Advertisement

டாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி

புதுடில்லி : மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு அச்சம் காரணமாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 2018ம் ஆண்டிற்கான நாட்டின் டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.


டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியல் :

1. சென்னை ஐஐடி (88.95 புள்ளிகள்)2. பாம்பே ஐஐடி (84.82 புள்ளிகள்)3. டில்லி ஐஐடி (82.18 புள்ளிகள்)4. கரக்பூர் ஐஐடி - மேற்குவங்கம் (77.78 புள்ளிகள்)5. கான்பூர் ஐஐடி - உ.பி., (75.24 புள்ளிகள்)6. ரூர்கீ ஐஐடி - உத்திரகாண்ட் (72.57 புள்ளிகள்)7. கவுகாத்தி ஐஐடி - அசாம் (69.25 புள்ளிகள்)8. சென்னை அண்ணா பல்கலை., (67.04 புள்ளிகள்)9. ஐதராபாத் ஐஐடி (60.87 புள்ளிகள்)10. மும்பை இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (60.63 புள்ளிகள்)11. திருச்சி என்ஐடி (60.35 புள்ளிகள்)12. கோல்கட்டா ஜாதவ்பூர் பல்கலை., (59.82 புள்ளிகள்)13. தன்பத் ஐஐடி - ஜார்கண்ட் (59.24 புள்ளிகள்)14. இந்தூர் ஐஐடி (57.95 புள்ளிகள்)15. ரூர்கேலா என்ஐடி (57.05)16. வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (57.02 புள்ளிகள்)17. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சையின்ஸ், பிலானி (56.98 புள்ளிகள்)18. புவனேஸ்வர் ஐஐடி (56.89 புள்ளிகள்)19. வாரணாசி ஐஐடி (பனாரஸ் இந்து பல்கலை) (56.62 புள்ளிகள்)20. தபர் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பட்டியாலா (56.14 புள்ளிகள்)21. சூரத்கல் என்ஐடி (53.16 புள்ளிகள்)22. ரோபர் ஐஐடி (52.80 புள்ளிகள்)23. திருவனந்தபுரம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி (52.74 புள்ளிகள்)24. பாட்னா ஐஐடி (52.37 புள்ளிகள்)25. வாரங்கல் என்ஐடி (51.82 புள்ளிகள்)26. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி (51.12 புள்ளிகள்)27. காந்திநகர் ஐஐடி (50.45 புள்ளிகள்)28. மாண்டி ஐஐடி (50.44 புள்ளிகள் )29. கோவை பிஎஸ்ஜி காலேஜ் ஆப் டெக்னாலஜி (50.31 புள்ளிகள்)30. சிப்பூர் (ஹவுரா) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரி சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி (49.90 புள்ளிகள்)

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (30)

  • Ramkumar Valmikanathan - Chandler,இந்தியா

    நான் படித்த MUICT (Erstwhile UDCT ) 10 வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது..

  • Anil Kumar radhakrishnan - Coimbatore,இந்தியா

    PSG Coimbatore , great

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிற அமி_ ஷா முதல் அனைத்து பீஜேபீ யினரும் அறிந்து கொள்ள வேண்டியது : இந்த ஐ.ஐ.டி. கள் மற்றும் என்.ஐ.டி.கள் (பழைய பெயர் ஆர்.இ.சி.) அனைத்துமே காங்கிரஸ் உருவாக்கியது. அனைத்து ஐ.ஐ.எம். களும் காங்கிரஸ் உருவாக்கியவை தான் என்பது கூடுதல் செய்தி.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    நமது கல்வி புதிய கொள்கை முழுதுமாக அமல் படுத்த்த பட இருக்கின்ற 2020 வருடத்திற்கு பிறகு பாப்போம் இந்த லிஸ்டில் எத்துணை கல்லூரிகள் வெளியேறுகின்றன என்று. வெளி நாட்டு பல்கலைகள் நேரடியாகவும் மறைமுக கட்டுப்படுத்தும் வகையிலும் உள்ளே வர அனுமதி கொடுத்தாயிற்றல்லவா, அப்போது தெரியும் இவர்களின் உண்மையான தரம். தமிழகம் கல்வியில் நிச்சயம் மிளிரும். இப்போதே எத்துணையோ நிறுவனங்கள் வெளி நாட்டு சிறந்த பல்கலையுடன் புரிந்துணர்வும் கொண்டு அவர்களின் மாநிலத்தையும் பெற்று அவர்களுடன் இணைந்தோ அல்லது அவர்களுக்கே விட்டு கொடுத்தோ வந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு உயர் பல்கலைகளின் தரமான கல்வி இங்கேயே கிடைக்கும்.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இவர்களின் கணக்கு வழக்குகள் பள்ளி விவரங்களையெல்லாம் அவசர கோலத்தில் அள்ளி தெளித்தது போலத்தான் இருக்கும். ஒவ்வொருவரிடமும் வழக்கம் போல இந்த லிஸ்டில் சிறுது மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த லிஸ்டில் இருக்கும் கல்லூரிகள் அப்படையே இருக்கும். கான்பூர், மும்பை, சென்னை ஐ ஐ டி களின் தரவரிசை முதல் இடங்களில் மாறி மாறி தான் வருகிறது. மேலாண்மை கல்லூரியில் அஹமதாபாத் கல்லூரிதான் முதலில் வந்து கொண்டிருக்கும். அரசின் மற்ற கல்லூரி களை இவர்கள் நன்கு ஊக்கு வைக்கவேண்டும். திருநெல்வேலி, சேலம் அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அந்த ஐ ஐ டி ஆசிரியர்களை மாற்றி அங்கே தரமான பாடங்களை புகுத்துவதற்கு கற்பிப்பதற்கு அரசு முயலலாம்?

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இருக்கட்டும். அதில் படிப்பவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களோ பெரும்பான்மையானவர்கள் மற்ற மாநிலத்தவர்.

  • IloveIndia - Chennai,இந்தியா

    ஆச்சர்யமா இருக்கு SRM இல்லையா? என்ன மதிப்பீட்டின் படி இந்த தர பட்டியலை தயாரித்தார்கள் அல்லது வெளியிட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற தர பட்டியலை வெளியிடுகிறார்கள். எது உண்மை என்றே தெரியவில்லை. மேலும் பிட்ஸ் பிலானிக்கு பதினேழாவது இடம் என்பது தான் ஆச்சர்யத்தின் உச்சக்கட்டம்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இந்தியாவில் முதலாவதாக வந்த கல்லூரி நிறுவனம் தமிழ் நாட்டில் உள்ளது சந்தோஷ படவேண்டிய ஒன்று.. அதில் .தமிழர்களும் இருக்கிறார்களே...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    படிக்கும் பிள்ளை எங்கு இருந்தாலும் படிக்கும்... எங்கேயும் சீட் வாங்கும்...

    • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

      ஆசிரியர்கள் ஒழுங்காக நடத்தினால் அணைத்து மாணவர்களும் மேலே வருவார்கள்.... ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அவசியம்...

  • tamil pesum Indian - Mumbai ,இந்தியா

    VIT velore institute of technology பல IIT NIT விட முந்தியுள்ளது . திராவிட கட்சி தலைவர் ஆரம்பித்தது தான் இது . // அவை எல்லாம் புதியதாக ஆரம்பித்த கல்லூரிகள்.... //முக்கால்வாசி பேர் ஆந்திராவில் இருந்து படிப்பவர்கள் தான் ..// அவர்களும் திராவிடர்கள்தானே ?

  • karthi - chennai,இந்தியா

    மேலே உள்ள தர வரிசை பட்டியலில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எப்படி உள்ளே நுழைந்தது. இதற்க்கு 16 ஆம் இடம் கொடுத்துவிட்டு உலக புகழ்பெற்ற பிட்ஸ் பிலானி க்கு 17 ஆம் இடம் கொடுத்து இருக்கிறார்கள். இது மட்டும் தான் பெரிய அளவில் கடுமையாக இடிக்கிறது. இந்த பட்டியலில் வேலூர் இன்ஸ்டிடியூட் வருவதற்க்கே தகுதி இல்லை. மற்ற படி இந்த பட்டியலில் இடம்பெற்ற அனைத்தும் தகுதியான கல்லூரிகள். வேலூர் இன்ஸ்டிடியூட் டில் படிப்பதற்கு பணம் இருந்தால் போதும். சீட் உறுதி. மார்க் அவசியம் இல்லை. ஆனால், ஐஐடி, NIT , பிட்ஸ் போன்ற கல்லூரிகளில் படிப்பதற்கு பல ஆண்டுகள் கடுமையாக படித்து ENTRANCE தேர்வில் பாஸ் செய்தால் தான் அட்மிஷன் கிடைக்கும்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    \\\\ இதனால் நீட் தேர்வு அச்சம் காரணமாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. //// நீட் தேர்வை விட ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு ரொம்பவும் கஷ்டம் .... இது தெரியுமா?

    • Anandan - chennai,இந்தியா

      எல்லா பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு ஐஐடி நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லைங்க.

  • Jaya Ram - madurai,இந்தியா

    கல்வித்தரம் கம்மியாக உள்ளது என்றீர்களே இப்போ முப்பதிலே மூன்று கல்லூரிகள் தமிழ்நாட்டினை சேர்ந்தவையாகும் ஆனால் நீட் என்றபெயரில் எங்களை ஒடுக்க நினைக்கிறீர்கள் ஆனால் அதுவே மொத்த இந்தியாவிற்கும் வினையாக போகிறது இந்தியாவின் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களை 75 சதவீதத்தினை தமிழக மாணவர்கள் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனை எங்களை பழிவாங்க நினைக்கும் அனைவருக்கும் கூறிக்கொள்கிறோம்

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    நாட்டில் வணிகம் மற்றும் தொழில்களில் பத்துக்கும் குறைவான சதவீத தொழில்களுக்கே பொறியாளர்கள் தேவை ஆனால் இப்போ வீட்டுக்கு ஒருவர் எஞ்சினீரிங் படிக்கிறார்கள் . சமத்துவ சமுதாயத்தில் யார் என்ன படிக்கலாம் என்பதை அரசு தீர்மானிக்க முடிவதில்லை உரிமை பறிபோகிறது நான் என்ன படிக்கவேண்டும் என்பது என்னிஷ்டம் அதனை அரசு எப்படி தீர்மானிக்கலாம் என சண்டைக்கு வருகிறார்கள் ஆனால் இஷ்டத்துக்கு எதையோ படித்துவிட்டு மென்திறன்களை வளர்த்துக் கொள்ளாமல் வேலைகேட்டால் மட்டும் அரசு தரவேண்டுமாம் இல்லாவிட்டால் பகோடா அரசாம் . இதென்ன நியாயம்?

    • raja - Kanchipuram,இந்தியா

      வேலை வாய்ப்பு உருவாக்க தெரியாத, நாட்டிற்கு தேவையான கல்வி திட்டம் வடுவாக தெரியாத அரசாங்கம் தேவை இல்லை

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    இது ஒரு சரியான மதிப்பீடு இல்லை. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு 8 -வது இடம் என்பது நம்பும்படியாக இல்லை. இதைவிட சிறந்த என்ஜினியரிங் கல்லூரியான SSN 30 -இல் வரவில்லை என்பதிலிருந்தே இந்த லிஸ்ட் சரியில்லை என்று தெளிவாகிறது. இந்தியாவில் உள்ள எல்லா IIT -களும் இந்த 30 -இல் வருவதும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. சமீபகாலமாக சென்னை IIT -யில் அடிதடி, சாதி சண்டை போன்றவை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு நம்பர் ஒன் கொடுத்திருப்பதும் எங்கேயோ இடிக்கிறதே.

  • sundaram - Kuwait,குவைத்

    ஏனுங்க தமிழக பாஜக பைனான்சியர் காலேஜ் இந்த லிஸ்டுல இல்லையே.

  • Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    அப்போ இனி நீட் போல ஒரு JEET வரும்....நம்ம தமிழ்நாட்டு மாணவர்களின் இன்ஜினியரிங் கனவும் அம்பேல்தான்...

  • PrasannaKrishnan -

    close the remaining colleges

  • Bhaskaran - Chennai,இந்தியா

    வேலூர் KALLORI ஆரம்பிக்கும்போதே பல திராவிடத்தலைவர்கள் கல்லூரி ஆரம்பித்தனர் அவை ஒன்றும் லிஸ்டில் இல்லையே

    • BoochiMarunthu - Paradise papers,பனாமா

      திராவிடர்கள் எல்லாம் குடிகாரர்கள் பிரியாணிக்கு அலைபவர்கள் என்று ஒரு கூட்டம் மட்டம் தட்டுவதே வாழ்க்கை குறிக்கோளா உள்ளது அனால் இந்த லிஸ்டில் ஒரு ஆரியர் கல்லூரி கூட இல்லியே ? பிஜேபி மத்திய அமைச்சருக்கு சொந்தமான அம்ரிதா நிறுவங்கள் இந்த லிஸ்டில் இல்ல .

    • Shriram - Chennai,இந்தியா

      ஆனா அதுல படிக்கிறவன பார்தெண்ணு வை. 75 % ஆரியனாத்தான் இருப்பான். அதுனால் ரொம்ப அலட்டிக்காதே பூச்சி.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    பேருக்கு தான் சென்னை IIT , முக்கால்வாசி பேர் ஆந்திராவில் இருந்து படிப்பவர்கள் தான் .

    • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

      உண்மை .ஆந்திராவில் மற்றும் ,தெலுங்கானாவில் ஐஐடி கோச்சிங் சென்டர்கள் அதிகம்..மேலும் நம் தமிழகத்தில் ஸ்டேட் போர்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஐஐடி என்ட்ரன்ஸ் பற்றிய புரிதல்/ விவரங்கள் அதிகம் தெரியாது .அதனால் தான் ஐஐடி jee மெயின் எக்ஸாம் பாஸ் செய்யும் தமிழக கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மிக மிக குறைவு. இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

  • mindum vasantham - madurai,இந்தியா

    சமூக விரோதியை மாறியிருக்கும் தீய சக்தியின் மைந்தனின் அடுத்த போராட்டம் இக்கல்லூரியில் தான்

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    IIT NIT முதல் இடங்களில் இருப்பது சாதனை அல்ல . VIT velore institute of technology பல IIT NIT விட முந்தியுள்ளது . BITS பிலானி விட சிறந்தது என்று உள்ளது. ஒரு திராவிட கட்சி தலைவர் ஆரம்பித்தது தான் இது . இது தான் சாதனை .

    • mindum vasantham - madurai,இந்தியா

      அங்கே பீஸ் எவ்வளவுன்னு தெரியுமா , டொனேஷன் எவ்வளவுன்னு தெரியுமா , அங்கே வெளியேறும் மாணவர்களை விட nit தான் தரம்

    • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

      அங்கே நீங்க சேர்ந்து படிக்கலையா பாஸ் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement