Advertisement

எனக்கு வாதாட யாரும் இல்லை : நவாஸ் ஷெரிப் குமுறல்

இஸ்லாமாபாத்: நீதிமன்றத்தின் தொந்தரவு காரணமாக எனக்காக ஆஜராக எந்த வழக்கறிஞரும் வர மறுக்கின்றனர், என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.லண்டனில் கோடிக்கணக்கான சொத்துகளை நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், அவரைப் பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.அவர் மீதான வழக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறு நீதிமன்றம் வற்புறுத்தியது. ஒரு மாதத்துக்குள் தன்னால் முடிக்க இயலாது என்று நவாஸ் ஷெரிப்பின் வழக்கறிஞர் கவாஜா ஹரிஸ் இந்த வழக்கிலிருந்து விலகினார்.இதுகுறித்து நவாஸ் ஷெரிப் கூறும்போது, எனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் தொந்தரவு காரணமாக எந்த வழக்கறிஞரும் எனது தரப்பில் ஆஜராக மறுக்கின்றனர்.என்மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. ஆனால் என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Indhuindian - Chennai,இந்தியா

    உப்பைத்தின்னால் தண்ணி குடிச்சுதானே ஆகணும். ஆடிய ஆட்டம் என்ன - கொள்ளையடிக்க சொத்து என்ன- தீவிரவாதத்தை தூண்டிவிட்டதென்ன- வாய்க்கு வந்த படி இந்தியாவை தூஷித்தது என்ன- அனுபவி ராஜா அனுபவி. நீயாவது பரவாயில்லை இருக்க ஒரு நாடு இருக்கிறது. உன்னுடைய கூட்டாளி முஷாரப்பிக்கு எது நாடு?

  • Milirvan - AKL,நியூ சிலாந்து

    புட்டோ'வின் வழி செல்ல வாழ்த்துக்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement