Advertisement

சூப்பர் கம்ப்யூட்டர்களில் அமெரிக்கா மீண்டும் முதலிடம்

வாஷிங்டன்: தற்போதுள்ள சூப்பர் கம்ப்யூட்டரை விட இரண்டு மடங்கு சக்திவாய்ந்த 'சம்மிட்' என்னும் சூப்பர் கம்ப்யூட்டரை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.உலகின் சக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டராக இதுவரை சீனாவின் சன்வே டைஹுலைட் உள்ளது. இது ஒரு நொடிக்கு 93 பெட்டா பிளாப்ஸ் கணக்கீடுகளை மேற்கொள்ளும்.இதற்கு போட்டியாக இதை விட 2 மடங்கு வேகத்தில் இந்த சம்மிட் கம்ப்யூட்டரை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. ஐபிஎம் மற்றும் என்விடியா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய இந்த சூப்பர் கம்ப்யூட்டர் டென்னீஸி மாகாணத்திலுள்ள ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இதில் 4,608 சர்வர்கள், 10 பைட்ஸ்க்கும் மேற்பட்ட நினைவகம் உள்து. மரபணு குறியீட்டை ஒப்பிட்டு கணக்கீடுகளை மேற்கொள்ள இது உருவாக்கப்பட்டுள்ளதாக இதன் இயக்குனரான தாமஸ் சாச்சாரியா தெரிவித்துள்ளார்.அமெரிக்க எரிசக்தித்துறை செயலர் ரிக் பெர்ரி கூறும்போது, சாதாரண கம்ப்யூட்டரில் உள்ள 30 ஆண்டு டேட்டாக்களை ஒரு மணிநேரத்தில் இது கணக்கீடு செய்யும். நொடிக்கு 200,000 டிரில்லியன் அல்லது 200 பெட்டா பிளாப்ஸ் கணக்கீடுகளை மேற்கொள்ள முடியும்,என்றார்.2017ஆம் ஆண்டு உலகின் 500 முன்னணி சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் அமெரிக்காவின் 143 கம்ப்யூட்டர்களும், சீனாவின் 202 கம்ப்யூட்டர்களும் இடம்பிடித்திருந்தன.அமெரிக்காவின் இதற்கு முந்தைய சூப்பர் கம்ப்யூட்டரான டைட்டன் அந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement