Advertisement

போலீஸ் டைரி

குண்டு வீசிய இருவர் கைது
ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர், சுந்தர், 28; விருகம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.கடந்த, 10ம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சுந்தர் வீட்டில், இரண்டு மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தப்பினர். கோயம்பேடு போலீசார், நெற்குன்றத்தைச் சேர்ந்த, வினோத்குமார், 21, கார்த்தி, 24, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு வலைஆவடி அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கேளம்பாக்கம் அடுத்த படூரில், பெற்றோருடன் வசித்த இந்த சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் மங்கள் ராஜ், 30, என்பவர் பழகி வந்துள்ளார். கடந்த, 5ம் தேதி, அயப்பாக்கம் வந்த மங்கள்ராஜ், ஆசை வார்த்தை கூறி, அவனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 10ம் தேதி, சிறுமியை அவரது வீட்டில் விட்ட மங்கள்ராஜ், தப்பிச் சென்றான்.சிறுமிக்கு நடந்த கொடுமையை அறிந்த பெற்றோர், நேற்று முன்தினம் மாலை, போலீசில் புகார் அளித்தனர். ஆவடி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவரிடம் மொபைல் பறித்தவர் கைது
கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர், பக்தவத்சலம், 50. அவர், டி.பி.சத்திரம் மண்டபம் தெருவில், நேற்று நடந்து சென்றார். அப்போது வந்த மூவர், பக்தவத்சலத்தை தாக்கி, மொபைல் போனை பறித்து தப்ப முயன்றனர். இதைப் பார்த்த அப்பகுதிமக்கள் ஒருவனை மடக்கி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அண்ணா நகரைச் சேர்ந்த சாமுவேல் என்பவனை கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்து, தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.
டீசல் திருடியவன் கைது
விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த, சினிமா படப்பிடிப்பு வாகனங்களில், மூன்று பேர், டீசல் திருடிக் கொண்டிருந்தனர். போலீசார், பெருமாள், 37, என்பவனை மடக்கி பிடித்தனர். அவனிடமிருந்து, டீசல் திருடி விற்ற, 3,600 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
குடோனில் தீ விபத்து
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஸ், 45. இவர், அதே பகுதியில் உள்ள பாலாஜி நகரில் உள்ள குடோனில், மரம், பிளாஸ்டிக் பொருட்கள் அடுக்கி வைத்திருந்தார். நேற்று, குடோன் திடீரென தீ பிடித்தது.கிண்டி தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபைல் போன் பறிப்பு
கொண்டித்தோப்பைச் சேர்ந்தவர், மகாவீர் குமார், 41. இவர் நேற்று, தன் வீட்டருகே நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவரது மொபைல் போனை பறித்து, தப்பினர். ஏழுகிணறு போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் மொபைல் பறிப்பு
மயிலாப்பூரைச் சேர்ந்தவர், ராஜலட்சுமி. அவர் நேற்று காலை, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலையில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், ராஜலட்சுமியின் மொபைல் போனை பறித்து, தப்பினர். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வியாபாரி கைது
வியாசர்பாடி, பாரதி நகரைச் சேர்ந்தவர், பிரவீன்குமார், 21. இவர், வேப்பேரி அஸ்டபுஜன் சாலை, ரங்கய்யா தெரு சந்திப்பில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். நேற்று, இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ரயில் பயணியிடம் செயின் பறிப்பு
அம்பத்துாரை சேர்ந்தவர், ஆலயமணி, 28; தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கோடம்பாக்கத்தில் இருந்து, ஊரப்பாக்கத்திற்கு, மின்சார ரயிலில் சென்றார்.ஊரப்பாக்கம் நிலையத்தில் இறங்கி, பிளாட்பாரத்தில் நடந்தபோது, இருட்டான பகுதியில் நின்றிருந்த நான்கு பேர், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து, 1 சவரன் செயின் மற்றும் மொபைல்போனை பறித்து தப்பினர்.தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement