Advertisement

'டவுட்' தனபாலு

காங்., தலைவர் ராகுல்: அமெரிக்காவில், சாதாரண மனிதர், கோககோலா நிறுவன அதிபராகவும், மெக்டொனால்ட் நிறுவன அதிபராகவும், சாதாரண மெக்கானிக், போர்டு மோட்டார் நிறுவனராகவும் முடியும். இந்தியாவில் அது முடியுமா?

டவுட் தனபாலு: 'அடுத்த நாட்டு கதை எல்லாம் சொல்றீங்க... உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான நம் நாட்டில், சாதாரண மனிதர் ஒருவர், காங்கிரசின் தலைவராக வருவது சாத்தியமா... இது, மற்ற எதையும் விட, சிரமமான விஷயமா தெரியுதே'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

---

அ.ம.மு.க., துணை பொது செயலர் தினகரன்: தமிழகத்தில் இப்போது விசித்திரமான ஆட்சி நடந்து வருகிறது. யாருக்கோ இவர்கள் கைக்கட்டி, சேவகம் செய்து வருகின்றனர் என்பது, இங்குள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும்.

டவுட் தனபாலு: மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும், கைகட்டி சேவகம் செய்யணும்னு நீங்க எதிர்பார்த்தீங்க... அதற்கு அவர்கள் சம்மதிக்காததால், இவ்வளவு ஆக்ரோஷமாக விமர்சிக்குறீங்க என்பதும், 'டவுட்' இல்லாமத் தெரியும்...!

---

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: தினகரனுக்கு மாஸ்டர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தான்.

டவுட் தனபாலு: 'மோடி இருக்கும் வரை, எங்களுக்கு எந்த பயமும் இல்லை'ன்னு, ராஜேந்திர பாலாஜியும், 'மோடி சொன்னதால் தான், அணியை இணைத்தேன்; அமைச்சர் பதவி ஏற்றேன்'னு, பன்னீர்செல்வமும் பகிரங்கமா சொன்னார்களே... இந்த லட்சணத்துல, நீங்க, அடுத்தவர்களை விமர்சிக்கலாமா என்பதுதான், மக்களின், 'டவுட்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இந்தியா ஒன்றில்தான் வெளிநாட்டு பிரஜை இந்தியரை மணந்தபின் நாட்டின் மிகப்பெரிய பதவியை எளிதாக ஆட்டையைப்போடலாம் என்றுநினைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அப்போதைய ஜனாதிபதியால் தடுத்துநிறுத்தப்பட்டதும் நடக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement