Advertisement

தலைமை செயலகத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை : பணியிடங்கள் எண்ணிக்கை மறுவரையறை

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில் உள்ள நிரந்தர, தற்காலிக பணியிடங்கள் எண்ணிக்கையை, மறுவரையறை செய்வது குறித்து, தலைமை செயலகத்தில் நேற்று, வீட்டுவசதி துறை செயலர் விசாரணை மேற்கொண்டார்.சி.எம்.டி.ஏ.,வில், மொத்தம் உள்ள, 796 பணியிடங்களில், 430 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 290 இடங்கள், நேரடி தேர்வு வாயிலாகவும்; 124 இடங்கள், பதவி உயர்வு வாயிலாகவும்; 16 இடங்கள், அயல்பணி முறையிலும் நிரப்ப வேண்டும்.இதில் தற்காலிக பணியிடங்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிப்பு வழங்க வேண்டும்.'சீனியர் பிளானர், சீப் பிளானர்' பணியிடங்கள் மட்டும், தேவைக்கு ஏற்ப உருவாக்கி நிரப்பப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு, ஆறு கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. கீழ்நிலைப் பணியிடங்கள், இந்த அளவுக்கு கவனிக்கப்படுவதில்லை.இந்நிலையில், அரசுத்துறைகளில் செலவு குறைப்புக்கான நடவடிக்கையாக, பணியிடங்களை மறுவரையறை செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., பணியிடங்களை, மறுவரையரை செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம், தலைமை செயலகத்தில், நேற்று நடந்தது.இதில் பணியிடங்கள் உருவாக்கியதில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம், வீட்டுவசதி துறை செயலர், கிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.குளறுபடிகள் நிலவரம் என்ன?சி.எம்.டி.ஏ., பணியிடங்கள் பயன்பாட்டில் நிலவும் குளறுபடிகள் குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: அங்கீகரித்த பணி விதிகளை மீறி உருவாக்கப்பட்ட பணியிடங்களுக்கு, அரசின் ஒப்புதல் பெறுவதில்லை வெளிவட்ட சாலை திட்டத்தில், தேவை இன்றி, 22 நகரமைப்பு வல்லுனர்கள் உள்ளனர் திட்டங்கள் முடிந்த போக்குவரத்து பிரிவுக்கு, 26; ரயில் போக்குவரத்து பிரிவுக்கு, 13; புதுநகர் பிரிவுக்கு, 67 நகரமைப்பு வல்லுனர்கள் உள்ளனர் கட்டுமான திட்டங்கள் இல்லாத நிலையில், கட்டுமான பிரிவில், 120 பணியிடங்கள் எதற்கு? தற்போதைய சூழலுக்கு ஏற்ப, எத்தகையபணியிடங்கள் உருவாக்க வேண்டும்?இந்த விபரங்களை, நிதித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தாலே, பணியிட வரன்முறை எளிதாக முடியும்.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement