Advertisement

2019 மார்ச்சுக்குள் கங்கை, யமுனை நதிகள் சுத்தமாகும்: கட்கரி

புதுடில்லி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்தும் பணி நிறைவடைய தீர்மானிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் கூறினார்.
2014-ம் ஆண்டு லோக்சபாதேர்தலில் போது பா.ஜ. அளித்த தேர்தல் வாக்குறுதியில் கங்கை, யமுனை நதிகளை தூய்மைபடுத்திடவும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தது.இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக உள்ள நிதின்கட்கரி கூறியது, 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கொடுத்து வாக்குறுதியின் படி கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்திடும் பணிகள் 80 சதவீதம்நடந்து முடிந்துள்ளன. 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. . 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள் பணிகள் முழுவதும் முடிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (38)

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இந்த நதிகளை சுத்தப்படுத்துவது நவீன காலத்தில் பெரிய விஷயம் அல்ல. மோடிஜி அடிக்கடி வெளிநாடுகளுக்கு போயி சும்மா பேச்சுவார்த்தை செய்வதால் பலன் இல்லை, நாத்திகளை சுத்தம் செய்ய பல கிலோமீட்டர் தூரம் சுத்தம் செய்ய சிலமணி நேரமே ஆகும் நவீன இயந்திரங்கள் இருக்கு, இதை பற்றி பேசி நல்லது செய்யலாமே, வெளிநாடுபோயி கட்டிப்புடி வைத்தியம் செய்தால் ஒன்னும் ஆகாது.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சுஷ்மா ராஜ்நாத் அருண் போல நிதினும் சிறப்பாக செயல்படும் அனுபவம் மிகுந்த மூத்த மந்திரி. மோடி பியூஸ் கோயல் போல கட்காரியால் சொன்னதை சாதிக்க முடியும் வாழ்த்துக்கள்

 • makkal neethi - TVL,இந்தியா

  சிரிப்புவருது சிரிப்புவருது இந்த சிரிப்பு அமைச்சரை நெனச்சு சிரிப்புவருது

 • Nagar Iyer - mumbai,இந்தியா

  எந்த ஒரு நதியையும் சுத்தப்படுத்த வேண்டுமென்றால் மூன்று முக்கிய நடவடிக்கைகள் தேவை: (1) நதியின் இரு கரைகளிலும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து MUNICIPAL WASTE நதியில் கலப்பதை முழுவதும் நிறுத்தவேண்டும் (2 ) அதே போல் தொழிற்ச்சாலைகளில் இருந்து INDUSTRIAL EFFLUENT கலப்பதையும் பரிபூர்ணமாக நிறுத்த வேண்டும் (3) நதியின் இருகரைகளிலும் செய்யப்படும் ரசாயன விவசாயத்தை ஒழித்து பசுமை ஆதார இயற்கை விவசாயம் முற்றிலும் செய்யப்படவேண்டும் . மேற்கண்ட மூன்றில் எதாவது ஒன்றை செய்ய தவறினாலும் நதியை சுத்தப்படுத்த முடியாது. கங்கை நதியின் நீளம் சுமார் 2700 KM . யமுனை நதி சுமார் 1400 KM . சுமார் 4000 km நீளமான ஒரே நதி என்று வைத்துக்கொண்டால் - மேற்கண்ட மூன்று நடவடிக்கைகளை எடுக்க குறைந்தது 25 வருடமும் - சுமார் 25 லக்ஷம் கோடி (டிரில்லியன்) ரூபாய்கள் செலவாகும். என்ன ஆதாரத்தில் திரு கட்கரி அவர்கள் 2019 ற்குள் இரண்டு நதியை சுத்தப்படுத்துவோம் என கூறுகிறார்?

  • Basic Instinct - Coimbatore,இந்தியா

   நதி சுத்தப்படுத்தி என்ன ஆக போகிறது. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் எண்ணம். அதனால் தான் மாநில தேர்தல்களில் அதிக ஓட்டு அளிக்கிறார்கள். இல்லை என்றால் ஓட்டு போடுவார்களா?

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  குப்பைத்தொட்டி வெச்சாலும் அதுக்குள்ள போடாம அதை சுத்தி மட்டுமே குப்பை போடுற மக்கள் நாம். எந்த அரசாக இருந்தாலும் கங்கை, யமுனை, கூவம் சுத்தம் செய்து கொடுத்தாலும் ஒரே வருடத்தில் மறுபடியும் அசுத்தம் செய்து விடுவோம், அதுவே நிதர்சனம். சுத்தம், ஸ்வச் பாரதம் என்பதெல்லாம் மத்திய மாநில அரசு செய்ய வேண்டிய காரியம் இல்லவே இல்லை, அரசின் ஒரு சிறு பங்கை தவிர நம் சொந்த வீடு போல பராமரிக்க வேண்டியது நாம் மக்களின் பொறுப்பு. இந்த விஷயத்தில் குற்றம் நம்மிடம் மட்டுமே வைத்து கொண்டு, எதுக்கு எடுத்தாலும் அரசை சொல்வதில் பயனில்லை.

 • sundaram - Kuwait,குவைத்

  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முனைவதற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அதே நேரம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம், பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை பெட்ரோல் கம்பெனிகளிடம் இருந்து அகற்றுவோம், ஆதார் அட்டை திட்டத்தை ஒழிப்போம், வருமானவரி விலக்கு வரம்பை ஐந்து லட்சமாக உயர்த்துவோம் , நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம், ஸ்விஸ் நாட்டில் இருந்து கருப்பு பணத்தை நூறு நாட்களில் இந்தியாவுக்கு கொண்டுவருவோம்( ஆளுக்கு பதினைந்து லட்சம் வங்கியில் போடுவோம்) என்ற மற்ற வாக்குறுதிகளை மறந்துட்டீங்களே?

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   ஹலோ கங்கை புனிதமானால் பாராட்டலாம் இதே அறிவிப்பு நான்கு வருடம் முன்னர் சொன்னது எலேச்டின் ஞாபகம் மறுபடியும் கேட்டு விடப்போகிறாம் என ஒரு பாவலா

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   அடேய் நடேசா சுடலை சிங்கார சென்னை ன்னு சொன்னாரே...சிங்காரமாவா இருக்கு. போதாக்குறைக்கு வெளிநாட்டு கம்பெனிக்கு குப்பை அள்ள காண்ட்ராக்ட் குடுத்தாரே அதுல என்ன பைசா பார்க்காமலா இருந்திருப்பார்....?

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  முன்பு இருந்த அசுத்தத்துக்கு இப்போ பரவா இல்லை. மக்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  கங்கை, யமுனை நதிகளை விட கூவம் பரவாயில்லை, அங்கே வரும் வெள்ளம் கூவத்தில் வந்தால் கூவமும் சுத்தமாக இருக்கும், கடந்த முறை வெள்ளம் வந்த போது பார்த்தோம், ஆனால் ஆண்டுதோறும் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கங்கை படு கேவலமாகத்தான் இருக்கிறது,

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   அது சென்னை கூவம் நதி தமிழ் திராவிடனோட நதி... அடுத்தவாட்டி கூவத்துல வெள்ளம் வரும்போது பாலகிருஷ்ணன் அதுல குளிக்கற மாதிரி படம் எடுத்து போடுவார்..

  • Ram Sekar - mumbai ,இந்தியா

   அது உங்களை போன்றவர்கள், என்னை போன்றவர்கள் பண்ணும் அசுத்தம் தான். எங்கே, நீங்கள் போயி கூவத்துல மாதம் ஒரு முறை முங்கி குளிச்சிட்டு வாங்க, முடியுமா? கூவம் சுத்தமா இருக்கா?, அதுவும் வெள்ளம் வந்த பிறகு? போய்யா போ, வேற எதுன்னா கதை விடு

 • balakrishnan - coimbatore,இந்தியா

  சொல்லக்கூடாது, செய்து காண்பிக்க வேண்டும், அதுவும் உண்மையாக இருக்கவேண்டும், சும்மா போட்டோஷாப் மூலம் சுத்தம் செய்ததாக காண்பிக்க கூடாது,

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @சங்கர் - வசிக்குமிடம் கனடா என்பதால் எல்லாரையும் அடா புடா என்று எழுதலாமா அவமரியாதை இல்லையா? ஒருமுறையேனும் கங்கை நதியை பார்த்திருக்கிறீர்களா? நாட்டில் ஊழல் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? பேப்பர் பாத்து தானே.? இந்தியாவுக்கு எப்போ கடைசியா வந்தீங்க. மத்திய அரசின் துறைகளின் ஆபீசுகளை பார்த்திருக்கிறீர்களா? பிஜேபி அமைச்சர், MP MLA க்களே, ஊழல் இல்லா அரசு என்பதை ஒத்துக்க மாட்டார்கள். எங்கியோ இருந்துகிட்டு அல்லது இருப்பது போல ஸ்டேட்டஸ் போட்டுக்கிட்டு அநாகரிகம் அவமரியாதையை பறை சாற்றுவது என்ன எழவு டிசைனோ..மாறவே போறதில்ல.

  • shankar - milton,கனடா

   ஹலோ, நான் கனடாவில் வசிப்பதாலும் அடிக்கடி இந்தியா வந்து போவதாலும் ( சமீபமாக 1 மதம் முன்பு கூட) இந்தியாவில் அதிகமாக சுற்றுப்பயணம் selpavan என்பதாலும் தான் sollukiren. இந்த அடா புடா எல்லாம் அங்கிருந்து கற்றதுதான். நீங்கள் எப்போது கங்கையை பார்த்திருக்கிறீர்கள். நான் ஏப்ரல் மாதம் பார்த்தேன். நான் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் தமிழனை விட இந்தியாவை அதிகம் பார்த்திருக்கின்றேன். BJP government is the best for India at present. Just because of the corrupt dravidian parties, the whole of India is laughing at Tamils. You do not attempt to teach me decency. Have you visited Varanasi 5-6 years ago ? Before attempting to comment, make a trip and see the changes there. As somebody who goes there often I can vouch how things have improved.

  • sundaram - Kuwait,குவைத்

   எங்கு இருந்தாலும் அந்த கட்சியினரின் உண்மை பிறவிக்குணம் அது. இவரைப்போலவே தென் ஆப்பிரிக்காவில் இருந்தும் ஒருவர் அந்த கட்சியின் உண்மை கொள்கைகளை பிரதிபலிக்கும் விதத்தில் கருத்துக்களை பகர்வார்.

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  கங்கை மற்றும் யமுனை நதிகள் சுத்தப்படுத்தும் மற்றும் சீர்படுத்தும் முறைகள் இரண்டு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது .....அடுக்கு 1 ... நதிகளில் கலக்கும் கழிவு நீர் கால்வாய்கள் ,ஓடைகள் கண்டறியப்பட்டு அவைகள் முழுமையாக தடுக்கப்பட்டு மற்றும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டு அங்கெல்லாம் STP என்று சொல்ல கூடிய Sewerage Treatment Plant அமைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது...அடுக்கு 2 நதியில் சீர்கெட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு Dredging இயந்திரம் மூலம் கழிவுகள் எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும்...இவை எல்லாம் மிக நுண்ணிய அளவில் திட்டம் தீட்டப்பட்டு ( மைக்ரோ பிளானிங் ) செய்லபடுத்தப்பட்டு வருகிறது...எவ்வளவு வேலை முடிந்து உள்ளது திட்டம் எந்த நிலையில் உள்ளது போன்ற அணைத்து தகவல்களும் மத்திய நீர் வளம் மற்றும் கங்கை சுத்திகரிப்பு அமைச்சகத்தில் உள்ளன...

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  80 % சுத்தமாகவில்லை . முன்பு எப்படி இருந்ததோ அதில் ஒரு சிறிய மாற்றம் வந்துள்ளது . வாரணாசி டோபிகாட் பகுதி சிறிது முன்னேற்றம் . பிணம் இருப்பதில் நடை முறை மாற்றம் . அவ்வளவு தான் . இன்னமும் தொழிற்சாலை கழிவுகள் சேர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கான்பூர் தோல் தொழில் கழிவுகள்.இது தவிர 120 நகரங்களின் சாக்கடைக் கழிவுகளும் இன்னமும் கங்கையில் தான் கலக்கின்றன. எந்த வகையில் 80 % சுத்தம் ஆகியிருக்கிறது என்பது விளங்கவில்லை .ஓலி வாங்கி கிடைத்தால் என்ன வேணும்னா பேசலாம் எப்படி வேணா அறிக்கை விடலாம் என்று பேசி இருக்கிறார். மிகவும் தவறான தகவல் .2500 கிலோ மீட்டர் நீளம் 5 மாநிலங்கள் இந்தியாவின் 43 % மக்கள் தொகையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பெரிய நதியை எப்படி இன்னும் 10 மாதத்திற்குள் சுத்தம் செய்ய முடியும்? கான்பூரில் 450 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. அவை செய்யும் நீர்க்கொலையை தடுக்கவே பல மாதங்களாகும் .

 • vasu - Sydney,ஆஸ்திரேலியா

  சுத்தம் என்பது RELATIVE வார்த்தை. குடிக்கும் அளவுக்கு சுத்தமா ? பார்க்கிற அளவுக்கு சுத்தமா ? குடிக்கும் அளவுக்கு வந்தால்தான் உண்மையான சுத்தம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அய்யா ராசா வாயை பெட்ரோல் ஊற்றி கழுவு அய்யா... நீங்களாவது செய்யறதாவது...

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  அப்பிடியே கஜானாவும் சுத்தமாகும், வாய் வடை மன்னன் இன்னும் பல வரிகளை போட்டு மக்களையும் சுத்தமாக இந்த உலகத்தை விட்டெ அனுப்பிவிடுவார்

  • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

   உலகத்தை விட்டே அனுப்புனா துவா பண்ண தான் நீங்க இருக்கீங்களே..?

 • kumarkv - chennai,இந்தியா

  What about the rivers in other states. We have so many rivers and lakes in Tamil nadu which needs to be restored to original glory so that We can avoid begging to other states even for drinking water. Our tax money siphoned off to states like Kashmir, which is a Muslim terrorist den. Ganga and Yamuna are our life line which definitely needs restoration, but there are other revers which needs similar treatment.

 • Ramesh - chennai,இந்தியா

  அப்படியே எங்கள் புனித நதி கூவத்தையும் கங்கை யமுயவோடு சேர்த்துக்கங்க

 • Ramesh - chennai,இந்தியா

  அண்ணே கொஞ்சம் வைகையையும் பாரு

  • Jaya Ram - madurai,இந்தியா

   எப்படி கலைஞர் கூவத்தினை சுத்தப்படுத்தி படகு விட்டாரே அப்படியா ?

 • Anandan - chennai,இந்தியா

  80% சதவிகித பணிகள் முடிவடைந்துமா இவ்வளவு அசுத்தமாக உள்ளது? ஒன்றும் விளங்கவில்லை.

  • Sabari - Tanjore,இந்தியா

   80% பணிகள் முடிவடைந்துவிட்டது என்றால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவாகிவிட்டது என்று அர்த்தமே தவிர பணி நிறைவடைந்துவிட்டது என்ற அர்த்தமில்லை. அப்படியென்றால் எப்போது முடியும்? அது முடியும் 2023 இல்.

 • amuthan,Karaikudi - ,

  ரொம்ப சந்தோஷம் ...

 • Raman - kottambatti,இந்தியா

  எப்படி? 80 சதவிகிதம் சுத்தமாயிடிச்சா ? எங்கே கொஞ்சம் காட்டு பிறகு 100 சதவிகிதம் சுத்தமாக்கலாம்.. 2019 உமக்கு ஆப்பு மக்கள் வைக்க தயாரா இருக்காங்க..

  • shankar - milton,கனடா

   ஏன்டா எப்பவும் எதிர் மறையாகவே நினைக்கீறீர்கள் அல்லது பேசுகிறீர்கள் . நல்லது நடக்கும் என்று ஏன் நம்ப மறுக்கிறீர்கள். positive attitude is a must for any progress whether at home or at nation. நாட்டில் பெரிய அளவில் ஊழல் இல்லை என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள் . இந்தியா வளர வேண்டுமா அல்லது ஊழல் இந்தியாவாகவே இருக்க வேண்டுமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்

  • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

   கொட்டாம்பட்டி நீங்க ஏதோ வோட்டு போட்டு அவரை தேர்தெடுத்த மாதிரி கமன்ட். மறுபடியும் வந்துட்டா என்ன பண்ணுவீங்க ..?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   மறுபடியும் வந்துட்டா இதே எழவு கொட்ட வேண்டியது தான். அதான் நாட்டையே அந்நிய நாடுகளுக்கு தவணை முறைல விக்கறாங்களே, தடுக்கவா முடியுது? ஆனாலும் இந்தியாவிலேயே இல்லாமல் காவடி தூக்கறதைன் அவசியம் தான் புரியவில்லை. நீங்க வோட்டு போட்டு கடன்காரிய தேர்ந்தெடுத்தீர்களோ? தெரியாம போச்சே.

  • twodotzero - Singapore,சிங்கப்பூர்

   positive attitude தான் ஓட்டு போட்டோம். ஆனா என்னத்த பாஸிட்டிவா செஞ்சிட்டாரு உள்நாட்டுக்கு ?

  • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

   //மறுபடியும் வந்துட்டா இதே எழவு கொட்ட வேண்டியது தான்// ஓ மைனாரிட்டி தி மு க ஆட்சி கடந்த மாதிரி காங்கிரஸ் தயவில் வந்தது மாதிரியா..? நானும் ஒட்டு போடலை. நீங்களும் ஒட்டு போடலை. அப்புறம் எதுக்கு பிரச்சினை.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அடுத்த வருஷம் 2019 தேர்தலுக்காக மார்ச்சு வரைக்கும் கொள்ளையடிக்க வேண்டியிருக்கு.. அதான். சுத்தம் ஆயிடுச்சுன்னு நாம அறிக்கை கொடுத்த அடுத்த நிமிஷமே அது சுத்தம் ஆயிடும்.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   பிஜேபி கொள்ளை அடிச்சாங்கன்னு சொல்லி ஏன் யாரும் கோர்ட்டுக்கு போல... கேட்டா ஆதரமில்லேன்னு சொல்லுவீங்க... ஆதரமில்லாமயே வாய்க்கு வந்ததை பேசிய பழகிப்போச்சு...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement