Advertisement

தடுப்பூசியால் பாதிப்பு மருத்துவமனை முற்றுகை

தண்டையார்பேட்டை:தடுப்பூசியால், மாணவியருக்கு ரத்தக்கட்டிகள் ஏற்பட்டதாக கூறி, தனியார் மருத்துவமனையை, பெற்றோர் முற்றுகையிட்டனர்.சென்னை, தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம், சிவாஜி நகரைச் சேர்ந்தவர், ஜோதி, 47; கூலி தொழிலாளி. இவரது மகள், கவிதா, 19. தண்டையார்பேட்டையில் உள்ள அரசு கல்லுாரியில், பி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார்.கடந்த, 11ம் தேதி, கவிதாவின் தலையில் அடிப்பட்டதால், நோய் தொற்று பரவாமல் இருக்க, தடுப்பூசி போட, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இடுப்பு பகுதியில் ஊசி போட்டு, வீடு திரும்பிய கவிதாவிற்கு, அப்பகுதியில் ரத்தக்கட்டி ஏற்பட்டு வீங்கி உள்ளது. இதையடுத்து, வேறு தனியார் மருத்துவமனையில், 60 ஆயிரம் ரூபாய் செலவில், சிகிச்சை பெற்று ரத்தக்கட்டியை நீக்கினர். இதுகுறித்து மருத்துவமனையில் முறையிட்டும், எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த, பெயின்டரான, சீனிவாசனின் மகள் திவ்யா, 14. தண்டையார்பேட்டையில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார்.இவரது கையில், வளையல் குத்தி, பெரியளவில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 15ம் தேதி, தடுப்பூசி போட, அதே மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஊசி போடப்பட்டதும், இடுப்பு பகுதியில், பெரிய ரத்தக்கட்டி ஏற்பட்டது.இதையடுத்து திவ்யாவின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு சண்டையிட, அவர்கள் அறுவை சிகிச்சை மூலம், கட்டியை நீக்கினர். ஆனாலும், அந்த இடத்தில் தொடர்ந்து, ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, திவ்யாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement