Advertisement

அரசு மாணவியர் விடுதிக்கு ஏற்பட்டுள்ள...ஆபத்து!அதிகாரிகளின் அலட்சியத்தால் அவலம்

கண்டமங்கலம்;கண்டமங்கலத்தில் 45 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட அரசு மாணவியர் விடுதி, திறப்பு விழா கண்ட 3 ஆண்டுகளில் தரைமட்டமாக இடிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.க்ஷ
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பழையகாவல் நிலைய பஸ் நிறுத்தம்அருகில், தனியாருக்குச் சொந்தமான வாடகை கட்டடத்தில் 'அரசு மாணவியர் விடுதி' கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2015ம் ஆண்டுவரை 10 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் மாணவியர் விடுதி செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் கண்டமங்கலம் அரசு மாணவியர் விடுதிக்கு சொந்த கட்டடம் கட்ட முன்னாள் முதல்வர் ஜெ., அதற்கான நிதியை ஒதுக்கி உத்தரவிட்டார். இதையடுத்து கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலக பஸ் நிறுத்தம் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம், அரசு மாணவியர் விடுதி கட்டடம் 45 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது.இந்த மாணவியர் விடுதியின் புதிய கட்டடத்தை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ., கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து 2016ம் ஆண்டு ஜன. 26ம் தேதி விடுதி துவக்கப்பட்டு, பழைய விடுதியில் இருந்து மாணவிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் விழுப்புரத்தில் தொடங்கி, நாகப்பட்டினம் வரை அமைக்கப்படவுள்ள புதிய நான்குவழிச்சாலை விழுப்புரத்தில் தொடங்கிகெங்கராம்பாளையம், மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோயில், கண்டமங்கலம், அரியூர், பங்கூர் வழியே எம்.என்.குப்பம்வரை வழியே செல்கிறது.
இந்த நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில், கண்டமங்கலத்தில் சாலையின் இருபக்கமும் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.இந்த விரிவாக்கப் பணியில் கண்டமங்கலத்தில் தேசிய நெடுஞ்சாைலையோரம் புதிதாக கட்டப்பட்டுள்ளஅரசு மாணவியர் விடுதி முழுமையாக தரைமட்டமாக இடிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் அலட்சியம்
தனியார் வாடகை கட்டடத்தில், 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாணவியர் விடுதிக்கு, சொந்த கட்டடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது. கடந்த 2013ம் ஆண்டு மாணவியர் விடுதிக்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்போது, கண்டமங்கலத்தில்ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியை எடுத்துக்கூறி விடுதியை அங்கு கட்டக்கூடாது என அப்போதிருந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். 45 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, ஏழை எளிய மாணவிகளுக்கு விடுதி கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டியதால் திறப்புவிழா செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் அரசு மாணவியர் விடுதியை தரைமட்டமாக இடிக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவிகள் சோகம்
போதிய வசதியின்றி 10 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் பயின்று வந்த மாணவிகள், அனைத்து வசதிகளுடன் கூடிய , அரசின் சொந்த கட்டடத்திற்கு வந்ததால் நிம்மதியடைந்தனர். இந்த நிலையில் விடுதி கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு மீண்டும் வாடகை கட்டடத்திற்கு செல்ல வேண்டிய தகவல் அறிந்த விடுதி மாணவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இந்த இடத்தில கட்டியது எதற்காக விரைவில் இக்கட்டிடம் இடிக்கப்படும் என்று தெரிந்தே தரமற்ற பொருட்களைக்கொண்டு ஐந்து ஆண்டுகள் மட்டுமே தாங்கக்கூடியதாக பாதிப்பணத்தை செலவு செய்து மீதியை ஆட்டையைப்போட்ட கும்பலின் சூப்பர் பிளான் ஒர்க் அவுட் ஆகிவிட்டது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement