Advertisement

ராகுலின் இப்தார் விருந்தில் பிரணாப் பங்கேற்பு

புதுடில்லி : காங்கிரஸ் ஏற்பாடு செய்த, 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த, 2015ல், டில்லியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின், இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் தேசிய அளவில், காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் மீண்டும், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவராக, ராகுல் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் விருந்து என்பதால், இது கூடுதல் முக்கியத்துவம், பெற்றிருந்தது.

இவ்விருந்தில் எதிர்கட்சி தலைவர்கள் ஓரணியில் திரள்வர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றதற்காக, கடும் விமர்சனங்களுக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கும் அழைக்கு விடுக்கப்பட்டது.

எதிர்பார்ப்புக்கு இடையே, இவ்விருந்தில் பிரணாப் கலந்து கொண்டார். ராகுலுக்கு அருகில் அமர்ந்து அவர் இப்தார் விருந்தில் பங்கேற்றார். மேலும் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் தினேஷ் திரிவேதி, கனிமொழி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (25)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அடுத்த தலைமுறை முஸ்லீம் இளைஞர்கள் இந்த ரம்ஜான் நோன்பை இப்படி கொண்டாடுவதாக முடிவெடுத்துள்ளார்கள் என்று வந்தால் எவ்வ்ளவு சந்தோஷமாக இருக்கும். 1 ) மசூதிக்கு அமைதியாக சென்று வழி படுதல் 2 ) இரவில் ஒரு வேளை மட்டும் நல்ல காய்கறி உணவு மட்டும் 3 ) யாருடனும் சண்டை சச்சரவு செய்யாமல் இருத்தல் அப்பொழுது அது விரதம், நோன்பு என்று கொள்ளப்படும். இப்போது அது 12 மணி நேர லேட் உணவு தடபுடலாக என்றே கொள்ளப்படும் விரதமாக அல்ல. இது ரம்ஜான் பல்வகை உணவு தின்னும் திருவிழா.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இந்தியாவில் மதச்சார்பின்மை என்றால் - இப்தார் நோன்பு (அதாவது இரவு விருந்து திருவிழா) கஞ்சி குடித்தால் , கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்டால்???அதாவது முஸ்லிம்களுக்கு, கிருத்துவர்களுக்கு உபசாரணை, இந்துக்களுக்கு தீட்டு /திட்டு என்ற வழியில் சென்றால் அது மத சார்பின்மை அதாவது இனிமேல் முஸ்லீம் கிறித்துவ சார்பு தான் மத சார்பற்ற என்று விளக்கமாக கூற வேண்டும்.?????

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இத்தாலிய அடிமை பிரணாப் காட்டும் மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை இதுதான் .....

 • Balaji - Bangalore,இந்தியா

  விருந்தில் எத்துனை இஸ்லாமியர் கலந்து கொண்டனர்? பகல் வேஷம்.

 • kulandhaiKannan -

  ராகுலின் இன்று ஒரு உளறல் இல்லையா?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  குடிசை பகுதியில் கஞ்சிக்கு வழியில்லாத ஏழைகளுக்கு இந்த விருந்து கொடுத்தால் பரவாயில்லை , பணக்காரர்கள் கூடி கும்மியடிப்பது ஒரு நிகழ்ச்சியா ? அதுவும் இஸ்லாம் மதத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வந்து விருந்து சாப்பிட்டு அரசியல் பேசுவதற்கு எதற்கு மத பண்டிகையின் பெயர் வைக்கிறீர்கள்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அடடே கனிமொழி கலந்துகொண்டு கஞ்சி குடித்தாராமே , சரி சரி .... அடுத்த நாத்திகர்கள் மாநாட்டில் இப்தார் விருந்தில் ஆனால் கடவுளுக்கு சக்தி இல்லை , அங்கே எங்களை காக்க போலீஸ் காவல் இருந்தது என்று பேசுவாரா ? இல்லை நாத்திக நாடகமெல்லாம் இளிச்சவாய் இந்துக்களை கேவலப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்வாரா ?

 • RR Iyengar - Bangalore,இந்தியா

  அந்நிய நாட்டு மோகம் கொஞ்சம் கூட குறையாம பாத்துக்கங்கடா ... 70 வருஷமாச்சு இன்னமும் இதே வேலையா அலையிறீங்க

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  இஃப்தார் பண்டிகையை 365 நாட்களும் கொண்டாடினால் ஏழைமக்கள் நிச்சயமாக மனம் குளிர்வார்கள். ஏழைக்கு இரங்குபவன் இறைவனுக்கு கடன்கொடுகிறான்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒரு சிறுபான்மையினர் வாக்குகளை வாங்க என்னென்ன வேஷம் போடவேண்டி இருக்குது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இப்தார் விருந்தை உண்மையிலேயே சிறப்பித்தவரே துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தான்...

 • arsath ali - ,

  தேவையில்லாத விருந்து...பிரனாப் அவர்களை இப்போது RSS வெறுக்கும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இப்தார் விருந்தில் அரசியல் கலப்பது ஹரம் இல்லையா?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  கனிமொழி விருந்தில் கலந்து கொண்டது ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த பேருதவிகளுக்கு நன்றி தெரிவிக்கத்தானே?...... காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஈழத்தில் என் இனத்திற்கான மிச்சம் மீதி வேலைகளையும் செய்து முடிக்குமா?

 • Sudarsanr - Muscat,ஓமன்

  There is no meaning to conduct a first fear after hvng full meal. First off all politicians should not interfere in the religious activities. These kind of activities only the controversy among the public

 • கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா

  இது இஸ்லாமிய சகோதரர்களின் புனித மாதம்....பகல் முழுக்க நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து, மாலையில் நோன்பை முடிக்கிறார்கள்..... காங்கிரஸ் தரும் விருந்து என்பது முழுக்க அரசியல் நிகழ்ச்சிதான்....இங்கே இஸ்லாமியர்கள் தவிர அனைவரும் மூணு வேளையும் தின்னுவிட்டு இங்கே வந்து கஞ்சி குடிப்பது உண்மையில் விரதம் இருக்கும் சகோதரர்களை அவமானப்படுத்துவது போலுள்ளது ....சிறுபான்மை ஒட்டு என்ற ஒன்றிற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு புனித நிகழ்ச்சியை களங்கப்படுத்துகின்றனர்

  • Shriram - Chennai,இந்தியா

   மத்த மாத்தை விட மளிகை சாமான் மற்றும் மாதாதிந்திற செலவு இந்த மாதத்தில் அதிகாமாமே? அது ஏனுங்கோ

 • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

  பிரணாப் ஆர் எஸ் எஸ் கூட்டத்துல கலந்துக்கிட்டாரு பிரணாப் இஃப்தாருல கலந்துக்கிட்டாரு பிரணாப் கிரிஸ்மஸ் நிகழ்ச்சில கலந்துக்கிட்டாரு...மதத்திற்கு பின்னால் ஓடும் மக்களே என்று திருந்தி என்று உங்கள் ஜெனரேஷன் உருப்படுவது.. மதவெறியில் அலையும் எவரும் மனிதர் அல்ல..

  • madhavan rajan - trichy,இந்தியா

   ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட பாவத்திற்கு இப்தார் விருந்தில் ராகுல் பாவ மன்னிப்பு வழங்கி விட்டார். என்னே மதச்சார்பின்மை.

  • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

   மாதவன் ராஜா நான் சொன்னது அரசியல்வியாதிகளை இல்லை உன்னை போன்ற ....

  • Darmavan - Chennai,இந்தியா

   ..RSS கூட்டத்திற்கு போனால் மதவாதி/ .முஸ்லிம்கஞ்சி குடித்தால் மத சார்பின்மை.என்ன திருட்டுத்தனமான விளக்கம்.

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  This is nothing but a political feast, no religious sanctity.A strange tamasha.

 • mindum vasantham - madurai,இந்தியா

  திமுக பிஜேபி பக்கம் போக போகிறது ஒரு பேச்சு அடிபடுகிறதே

  • madhavan rajan - trichy,இந்தியா

   தேர்தலுக்கு முன் தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என்று பேசுவார்கள். பிறகு பிஜேபி ஜெயித்துவிட்டால் ஏதாவது ஆதாயம் தேடி ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு இழைவார்கள்.

  • sethu - Chennai,இந்தியா

   இப்போ அங்கேதான் இருக்கு ,2 ஜி தொடரும் ,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement