டை நடைமுறையை மேம்படுத்தலாம், காங்கிரஸ் கொண்டுவந்த பல சிறந்த திட்டங்களில் இந்த ஆதார் திட்டமும் ஒன்று,

    • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

      இவங்களுக்கு எது கொள்கை எல்லாம் காங்கிரஸ் காரன் திட்டங்களை COPY அடிப்பது , பள்ளியில் காப்பிய டித்தால் தண்டனை இங்கே பாராட்டு

    • nandaindia - Vadodara,இந்தியா

      அடேங்கப்பா, 60 வருட கான்க்ராஸ் ஆட்சியில நாட்டில தேனும் பாலும் இல்ல ஓடினா மாதிரியில்ல சொல்லுறீங்க. நீங்க சொல்வது போல வைத்துக்கொண்டாலும் கான்க்ராஸ்காரனை போல 2g, கோல்கேட், ஆதர்ஷ், காமன்வெல்த், ஹெலிகாப்டர் அப்படின்னு இப்போதய அரசு காப்பி அடிக்காமல் இருப்பதற்கு பாராட்டலாமே

    • Rafi - Riyadh,சவுதி அரேபியா

      காங்கிரஸ் ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடவில்லை. இப்போதாவது ஓடுகின்றதா?. அப்போது ரவுடிகள் பயந்திருந்தார்கள். இப்போது கலவரம் ஏற்படுத்துவதற்கே ரௌடிகள் தயார் செய்வதுபோன்ற நிலையை உணருகின்றோம்.

    • பாலா - ,

      அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது முன்வைத்த திட்டம். காங்கிரஸ் குளறுபடி செய்து தாமதமாக செயல்படுத்தியது தான் ஆதார்

    • MATHI,L.K. - Lalgudy,இந்தியா

      அப்போது ரவுடிகள் பயந்திருந்தார்கள். இப்போது கலவரம் ஏற்படுத்துவதற்கே ரௌடிகள் தயார் செய்வதுபோன்ற நிலையை உணருகின்றோம்..இப்போது மத்திய ராணுவ காவலர்களின் துணையுடன் முன்னாள் காமெடி நடிகன், இன்றைய ரவுடி எஸ்.வி.சேகரை கைது செய்ய ஏன் தமிழக காவல்துறை அஞ்சுகிறது?

  • S.prakash - Tiruchi,இந்தியா

    முகத்தையே மாற்றிவிடுகிறார்கள். அலையமுடியாதென அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    நல்லது. ஆதாரை சரியாக பயன்படுத்தினால் நாட்டில் ஏகப்பட்ட குற்றங்களை தவிர்க்கலாம். நாட்டின் முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக உதவும். அதோடு தனி மனித சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

  • GMM - KA,இந்தியா

    பிறந்த தேதி, பிறந்த இடம்,ஆண், பெண், குழந்தை தந்தை, தாய், சகோதரர் மற்றும் சகோதரியின் பெயர் போன்ற நிரந்தர பதிவுகள் ஆதார் உள்ளிடலாம். முகவரி மாறக்கூடியது.

  • amuthan,Karaikudi - ,

    சோணை முத்தா...இனிமே சமூக விரோதிகளை...புட்டேஜ் மூலமே கண்டுபிடிச்சுருவாங்கடா...ஜாக்கிரதை...

  • RR Iyengar - Bangalore,இந்தியா

    முதல்ல டிஎன்ஏ டெஸ்ட் எடுங்கப்பா, அதையும் ஆதாரோட இணையுங்க ... நாட்டுக்குள்ள நிறைய அந்நியர்கள் (சதிவேலைக்காகவே உள்ள வந்திருக்கானுங்க)

    • Raman - kottambatti,இந்தியா

      முதலில் உன் டி என் எ வை எடுக்கணும். தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் வந்தேறிகள் பிரித்து வைக்கப்படணும்

    • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

      பெங்களூர் காரனை விரட்டினால் எல்லாம் சரியாகி விடும்.

    • Sudarsanr - Muscat,ஓமன்

      அரசுக்கு எதிரே கருத்து சொன்னாதான் அவன் உண்மையான தமிழனா/ எது சொன்னாலும் இப்படி வந்தேறிகள் / பார்ப்பனர்கள்/ ஆரியர்கள்னு பிரிச்சி பாக்காத. அவரு சொன்னது அன்னியர்களை. நீ இந்தியாக்கு அந்நியனா இல்லையே. நீயும் இந்தியன் அவரும் இந்தியன் அப்புறம் ஏன் உனக்கு இப்படி பாத்துகிட்டு வருது...

    • Suppan - Mumbai,இந்தியா

      இந்த ராமன் ஐயா தான் தமிழன் என்று பதிவு செய்து சான்றிதழ் கொடுப்பார். எல்லோரும் வரிசையில் வந்து நில்லுங்க இந்த சான்றிதழ் இல்லாவிடில் நீங்கள் தமிழ்நாட்டை....ஏன் இந்தியாவை விட்டே ஓட வேண்டிவரும். எல்லோரும் வாய் விட்டு சிரிங்க

    • Sriram Narashum L - Jamnagar,இந்தியா

      இவர்களே அந்நிய மதத்தை தழுவியவர்கள் . மற்றவர்களை பார்த்து வந்தேறிகள் என சொல்லவேண்டியது . இவர்களிலெல்லாம் டுமிலன்ஸ் வியாதி . வந்தேறி சொல்லுபவன் வரலாற்றை தெரியாதவனாக இருப்பான் .இவர்கள் தான் இந்தியாவிற்கு சாபக்கேடு

    • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

      பிராம்மணர் வந்தேறிகள் என்றால், நான்காயிரம் கிலோ மீட்டர் தூரம் தாண்டி வந்து விதைத்துவிட்டுப் போனவனுடைய மதத்தைக் கட்டிக்கொண்டு அழுபவனை என்ன சொல்ல ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement