Advertisement

அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு துணை போகாதீங்க!; போராடும் ஊழியர்களுக்கு துணை முதல்வர் அறிவுரை

சென்னை: ''அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, அரசு நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு, துணை போகக்கூடாது,'' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, துணை முதல்வர், பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:



எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், பல கோரிக்கைகளை முன்வைத்து, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அழைத்து பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தை நிறுத்தக்கூடிய அளவிற்கு, அவர்களுடன் பேச வேண்டும்.


சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: போராட்டங்களை ஆரம்ப கட்டத்தில், தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டோரை அழைத்து பேசி, தீர்வு காண வேண்டும்.


துணை முதல்வர் பன்னீர்செல்வம்: ஊதிய குழுவின் பரிந்துரைகளை, அரசு முழுமையாக அமல்படுத்தி உள்ளது. 2017 - 18ல், மாநில அரசின் மொத்த வரி வருவாய், 93 ஆயிரத்து, 795 கோடி ரூபாய். இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திற்காக மட்டும், 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.


மேலும், ஓய்வூதியத் தொகை, 20 ஆயிரத்து, 397 கோடி ரூபாயையும் சேர்த்தால், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும், 65 ஆயிரத்து, 403 கோடி ரூபாய் செலவாகிறது. மொத்த வருவாயில், 70 சதவீதம், இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.


அரசு, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பெற்றுள்ள, கடனுக்கான வட்டி செலவு, 24 சதவீதம். மீதமுள்ள, 6 சதவீதம், மாநில வரி வருவாயுடன், மத்திய அரசிடமிருந்து பெறப்படும்,


வரி பகிர்வு உட்பட, 41 ஆயிரத்து, 600 கோடி ரூபாயை வைத்து தான், மக்களுக்கான நலத்
திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் வருவாயில், நிர்வாக செலவு மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. அரசு ஊழியர்கள், இந்த உணர்வுடன் செயல்பட்டால் தான், நல்லாட்சியை வழங்க முடியும்.


பழைய ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான, சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, விரைவில், அரசிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளது. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மாநில அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்போருக்கு, துணை போகக்கூடாது.


நிதி நிலைக்கு உட்பட்டு, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளை, அரசு தயக்கமின்றி செயல்படுத்தும். ஊழியர்களுக்காக, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.


ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஜூலை, 31க்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகள் அடிப்படையில், அரசு உரிய முடிவுகளை எடுக்கும். அரசின் வருவாய் செலவினத்தை குறைப்பதற்கான வழிவகையை ஆராய, ஆதிசேஷய்யா குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அல்ல.


வரவுக்குள் செலவு இருக்க வேண்டும் என்ற நிலையை எடுத்துள்ள, தமிழக அரசின் நிலைபாட்டிற்கு ஒத்துழைக்கும் வகையில், அரசு ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு, அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!



ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை அழைத்து பேச, அரசு மறுத்து விட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், நேற்று ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் நடந்த விவாதம்:



எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக, துணை முதல்வர் விளக்கம் அளித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை, காலையில் சந்தித்தேன். 'உடலை வருத்தி, போராட வேண்டுமா' என, கேட்டேன். அதற்கு, தங்களை முதல்வர் அழைத்து பேச வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். எனவே, அவர்களை அழைத்து பேச வேண்டும். இதற்கு, முதல்வர் பதிலை எதிர்பார்க்கிறேன்.


துணை முதல்வர் பன்னீர்செல்வம்: அந்த அமைப்பினரை, நீங்கள் சந்தித்தபோது, 'இன்றைக்கு இருக்கிற அரசு, எதுவும் செய்யாது; நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் தான், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்' என, அவர்களை துாண்டி விடுகிற வகையில் பேசியுள்ளீர்கள்.


எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: 'கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்' என, நீங்கள் கூறினால், நாங்கள் துாண்டிவிட வேண்டிய அவசியமே வந்திருக்காது. துாத்துக்குடியில் நடந்த போராட்டம் போலவே, இப்போதும், நீங்கள் அழைத்து பேசும் நிலையில் இல்லை. இதை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம்.


சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: முதல்வர் அழைத்து பேச வேண்டும் என்பதை, அரசு ஏற்காததை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம்.


முஸ்லிம் லீக் - அபூபக்கர்: அழைத்து பேச முன்வராததால், வெளிநடப்பு செய்கிறோம்.


அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.


பின், முதல்வர் பழனிசாமி கூறியதாவது: ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வேண்டும் என்கின்றனர். அரசு எடுத்த நடவடிக்கையை, துணை முதல்வர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். குழு அறிக்கை தாக்கல் செய்த பின் தான், எதை நிறைவேற்ற முடியுமோ, அதை அரசு செய்யும்.


துாத்துக்குடியில், கலெக்டரும், சப் - கலெக்டரும், 14 முறை பேச்சு நடத்தினர். போராட்டக்காரர்களை அழைத்து பேசவில்லை என்று, ஸ்டாலின் கூறியது தவறானது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (29)

  • கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா

    ஜாக்டோ ஜியோ போராட்டம் சம்பள உயர்வு கேட்டு அல்ல. பத்து வருடத்திற்கு மேலாக அரசாங்க பணியில் இருந்து ஓய்வு பெற்ற லட்ச கணக்காண பணியாளர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட் மற்றும் பென்ஷன் இன்னமும் கிடைத்தபாடில்லை. பத்து வருடங்களுக்கும் மேலாக இரு திராவிட கட்சிகளும் பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது. இதில் இரண்டு தொழிற்சங்கங்களும் கூட்டு களவாணிகள் தான். பெருசாவோ சிறுசாவோ லஞ்சம் வாங்கி ரிடையர் ஆன அரசாங்க ஊழியன் கண்டுக்காம போயிருவான். வரும் போது வரட்டும்'னு... ஆனா எந்த கையூட்டும் பெறாமல் நேர்மையாக பணிபுரிந்து இந்த ரிடையர்மெண்ட் பெனிஃபிட்ஸ் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம் மகனின் உயர்படிப்பு, மனைவியின் அறுவை சிகிச்சை என கையறு நிலையில் நிற்கிறானே தமிழன்...அவனுக்கு எவன்டா பதில் சொல்லுறது?? இந்த போராட்டத்தையே சம்பள உயர்வு'னு திசை திருப்பி விட்டது இரு திருட்டு திராவிட கட்சிகளும். இவன் ஆளும் கட்சி'னா அவன் சவுண்ட் விடுவான். அவன் ஆளுங்கட்சி'னா இவன் சவுண்டு விடுவான். ஆக மக்கள் மடையர்கள்... உங்க வீட்டு பக்கத்துல இருக்கிற, சமீபத்துல ரிட்டையர் ஆன யாராவது ஒரு அரசாங்க பணியாளரிடம் பேசுங்க... அப்போ பல்லிளிக்கும் பாருங்க உண்மை..

  • Suresh Ulaganathan - Bangalore,இந்தியா

    போராட்டம் கூடாதா அப்போ நீங்க முதல்வர் பதவி விலகிவிட்டு ஜெயா சமாதியில் தியானம் செய்தது அது என்ன ? இரட்டை இலைக்காக சுப்ரீம் கோர்ட் சென்றது அதன் பெயர் என்ன ? நீங்கள் ரோட்டில் செய்தால் அது நியாயம் அதுவே மக்கள் செய்தால் போராட்டமா ? தி மு க , அ தி மு க கட்சி தவிர வேறு மாநில கட்சி ஆளவேண்டும்.

  • Renganathan - Dindigul-624303,இந்தியா

    எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: 'கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்' என, நீங்கள் கூறினால், நாங்கள் துாண்டிவிட வேண்டிய அவசியமே வந்திருக்காது. இது ஒரு மானகெட்ட செயல். திமுக வின் தியாகங்களையும் தன்னலமில்லா வரலாறையும் இந்த ஈன பிறவியும் அவரது குடும்பமும் கொச்சைப்படுத்தி சுயநலத்திற்க்காக மட்டுமே பயன்படுத்துகிறது. தற்போதய திமுக வேரோடு களையப்பட வேண்டிய கட்டத்தில் தமிழகம் இப்பொழுது இருக்கிறது.

  • Rajasekar - Trivandrum,இந்தியா

    முதலில் எம்பி, எம்எல்ஏ வுக்கு 100 % அதிகரித்த ஊதிய உயர்வை திரும்ப பெற்றுவிட்டு ஜக்கடோஜிஓ ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு என்பது ஊதிய பரிந்துரை அடிப்படையிலேயே இருக்கும் இனிமேல் ஊதியம் மற்றும் சலுகைகள் கோரி எந்த அமைப்பும் போராட்டம் நடத்தக்கூடாது. யாருக்கு ஊதியம் பத்தவில்லையோ அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் எதிர்பார்க்கும் ஊதியத்தில் வேலைதேடிக்கொள்ளலாம் என்றும், அந்த ஊதிய அடிப்படையில் வேலைக்கு காத்திருப்போருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.

  • muthu Rajendran - chennai,இந்தியா

    இதில் பல விஷயங்கள் தவறாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. முதலாவதாக ஊழியர்கள் கேட்பது ஊதிய உயர்வு அல்ல. ஒரே பதவியில் உள்ளவர்களுக்கு, ஊதிய நிர்ணயத்தில் இருக்கும் முரண்பாட்டை களைய கேட்கிறார்கள் . அதாவது ஒருவரது பழைய ஊதியத்தை புதிய ஊதியத்திற்கு மாற்றி அமைக்கும் நடைமுறையில் சில தெளிவற்ற ஏன் சரியில்லாத நடைமுறை காரணமாக ஒரே பதவியில் உள்ளவர்களில் மூன்று மாத இடைவெளியில் பணியில் சேர்ந்தோருக்குள் மிகப்பெரிய தொகை வேறுபாடு வருகிறது என்கிறார்கள் அதை நிதித்துறையினர் விவாதத்தில் சரி செய்ய வேண்டிய விஷயம் அடுத்து முன்பிருந்த ஓய்வூதிய திட்டத்தை அமுல் செய்ய கேட்கிறார்கள் இதை அதிமுக தனது தேர்தல் அறிக்கையிலே செய்வதாக சொல்லி இருக்கிறார்கள் பின் ஜெயலலிதா காலத்தில் நேரடியாக பழைய திட்டத்தை அமுல் செய்வதற்கு பதிலாக காலம் தாழத்த ஒரு நபர் குழு என்று போட்டார்கள் அந்த குழுவும் தற்போது செயலில் இல்லை. எனவே இதில் அரசு தான் சரியாக நடந்துகொள்ள வில்லை.அடுத்து நெடுச்செழியன் நிதி அமைச்சராக இருந்த போதிலிருந்தே அரசு ஊழியர்களுக்கே மொத்த அரசு வருவாயில் 64 சதவீதம் போகிறது என்றார்கள். பின்பு மாற்றி சொன்னார்கள்.12 லட்சம் ஊழியர்கள் என்பதில் 30 முதல் 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன என்று சொல்லப்படுகிறது. இந்த அரசு ஊழியர்களுக்கான செலவில் ஐ ஏ எஸ் ஐ பி எஸ் அதிகாரிகள் உள்பட அணைத்து பணியார்களும் அடங்குவர். தமிழ் நாட்டில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் அதே எண்ணிக்கையில் ஐ பி எஸ் அதிகாரிகள் உள்ளனர் தலைமைச் செயலாளர் , டி ஜி பி மற்றும் உயர்பதவிகளில் பணிவரிசையில் இளையவர்களை நியமிப்பதில் அவருக்கு பணியில் சீனியர் ஆக உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் அந்த அந்தஸ்து ஊதியம் படிகள் கொடுக்க படுகின்றன. இதனால் பல சீனியர் டி ஜி பி அந்தஸ்தில் உள்ளவர்களை போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரிகள் என்று நியமிக்கிறார்கள் மக்கள் தொடர்பு விளம்பர துறை என்ற ஒரு துறை காங்கிரஸ் காலத்தில் மிக சிறிய அளவில் இருந்த்தது தற்போது மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஒவ்வொரு துறையிலும் வாரியத்தில் நிறுவனத்திலும் என்று நியமித்து உள்ளார்கள் இந்த துறையால் எந்த பெரிய பயனும் யாருக்கும் இல்லை.மொத்தத்தில் அரசு துறைகளில் பல துறைகளை தேவையான அளவிற்கு சீர்திருத்தினாலே மிகப்பெரிய செலவை குறைக்கலாம். ஒரு அமைச்சருக்கு மூன்று உதவியாளர்கள் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் இரெண்டு கார் வீடு செலவுகள் அதே போல் சின்ன பதவிகளில் கூட ஐ ஏ எஸ் அதிகாரிகளை நியமிக்கிறார்கள் சின்ன விஷயங்களுக்கு கூட மிகப் பெரிய அளவில் விழாக்கள். இப்படி பல ஊதாரித்தனமாக செலவுகளை குறைக்கலாம் ஒரு அமைச்சருக்கு முக்கியமான எட்டு பத்து துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் விளையாட்டு துறைக்கு ஒரு அமைச்சர் இப்படி சின்ன துறைக்கெல்லாம் ஒரு அமைச்சர். நிருவாக செலவை ஆராய்ந்து சரிசெய்தாலே தற்போதைய செலவில் 40 சதவீத செலவுகள் குறையும் பொதுவாக தேவைப்படும் பணியிடங்களை சரியாக அளவிட்டு தகுதியான பணியாளர்களை மட்டும் நியமித்தால் இந்த செலவீன கணக்கு கணிசமான அளவு குறையும் நிர்வாகம் இன்னும் சிறப்பாக இருக்கும் பிரச்னையை சரியாக அணுகாமல் பொத்தம்பொதுவாக அரசு ஊழியர்களுக்கே மொத்த வருவாயும் போய்விடுகிறது என்று சொல்வது சரியல்ல. காமராஜர் போன்ற ப்ராக்டிகலாக செயல்படும் முதிர்ச்சி தற்போது இல்லை. எனவே பிரச்சனையில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து உண்மை எனில் தீர்வு காணவேண்டும் இல்லை எனில் அதற்கான விளக்கத்தை தெரிவித்து முடித்து வைக்க வேண்டும். பொதுவாகவே அரசு அமைச்சர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் நிதி விஷயங்களில் திறமையாக கையாண்டு அதிக பலன்களை மக்களுக்கு கொடுக்க முன்வரவேண்டும்

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    உங்களுக்கு ஊதியத்தை உயர்த்தும்போது மட்டும் இனிச்சுதோ? அதற்க்கு பணம் எங்கிருந்து வந்தது? நீங்கள் மக்களுக்கு சேவை செய்யத்தானே வந்தீர்கள். அப்புறம் எதற்கு சம்பளம்? அதுவும் லச்சக்கணக்கில். உங்களுடைய இயலாமையால்தான் இன்றைக்கு இவ்வளவு போராட்டங்கள். தனியாரோடு ஒப்பிடும்போது பலமடங்கு சம்பளமும் மேலே கிம்பளமும் பெற்றுக்கொண்டு, அரசின் இன்னபிற சலுகைகளையும் அனுபவிக்கும் அரசு ஊழியர்கள் மீண்டும் சம்பளத்தை உயர்த்த சொல்லி போராடுகிறார்கள்.இது என்ன நியாயம்? கருணாவும் ஜெயாவும் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காகவும், ஓட்டுகளுக்காகவும் சம்பளத்தை ஏற்றி ஏற்றி பழக்கி விட்டனர். அதன் விளைவுதான் இது. ஆக மொத்தத்தில் உழைப்பவர்கள் ஓடாய் தெரிகிறார்கள். அவர்களை ஏய்ப்பவர்கள் சொகுசாய் வாழ்கிறார்கள்.

  • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

    என்ன தேசமோ இது என்ன தேசமோ... இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ..

    • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

      சரியான கருத்து சர்வம் பொய்கள் பித்தலாட்டங்கள் தான் திமுகவந்தாலும் அதுவேதான் தொடரும் அதிமுக என்றாலோ கேட்கவே வேண்டாம் தமிழ்நாட்டுலே இந்த ரெண்டுகாட்சிகளும் என்று ஒழியுதோ அன்றுதான் சுபிக்ஷம் மக்கள்நல கூட்டணி என்று ஒண்ணுவந்தது பன்னாடை வைகோவால் நாசம் ஆனது ம ந கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பும் இருந்துது என்பது உண்மை , அரசு வேலையே இப்போரில் லஞ்சம் வாங்காத்தாவா 3%கூட இருக்காது என்பது தான் உண்மை சில முக்கிய இலாக்காலே இருக்கும் நபர்கள் பியூன் டு பெரிய ஆபீஸருங்கள் சம்பளம் தவிர கிம்பளம் தான் அதிகம் வாங்கிறானுக என்று தெரியுதே

  • sundar - chennai,இந்தியா

    மனசாட்சி இல்லாத அரசு ஊழியர்கள். தேவைக்கு அதிகமாக சம்பளம் மற்றும் லஞ்சம் ஆடம்பர வாழ்க்கை, படிப்பு தகுதியும் குறைவு, கடவுளே இவர்களுக்கு தண்டனை கொடுக்க மாட்டாயா ????????? திறமை இருந்தும் குறைந்த சம்பளம் தனியார் நிறுவனம் வேலை நேர கட்டுப்பாடுகள், குறைந்த லீவு நாட்கள். எங்களுக்கு தலையெழுத்து இதே போன்ற குப்பை அரசியல் வாதிகளுக்கு ஒட்டு போடும் அவலம்.

  • sam - Doha,கத்தார்

    எப்பா ஆட்சியை விட்டு போகும் போது கொஞ்சமாவது கஜானா வில் வைத்து செல்லுங்கள்

    • Sabari - Tanjore,இந்தியா

      அதெல்லாம் இப்போதைக்கு இல்லை....என்ன நடந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்ள மேலே...உள்ளவர் இருக்கும்போது என்ன பயம். அதனால்தான் துணிந்து கொள்ளையடிப்பது முழுவீச்சில் நடந்துகொண்டுள்ளது. அப்படி ஏதாவது நடந்து ஆட்சி போனால் கஜானாவில் பெரிய முட்டை இருக்கும்.அதோடு ...கடன்...கொடுக்கவேண்டிய வட்டி...வட்டி கொடுக்க வாங்கிய கடன்....இப்படி உள்ள விவரங்கள் நிச்சயமாக இருக்கும்.

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    தமிழ்நாட்டில் இரண்டு இடத்திற்குள் போனால் நாம் முடிந்தோம் ... 1 . அரசு அலுவலகம் , 2 . மருத்துவமனைகள் ... இரண்டு இடத்திலும் பகல் கொள்ளைதான் .. இந்த லட்சணத்தில் சம்பளம் போதவில்லை என்று எப்ப பார்த்தாலும் போராட ஒரு கூட்டம் ..

    • Subash - Thanjai,இந்தியா

      Pattikkaattaan - Muscat,...கருத்து உண்மைதான்...அதன் பின்னணியில் ஒரு உண்மை உள்ளது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியன் பயப்படுவதில்லை.... காரணம் அரசின் மேல்மட்டத்திலிருந்து கடைநிலை ஊழியன் வரை லஞ்சம் வாங்குவதை ஒரு குற்றமாக நினைப்பதில்லை. சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் கிம்பளம் தினமும் இவ்வளவு என்பதை நிர்ணயித்து வசூல் செய்வதை ஒரு கடமையாக செய்கின்றனர். ஊழல் இல்லாத அரசுத்துறை இல்லை. மருத்துவமனை இன்னும் மோசம். எதெற்கெடுத்தாலும் பணம்....ஒவ்வொரு நகர்வுக்கும் பணம் கொடுத்தால்தான் நினைத்தது நடக்கும். தனியார் மருத்துவமனைகள் ஆட்கொல்லி ஜந்துக்கள். செலவு கணக்கையோ, மருந்து எதற்கோ என்று கேட்க முடியாது. பணம் கொடுக்கும் வரை மருந்து ஆயிரக்கணக்கில் வாங்கி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவும் நோயாளிக்கு உபயோகப்படுத்தப்படாது... பாதிக்கும் மேல் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருந்தகத்திற்கு திரும்பி போய்விடும். கார்ப்பரேட் மருத்துவமனைகள் அரசியல் வியாதிகளுக்கு லஞ்சம் கொடுப்பதால் எதற்கும் அஞ்சுவதில்லை. நோயால் இறந்துபோனவர்களை வைத்துக்கொண்டு பணத்தை கறந்து விடும் கொடுமை இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. எல்லாம் ஊழல்...லஞ்சம்... கொள்ளை.... நியாயமாக குரல் கொடுப்பவர்கள் மிரட்டப்படுவர்...அல்லது பணம் கொடுத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடுவர்.

  • ஸ்ரீனிவாசன்,COIMBATORE -

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த தமிழ்நாட்டிலே..?? இன்னும் ஒன்பது மாதங்களில் உங்க முதலாளிக்கே வேட்டு. அப்புறம் நீங்கதான் வாழ்க்கைப் போராட்டம் பண்ணணும்..!! வாழ்க வளர்க..

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எதிர்ப்பும் எதுவும் இல்லதாதால் நீங்கள் காட்டாற்று வெள்ளம் போல எல்லா ஒதுக்கீடுகள்,,, மானியங்களை, நிதிகளை ........ செய்கிறீர்கள்.. அரசு ஊழியர்களுக்கு,.,,,?

  • Tamilvaanan - Madurai,இந்தியா

    "... நாங்கள் துாண்டிவிட வேண்டிய அவசியமே வந்திருக்காது. . ", அவரே ஒத்துக்கிறார்ல? இதுலே அவர உள்ளேதள்ள முடியுமான்னு பாக்கலாமே ? இதுக்கு தான் ஜே வேணும்குறது.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    முதலில் லஞ்சம் வாங்கமாட்டோம் என்னும் உறுதிமொழி கொடுக்கட்டும் அப்புறம் தவறு செய்யும் அரசுஊழியர்களை நீக்கம்செய்ய ஆதரவுத்தரட்டும் இதைப்பற்றி போராடுபவர்கள் வாயே திறக்கமாட்டார்கள்

  • kumar - nandhivaram,இந்தியா

    வி எ ஒ, ஆர்.ஐ, தாசில்தார், ஆர்.டி,ஒ, பத்திரப்பதிவு, பஞ்சாயத்து, ஊராட்சி, நகராட்சி,மாநகராட்சி,கருவூலம் போன்ற அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்காம எந்த வேலையும் முடித்துத்தருவதில்லை.இந்த மாதிரி லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் உடனடியாக வேலையை விட்டு தூக்கப்படுவார்கள் என சட்டத்தை மாற்றுங்கடா. போராட்டம் நடத்துபவர்கள் பெரும்பாலும் வேலை செய்யாம தண்ட சம்பளம் வாங்குபவர்கள் தான்.

    • Subash - Thanjai,இந்தியா

      லோக் ஆயுக்தா, லோக் அதாலத் நாட்டில் நடைமுறை படுத்தப்படாததன் காரணம் இதுதான். லோக் ஆயுக்தா சில மாநிலங்களில் உள்ளது....ஆனால் தமிழகத்தில் நடைமுறை படுத்த முயற்சியே எடுக்கப்படவில்லை. காரணம் ஊழல், லஞ்சம், கொள்ளை....பல வருடங்களாக தின்று கொழுகொண்டிருக்கும் பெருச்சாளிகள் அரசு, அரசுத்துறை மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை இருப்பதால் ஊழல் தடுப்பு சட்டங்கள் வெறும் பகல் கனவுதான்.

  • Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா

    தூண்டிவிட்டதை தன் வாயாலேயே அம்பலத்திற்கு வந்துவிட்டபிறகு,வெளிநடப்பு வேறு செய்வதை எந்த வகையில் சேர்த்துக்கொள்வது ? கலவரம் வெடிக்கக் காரணமே யார் என்று ஒப்புக்கொண்டபிறகு,அதன் விளைவுகளுக்கு பொறுப்பேற்பதை விட்டு,அரசு ஊழியர்களையும்,அவர்களது குடும்பத்தினரகளுக்கும் ஊறு விளைவிக்க புறப்படுவது பொறுப்பான தலைமைத்துவமாகுமா? அரசுக்கு விசுவாசம் என்பது எல்லோருக்குமான ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். இதை கைவிட்டால் ஒற்றுமை குலைந்து,நாடு சிதறிப்போகும் ஆபத்திற்கு வரலாம். ஒற்றுமை நிலைநிறுத்தப்படாவிட்டால்,அமைதி,ஓய்வின்றி,மக்களை துன்புறுத்தின பாவத்தை சுமக்க நேரிடும்.

  • S.Pandiarajan - tirupur,இந்தியா

    MR தர்மம் யுத்தம் நீங்கள் எடுபிடி ஊழல் செய்கிறார் என்று போராட்ட அறிவிப்பே செய்தீர்கள் அதை என்ன சொல்வது பதவி கிடைத்தவுடன் அது மறந்து விட்டது

  • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

    //.. வளர்ச்சி பணிகளுக்காக பெற்றுள்ள, கடனுக்கான வட்டி செலவு, 24 சதவீதம்..// அப்படி என்ன வளர்ச்சி பணிகளை செய்துட்டீங்க திடீர் புனிதரே... ஒவ்வொரு திட்டத்திலும் குறைந்தது 45% உங்க கமிஷனுக்கே போயிடுதே, அப்புறம் என்ன நல திட்டம்..?......... பட்ஜட் இவ்ளோ டைட்டா இருக்குன்றீங்க, அப்புறம் R K நகர் போன்ற இடைத்தேர்தல்லலாம் ஓட்டுக்கு ரூ. 6000.. ரூ. 10000னு வாரி இறைக்கிறீங்களே அது எங்கிருந்து கொட்டுது..?

  • Raman - kottambatti,இந்தியா

    இந்த பன்னீர்.. அடுத்த தேர்தலில் என்ன சொல்லி ஒட்டு கேட்பார்? அடுத்த தேர்தலில் இவங்க இருப்பாங்களான்னு தெரியலை

    • Subash - Thanjai,இந்தியா

      //அடுத்த தேர்தலில் இவங்க இருப்பாங்களான்னு தெரியலை// இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இப்போதுவரை அடித்து குவித்துள்ள பல ஆயிரம் கோடிகள் பல தலைமுறைக்கு வரும். பல ஆயிரம் கோடி பினாமி பெயரில் உள்ள சொத்துக்கள் வேறு. யாரும் தட்டிக்கேட்பது இல்லாதபோது மேலும் மேலும் கொள்ளையடிக்க துணிச்சலும், தைரியமும் வந்துவிடும். இவர் தொடர்புடைய சேகர் ரெட்டி கொள்ளை கும்பல் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதே என்னவானது? எதுவுமே நடக்காது...திரைமறைவில் அரசியல் வியாதிகள் ஒரு கூட்டுக்கொள்ளை ஒப்பந்தத்தில் செயல்படுவது பல ஆண்டுகளாக நடக்கிறது. இப்படி தமிழ்நாட்டை தொடர்ந்து சுரண்டி கொள்ளையடிக்கின்றன.... ஒன்றை மாற்றி வேறொன்றை தேர்ந்தெடுத்தும் லஞ்சம், கொள்ளை, ஊழல், மக்கள் விரோத போக்கு குறையாததால் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அரசு ஊழியர்கள் கட்சியில் சேருவதை தடை செய்யவேண்டும்... அப்படி அரசியலில் ஈடுபடும் பொழுது வேலையை விட்டு தூக்க வேண்டும்... இல்லை என்றால் அரசு கூட ஒரு கட்சி வெர்சஸ் மற்ற கட்சி என்று செயல்படும் அளவுக்கு கேவலமாக போய் விடும்...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    கொள்ளையடிக்கிறதுக்கு திட்டம். அதை யாரும் தடுக்கவேண்டாமாம்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    சொல்லியிட்டாரு தர்மயுத்தர். கேட்டுக்கோங்க இல்லையினா வாயிலேயே சூடு பட வேண்டியிருக்கும்.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இருக்கிறது பந்தா தலைவனின் பேச்சு. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கும் கலவரங்களுக்கு காரணம் இவர் தான் என்பதை ஒப்புக்கொள்கிறார். இனிமேலாவது தமிழக மக்கள் புரிந்து கொண்டால் சரி.

    • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

      சமீபத்தில் ஆசுபத்திரிலே அனுமதிக்கப்பட்டு ICU லே இருந்த ஒரு பெண்மணிக்கு (கோமா ஸ்டேஜ் லே இருந்தாங்க) அவங்களுக்கு ஊசிமருந்து 5000RS வாங்கிண்டு ஊசியும் போடலே பல்சும் இறங்குது அப்போதும் வேணாலும் மூச்சு நிக்கும் நிலையே தான் அந்த மருந்து போடவேயில்லீங்க அவரின் மகனையும் உள்ளே விடவே இல்லீங்க அவரும் தன அன்னைக்கு ((வாயிலே ஜலம் விடணும் என்று சொல்லி கெஞ்சியும் ) மூச்சு நின்றது MID NIGHT 2மணிக்கு பாடியை கொண்டுபோக சொன்னகொடூரம் நல்லகாலம் அந்தம்மா 5 நாட்களேதான் இருந்தாங்க எவ்ளோப்பணம் பிடுங்கினாங்க தெரியுமா /??????நாசமாபோவானுக எல்லோரும் இவனுக செத்தாலும் இதே நிலைமைதானோ ரமணா சினிமாபோலவே தான் நடந்தது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement