Advertisement

கர்நாடகா தேர்தலில் கள்ள நோட்டு புழக்கம்? கோவையில் விசாரணை தீவிரம்

கோவை : கோவையில், கள்ள நோட்டு அச்சடித்து கர்நாடகா தேர்தலில் புழக்கத்தில் விடப்பட்டதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, சாய்பாபா காலனியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்த ஆனந்த், 31, கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து, 1.18 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தொடர்பு :




இவர் காரமடையை சேர்ந்த சுந்தர், 38, கேரளா, பாலக்காட்டை சேர்ந்த கிதர் முகமது, 50
ஆகியோருடன் சேர்ந்து கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்தது தெரியவந்தது. ஆனைகட்டியில் பதுங்கிஇருந்த, கிதர் முகமதை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே, கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிந்தது.


கள்ள நோட்டு கும்பலுக்கும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கும் தொடர்பு உள்ளதா, என விசாரணை நடத்தப்படுகிறது. நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார், 'க்யூ' பிரிவு போலீசார், கிதர் முகமதிடம் விசாரணை நடத்தினர்.


நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கிதர் முகமதின் போட்டோவை, மலை கிராமங்களில் விசாரிக்கின்றனர். இவர், மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.


தேர்தலில் கள்ள நோட்டு?




கைது செய்யப்பட்ட கிதர் முகமதின் மொபைல்போனில் சில அரசியல் பிரமுகர்களின் தொடர்பு எண்கள் இருந்துள்ளன. கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்கள், ஏஜென்டுகள் மூலம், கர்நாடகா கொண்டு செல்லப்பட்டு உள்ளன.


கடந்த மாதம் அங்கு நடந்த சட்டசபை தேர்தலில், இந்த கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள, அரசியல் புள்ளிகள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    அட, இவ்வளவு கள்ள நோட்டை ஒருவன் அமெரிக்காவில் அடித்தான் எனில், அந்த நிகழ்வில் உள்ள அனைவரையும், பிரச்சனை என்ற மரத்தின், உச்சி கிளையில் உள்ள இலை முதல், மண் தரைக்கு அடி ஆழத்தில் உள்ள ஆணி வேரின் நுனி வரை, அதில் சம்பந்தமுள்ள அனைவரையும் அள்ளி, ஜெயிலில் போட்டுடுவாங்க. ஆனா, இங்கே, நம் இந்தியாவில்???.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    கள்ள நோட்டு அடித்தவன் மனிதனா ?? சமூக விரோதியா ???

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    எம்.எல்.ஏக்களுக்கு 100 கோடி வரை பேரம் பேசியது இந்த நோட்டை கொடுத்து தானா? விஷயம் தெரிந்ததும் எம்.எல்.ஏக்கள் சுதாரித்து கொண்டார்களா? இப்போ புரியுது திரைக்கு பின்னால் என்ன நடந்ததுன்னு.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட பணம் கள்ள நோட்டா? செல்லாத பணத்தை வாங்கிக்கொண்டு, ஒட்டு போட்ட மக்களுக்கு கள்ள நோட்டு கொடுப்பதில் தவறில்லை.

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    நம்ம ஆளு இவ்வளவு மோசமில்லை..... வெறும் 20 ரூபாய் என்றாலும் ஒரிஜினல் நோட்டு....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement