Advertisement

மருத்துவ செலவால் ஏழையாகும் இந்தியர்கள்

புதுடில்லி: மருத்துவ செலவு காரணமாக, ஏறக்குறைய 5.5 கோடி இந்தியர்கள் கடந்த ஒரே ஆண்டில் ஏழை ஆகி உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்களுக்காக இந்தியர்கள் செலவிடும் தொகை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், மருத்துவ செலவுகளுக்காக அதிக அளவில் நிதி செலவிடுவதால் ஒரே ஆண்டில் 5.5 கோடி இந்தியர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 3.8 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.

மருந்துக்கு அதிக செலவு:




2011-12ம் ஆண்டு முதல், மக்களின் மருத்துவ செலவின சுமையை குறைப்பதற்காக அரசு காப்பீட்டு திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும் மருந்து, மாத்திரைகளுக்காக செலவிடப்படும் தொகை அதிகமாக உள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் விலையை அரசு குறைத்து வந்தாலும், மருந்துகளின் செலவுகள் மருத்துவமனைகள் சார்ந்ததாக இருப்பதால், இந்தியர்களின் மருத்துவ சுமையை குறைப்பது சவாலாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (64)

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

    மருத்துவம், கல்வி, சுகாதாரம்... இவைகள் எப்பொழுது வியாபாரமானதோ அப்பொழுதே எல்லாம் கெட்டு விட்டது... நம்மிடம் இருக்கும் பெருமைகளை மறந்து, மேற்கத்திய நாடுகளில் இருக்கும் நல்லவற்றை எடுத்துக்கொள்ளாமல், எதையும் ஆராயாமல் அவர்களிடம் இருப்பதை அப்படியே எடுத்துக்கொள்வதால் வரும் விளைவுகள் இன்று வரும் நோய்கள்... நமது கல்வி முறையில் பெரிய மாற்றம் வேண்டும்... உடல் சுகத்தையே பார்த்து வாழ்ந்தால் இதுதான் நடக்கும்... உடலையும் ஆத்மாவையும் சமமாக பார்த்துக்கொள்ளவேண்டும்..

  • ருத்ரா -

    ஓரளவு தரமான உணவு, சுகாதாரமான இருப்பிட வசதி, நல்ல குடிநீர் கிடைத்தால் நோய்களால் பாதிக்கப்பட மாட்டார்கள். வெறும் சிராய்ப்பு காயத்திற்கு கூட full Scan பண்ண சொல்வது ஆம்புலன்ஸ் வசதி மனிதாபிமான அடிப்படையில் தரமறுப்பது Birth முதல் Death வரை certificate ற்கு பணம் கேட்பது இதை பார்க்கும் போது நோயே மேல் என்ற நிலைக்கு தள்ளப்படுகறார்கள் என்பது தான் சாத்தியம் சத்தியம்.

  • sridhar - Chennai,இந்தியா

    வீதியோர டாக்டர் கூட பீஸை இஷ்டத்திற்கு ஏற்றிவிட்டார்கள். கட்டாய இன்ஜெக்ஷன் வேற. ஒரு சாதாரண நோய்க்கு கூட இன்று 400 , 500 ரூபாய் செலவு.

  • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

    என்ன உடற்பயிற்சி செய்தாலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை தவிர்க்க முடியாது. அது ஆண்டவன் நமது முற்பிறவியில் செய்த தவற்றுக்கு அளிக்கும் தண்டனை.

  • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    உண்ணும் உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பு தேவை. பெரிய நகரங்களில் குழந்தைகள் விளையாடுவது என்பதே குறைந்து விட்டது. உடல் பருமன் சிறு வயதிலேயே பிரச்சனை தர ஆரம்பிக்கிறது. உடல் பருமன் பல வியாதிகளுக்கு விதை விதைக்கிறது. இங்குள்ள மருத்துவர்களுக்கும் ஒரு நெறிமுறை இல்லாமல் போய்விட்டது. பணத்திற்காக மக்களின் உடல் நலத்தோடு விளையாடுகிறார்கள். ஒரு நோயாளியின் உடல் நல ஆவணங்கள் சரியாக பராமரிக்க படுவதில்லை. டிஜிட்டல் இந்தியாவின் முதல் முன்னுரிமை மக்களின் உடல் நல ஆவணங்களை சரியாக பராமரிப்பதற்காக இருக்கவேண்டும்.

  • B.s. Pillai - MUMBAI,இந்தியா

    cleanliness is the first criteria for good health. Then the food habits. When we were children, we did not have vitamin ts , Boost etc. We were eating simple food and vegis. The trend changed to Fast Food and with it brought all new diseases. We go back to stone age, as far as food is concerned and we will be newly born without disease. The Central Government had very drastically reduced the cost of life saving medicines and proceedures. AYUSH is the new mantram. The cost of a stent used for heart blocks , which was 1.25 Lakhs when I underwent the Angioplasty, is now available for 8000-15000 only. Knee transplantation was costing 2-3Lakhs, now hardly 22000/= The Chemists who were charging the MRP for us is now ready to give 10-20% discount on the cost of medicines. In Coimbatore, I got 35% discount for all medicines. The present Budget is for the health of the poor, more than 50crore public will be covered by Medical Insurance. it was P.C and Dr.MMS who introduced foreign Insurance companies in India. They are looting us. None of these foreign companies paid the claim, but always rejected the claims of poor. Whereas Indian Insurance company General Ins. had always been fair in deciding the claims of its customers. We are Indians andl let us support Indian Insurance companies which obey rules and the rules of IRDA Authority.

  • Mahendra Babu R - Chennai,இந்தியா

    தினமும் அல்லது வாரத்திற்கு நான்கு நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். மனதுக்கும் உடலுக்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் எந்த ஒருவிஷயத்தையும் தலையில் ஏற்றி கொண்டு குழம்பாதீர்கள். இது tension ஏற்றிவிடும். நீங்கள் யோசித்துப் பார்த்தால் 2 வருடம் முன்பு இருந்த பெரிய பிரச்சனை இப்போது இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். ஆக பிரச்சனைகள் என்பது வாழ்க்கையில் தற்காலிகமானது என்பதை உணருங்கள். மனதில் எப்போதும் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உடற்பயிற்சிக்கு பின் ஒரு பத்து நிமிடம் கண்மூடி எதையும் நினைக்காமல் அமர்ந்திருக்கவும். விளம்பரம் செய்யப்படும் உணவுப்பொருள்களை வாங்கி சாப்பிடாதீர்கள். முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். இனிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய ஆறு சுவைகளும் உணவில் போதுமான அளவு கலந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அணைத்து விதமான காய்கறிகள் பழங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தாகம் எடுத்தால் மட்டும் தேவையான அளவு (இது மனிதனுக்கு மனிதன் மாறுபடும்) தண்ணீர் குடியுங்கள். இயற்கை உபாதைகளை அடக்காதீர்கள். மாத்திரை போடாமல் 7 அல்லது 8 மணி நேர இரவு தூக்கத்திற்கு பழகுங்கள். தலைவலி, ஜுரம், வாந்தி, பேதி என்று சின்ன சின்ன விஷயங்களுக்கு மாத்திரை போடாதீர்கள். இது பெரும்பாலும் கஞ்சி, கஷாயம் வைத்து குடித்துவிட்டு நன்றாக ஓய்வு எடுத்தால் தானாகவே சரியாகிவிடும். ஓரிருநாள் பொறுத்து பார்த்து சரியாகவில்லை என்றால் மருத்துவரிடம் செல்லவும். சொந்த அனுபவம் பின்வருமாறு - சொல்ல சொல்ல கேட்காம அதிக அளவு உப்பு, (மருத்துவர் சொன்னதை விட) அளவுக்கு அதிகமா சர்க்கரை நோய் மாத்திரைகள், அவ்வப்போது வலி மாத்திரைகள் சாப்பிட்டதன் விளைவு, இன்று என் தந்தை (70 வயது) சிறுநீரகம் செயலிழந்து சொல்லொண்ணா துயரை அனுபவித்து வருகிறார். நான் தான் அருகிருந்து கவனித்து வருகிறேன். வாரமிருமுறை dialysis, மருந்து மாத்திரை என்று எப்படியும் மாதத்திற்கு 35 ஆயிரம் வரை வந்துவிடும் என்னதான் அலுவலகத்தில் parental insurance இருந்தாலும் வருடத்திற்கு 3 லட்சம் வரைதான் கொடுப்பார்கள், அதுவும் 70 அல்லது 80 சதவீதம்தான் claim செய்ய முடியும். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் மிக எளிதில் நோய்வாய்ப்பட்டு விடுவார். சிறிய ஜலதோஷம், ஜுரம் கூட ICU வில் படுக்கவைத்துவிடும். அதுமட்டுமில்லாமல் dialysis tube இல் ரத்தம் வரவில்லை, நரம்பு சுருங்கி விட்டது என்று சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வேறு, இதில் அவருக்கும் உடல் அவதி, insurance அளவும் ஆறு மாதத்திலேயே காலியாகிவிடும், அப்புறம் முழுவதும் கையில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கான அளவு 750 மில்லி - நீர் ஆகாரம் (தண்ணீர், டீ, காபி, சாம்பார், ரசம் எல்லாம் சேர்த்து) இதை தாண்டி விட்டால், மூச்சு திணறல் வந்துவிடும், கை கால்கள் வீங்கிவிடும், உடல் எடை ஏறி நடக்க முடியாது. கொஞ்சம் மீறினால் பாதி நினைவு இழந்து உளற ஆரம்பித்து விடுவார்கள். குறிப்பிட்ட உணவை மட்டும்தான் சாப்பிடவேண்டும் என்று கட்டுப்பாடுகள் வேறு. இரவில் தூக்கம் வராமல் அமர்ந்து கொண்டே இருப்பார், பகலில் தூங்குவார். நமக்கு பெரிய நோய் எதுவும் வராத வரைதான் இந்த உலகம் சொர்க்கம். இப்படி ஏதும் நோய் வந்து விட்டால் இந்த பூமி தான் நரகம். நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ள, இந்த உலகில் கடைசி நாள் வரை நோயில்லாமல் வாழ, ஆரம்பத்தில் சொன்ன பழக்கவழக்கங்களை கடைபிடியுங்கள். இயற்கையும் நம் முன்னோரும் நமக்கு துணையிருப்பர் நன்றி

    • Mahendra Babu R - Chennai,இந்தியா

      முக்கியமாக, நேரம் பார்த்து சாப்பிடாமல் நன்றாக பசித்த பின் சாப்பிடுங்கள். பசி இல்லாதபோது சாப்பிடவேண்டாம். அதேபோல் பசிக்கும்போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம். பசி, தாகம் இவையெல்லாம் நம் உடல் நம்மிடம் பேசும் மொழி - அதை உணர்ந்து நடந்தாலே போதும் முக்கால்வாசி நோய்கள் நம்மை அண்டாது

  • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

    அதற்கு பெயர் மருத்துவ காப்பீடு கிடையாது மருத்துவ மோசடி, காப்பீட்டை கிளைம் பண்றதுக்குள்ள இருக்கிற பாதி உயிரும் போய்டும். கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக நான் கொடுக்கிறேன் என்று சொல்கின்ற கட்சியை நாம் ஆட்சிக்கு வர விடாமல் பார்த்து கொள்கிறோம் ஆனால் மனித உயிரை வைத்து விலை பேசி வியாபாரம் செய்யும் கார்ப்பரேட் அரசுகளை நாம் பதவியில் உட்கார வைக்கிறோம், அதனால தான் நாம் இந்த மாதிரி விலை கொடுத்து கொண்டிருக்கிறோம்.......

  • Siva - Aruvankadu,இந்தியா

    கடந்த ஏப்ரல்14.. 53 வயது முடிந்து விட்டது எனக்கு. இது வரைக்கும் எந்த பெரிய ஆஸ்பிடல் சென்றதில்லை. எப்போதாவது ஏற்படும் சிறு தொல்லை களுக்கு பொது மருத்தவரை மட்டும் ஆலோசனை கேட்பேன். உடல் உழைப்பு இன்றி ஓசி கஞ்சி அதாவது இலவசம் எதிர் பார்ப்பவர்கள் மருத்துவ செலவு செய்வது காலத்தின் கட்டாயம்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவ காப்பீடு என்ற பெயரில் இந்தியாவுக்குள் படையெடுத்த போனதே, சில வருடங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன். இந்தியாவில் இன்னும் சிறிது காலத்தில் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடமிருந்து மருத்துவவசதி பறிக்கப்படுகிறது என்று. அந்த கொள்ளையர்கள் தனது கோர முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

  • RajaramKrishnamurthy -

    உலகம் முழுவதும் அதே தான். பணக்கார ஏழை ஏழை நாட்டில் வைத்தியம் பார்த்துக் கொள்வதும் ஒரு காரணம்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    மோசடியின் ஆப்பரேஷன் சக்சஸ். தனியார் மருத்துவ துறை மற்றும் வெளிநாட்டு இன்சூரன்ஸ் என்று கொடிகட்ட பறக்க விட்டுவிட்டு ஜெனரிக் மருந்து கொடுத்தேன். ஏழைக்கு மருத்துவவசதின்னு சொன்ன பொய் வெளியே வந்துள்ளது. நீட் தேர்வும் அந்த பெரிய ஆட்டத்தின் ஒரு நகர்வே.

  • GMM - KA,இந்தியா

    சுகாதாரப் பிரச்சினைகள்- தனிப்பட்ட பழக்கங்கள்(புகைபிடித்தல், ஒயின் நுகர்வு மற்றும் சீரற்ற உணவுகள்), அரசு சுகாதார பாதுகாப்பு சேவை குறைபாடு மற்றும் அதிகப்படியான மக்கள்தொகை. மருத்துவ, சட்ட மற்றும் நிறுவனம் தணிக்கைக்கான நிலையான கட்டணம் இல்லை. அனைவருக்கும் மருத்துவ அட்டை கட்டாயமாகும். மருத்துவ சிகிச்சையின் முன், அரசாங்க மருத்துவமனையின் மருத்துவ மதிப்பீடு மருத்துவ கட்டணத்திற்கான ஒரு வழிகாட்டியாகும். செயற்கை உடல்நல சேதத்தை அரசு முடிவு செய்ய வேண்டும்.

  • rajan - kerala,இந்தியா

    எல்லாவற்றிற்கும் காரணம் மரணம் மருத்துவனை கூட விட்டு வைக்காது என்ற உண்மையை மறந்து மருத்துவர்கள் பணி செய்வதே. இங்கு மருத்துவ சேவை என்பது பணம் சார்ந்ததாகி விட்டதே. ஒண்ணும் பண்ண முடியாது.

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    மருந்துகள் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. மருத்துவ மனைகளும் ரத்தப் பரிசோதனை, அது இது என்று பணம் பிடுங்குகின்றனர். மக்களும் சிறிய தலைவலிக்கும் உடல் வலிக்கும் மருத்துவரிடம் ஓடுகின்றனர்.

  • makkal neethi - TVL,இந்தியா

    கார்போரேட் மத்திய அரசும் மருந்து கம்பெனிகளும் கூட்டு கொள்ளையில் மக்கள் ஏழையாக ஆகின்றார்கள் என்று தலைப்பிட்டிருக்கலாம்

  • Somiah M - chennai,இந்தியா

    இங்கு மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவி என்பது மக்களின் நோயை தீர்ப்பதாகவும் நோயாளிகளுக்கு உதவி செய்வதாகவும் இருக்கவேண்டுமே அல்லாது மருந்து கம்பெனிகளுக்கும் மருத்துவர்களுக்கும் உதவி செய்வதாக இருக்க கூடாது .மருந்துகளின் விலை குறைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே தவிர குறைந்ததாக தெரியவில்லையே .

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

      அவர்களின் நோக்கமே பணம் பண்ணுவது தான். மருத்துவ சேவை கிடையாது. ஆளும்கட்சிக்கு கமிஷன் மனி. மக்களுக்கு சாவுமணி.

    • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

      ஆளுங்கட்சின்னு யாரை சொல்லறீங்க ... யார் எவ்வளவு பணம் பண்ணாங்கன்னு கொஞ்சம் விரிவா சொல்லறீங்களா???

  • Rajasekar - Trivandrum,இந்தியா

    உழைப்பதை நிறுத்தியதே இதற்க்கு காரணமாக இருக்கலாம், எதற்கு எடுத்தாலும் அரசு செய்யவேண்டும் என்று எதிர்பார்த்து இருப்பது மக்களை சோம்பேறி ஆக்கிவிட்டது. தேவை இல்லாமல் பல டிவி சானெல்கள் மக்களை சிந்திக்கவிடாமல் செய்கிறது, தற்போது மொபைல் அடிமைகளாகிவிட்ட மக்களுக்கு நோயைத்தவிர வேறு என்ன வரும்???? அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை அனைத்திலும் ஊழல் உழைத்து சம்பாதித்த கிராமத்தினரையும் வாழ்வாதாரங்களை பறித்து ஏமாற்றி பிழைக்கத்தூண்டுவதால் ஒவ்வொருவரும் ஒருவித மனஅழுத்தத்திலேயே வாழ்வதால் நோய் என்பது தவிர்க்க முடியாததாகிறது.

  • christ - chennai,இந்தியா

    பிசா, பர்கர் ,பாஸ்ட் புட், வெளிநாட்டு குளிர்பானங்கள் என அந்நிய சமாசாரங்கள் நம் நாட்டுக்குள் புகுந்து நமது பாரம்பரிய உணவுகளை புறக்கணித்து இன்று நோய் நொடியுடன் வாழ்கிறோம் .

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    சில மாதங்களுக்கு முன் வந்த செய்தியில், டெங்கு காய்ச்சலுக்கு பதினெட்டு லட்சம் பில் போட்டு ஒரு மருத்துவமனை சாதனை செய்ததே..நோயாளி இறந்ததுதான் மிச்சம். இப்படி இருத்தால் அரசனும் ஆண்டியாவான். மருத்துவம் சேவை அல்ல, மருத்துவர்கள் தெய்வங்களும் அல்ல, மருத்துவமனைகள் ஆலயம் அல்ல..பணப்பேய்கள் உலாவும் கொலைகார பட்டறைகள்தான் அவை. ஏதோ, மோடி கேர் திட்டமாம், அது வந்தால் ஏதாவது மாறுமா என்று பார்ப்போம்..

  • MATHI,L.K. - Lalgudy,இந்தியா

    மருத்துவ செலவு காரணமாக, ஏறக்குறைய 5.5 கோடி இந்தியர்கள் கடந்த ஒரே ஆண்டில் ஏழை ஆகி உள்ளது தான் உண்மை நிலை. வாழ்க பாரதம் அம்பானி,அதானி குடும்பங்கள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன்

  • Subramani Sekar - Bengaluru,இந்தியா

    சித்தம், ஆயுர் வேதம் , யுனானி போன்ற இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மருத்துவத்தை வியாபாரமாக்கிக் கொல்லாதீர்கள்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ரியல் எஸ்டேட் தொழிலை உரம் போட்டு வளர்கிறீர்கள்... இருக்கும் கொஞ்சம் நஞ்சம் விளை நிலங்களில் உண்மையான விவசாயத்தை பசும் தாள் உரத்தை மறந்து ரசாயனத்தை போட்டு வளர்கிறீர்கள்/..அப்பறம் வியாதிகள் வராமல் என்ன செய்யும்... இதை நம்பிதான் எல்லா அரசியல்வாதிகளும் பணம் கொட்டக்கூடிய மருத்துவமனைகளையும்,. பள்ளிகளையும் , கல்லூரிகளையும் வைத்து இருக்கிறார்கள்... விவசாயத்தை பசுமை உரம் போட்டு முறையாக நீண்ட நாள் பயிராக செய்யுங்கள்.. வீரிய ரக பயிர்களை விட்டு ஒழியுங்கள்... மக்கள் தொகைக்கு தகுந்தாற் போல விவசாயத்தை பெருக்குங்கள்... ரியல் எஸ்டேட்டை அறவே ஒழியுங்கள்... வீட்டை வைத்து சாப்பிட முடியாது..,.அரிசியை/கோதுமையை உண்ணலாம்...

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    கொழுப்பை குறையுங்கள் உடம்பு ஆரோக்கியமாய் இருக்கும் .

    • MATHI,L.K. - Lalgudy,இந்தியா

      கொழுப்பை குறையுங்கள் உடம்பு ஆரோக்கியமாய் இருக்கும் என்று எங்களுக்கு அறிவுரை கூறும் வாசகர் இந்தியன் குமார், தமிழக அமைச்சர்களைப்பார்த்து சொல்லக்கூடாதா? ஓசியில் உடம்பை வளர்த்து, 'ரோடு ரோலர்' போல தொகுதிப்பக்கம் கூட செல்லாமல், சென்னையிலேயே உலாவருவது அவர் கண்ணில் படவில்லையா?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தினம் அடிப்படையான உடற்பயிர்ச்சி செய்தால் கூட பாதி நோய் அண்டாது.. இதை மோடி சொன்னவுடன் எகிறும் பலர் சிந்திக்க மறுப்பதும் ஒரு வகை மோடி எதிர்ப்பு நோய்தான்.

    • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

      ஏண்டா நாட்டுல எல்லாரும் கூமுட்டைனு நெனச்சித்திருக்கீங்களா? எல்லாருக்கும் நல்லா தெரியும்? எத எப்ப எங்க செய்யனுமோ அப்ப செஞ்சிடிருக்கனுக..சும்மா வெட்டியா வீண் விளம்பரமும் சைடு திணிப்புகளும் இல்லாம இரு..முதல்ல பிஜேபியை பத்தி பேசுறவன எதிர்ப்பாளான்னு பேசுற மன நோயல்ல இருந்து வெளிய வா..நீ உருப்படலாம்...

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      முட்டாள்... உடற்பயிற்சி செய்தால் அது ஹரம் என்று சொல்லும் பகுத்தறிவு இருக்கும் உன்னிடம் பேசி பிரயோஜனம் கிடையாது...

    • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

      முட்டாள்... உடற்பயிற்சி செய்தால் அது ஹரம் என்று சொல்லும் பகுத்தறிவு இருக்கும் உன்னிடம் பேசி பிரயோஜனம் கிடையாது///கர்த்தரே இந்த அறிவிலியின் கோபத்திற்கு சாந்தி கொடுத்து உண்மைகளை தெளியவைக்க கிருபை செய்வாயாக... அல்லவே இவனுக்கு போதிய அறிவை கொடுத்து மனித நேயத்துடன் வளர நல்லமாற்று பாதையை காண்பிப்பாயாக...சிவ சிவா காசிமணிக்கி உன்னுடைய மூன்றாவது கண் வேண்டாம் ஒற்றைக்கண்ணாலே சைகையில்மனதை மென்மையாக்கி உண்மைகளை புரியவைப்பாயாக...

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    பசித்தபின் புசியுங்கள் மருத்துவ செலவு பாதியாக குறையும்.

  • பிரபு - மதுரை,இந்தியா

    நோய்களை குணமாக்க காப்பீட்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, அந்த நோய்களை வரவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. இதுவும் கார்பொரேட் நிறுவனங்களை வாழவைக்க தானே.

  • Prakash - Chennai,இந்தியா

    இப்படி மருத்துவ செலவு செய்து கொண்டிருந்தால் எப்படி பிழைப்பது? வரி மட்டும் கட்டுறோம். GST ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கோடி. என்ன செய்யறாங்க.

  • Darmavan - Chennai,இந்தியா

    இன்னும் நம் நாட்டு மருந்துகளில் ஆராய்ச்சி செய்யவேண்டும். காரணம் மூலிகை வைத்தியம் பல நாட்கள் ஆகின்றது என்பது முக்கிய காரணம். நம் நாட்டு மருந்துகளை வீரியப்படுதே சீக்கிரம் குணம் பெறும் வகையில் ஆராய்ச்சி நடந்தால் ஆங்கில மருந்துகளின் ஆதிக்கம் குறையும். ஆனால் இதில் வேதனை நாட்டு மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் போன்று பணம் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான்.

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    "மருந்துகளின் செலவுகள் மருத்துவமனைகள் சார்ந்ததாக இருப்பதால் ..." என்ற செய்தி நூற்றுக்கு நூறு உண்மை. அதுமட்டுமல்ல- ரொட்டீன் மருத்துவ பரிசோதனைகள் இன்னும் மருத்துவ செலவை அதிகரிக்கின்றன. மருத்துவ செலவை எதிர்கொள்ள முடியாமல் இறந்தோர் ஏராளம். ஒரு சிறு உதாரணம்: இரு அரசு ஊழியரான நோயாளிகள் அரசு அனுமதி அளித்துள்ள இருவிதமான மருத்துவ மனைகளில் அட்மிட்டாகி கிட்டத்தட்ட தலா 5 லட்சம் மருத்துவ செலவாகிறது. ஒருவர் பணம் எதுவும் காட்டாமல் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வீடு திரும்புகிறார். இன்னொருவரோ செலவான 5 லட்சம் பணத்தையும் கட்டிவிட்டு வீடு திரும்பியபின் Medical Reimbursement கேட்டால் அவருக்கு 1 லட்சம் ரூபாய் கூட கிடைப்பது இல்லை.இதுதான் உண்மை நிலை.

  • raja - Kanchipuram,இந்தியா

    இன்சூரன்ஸ் திட்டங்கள் தனியார் மருத்துவமனைகளை வளர்ப்பதற்காகவே, மக்கள் நலனுக்காக அல்ல. இந்தியாவில் ஆட்சியாளர்கள் எப்போதும் தனியார் துறை வளர்த்து விடுவதிலே குறியாக உள்ளனர்

  • raja - Kanchipuram,இந்தியா

    மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளை தடுக்கப்படுவதே இல்லை

  • Shake-sphere - India,இந்தியா

    பொதுமக்களின் நோயை தங்களின் வருமானமாக மாற்றி கொள்ளையடிக்கும் அல்லோபதி அயோக்கிய கும்பல் DOCTOR என்ற போர்வையில் கொலை செய்தும் மக்களை துன்புறுத்திக்கொண்டு உள்ளனர். உங்களுக்கு எவ்வளவு வலிக்கிறதோ அவ்வளவு சந்தோஷம் அந்த அல்லோபதி DOCTOR களுக்கு ஏனெனில் அவ்வளவு பணம் கிடைக்கும் என்பது தான். இவர்களின் சித்திரவதையை நான் நன்கு அனுபவித்துள்ளேன். அதனாலேயே இதனை எழுதுகிறேன். இதற்காக தான் இவர்கள் DOCTOR என்கிற காகிதத்தை லட்ச கணக்கில் செலவு செய்து வாங்குவதற்கு அலைகிறார்கள். மருத்துவர் என்பது அர்ப்பணிப்புடன் பணம் வாங்காமல் செய்ய வேண்டிய வேலை.

    • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      அல்லோபதி மருத்துவ முறையை மாற்றி விட்டு நமது பாரம்பரிய முறைகளான ஆயுர்வேதம் சித்தா முறைகளை கடை பிடிக்கலாம். ஹோமியோ சிகிச்சை முறை மேல் நாடுகளில் பிரபல்யம் ஆகி வருகின்றது. அல்லோபதி மருத்துவ முறை பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக மாறிவருகின்றது அதற்காக பெருபான்மையான மக்களை நோயாளிகள் ஆக்கும் திட்டமும் நடை முறையில் ஆகி வருகின்றது . சுகர் , பிரஷர், கொலஸ்ட்ரால் துடங்கி இப்போது கேன்சர் வரை வந்து நிற்கின்றது .

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    கொடுக்கப்படும் புகார்களை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் , மேலும் மக்களுக்கு நோயாளிகளின் உரிமை , நுகர்வோர் சட்டங்கள் சொல்லிக் கொடுக்கப்படவேண்டும். மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    மருத்துவர்களின் ஆலோசனை கட்டணம் , பரிசோதனை கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்படவேண்டும். மேலும் மருத்துவர்கள் ஜெனிரிக் மருந்துகளை எழுதாமல் இன்றும் கம்பெனிகளின் மருந்து பெயர்களை எழுதுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு ஊக்க தொகை கொடுக்கப்படுகிறது விளைவு 10 ரூபாய்க்கு விற்கவேண்டிய மாத்திரை 100 -150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      சாதாரண வேலைக்கு போகின்றவர்கள் கூட income tax கட்ட வேண்டி இருக்கின்றது , பிரைவேட் ப்ராக்டிஸ் என்று டாக்டர்கள் வாங்கும் கோடி கணக்கான ரூபாய்களுக்கு ஒரு கணக்கும் இல்லை.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    தனியார் மருத்துவக் காப்பீட்டுத் தொழில் வளர இது போன்ற ஆய்வுகள் உதவும் ...

  • Gnanam - Nagercoil,இந்தியா

    மக்களின் நல்வாழ்வு கருதி, அரசு ஒரு நல்ல மருத்துவ காப்பீட்டு திட்டம் அமைத்து செயல்படுத்த வேண்டும். ஒரு தனி அமைச்சகமே உருவாக்கலாம். வயது வரம்பின்றி எல்லோருக்கும் தரமான மருத்துவ சிகிச்சையும், மருந்தும்,உணவும் கொடுக்கக்கூடிய காப்பகம் அமைக்கவேண்டும். நன்மனம் படைத்த கொடையாளிகளின் நன்கொடையாகவும், நோயாளிகளின் ஆண்டு சந்தாவுமாக பணம் வசூல் செய்து உலகதரம் வாய்ந்த மருத்துவ காப்பீட்டு வசதி எல்லோருக்கும் வழங்கலாம். [ அரசு அதிகாரிகள் சிந்தனைக்கு…]

    • MATHI,L.K. - Lalgudy,இந்தியா

      அரசு ஒரு நல்ல மருத்துவ காப்பீட்டு திட்டம் அமைத்து செயல்படுத்த வேண்டும். என்று ஞானம் என்ற வாசகர் கூறுகிறார். அங்கு மட்டும் கருப்பு ஆடுகள் நுழைவதை எப்படி தடுப்பது?அரசு திட்டம் என்றாலே, கொள்ளை அடிக்கும் திட்டம் என்றாகி விட்டதே? பூனைக்கு மணி கட்டுவது யார்?

  • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

    முற்றிலும் உண்மை. புற்றுநோய் நோயாளிகளின் சுற்றத்தாரை ஏழையாக்கி விடுகிறது. நோய்க்கு சிகிச்சை செய்யவில்லை என்றால் நோயாளிகள் துடிதுடிப்பர். சிகிச்சை செய்தால் செல்வம் உள்ள சுற்றத்தார்களும் ஏழையாகி துடி துடிப்பார்கள். மிக மிக வருத்தமான நிகழ்வு. ஒரே தீர்வு இந்த நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

  • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

    அப்ப பரீக்கர் ஐயாவும் ஏழையாகிவிடுவாரா?

    • Sanjay - Chennai,இந்தியா

      ட்ராகோஸ்டோமி கட்டுமரம் ஏழையானால் நிச்சயம் பரிக்கரும் ஏழைகிவிடுவார்

  • Nathan -

    சுற்று சூழலை மேம்படுத்தினாலே மிகப்பெரிய அளவில் மருத்துவ செலவை குறைக்கலாம்

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

    மன அழுத்தம், வாழ்க்கை முறை, உணவு கட்டுபாடு சரி செய்யாதவரை மருத்துவ செலவை குறைக்க முடியாது

  • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

    " Medical Miracle " என்பது இதுதானோ?...

  • Sriman - Chennai,இந்தியா

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்த நம் பாரம்பரிய வைத்திய முறைகளான மூலிகை வைத்தியம், சித்த வைத்தியம், நாட்டுவைத்தியம், ஹோமியோபதி வைத்தியங்கள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்தது. அரியவகை மூலிகைகளை சமூகவிரோதிகளை வைத்து அழித்தது, எதோ படிப்பறிவில்லாத மக்கள், கிராமப்புறங்களில் வாழும் மக்கள்தான் இதுபோன்ற வைத்திய முறைகளை பகுத்தறிவு இல்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்று அறிவுஜீவிகளை விட்டு பிரச்சாரம் செய்தது, செய்வது என்று மெடிக்கல் மாஃபியாக்கள் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமா. இன்றைக்கும் அக்குபங்சர் முறையை சீனா போன்ற நாடுகள் போற்றி பாதுகாத்துவருவது போல நாமும் நம் வைத்தியமுறைகளை காப்பாற்றி இருக்க வேண்டும். யோகாவையாவது மீட்டெடுக்க துவங்கினார்களே அதுவே சந்தோசம். யோகாவையாவது பள்ளிக்கூடங்களில் நடைமுறைப்படுத்துங்கள் கனவான்களே. ஒரு மனிதனுக்கு யோகாவில் ஆர்வம் ஏற்பட்டால் அவனை புகை, மது போன்ற போதை பழக்கங்கள் அண்டாது. இன்னும் சொல்லப்போனால் இந்த தீய பழக்கம் மிகுந்த ஒருவன் யோகா செய்ய ஆரம்பித்தால் இந்த பழக்கம் அவனை விட்டு அடியோடு ஒழிந்துவிடும். உடலில் உள்ள அணைத்து பாகங்களும் புத்துணர்ச்சியோடு செயல்படும். பிறக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்கும்.

    • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      ஸ்ரீமன் அவர்களே உங்கள் கருத்து முற்றிலும் சரியானது. கண்முடி தனமாக ஆங்கிலேய மருத்துவத்தை கடை பிடித்ததின் விளைவுகளை நாம் இப்போது அனுபவிக்கிறோம்

    • kanchi siva - chennai,இந்தியா

      அருமை சார்

    • sri - trichy,இந்தியா

      i have smoking habit. when i started doing pranayamam my liking to smoking reduced and in six months i have stopped completly. i request all to do that. do not make religion as obstagle.

  • senthil - chennai,இந்தியா

    இது தான் அலோபதி மருந்தின் சாதனை ...........திரும்பவும் மக்கள் பழைய நாடு மருத்துவத்தை பயன்படுத்தி ஆக வேண்டும் ....நல்ல வாழ்க்கை முறையை தொடர வேண்டும் .....தடை அதை உடை என்ற எண்ணம் மாறி விதி அதை மதி என்ற எண்ணம் வளர வேண்டும் ... என்ன ஒரு சங்கடம் ...முறையான நாட்டு மருந்து செய்பவர்கள் குறைவு ... செய்முறையில் சில அடுக்குகளை ( steps ) செய்யாமல் ( skip செய்து ) மறந்து செய்வதினால் அதன் உண்மையான வீரியம் இருப்பது கடினம் ....

  • srinivasan - bangalore,இந்தியா

    முதலில் அடிப்படை தேவைகளான இருக்கும் மருந்து, மருத்துவம், டீசல், பெட்ரோல் போன்ற வற்றை சார்ந்து இருக்கும் நிறுவனங்கள்,விளம்பரம் செய்ய , ஸ்பான்ஸர் செய்ய தடை விதிக்க வேண்டும்,இது போன்ற அனாவசிய செலவுகள் மக்கள் செலுத்தும் பணத்தில் நடப்பதால் தான் விலைகள் விண்ணை முட்டுகின்றன. சிலரின் பெருத்த லாபத்திற்காக அப்பாவி மக்களின் வியர்வை வீணடிக்கப்படுவது கொலையை போன்ற மோசமான செயல்.

  • R Sanjay - Chennai,இந்தியா

    கடந்த 50 ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகள், கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு விற்றதன் பலன் இன்று நாம் அனுபவிக்கிறோம். ஒரு சாதாரண மனிதன் உடல் நிலை சரியில்லை ஹாஸ்பிடல் என்று உள்ளே கால்வைத்தால் அவன் சொத்தை முழுவதும் பிடுங்கிக்கொண்டு உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவிற்கு வெளியே விடுவார்கள் மற்றும் ஒரு சாதாரண குடும்பம் தன் மக்களை பள்ளியில் சேர்க்க பள்ளி வளாகத்தில் கால் வைத்தால் போதும் அடுத்த 15 வருடத்திற்கு அவனை பிச்சை எடுக்க வைத்து விடுவார்கள்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    சுற்றுப்புற சுகாதாரத்தையும் நோய்த்தடுப்பு பற்றிய விழிப்புணர்வையும் சரி செய்யாமல் நோய்வந்தபிறகு அதிக செலவு என்பது முட்டாள்தனம். மருத்துவத்திற்கு செலவிடப்பட்டதைப் போல மூன்று மடங்கு சுத்தம் சுகாதாரத்துக்கு செலவழித்திருந்தால் இத்தனை மருத்துவமனைகளுக்கோ டாக்டர்களுக்கோ நீட்டுக்கோகூட அவசியமேற்பட்டிருக்காது. மத்திய அரசு என்னதான் சுவச் பாரத் என்று செலவழித்தாலும் மாநில அரசு மற்றும் உளளாட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் குறைவு .அது வாக்குவங்கிக்கு உதவுவதில்லையே . இங்கேகூட படித்த திராவிஷர்களே தூய்மை பாரதம் என்பதையே மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கிறார்களே தவிர தாமாக உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை .அது சமீப டுமீல் இயற்கை டிசைன்

  • IYAPPAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இப்போதாவது புரியுதா ? தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை மேலும் ஏழ்மை ஆக்கி கொண்டு இருக்கிறது இந்த கார்பொரேட் கம்பெனிகள் .

  • a.thirumalai -

    அரசாங்கம் நினைத்தால் ஹி ஹி ஹி ஹி ஹி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement