Advertisement

அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீத வரி; இந்தியா மீது டிரம்ப் நேரடி குற்றச்சாட்டு

வாஷிங்டன் : ''அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு, இந்தியா, 100 சதவீத வரி விதிப்பதை ஏற்க முடியாது,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன், 'ஜி - 7' உச்சி மாநாட்டில் பங்கேற்க, கனடாவின் க்யூபெக் நகருக்கு வந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசியதாவது: அமெரிக்கா என்ற சேமிப்பு வங்கியில் இருந்து, ஒவ்வொரு நாடும் கொள்ளையடிக்கின்றன. நான் 'ஜி - 7' நாடுகளை மட்டும் குறிப்பிடுவதாக கருத வேண்டாம்.

ஆதாயம் :முன்னேறிய நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என, அனைத்து நாடுகளும், அமெரிக்காவிடம் ஆதாயம் பெறுகின்றன. ஆனால் அந்நாடுகளிடம் இருந்து எந்த ஆதாயமும் அமெரிக்காவிற்கு கிடைப்பதில்லை.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு, இந்தியா, 100 சதவீதம் வரி விதிக்கிறது. ஆனால், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அதே பொருட்களுக்கு, அமெரிக்கா வரி விதிப்பதில்லை; இது சரியல்ல. அதனால், பல நாடுகளுடன் வரி விதிப்பு தொடர்பாக பேசி வருகிறோம். இத்தகைய, பாரபட்ச அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் ஆதாயத்தை, சம்பந்தப்பட்ட நாடுகள் இறக்குமதிக்கும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நாடுகளுடன், அமெரிக்கா வர்த்தகத்தை முறித்துக் கொள்ளும்.

மானியம் :ஒவ்வொரு நாடும், அதன் பொருட்களை அமெரிக்காவில் வரியின்றி இறக்குமதி செய்ய விரும்புகின்றன. அத்துடன், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அதே போன்ற பொருட்களுக்கு, அமெரிக்கா அரசு மானியங்கள் அளிக்கக் கூடாது எனவும் எதிர்பார்க்கின்றன.

இத்தகைய கருத்துகளை வலியுறுத்தும் நாடுகள் மட்டும், உள்நாட்டு தொழில்களை ஊக்குவிக்க, மானியம் வழங்குகின்றன. இது எந்த விதத்தில் நியாயம் என, எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பு : அமெரிக்கா, உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்க, உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, முறையே, 25 மற்றும் 10 சதவீதம் வரி விதித்துள்ளது. இது, அதிக அளவில் ஏற்றுமதி செய்யும், சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பாதித்துள்ளது. இந்தியா - அமெரிக்கா பரஸ்பர வர்த்தகம், கடந்த நிதியாண்டில், 1,100 கோடி டாலரில் இருந்து, 1,250 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
நிபந்தனையுடன் ஏற்கப்படும்:மத்திய அரசு, அமெரிக்காவின், 'ஹார்லி டேவிட்சன்' மோட்டார் சைக்கிள் இறக்குமதிக்கான வரியை, ஏற்கனவே, 75 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக குறைத்துள்ளது. இதை முழுவதுமாக நீக்க வேண்டும் என்கிறார், டிரம்ப். அதை இந்தியா, நிபந்தனையுடன் ஏற்கும். அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியாவின், 3,500 பொருட்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், குறைந்த வரி மற்றும் வரி விலக்கு சலுகை கிடைக்கிறது. இந்த ஒப்பந்தத்தை, அமெரிக்கா புதுப்பிக்கும் பட்சத்தில், இந்தியா, ஹார்லி டேவிட்சன் இறக்குமதிக்கு வரியை குறைக்கும் அல்லது வரி விலக்கு அளிக்கும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (21)

 • Sahayam - cHENNAI,இந்தியா

  நாளைக்கே குறைத்து விடுவார் அந்த ஆப்பிளின் இறக்குமதி வரியினை

 • a.thirumalai -

  இதெல்லாம் பத்தி பள்ளி கூடத்தில் சொல்லி குடுக்கலியே

 • Madan - Chennai

  அடேங்கப்பா தேச நேசனிடமிருந்து முதல் முறையாக தேச நலன் சார்ந்த கருத்து வந்துள்ளது இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பாரத சமுதாயம் இன்று மேற்கத்திய கலாச்சாரத்தில் சிக்கி தனது தனித்தன்மையை இழந்து தருகிறது

 • Meenu - Chennai,இந்தியா

  எங்க இந்தியா எங்களை வாழவும் விடாது, சாகவும் விடாது. ஏன்னா எங்க அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பது, ஊழல் செய்வது, நாட்டை ஒரு தீவிரவாதி மாதிரி பொருளாதார வழியில் அழிப்பது தான் இவர்களின் குறிக்கோள். சுயநலவாதிகள், பேராசை கொண்டவர்கள். ஆன்லைனில் ஒரு பொருளை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் பண்ணி வாங்க கஸ்டம்ஸ், அது இதுன்னு ஏகப்பட்ட பணம் பிடுங்குறாங்க. அப்பறம் எப்படி இந்தியன் முன்னேறுவான். இந்த 21 ஆம் நூற்றாண்டில் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரமே வழங்க துப்பில்லை. இந்த லட்சணத்துல ஐநாவுல நிரந்தர உறுப்பினரா ஆகணுமாம், சூப்பர் பவர் நாடா வேற மாறுறாங்களாம்.

  • shiva.G - chennai,இந்தியா

   யாரு இந்த மீனு கெளுத்தி மீனா? இல்ல கெண்டை மீனா? இப்படி ஆன்டி-இந்தியனா கருது போட்டு இருக்கு

  • Sivasankar - Chennai,இந்தியா

   பேச்சு சுதந்திரம் எனபது உங்கள் கருத்தை கூற மட்டுமே, அடுத்தவரை மரியாதை குறைவாக பேச அல்ல.

 • kumarkv - chennai,இந்தியா

  The Mutual trading amount is very much less than the bribe amount taken by our Dasildhar

 • Susainathan -

  Trump he is a business man before american President and he is talking about tax not the factory or corporate companies so simply blaming before understanding the article tax government not paying they putting tax for public heads only without corporate companies in India cant to run how much more important for farming work same time factory and corporate companies also important

 • nizamudin - trichy,இந்தியா

  ஏமாற்றவும் கூடாது ஏமாறவும் கூடாது

 • nizamudin - trichy,இந்தியா

  trumb சொல்வதில் நியாயம் தெரிகிகிறது

  • shiva.G - chennai,இந்தியா

   என்னய்யா நியாயம் உனக்கு தெரியுது நாம ஏற்றுமதி பன்றது வெங்காயம் வெல்ல பூண்டு 5 ரூபாய் 10 ரூபாய் ஐட்டங்கள் அவன் நம்ம நாட்டுல ஏற்றுமதி பண்றது பல லட்சம் விலை மதிப்புடைய பொருட்கள் நல்லா யோசிச்சு பாரு புரியும் வரிவிதிப்பு

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  காக்கா கடி சண்டையாக இருக்கும் போல உள்ளதே...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஏற்றுமதி எதற்கு? அந்நிய செலாவணி சேர்க்க. அந்நிய செலாவணி எதற்கு? அளவுக்குமீறி கச்சா எண்ணெயும் தங்கமும் வாங்கி குவிக்க .அதாவது நாம் சொகுசாக தனித்தனி வண்டிகளில் பந்தாவாக உலாவுவதற்கும் கடத்தல் தங்க நகை போட்டு பளபளக்கவும் நொய்யல் ஆறை சாயத்தண்ணீரால் நிரப்புகிறோம். ஆம்பூர் வாணியம்பாடி நிலத்தடி நீரை ஆடுமாடுகள்கூட குடி குடிக்க முடியாமல் ஆக்குகிறோம் ஆட்டோமொபைல் தயாரித்து ஏற்றுமதி செய்ய அளவுக்குமீறி சுரங்கங்கள் சாம்பலை பறக்கவிடும் அனல்மின் நிலையங்கள் .கடற்கரையை சிதைத்து துறைமுகங்கள் இதற்காகத்தான் ஆசைப்படுகிறாய் பாலகுமாரா அடுத்த தலைமுறைக்கு வாழத்தகுந்த பாரதத்தை விட்டுப்போகமாட்டோம் என்று கங்கணமல்லவா கட்டிக்கொண்டிருக்கிறோம்?

  • nizamudin - trichy,இந்தியா

   இதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   ஆம்பூர் ..வாணியம்பாடி ன்னு சொன்னவுடனே நிஜாமுதீன் ஏன் ஆஜர் ஆவுறாரு?

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  எசமான்... அதான் இந்தியாவையே உங்க கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகை விட்டுட்டோமே? உங்க மனசு சாந்தமாக இன்னும் என்ன செய்யணும்? சொல்லுங்க,

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   உண்மை மிஷனரி சொற்பட்டுகள் இந்த நாட்டை பிடிக்குள் வைத்திருக்கிறது. அவர்களின் அனுமதி இன்றி எந்த தொழிலும் இங்கே நடத்த முடியாது.

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   Navn நீ அங்கே அமெரிக்காவில் என்ன பண்ணுற ... அங்கே அடிமை வேலை தானே பார்க்கிற .. அதுவும் கார்பொரேட் கிட்ட தானே அடிமை வேலை பார்க்கிற ...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  ஐயோ பெரியண்ணே எதுக்கு கோவம், உங்களோட முக்கியமான கன்வெர்ஷன் ப்ரொடக்ட் எந்தவித வரியும் இல்லாம இறக்குமதி ஆயிட்டு இருக்கே?

 • Rajan - chennai,இந்தியா

  இதிலிருந்து என்ன தெரிகிறது? புத்திசாலித்தனம் தனியொருவர் சொத்து கிடையாது...

 • Manian - Chennai,இந்தியா

  அமெரிக்காவின் வாங்கும் சக்தி, அதற்கு தேவை, அந்த நாட்டின் பரந்த பொருளாததை எந்த நாடும் எதிர்க்க முடியாது. அதை இந்தியயாவும் புரிந்து கொண்டுள்ளது. பங ஏதாவது வம்பு செய்தல், சைனா அதை திருடிக்கொள்ளும். இது ஒரு வேண்டாத, ஆனால் தேவையான தலைவலியே. யூரோப்பாவும் இதில் அடங்கும். அடிப்படை ஆராய்ச்சிகள், புதிய கண்டு பிடுப்புக்கள், அதற்கு காப்புரிமை, அந்த காப்புரிமையை பயன் படுத்தி உண்டாகும் தொழில்கள் அங்கே அதிகம். சைனா இதை உணர்ன்துள்ளது. அதற்காக அவர்களாலும் தற்போது பலமாக முயற்சி செய்கிறார்கள். அவர்களிடம் தெய்வயானை முதலீடுகளும் உள்ளன. தேவையானால், தோழி நுட்பங்களை திருடுவார்கள். நம் நாட்டில், மக்களை எப்படி ஜாதிய முறையில் பிரித்து கொள்ளை அடிக்கலாம், திறமை அற்றவர்களை (95 % என்று சில நாட்கள் வந்த செய்தி ) ஜாதி-மதம்-இடஒதுக்கீடு என்ற போர்வையில் 80 % அரசாங்க, பல்கலைக்கழகளில் லஞ்சம் வாங்கியே எந்த வித அடிப்படை ஆராய்ச்சியும் செய்யாமல், வீணாக, இங்கே ஏராளமான தொழில்கள் இருக்கின்றன என்றார் கற்பனையில் இருக்கிரோம். இதை மாறா வழியே இல்லை என்பது கொடுமை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement