Advertisement

கு.மா.வா., வீடுகளுக்கு வீட்டு வரி வசூலிப்பு

சென்னை: 'குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள், வீட்டு வரியாக, ஆண்டிற்கு, 330 ரூபாய் செலுத்த வேண்டும்' என, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 20 ஆயிரத்து, 376 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 10 ஆயிரம் வீடுகளில், பொதுமக்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்த ஆண்டு இறுதியில், அனைத்து வீடுகளிலும் மறு குடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது, குடியமர்வு செய்யப்பட்ட வீடுகளுக்கு, வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில், ஒவ்வொரு வீட்டுக்கும், ஆண்டிற்கு, 330 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.குடிசை மாற்று வாரியம் வழங்கிய ஆவணங்களை பரிசீலனை செய்து, வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது, அங்குள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு, குடிசை மாற்று வாரியத்தின் பெயரில் உள்ளது.வீட்டு வரி செலுத்திய ரசீதை வைத்து மின் இணைப்பை, வீட்டு உரிமையாளர்கள் பெயரில் மாற்றிக் கொள்ளலாம் என, குடிசை மாற்று வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில், சிறப்பு முகாம் அமைத்து வீட்டு வரி வசூலிக்க, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement