Advertisement

சொத்து குவிப்பு வழக்கு; சிக்கினார் அமைச்சர்!

சென்னை : அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பால் வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி சிக்குகிறார். அமைச்சர் மீதான புகார் குறித்து, ஐ.பி.எஸ்., அதிகாரியை நியமித்து, 1996ல், இருந்து விசாரணை நடத்த வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2011ல், நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அசையும் சொத்தின் மதிப்பு, 18.88 லட்சம் ரூபாய், அசையா சொத்தின் மதிப்பு, 19.11 லட்சம் ரூபாய் என, குறிப்பிட்டிருந்தார்.


அமைச்சரான பின், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில், 74 லட்சம் ரூபாய்க்கு, 35 ஏக்கர் நிலம் வாங்கினார். அதன், உண்மையான மதிப்பு, ஆறு கோடி ரூபாய்.


சிவகாசி அருகே திருத்தங்கல் நகரில், 23.35 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு மனைகள் வாங்கி உள்ளார். மேலும், ௭5 சென்ட் நிலமும் வாங்கி உள்ளார்.


மொத்தத்தில், அவரது சொத்தின் மதிப்பு, எட்டு கோடி ரூபாய் இருக்கும். அதிகார துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2013 அக்டோபரில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளித்தேன். என் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

முகாந்திரம் இல்லை :



இம்மனு, 2013 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதையடுத்து, எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், 2018 மார்ச்சில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.


இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட
அறிக்கையில், 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரை விசாரித்த அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை; ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்' என, தெரிவிக்கப்பட்டது.


இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், இவ்வழக்கின் உத்தரவை, நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்தது.

மீண்டும் விசாரணை :



நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருத்தங்கல் பேரூராட்சி துணை தலைவராக, 1996ல், ராஜேந்திர பாலாஜி இருந்துள்ளார். அமைச்சராக இருந்த, 2011 - 13 காலகட்டத்தில் மட்டும், விசாரணை நடந்துள்ளது. பேரூராட்சி துணை தலைவராக இருந்த நாளில் இருந்து, ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரி, லஞ்ச ஒழிப்பு துறையின் வழிகாட்டி குறிப்பில் கூறியுள்ளதை பின்பற்றவில்லை.


நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை, முழுமையாக ஆய்வு செய்த பின், ஆரம்பகட்ட விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என, கருதுகிறோம். எனவே, மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும். பேரூராட்சி துணை தலைவராக இருந்த, கால கட்டத்தில் இருந்து, அதாவது, 1996ம் ஆண்டில் இருந்து, 2018 பிப்ரவரி வரை, விசாரணை இருக்க வேண்டும்.


தற்போது, அமைச்சராக ராஜேந்திர பாலாஜி உள்ளார். அவரது பதவியை கருத்தில் கொண்டு, எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரியை நியமித்து, ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும். அவ்வப்போது, விசாரணை அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆரம்பகட்ட விசாரணையின் முன்னேற்றத்தை, 'சீல்' இடப்பட்ட உறையில், ஆக., 3ல், தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, ஆக., 6க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (70)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    திமுக மலைமுழுங்கிகள் அதிமுக நதிகள் கடல்கள் என்று எல்லாத்தையும் விழுங்கி ட்டு பசிக்குது என்று அலையும் சுறாக்கள் என்பதுதான் உண்மை மொத்தத்துல ரெண்டுமே ஓலைகளிலே எல் முனையளவும் வித்தியாசமே இல்லாமல் கொள்ளைஅடிச்சு சொத்தும் சேர்க்கும் கூட்டங்களேதானே இந்த ரெண்டும் அடிச்சுள்ள கொள்ளைகளில் இந்திய எகானாமியே சீர் செய்ய முடியும் , மக்கள் உதவினால்தான் கதிமோக்ஷம் தமிழ் நாட்டுக்கு என்பதுதான் 100% உண்மை

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

    திமுக வில் ஒன்றிரெண்டு பேர்கள் ஊழல் செய்திருக்கலாம்... ஆனால் அ திமுகவில் TOP TO BOTTOM ஊழல் ... சொத்தை கத்திரிக்காயை சொத்தையை வெட்டிவிட்டு சமைக்கலாம்... ஆனால் முழுதும் அழுகிய கத்திரிக்காயை என்ன செய்வது?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இதில் ஏன் திமுக மேற்கோள் காட்டப்படுகிறது ? ஊழல் குற்றங்கள் அனைத்துமே நிரூபிக்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டு100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா கட்சி யினர் பற்றிய செய்தியில் , இன்று வரை எந்த குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படாத திமுகவினரை ஏன் மேற்கோள் காட்டுகிறார்கள்?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    விஜயபாஸ்கர் என்ற அமைச்சர் வீட்டில் எடுத்த ஆவணங்களை எடைக்கு போட்டு புண்ணாக்கு வாங்கி தின்று விட்டார்களா? அடுத்து வேர்க்கடலை வாங்க இந்த அமைச்சர் வீட்டில் ஆவணங்கள் எடுக்கிறார்களா?

  • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இவர்கள் விசாரித்து முடிவு செய்வதற்குள் மக்களே இந்த ஊழலை மறந்து விடுவார்கள். சில சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மறைந்துவிடுவார்.

  • Sha Shank Shankar - Chennai,இந்தியா

    வளமான துறையில் இருந்து கொண்டு தன்னை வளப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் எப்படி?

  • Sha Shank Shankar - Chennai,இந்தியா

    விசாரணை நடக்கும் ஆனா நடக்காது தீர்ப்பு வரும் ஆனா வராது தண்டனை கிடைக்கும் ஆனா கிடைக்காது சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கு ஆனா இல்லை

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    தமிழகத்தில் அதிமுக -வின் பெயரால் பாஜக ஆள்கிறது என்றும், அதிமுக -வை அடிமைக்கட்சி என்றும் திமுக-காங்கிரஸ் அல்லக்கைகள் சொல்லி வந்தார்கள் ..... அவர்கள் இந்த நடவடிக்கையைப் பாராட்டுவார்கள் என்று நம்புவோம் .... ஏனென்றால் திமுக ஆட்சியில், ஆட்சி நடக்கும்பொழுதே பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், திமுக-காங்கிரஸ் அடிமைகள், """" குற்றச்சாட்டு வந்தாலே ஒருவர் குற்றவாளி அல்ல """" என்று (படிப்பாளி புகழ் உட்பட) கூறிவந்தார்கள் ....

  • Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ

    அம்மா வழியில் ஆட்சி நடக்கிறது இதனை குறை சொல்வது தவறு.....

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    அந்த விசாரணை அதிகாரி ஏன் வழிகாட்டு குறிப்புகளை பின்பற்றவில்லை? அவருக்கு அமைச்சரிடம் இருந்து பயமுறுத்தல் இருந்ததா? இல்லை வேறு விவகாரமா? முதலில் அந்த அதிகாரியை விசாரிக்க வேண்டும். இந்த மாதிரி அதிகாரிகள் இருக்கப்போய் தான் இந்த மாதிரி அமைச்சர்களும் இருக்கிறார்கள், விசாரணையில் இருந்து தப்புகிறார்கள். அதனால் முதலில் அந்த விசாரணை அதிகாரியை விசாரிக்க வேண்டும்.

  • Suri - Chennai,இந்தியா

    இவனுக எல்லாம் வீட்டுக்கு செல்லவேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பு எப்போ வரும் அந்த 18 MLA வழக்கில்? ஜனாதிபதி ஆட்சி எப்போ அமுல் படுத்துவார்கள்? புரோஹித் எப்போ free hit அடிக்க ஆரம்பிப்பார்?

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    ஒட்டுக்குப் பணம் வாங்குவது மூலம் மக்களும் ஊழலில் பங்கு பெறுவதால், ஊழலுக்குத் துணை நிற்பதால் (தார்மிக ரீதியில்) மந்திரியை மட்டுமே குறை சொல்ல முடியாது .....

  • Sathish - Coimbatore ,இந்தியா

    இவர்களுக்கு வாக்களித்த மக்களை சொல்ல வேண்டும். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒன்னொன்னா தெரியவரும். இவ்வளவு நடந்தும் மக்களை இன்னமும் முட்டாளாக்கிக்கொண்டு இவர்களுக்கு சொம்படிக்கும் நமது கோவை வாசகர் பாலகிருஷ்ணன் போன்றவர்களை எப்படி திருத்துவது? சாட்டையெடுத்து நாட்டை திருத்து என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

    • Manian - Chennai,இந்தியா

      70 - 80 சத விகித கிராம மக்கள் சிந்தனை வேறு. தண்ணி வராது, மிஞ்சரம் வராது, மருத்துவம் வராது, நல்ல பள்ளிகள் வராது, ரோடுகள் வராது, பசுக்கள் வராது, ஆனா கையிலே காசாவது வருக்குதே. அதையும் விடடா வெறும் காத்து கூட வராதே. அப்பாலே, நன்னா என்ன நல்லவுனுகளா? போன போறானுக, இன்னைக்கி பிரியாணி, கூரார்தரு, ரெண்டாயிரம் கையிலே. உலகமே மாயம். நாளைக்கு யாரு இருக்க போறேம்னுன்னு கூட தெரியாதே...

  • christ - chennai,இந்தியா

    எப்படியும் அடுத்த தேர்தலில் இவனுக காணாமல் போக போகிறார்கள் அதனால் அணைத்து மங்குணிகளும் கிடைக்கும் வரை கொள்ளை அடிப்பதில் ஜரூராக இருக்கிறார்கள் .

    • Manian - Chennai,இந்தியா

      போக மாட்டனுகளே. அது தானே பிரச்சினை. இவனவுகளை நீக்கினா, வேறே எவன் யோக்கியன் இருக்கான் சொல்லுங்க. நல்லவனா இருந்து, காசும் தந்தா எங்க ஒட்டு அவனுக்கே

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

    குறைந்தது 16000 மடங்காவது ஊழல் பண்ணனும் அபபதான் உன்னால மாநில அரசு, மத்திய அரசு, கோர்ட் செலவு செய்ய முடியும். இப்படி கொஞ்சமா அடிச்ச மாட்டிக்க வேண்டியது தான்

    • Manian - Chennai,இந்தியா

      அல்லது மஞ்சள் துண்டாரிடம் குரூ தட்சிணை (சில பல கோடி நல்ல நோடடை குரு தட்சிணையாக கொடுத்து) விஞ்சானப்பா முரையில், பகுத்தறிவு வழியில் கொள்ளை அடிக்க கற்றுக்கொள்ளவேண்டும் . ஆனா அவருக்கு இப்போ இருக்குற நிலையில் புதுசா சிஷ்யனுக்களை அனுமதிப்பாரா என்றே சந்திக்கம்தான். காலம் கடந்த சிந்தனையே

  • narayanan iyer - chennai,இந்தியா

    நீதி மன்றத்திற்கு ஒரு வேண்டுகோள் . 1972 முதல் பதவிவகித்த அனைத்து கவுன்சிலர் ஆரம்பித்து எம் எல் ஏ மற்றும் மந்திரி என எல்லோரையும் வளையத்தில் கொண்டுவர உத்திரவிட்டு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் .

    • Manian - Chennai,இந்தியா

      அவசர படலாமா. ஒரு பாம்பை புடிச்சபுரோமேலேதான் மத்த பாம்புகளை புத்திலே தேட முடியும். இல்லாட்டி எல்லமே வெளி நாட்டுக்கு பறந்து பூடாதா?

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

    இன்னொமொரு அதிமுக அமைச்சார் ஊழல் புகாரில் சிக்குகிறார் ஆனால் திமுக மட்டும் ஊழல் கட்சி என்ற அடையாளத்தோடு திரிய வேண்டும் இது தான் ஊடக திரிபு எனபது

    • இந்தியன் kumar - chennai,இந்தியா

      இரண்டும் ஒரு குட்டையில் ஊறியவைதான் அதிக வேறுபாடு எல்லாம் கிடையாது என்னவொன்று அதிமுக மாட்டிக்கொள்ளும் திமுகா மாட்டாது அவ்வ்ளவுதான் வித்தியாசம்.

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      அதானே... அதிமுக வும் ஊழல் செய்யுறதாலே ...திமுக வின் பாவங்கள் கழுவப்பட்டு விட்டன.. இதன் காரணமாக தி மு க வையும் நல்ல கட்சி ன்னு சொல்லுங்கப்பா....... அப்ப தான் ஊடகம் திரியாது...

  • balakrishnan - coimbatore,இந்தியா

    ஏதோ ஒரு வலுவான ஆதாரம் இருக்கிறது, அதனால் தான் உயர்நீதிமன்றம் அவர் பேரூராட்ச்சி தலைவர் பதவியில் இருந்த காலத்தில் இருந்து விசாரணையை நடத்த உத்தரவு இட்டுள்ளது, ஆனால் அதற்கு முன்பாக இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும், பதவியில் தொடர்ந்து நீடித்தால், விசாரணையில் நேர்மை இருக்காது, இந்த விஜய பாஸ்கர் வீட்டில் ரெய்டுக்கு போனபோது அவர்கள் நடந்துகொண்ட விதம் இந்த நாடே அறிந்த விஷயம் தான், ஆனால் அப்படி நடக்க எடப்பாடி அனுமதிக்க மாட்டார், இவர் எப்படியோ சிக்கி கொண்டார், வழக்க எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ஆனால் விஜயபாஸ்கர், ஓ.பி.எஸ் ., ஈ.பி.ஸ்., போன்றவர்கள் இன்னும் சிக்காமல் இருக்கிறார்கள், அதே போல குட்கா வழக்கில், சேகர் ரெட்டி வழக்கில் கரூர் அன்புநாதன் விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் மர்மமாகவே இருக்கிறது, மத்திய பி.ஜெ.பி ஆட்சி ஊழலுக்கு துணை போவது இரு மடங்கு குற்றம் செய்ததற்கு சமம்

    • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

      சரியான கருத்து , வரவேற்கிறேன் .அதேபோல சன் நெட்ஒர்க் நிறுவனம் கலைஞர் தொலைகாட்சி , 322 தொலை பேசி இணைப்புகள் , வெளி நாட்டு ஹம்மர் கார்கள் , 100 கோடி செலவில் திரைப்படம் எடுத்தல் . இதை குறிப்பிட்டதே பல ஆயிரம் கோடிகள் தேறும் வேளச்சேரி இல்லம் தயா பார்க் , கோபால புரம் இல்லம் , மதுரை இல்லம் , CIT நகர் இல்லம் வோல்டாஸ் கட்டிட இடம் இதெல்லாம் எப்படி வந்தது ? என்று இன்னும் யாரும் சரியா விசாரிக்கலையே? உண்டியல் குலுக்கிய பணமா ? அல்லது கதை எழுதிய பணமா ? அல்லது நாடகம் நடித்தும் , அரசு சம்பளம் பெரும் சேர்த்த பணத்தில் இவ்வளவு சொத்தும் வாங்க முடியுமா ? என்று யாரும் சரியா விசாரிக்கலையே ?

    • Sudarsanr - Muscat,ஓமன்

      பாலா இவருக்கு மட்டும் இல்ல நம்ம திருகுவளையார் திருட்டு ரயில் ஏறி வந்ததுலேர்ந்து கணக்கு பண்ணா சரியாய் வரும்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    திராவிடன் எவன் லஞ்ச லாவண்யமின்றி மிருக்கிறான்... நாவிதன் கூடையில் உள்ளது மாதிரிதான்... ஆதி கூவம் மாதிரி அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகம் மிகவும் சுத்தமாகதான் இருந்தது... காய்ந்தவன் அரியணை ஏறியதும் லஞ்சத்திற்கு வித்திட்டு இப்போ காட்டு வேலஞ்செடி மாதிரி அழிக்கமுடியாத அளவு வளர்ந்து விட்டது... அந்த புதர்களில் அமைச்சர், ராஜேந்திர பாலாஜி ஒரு சின்ன துரும்புதான்...

    • Manian - Chennai,இந்தியா

      இந்த துரும்பு பல்லு குத்த உதவுமா?

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஒன்னும் ஆவாது..... "மேல இருக்கறவன்" பாத்துப்பான்... (அதாவது, டில்லில இருக்கற....)

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      கட்டிலுக்கு கீழ் இருக்கிற நீ இப்டியே காசு வாங்கி ஒட்டு போட்டுக்கிட்டு வெத்து கமெண்டா போட்டுக்கிட்டு திரி..

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    ஆவின் பால் கலப்பட வழக்கே தள்ளுபடியாகி விட்டது. இந்த லஞ்சஊழல் வழக்கு எம்மாத்திரம் ? போனவாரம்கூட இருபதாண்டுகளுக்குப்பிறகு சத்தியமூர்த்தி வழக்கு தீர்ப்புவந்தது அதன் அப்பீல் இன்னொரு மாமாங்கம் நடக்கும் .அதுதான் இந்தியா

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    புறங்கையை நக்குவது தவறல்ல அன்பளிப்பை லஞ்சம் என சிறுமைப்படுத்தக் கூடாது என அந்தக் அக்காலத்திலேயே மூதறிஞர் கட்டுமரத்தார் சொல்லியுள்ளாரே

    • balakrishnan - coimbatore,இந்தியா

      எப்படி உங்களுக்கு இவ்வளவு நிதி சேர்ந்தது என்று பொன்னாரிடம் நிருபர்கள் கேட்டபோது உண்டியல் வைத்து வசூல் செய்தோம் என்று சொன்னவர்கள், அன்பளிப்பை லஞ்சமாக பார்க்க கூடாது என்று சொன்னவர்கள், அடுத்தவனை பற்றி பேசலாமா, ஆர்.எஸ்.எஸ்.., பி.ஜெ.பி காரர்களுக்கு பித்தலாட்டம் என்பது அவர்களுக்குள் சுயம்பாக உருவானது, யாரும் அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை

    • Manian - Chennai,இந்தியா

      அவர் வெச்ச லஞ்சத் தீ இனிமேல் அணையாது. அவரது குடும்பங்களால் அதே தீயால் எரிக்க படுவார்கள். காலம் கஞ்சம் ஆகும். அவ்ளோதான்.

  • binakam - chennai,இந்தியா

    நீயெல்லாம் அரசியல்வாதியா ? கருணாநிதி+மாறன் சகோதரர் குடும்பம் மாதிரி இருக்கனும்

    • balakrishnan - coimbatore,இந்தியா

      எடியுரப்பா, கர்நாடக ரெட்டி சகோதரர்கள், வியாபம் வழக்கு புகழ் ம.பி சவுகான், அமீத் ஷா மகன் மாதிரி இருந்தால் என்ன குறைச்சல்

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      அவனுங்க எல்லாம் லேனர்ஸ்.. கருணா தான் எக்ஸ்பர்ட் ..தடயம் இல்லாம செய்யுறதுல .. அப்டியே தடயம் கிடைச்சாலும் அதை வச்சி உப்மா கிண்டுறமாதிரி தான் கிடைக்கும்...அந்த அளவுக்கு எக்ஸ்பர்ட்.

    • Manian - Chennai,இந்தியா

      காசு கொடுக்காம கள்ள ரயிலேறி வர்ற போதே தன் திறமையை முழுமையாக புரிந்து கொண்ட கொள்ளை மேதை.

  • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

    காமராஜுக்கு பின் ஆண்டவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் இந்த கொள்ளை காரர்களை உருவாக்கத்தான் 200 ரூபாய், பிரியாணி ,கிரைண்டர், மிக்ஸி ,பேன்,ஆடு ,இலவச மின்சாரம்,வண்ண தொலைக்காட்சி பெட்டி,அம்மா உணவகம், அம்மா உப்பு, தாலிக்கு தங்கம், இலவசம் அரிசி .மொத்தமாய் உங்களை குப்பையில் போட்டாலும் இந்த கொள்ளை காரர்களே மீண்டும் மீண்டும் வாய்ப்பை பெறுவார்கள்.தமிழ் நாட்டு மக்கள் அறியாமையில் வாழ்கிறார்கள் எனதெரிகிறது.

    • balakrishnan - coimbatore,இந்தியா

      இலவசம் தேவையில்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் கருத்து, ஆனால், இதே வேலையை தானே மற்ற மாநிலங்களும் செய்கின்றன, இலவசத்துக்கு எதிரானவர் மோடி என்ற உங்கள் கருத்து குவியல் இந்த நான்கு வருடத்தில் சிதறிவிட்டது

    • Manian - Chennai,இந்தியா

      தம்பி அதிலேயும் ஒரு டெக்னீக் இருக்கே அதாவது, இந்த ஓசி வாங்குன பயலுகளுக்கு தண்ணி கிடைக்காது, ரோட்டிலே குண்டும் குழியமா இருக்குற இடங்களை விழுந்து அடிபட்டு, ஆசுபத்திரிக்கு போக ஆம்புலன்சு இல்லாம சாவனுக, உணவில்லாம வெவசாயம் இல்லாம சாவானுக.

  • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

    இதில் வைத்தி விவகாரமும் அடங்குமா?

  • Gajageswari - mumbai,இந்தியா

    லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து ஒன்றும் இல்லை என்று குமாரசாமி போல அறிக்கை தாக்கல் செய்துவிடும்

    • balakrishnan - coimbatore,இந்தியா

      விசாரணை அதிகாரிக்கு யோகம்

  • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

    A1 குற்றவாளியின் வழியில நடக்கும் ஆட்சினு அதாவது 'கொள்ளையடிப்பதே எங்கள் லட்சியம்' என்று அறிவிச்சுட்டு ஆட்சி நடத்திகிட்டு இருக்காங்க.. பின்னே A1 மாதிரி சொத்து குவிக்கலைன்னா எப்படி..? மக்கள் பணத்தை சுருட்டாம அதிமுககாரனால ஒரு நிமிஷம் கூட உயிர் வாழ முடியாது...

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    ////s t rajan - chennai,இந்தியா 13-ஜூன்-2018 02:24 கொள்ளையர் திலகமாக இருக்கிறாரே அவர் என்ன செய்வார் ? உயர் திரு கக்கன், காமராஜ் போன்று ஏமாளியாக இருப்பாரா ? அண்ணன் சிதம்பரம், தாத்தா கருணாநிதி, அன்புத் தங்கை கனிமொழி போல் தப்பிப் பிழைப்பாரா ? ஆனால் அதற்கு ஏற்றவாறு ஒரு சைனியோ குமாரசாமியோ கிடைக்க வேண்டுமே ?.//// - அடடா, இந்த காலத்தில், இப்படி ஒரு மந்திரியா?. ச்சோ ச்சோ, அட பரிதாபமே?.

    • Manian - Chennai,இந்தியா

      எல்லாமே எம் மச்சான் மரூத நாயகம் வேலைதான். ஒரு பி.எம். டபுல் யு வேணுமே மச்சான் என்னால். கொஞ்சம் கவனிக்கும் போனேன், கப்பலனு களவாணிபய எல்லாரையும் குடி வெறியில் ஒளறிப் போட்டான். பால்தான் குடிக்கான்னு நெனைச்சது இவோலோ பெரிசா வருமுன்னு தெரியா போச்சே. - ராஜா சிம்மாசனம் இழந்த பாலாஜி, இன் வெறும் பால் வியாபரிதானா?

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    இந்திய அளவில் தர்ம யுத்த கமிஷன்கார முந்திரி அடிமை வேஷதாரிக்கு நிகராக யாரும் இருப்பதாக தெரியவில்லை. இந்த மாதிரி ஆளுங்களை ஆர் எஸ் எஸ் தேவையில்லாமல் வளர்த்து தமிழகத்தில் தன் பெயரை நாறடித்துக் கொண்டிருக்கிறது. இவர்களை பிடித்து உள்ளே வைத்து விட்டு மக்களிடம் நேரடியாக வந்தால் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருக்கும். கெட்ட எண்ணம் இருப்பதால் அவர்களுக்கு நல்ல வழி தெரியவில்லை.

    • Kalyanaraman S - Bangalore,இந்தியா

      சிஸ்டர் கிங், நீங்க சொன்ன மாதிரியே அத்தனை ஊழல் பேர்வழிகளையும் உள்ளே போட்டுவிட்டு வந்து வோட்டு கேட்டால் போடுவீர்களா? மாட்டீங்க அப்ப என்ன சொல்லுவீங்க? ஆஹா, தமிழன்களை உள்ளே போட்ட வடநாட்டு ஆரிய கும்பலை அடிச்சு தொரத்துன்னுதானே சொல்லுவீங்க

    • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

      உங்களபிமான ஐ எஸ் காலிபேட் ஆட்சியமைவதைவிட திராவிஷ ஆட்சிகள் தேவலாம் இவர்கள் போய் திமுக வருவதில் உங்களுக்கு என்ன இன்பமோ? இரண்டுமே அரக்கர்களின் கூட்டம்

    • balakrishnan - coimbatore,இந்தியா

      எந்த விதத்திலும் திராவிட இயக்ககங்களை விட பி.ஜெ.பி உயர்வான இயக்கம் இல்லை,

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      பாலனோட உயர்வு ரேட்டிங் : முதல் இடம் ஐ எஸ் ஐ எஸ் , ரெண்டாவது வெள்ளைக்காரன்...அப்புறம் ஹிட்லர்...அப்புறம் திராவிடன்...(கருணாவும் அடக்கம்) ...அப்புறம் தான் பிஜேபி..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    லஞ்ச ஒளிப்பு துறை.. நல்லா ஒளிச்சு வச்சி விளையாடுவாங்க.

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    இப்படியே போச்சுன்னு ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்களே?

    • Manian - Chennai,இந்தியா

      ஏன் மிஞ்ச மாட்டாங்க. ஜெயிலில் மந்திரியாக இருப்பாங்களே

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நாவிதனின் குப்பையை கிளறினால் முடித்தான் வரும்... தங்கம் வரும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம்.. மொத்த கோஷ்டியும் ஊழல்தான்... இருந்தாலும் இந்தப்பிரச்சினையை திராவிட பார்முலா மூலம் அணுகினால் "அதிமுக திமுகவை விட ஊழல் குறைவாக செய்வது" அப்பட்டமாக தெரியும்...

    • balakrishnan - coimbatore,இந்தியா

      தி.மு.க வில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் மேலிட தலைவர்கள் மீது தான், அதுவும் கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கலைஞர் மீது தான், குறிப்பாக கலைஞர் மீது தான் முதல் குற்றச்சாட்டு, தி.மு.க வில் முதன் முதலாக கோபாலபுரத்தில் சொந்த வீடு வாங்கியவர் கலைஞர் தான், அவர் வளர்ந்த காலத்தில் அவர் வசனம் எழுதிய படங்கள் மிகவும் சிறப்பான வசூலை பெற்றுக்கொடுத்தது, அதில் ஏராளமாக சம்பாரித்தார், அதை யாரும் கணக்கில் கொள்வதில்லை, அன்றிலிருந்து முறையாக வருமானவரி செலுத்தி வருகிறார், ஆண்டு கணக்கு சமர்ப்பித்து வருகிறார், எங்கும் தகராறு கிடையாது, ஆனால் அடுத்தடுத்த நிலையில் இருந்த தலைவர்களில் வெகு சிலரை தவிர, பலரும் மிகவும் சாதாரண நிலையில் தான் இருந்துவருகிறார், துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி, ஏ.வ.வேலு, போன்றவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்துவிட்டார்கள், ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தி எதிர்ப்பு கதாநாயகனாக விளங்கிய எல்.கணேசன் இப்போதும் மிகவும் சிரமமான சூழலில் தான் இருக்கிறார், நம்மாழ்வார் சகோதரரும், முன்னாள் திருவையாறு எம்.எல்.ஏ வும் ஆகிய இளங்கோவன் வறுமையில் தான் இறந்தார், 70 - 80 களில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களா பலரும் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் வாழ்ந்துவந்தார், அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களாக விளங்கிய வெற்றிகொண்டான்,நன்னிலம் நடராஜன், தீப்பொறி, நெல்லை புகாரி, விடுதலை விரும்பி போன்றவர்கள் ஒரு சாதாரண நிலையில் தான் இருந்துவருகிறார், இதில் பலரும் இறந்துவிட்டார்கள், ஆனால் இன்று அ.தி.மு.க வில் ஒரு சாதாரண வட்ட செயலாளர் கூட மிகப்பெரிய செல்வந்தராக வலம் வருகிறார், அதை யாரும் பேசுவதில்லை, தி.மு.க வை மட்டுமே மீண்டும் மீண்டும் பொய்யான குற்றங்களை சுமத்துவது உள்நோக்கம் இன்றி வேறில்லை,

    • Sathish - Coimbatore ,இந்தியா

      @பாலகிருஷ்ணன் இப்படி சொம்படிப்பதை கொஞ்சம் நிறுத்திக்கொண்டால் நல்லது. ஏய்யா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா. இன்னும் என்னத்த சுரண்டலாம்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையிறீங்க? தமிழ்நாட்டில் இனி என்னத்த மிச்சம் வெச்சிருக்கறீங்க?

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      திமுக குடும்பத்துக்கு சொத்துக்கள் ஏராளம். அவற்றையெல்லாம் சின்ன விஷ்யம் போல பதிவு செய்தது கேவலம். திமுக ஒரு கார்ப்பொரேட் கம்பெனி. “திராவிடம்”, “தமிழ்”, “ஹிந்தி எதிர்ப்பு”, “பிராமணர் எதிர்ப்பு”, “இந்து மத துவேசம்” - போன்றவை அவர்களின் வர்த்தக காப்புரிமை பெற்ற தொழில் நுணுக்கங்கள். இணைய யுகத்தில் அவர்களின் பொய்களை திமுக அடிமைகள் கூட அறிவார்கள். உங்களைப்போன்ற ஒரு சிலர் அறிந்தும் அறியாதது போல நடந்து கொள்வது சுய நலத்தை முன்னிருத்தியே...

    • Sudarsanr - Muscat,ஓமன்

      //தி.மு.க வில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் மேலிட தலைவர்கள் மீது தான், அதுவும் கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கலைஞர் மீது தான், குறிப்பாக கலைஞர் மீது தான் முதல் குற்றச்சாட்டு, தி.மு.க வில் முதன் முதலாக கோபாலபுரத்தில் சொந்த வீடு வாங்கியவர் கலைஞர் தான், அவர் வளர்ந்த காலத்தில் அவர் வசனம் எழுதிய படங்கள் மிகவும் சிறப்பான வசூலை பெற்றுக்கொடுத்தது, அதில் ஏராளமாக சம்பாரித்தார், அதை யாரும் கணக்கில் கொள்வதில்லை, அன்றிலிருந்து முறையாக வருமானவரி செலுத்தி வருகிறார், ஆண்டு கணக்கு சமர்ப்பித்து வருகிறார், எங்கும் தகராறு கிடையாது, ஆனால் அடுத்தடுத்த நிலையில் இருந்த தலைவர்களில் வெகு சிலரை தவிர, பலரும் மிகவும் சாதாரண நிலையில் தான் இருந்துவருகிறார், துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி, ஏ.வ.வேலு, போன்றவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்துவிட்டார்கள், ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தி எதிர்ப்பு கதாநாயகனாக விளங்கிய எல்.கணேசன் இப்போதும் மிகவும் சிரமமான சூழலில் தான் இருக்கிறார், நம்மாழ்வார் சகோதரரும், முன்னாள் திருவையாறு எம்.எல்.ஏ வும் ஆகிய இளங்கோவன் வறுமையில் தான் இறந்தார், 70 - 80 களில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களா பலரும் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் வாழ்ந்துவந்தார், அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களாக விளங்கிய வெற்றிகொண்டான்,நன்னிலம் நடராஜன், தீப்பொறி, நெல்லை புகாரி, விடுதலை விரும்பி போன்றவர்கள் ஒரு சாதாரண நிலையில் தான் இருந்துவருகிறார், இதில் பலரும் இறந்துவிட்டார்கள், ஆனால் இன்று அ.தி.மு.க வில் ஒரு சாதாரண வட்ட செயலாளர் கூட மிகப்பெரிய செல்வந்தராக வலம் வருகிறார், அதை யாரும் பேசுவதில்லை, தி.மு.க வை மட்டுமே மீண்டும் மீண்டும் பொய்யான குற்றங்களை சுமத்துவது உள்நோக்கம் இன்றி வேறில்லை,...// தோரயமா அவரு எவ்ளோ படத்துக்கு எழுதினார். எவ்ளோ ரூபா கொடுத்தன்ங்க. இப்போ அவரரோட சொத்து மதிப்பு எவ்வளவு. கூடி கழிச்சி பாரு கணக்கு பாக்கற இயந்திரம் திணறும். சும்மா உலராத. அதிமுக கரண் யோக்கியன் கிடையாது. ஆனா உங்க திமுககாரண பாக்கும்போது ஒரு வருஷம் முந்தி வரை கொஞ்சம் பரவ இல்ல. ஆனா இப்ப எல்லாம் ஒண்ணுதான்.

  • s t rajan - chennai,இந்தியா

    கொள்ளையர் திலகமாக இருக்கிறாரே அவர் என்ன செய்வார் ? உயர் திரு கக்கன், காமராஜ் போன்று ஏமாளியாக இருப்பாரா ? அண்ணன் சிதம்பரம், தாத்தா கருணாநிதி, அன்புத் தங்கை கனிமொழி போல் தப்பிப் பிழைப்பாரா ? ஆனால் அதற்கு ஏற்றவாறு ஒரு சைனியோ குமாரசாமியோ கிடைக்க வேண்டுமே ?

  • Manian - Chennai,இந்தியா

    மூக்கு போடி சோத்திலே கலந்து போட்டு , காக்கையும் புடிக்கலாமுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா இவரை கோர்டுபடி போய்த்தான் பிடிச்சிருக்கானுக. இடையிலே தரகரக்ள ஆறுன்னுந் தெறிஇஞ்சுகிட்டு அவனுங்களையும் சேர்த்து குண்டில அடைச்சு சுத்தி கோலாட்டம் அடிக்கணும் - கிழவர் கீரை பொறுக்கியார், மதுரை கூடல்

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    இதே நீதிமன்றம் தானே சகாயம் சார் அவர்களை நியமித்தது கிரானைட் கொள்ளையை பற்றி விசாரிக்க. அவர் கொடுத்த ஆய்வு அறிக்கையின் மீது நீதிபதி ஆய்வு என்ற பெயரில் வருடக்கணக்கில் ஆய் போய் அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கின்றார். அதே மாதிரின் அண்ணன் வெயிட்டான "கவனிப்பில்" நீதிபதி அறிக்கையை குப்பை தொடடியில் தூக்கி எறிந்து விடுவார்.

  • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

    மூஞ்சிலயேய் நல்ல திருட்டு கலை தாண்டவம் ஆடுகிறது

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    தனியார் பால் நிறுவனங்களிடம் காதும், காதும் வைத்தது மாதிரி வாங்கி இருக்கலாம். கமிஷன் வரவில்லை என்பதற்காக 'கலப்பட பால், அது, இது" என்று உதார் விட போக இப்பொழுது மாட்டிக் கொண்டு தவிக்க வேண்டியுள்ளது. (இந்த விசாரணை ராஜேந்திர பாலாஜியுடன் நிற்காது. அடுத்து பழனிசாமி, பன்னீர் செல்வம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஏனென்றால் பாஜக வுக்கு இனி அதிமுக வின் தயவு தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது).

    • Sudarsanr - Muscat,ஓமன்

      அண்ணன்தான் அதுக்கு உத்தரவு போட்டாரு.

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      சிங்கை மணி அவ்வ்ளோ பெரிய அப்படக்கரா?

    • Manian - Chennai,இந்தியா

      அவருக்கு மட்டும் கற்பனை உரிமை கிடையாதா?

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    இந்த பச்ச மண்ணு ஒரு காசு கூட லஞ்சம் வாங்கி இருக்காது. பசை வாலியை தூக்கி கொண்டு தெரு தெருவாக போய் சினிமா போஸ்டர் ஒட்டிய இவரை, அமைச்சர் ஆக்கி அம்மா அழகு பார்த்ததை, பிடிக்காத உலகம், இப்போது அவரை அசிங்கம் பண்ண பார்க்கின்றது.

    • Manian - Chennai,இந்தியா

      ஏம்ப்பா , ஒட்டின போஸ்டர்களை களையவும் இவரு இப்போ வேணுமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement