Advertisement

கவர்னர் அலுவலகத்தில், 'தர்ணா'; அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

புதுடில்லி : டில்லி துணை நிலை கவர்னர் அலுவலகத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த அமைச்சர்கள், தர்ணா போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி அரசுக்கு, மத்திய, பா.ஜ., அரசு, கவர்னர் வாயிலாக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

'டில்லி யூனியன் பிரதேசம் என்பதால், துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது; இதை பயன்படுத்தி, ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருகிறது' என, அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார்.

சமீபத்தில், முதல்வர் கெஜ்ரிவால், ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை துவங்கி வைத்தார். ஆனால், முதல்வரின் உத்தரவை செயல்படுத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், முதல்வருக்கு இல்லை.

வலியுறுத்தல்:



இதையடுத்து, 'மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், துணை நிலை கவர்னர் உத்தரவிட வேண்டும்' என, கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.

இதற்காக, துணைநிலை கவர்னர், அனில் பைஜாலை சந்திப்பதற்காக, முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர்களுடன், நேற்று முன்தினம் மாலை, கவர்னர் மாளிகை சென்றார். ஆனால், கவர்னர் அனுமதி தரவில்லை. அதனால், கவர்னர் மாளிகையின் வரவேற்பாளர் அறையில், பல மணி நேரம் காத்திருந்தார்.

அவருடன், மாநில அமைச்சர்களும் வந்தனர். எனினும், கவர்னரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, 'கவர்னரை சந்திக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்' எனக் கூறி, கெஜ்ரிவால், வரவேற்பு அறையிலேயே அமர்ந்து, தர்ணா போராட்டம் நடத்தினார்.

குவிந்தனர் :



சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவால், அங்கேயே இன்சூலின் மருந்து எடுத்துக் கொண்டார். மேலும், வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த உணவையும் சாப்பிட்டதாகத் தெரிகிறது. முதல்வர் கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தால், கவர்னர் மாளிகையைச் சுற்றி, ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர்; நள்ளிரவு முழுவதும் பரபரப்பு நிலவியது. எனினும், அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு, கவர்னர் மாளிகைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் கெஜ்ரிவாலும், அமைச்சர்களும், வரவேற்பு அறையிலேயே படுத்து உறங்கினர். நேற்று காலை, முதல்வர் கெஜ்ரிவால், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'டில்லி மக்களே, என் கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை; காத்திருக்கிறேன்' என, பதிவிட்டார்.

இதற்கிடையே, கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கவர்னர் மாளிகையில் தங்கி, முதல்வர் கெஜ்ரிவாலும், அவரது சக அமைச்சர்களும், கவர்னரை மிரட்ட முயற்சிக்கின்றனர்; மேலும், இது தேவையற்ற போராட்டம்' என, தெரிவிக்கப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (25)

  • Sahayam - cHENNAI,இந்தியா

    விடாதீங்க சார்

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை அவமானப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள். முதல்வரையே சந்திக்க முடியாதவர் எப்படி அந்த மாநில நிர்வாக தலைவராக இருக்க முடியும். ஜனநாயகம் நசுக்கப்பட்டு கொண்டிருக்கு, மீண்டும் ஜனநாயகம் தலைநிமிர மக்கள் விழிப்புடன் இணைந்து எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்.

    • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

      ஜனநாயகம் நசுக்கப்பட்டு இருக்கிறது என்றால் கதவு இடுக்கில் கையை விட யார் சொன்னது?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    பெரும்பான்மை மக்களின் தேர்வை ஏளனப்படுத்தி மக்களின் தீர்ப்பை ம. அரசு அவமானப்படுத்துகிறது.

  • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

    வாய் வடை மன்னன் ஒரு கொடுங்கோலன், அவரும் எதுவும் செய்யமாட்டார் வேறு யாரையும் செய்யவிடமாட்டார்.

  • vbs manian - hyderabad,இந்தியா

    ஒரு அரசின் நிர்வாகத்தையே தெரு கூத்தாக்கி விட்டார்கள்

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    ஜனநாயகக் கேலிக் கூத்து இது. பிஜேபி யினர் கெஜ்ரிவாலை திட்டி எழுதலாம். ஆளுநருக்கு பவர் அதிகம் என்றால் அப்புறம் அங்கே எதற்கு ஒரு அரசாங்கம்? IIT பேரைக் கெடுக்க ஒரு ஆசாமி என்றால் அது கெஜ்ரிவால் தான்.

    • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

      ..டெல்லியில் மத்திய அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தின் அனைத்து தலைமையகமும் அமைந்திருக்கின்ற காரணத்தினால் அது ஏதோ இது போன்றவர் நிர்வாகத்தின் கீழ் வந்தால் எதிரி நாடு சொல்வது போல நடந்து அனைத்து மத்திய மந்திரிகளை, ஏன் பிரதம முந்திரியையும், ராணுவ அதிகாரிகளையும் தனது போலீசை விட்டு கைது செய்து அலுவலகங்களையும் பூட்டி வைப்பான். இந்த பயித்தியம் போல ஏதாவது ஓன்று நாளை ஆட்சிக்கு வந்துவிட்டால் அப்படி செய்து விடக்கூடாது என்று தான் டெல்லி முனிசிபாலிட்டி மேயருக்கு உள்ள அதிகாரத்தை மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள் அரசியலமைப்பை வடித்தவர்கள். பெயர் மட்டும் தான் தோரணையாக டெல்லி முதலமைச்சர் என்று. டெல்லியில் உள்ள சாக்கடைகளை அடைப்பு நீக்குவதும், கக்கூஸுகளை பராமரிப்பதும் தான் இந்த கூத்தனுக்கு உள்ள முக்கிய பணி. அதை செய்யவே முடியாமல் திணறுகிறான் இந்த கோமாளி,

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    \\\\ சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவால், அங்கேயே இன்சூலின் மருந்து எடுத்துக் கொண்டார். //// கொஞ்சம் டோஸ் கூடப் போனாலும் மயங்கிடப் போறான்யா .... வெளிய வெரட்டுங்க ....

  • San - Madurai ,இந்தியா

    People of Delhi knows gimmicks and dramas of forgerywal

  • Sahayam - cHENNAI,இந்தியா

    எல்லா கவர்னர்றும் மத்திய அரசின் கட்டு பாட்டுக்கு வந்தது நாட்டுக்கு நல்லது அல்ல

  • balakrishnan - coimbatore,இந்தியா

    அந்த காலத்தில் காங்கிரஸ் ஆளுநர் மூலமாக ஒரு மறைமுக அழுத்தத்தை கொடுக்கும், ஆனால் எதிலும் வித்தியாச இயக்கமான பி.ஜெ.பி தங்களின் கட்சியினரை ஆளுநராக நியமனம் செய்து நேரடியாகவே யுத்தத்தை தொடுக்கிறது

    • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

      பாலு பாய் ...... அரசியலை கடந்த நான்கு வருடங்களாகத்தான் அதுவும் அரைகுறையாக கவனிக்கிறீர்கள் என்று தெரிகிறது ..... மற்றவர்களையும் அவ்வாறு எண்ணிவிடாதீர்கள் .... தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம் .... பர்னாலா உங்கள் கலைஞருக்குத் தம்பி போன்றவர் ..... தொந்தரவே செய்யமாட்டார் ..... அவரைத்தான் உங்கள் காங்கிரஸ் (நீங்கள் கூறியபடி அழுத்தம் கொடுக்க அல்ல, மாறாக கண்டு கொள்ளாமல் இருக்க) நியமித்தது ..... சென்னா ரெட்டி, ரோசய்யா இவர்கள் சமூக சேவகர்கள் இல்லை ..... உங்களுக்குத் பிரியமான காங்கிரசின் தொண்டர்களே .....

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மக்களை துன்புறுத்தாத எந்த வித எதிர்ப்பும் வரவேற்க தக்கதுதான் ...?

  • Kalyanaraman S - Bangalore,இந்தியா

    கவர்னர், முதல்வர் இருவருமே சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக தோன்றுகிறது. முதல்வர் முன்னறிவிப்பின்றி (இது தெரியாது) செல்வது சரியல்ல. அப்படியே அவர் வந்தாலும், முன்னறிவிப்போடு வர அறிவுரை கூறி அவரை திருப்பி அனுப்புவது தான் சரியே தவிர, பார்க்கவே மாட்டேன் என்பது கவர்னருக்கு உகந்ததல்ல.

  • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

    பிரதமரும் மத்திய அரசும் கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. இதற்குத்தான் மக்கள் படித்தவர்களை (மற்றும் நேர்மையாவர்களை) பிரதமராக்க வேண்டும்.

    • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

      பரவாயில்லையே...உங்களுக்கு ஏதோ தெரிகிறது. சரி விஷயத்திற்கு வருவோம். ஆக்ஸ்போடில் படித்த சிதம்பரத்தையம், மன்மோகன் ஆட்சிக்கு கொண்டு வந்து உடனே நேர்மையான சொக்க தங்கம் சோனியாவையும் ஆட்சிக்கு துணையாக உட்கார வைக்கலாமா?

  • Anandan - chennai,இந்தியா

    முதல்வரை சந்திக்க என்ன தயக்கம் கவர்னருக்கு. நம் பிரதமர்தான் தான் பிரதமர் என்பதை மறந்து தனக்கு பிடித்தவர்களை மட்டுமே சந்திப்பார். இதே தவறான வழக்கம் டில்லி கவர்னருக்கு வந்ததா இல்லை அவர்கள் சொல்லி இவர் செய்தாரா என்று தெரியவில்லை.

    • balakrishnan - coimbatore,இந்தியா

      தலை எவ்வழியோ, வாலும் அப்படியே தான் வேலை செய்யும், மோடி தன் கட்சியினரையே சந்திப்பதில்லை, பத்திரிகை நிருபர்களை சந்திப்பதில்லை, மந்திரிகள் கூட்டத்தில் மட்டுமே மந்திரிகள் பிரதமரை சந்திக்க முடிகிறது, ஆளுநர் மட்டும் இளிச்சவாயரா, அவரும் அப்படி தான் நடந்துகொள்வார்

    • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

      பாலு பாய் ..... கவர்னர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மரபல்ல ..... முதலில் இது போன்ற விஷயங்களை அறிந்து கொண்டு தூற்றுங்கள் .....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஒருமண்டலத்துக்கு தர்ணா செய்தாலும் ஒன்றும் ஆகப்போவது இல்லை..

    • Anandan - chennai,இந்தியா

      தங்களுக்கு வேண்டாதவர் ஆட்சியில் இருப்பதால் பழி வாங்க முடிவே செய்துவிட்டீர்கள் போல.

    • balakrishnan - coimbatore,இந்தியா

      உண்மை தான் எத்தனை நாள் போராட்டம் நடத்தினாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை, தொந்தரவுக்கு என்றே ஆளுநர் இருக்கும்போது எப்படி போராடி வெற்றி பெற முடியும்

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      பாதிக்குமேல் உருப்படாத திட்டங்கள்... மூளையுள்ள ஒருவனும் அதற்கு அனுமதி கொடுக்க மாட்டான்... முன்னர் தெருவில்... ஆனால் இன்று ஏசி அறையில் தர்னா

  • raja - chennai,இந்தியா

    கவர்னர் மாளிகை அறிக்கை ஒரு வேடிக்கையானது,,,,,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement