Advertisement

தமிழ் பேராய விருதுக்கு 15 வரை விண்ணப்பம்

சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் வழங்கப்படும், தமிழ்ப் பேராய விருதுக்கு, ஜூன் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ் பேராயத்தின் சார்பில், சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுவழங்கப்பட்டு வருகிறது.இதில், புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யு.போப் விருது, அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.நடப்பாண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், மே 31ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது என அறிவித்திருந்த நிலையில், ஜூன் 15ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், செயலர், தமிழ்ப் பேராயம், எண்.518, ஐந்தாம் தளம், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கழக நிறுவனம், காட்டாங்கொளத்துார், 603 203 என்ற முகவரியில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2741 7379 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement