Advertisement

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 20 கோடி ஒதுக்கீடு

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டிற்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, எக்ஸ்பிரஸ் நிலையத்திற்கு இணைப்பு நடைமேம்பாலம் மற்றும் புதிய பிளாட்பாரமும் அமைக்கப்பட உள்ளது.எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணியருக்கான மேம்பாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போது, 3 - 6 பிளாட்பாரங்களுக்கு செல்ல, எஸ்கலேட்டர் வசதி, நான்காவது பிளாட்பாரம் மற்றும் பூந்தமல்லி சாலை வழியாக வருவோருக்கு, 'லிப்ட்' மற்றும் எஸ்கலேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. 7 - 9வது பிளாட்பாரங்களில் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட உள்ளன.நிலையத்தில் தெற்கு மட்டும் வடக்கு பகுதியில் உள்ள நடைமேம்பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.ரயில்வே வாரியம், நாடு முழுவதும் உள்ள, முக்கியமான, 70 நிலையங்களில், பயணியருக்கான வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில், எழும்பூர் நிலையத்திற்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும், நிலையத்தில் பயணியர் பயன்படுத்தும் பகுதிகள் விரிவாக்கம் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.எழும்பூர் நிலையத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர், மறு சுழற்சி முறையில், பிளாட்பாரம் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்த ஏதுவாக, சேத்துப்பட்டு ரயில்வே பணிமனையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, எக்ஸ்பிரஸ் ரயில் நிலைய நடைமேம்பாலத்திற்கு, இணைப்பு மேம்பாலம் அமைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயிலில் வரும் பயணியரும், புறநகர் மின்சார ரயில் நிலையத்தின், 11வது பிளாட்பாரத்திற்கு, நடைமேம்பாலத்தில் ஏறி வருகின்றனர்.இதை தவிர்க்க, மெட்ரோ ரயில் நிலைய சுற்றுச்சுவர் பகுதியில், 12வது பிளாட்பாரம் அமைக்கவும், ரயில் நிலைய அதிகாரியால், ரயில்வே வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்குவலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement